கருமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?

 ஆம்.

தவறுகளை மட்டுமல்ல நற்செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரவர் செயலுக்கான கூலி அவருக்கு தவறாமல் வழங்கப்படும் என்று அனைத்து வேதங்களும் கூறுவதின் சாரம் நம் செயல்கள் கண்காணிக்கப் படுகிறது என்பதாம். சொர்கம் நரகம் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல வழங்கப் பிஸ்ட்டும் என்பதும் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் கணக்கெடுக்கப் படுகிறது எனபதற்கான சான்று.

தமிழர் நெறி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே. (7ம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம் - பாடல் 1)

பொழிப்புரை: அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

இஸ்லாமிய நெறி

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். - (அன்-ஆனாம் 6:103)

கிறிஸ்தவ நெறி

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். - (யோபு 34:21)

முடிவுரை

எல்லாமும் கணக்கெடுக்கப் பட்டு அவைகளுக்கான கூலி சிலவற்றுக்கு இம்மையிலும் சிலவற்றுக்கு மறுமையிலும் வழங்கப்படும். வாசிக்க