எத்தனை இறைவன்?

எத்தனை இறைவன் இருப்பதாக உலகில் உள்ள புனிதர்கள் கூறி உள்ளனர்? 

அகத்தியர்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு - (ஞானம் 1:1)

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.

அவ்வையார்

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124)

கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம். (125)

கருத்து: ஆராய்ந்து பார்க்குங்கால், பரந்த இந்த உலகுக்கு ஒரே சூரியன் இருப்பதைப் போல இப்புவியி வாழும் அனைத்து உயிரினத்திலும் சிவன் ஒருவனே ஆன்மாவாகக் கலந்து இருக்கிறான்.

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். (196)

கருத்து: மூல வித்தாகி, அதிலிருந்து உதிக்கும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி நிற்கும் சிவம்.

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். (198)

கருத்து: பூமியில் பிறந்திருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகி விண்ணகத்தில் அதாவது இந்த உலகெங்கும் வியாபித்து இருந்து அவற்றைக் காக்கிறான்.

திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - (திருமந்திரம்)

பதவுரை:  

ஒன்றே குலமும்: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். 

ஒருவனே தேவனும்: கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது 

நன்றே நினைமின்: நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். 

நமன் இல்லை: அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. 

நாணாமே: வெட்கப் படாமல் 

சென்றே புகும்கதி இல்லை: நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை 

நும் சித்தத்து: உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே: எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமந்திரம் 5

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. - திருமந்திரம் 109

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - திருமந்திரம் 110

கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.

சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

கருத்து: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவம் உள்ள தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது(தவம் என்பது சிவத்துக்காக செய்யப் பட வேண்டும்); அவ்வாறு செய்ய தலைப்படுபவர்களுக்கு அவம் (கேடு) அல்லாமல் வேறு இல்லை. ஆறு சமயங்களை பின்பற்றுவதும் தவமல்ல(பல சமயங்களை பின்பற்ற கூடாது), எனவே நந்தி தேவர் கூறும் வேதத்தை பின்பற்றி சிவனை வணங்கி வீடு பெருவீராக.

சிவவாக்கியர்

எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (பாடல் 224)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே! - (சிவவாக்கியம் 225)

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே (சிவவாக்கியம் 133)

கருத்து: உங்களின் இறைவன் இவன், எண்களின் இறைவன் இவன் என்று வேறு வேறு கிடையாது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. அறியும் சிவனும் ஒருவன்தான் 

கடுவெளிச் சித்தர்

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (பாடல் 27)

காகபுசுண்டர்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே - (பாடல் 1)

கருத்து: தானாய் உருவாகி அனைத்தையும் படைத்த இறைவனை பணிவோம். 

இடைக்காட்டுச் சித்தர்

ஆதியந்தம் இல்லாத அனாதியைத்
தீது அறும்ப வந்த தீப்படு பஞ்சுபோல்
மோதுறும்படி முப்பொறி ஒத்துற
ஆதலாகக் கருத்திற் கருதுவாம். - பாடல் 1

கருத்துதொடக்கம் முடிவு இல்லாமல் இணை துணை இல்லாமல் அனாதையாக இருப்பவனை (இறைவனை) பற்றியே நினைக்க வேண்டும். 

முகமது நபி

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. இறைவன் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை;  பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - (அல்குர்ஆன் 112:4)

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91)  

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

   

இயேசு

இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கர்த்தர் ஒருவரே - (மாற்கு 12:29)

 அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25] 

மோசஸ்

இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! - (உபாகமம் 6:4)

எசேக்கியா

கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். - (2 இராஜாக்கள் 19)

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (நெகேமியா 9:6) 
 
முடிவுரை

சிவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று தமிழர் அறமும், 
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று இஸ்லாமும், 
கர்த்தரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கிறிஸ்தவமும் 
கூறுவதை எப்படி புரிந்து கொள்வது? 
    • வெவ்வேறு கடவுள்கள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களை பின்பற்றுபவர்களை அதிகரிக்க போட்டி போடுகின்றன என்று புரிந்து கொள்வதா? அல்லது ஒரே இறைவன் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயருடன் அறியப்படுகிறான் என்று புரிந்து கொள்வதா? 
    • வெவ்வேறு மதத்தில் கூறப்பட்ட கடவுளின் வரையறையை ஆய்ந்து அவன் ஒருவனைத்தான் குறிக்கிறது என்று முடிவு செய்வதா? அல்லது பெயரை கொண்டு அவர்கள் வெவ்வேறுதான் என்று முடிவு செய்வதா? 
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்லும் பொழுது மதவாதமாக பார்க்கும் சகோதரர்கள், அவரவர் குருமார்களால், சித்தர்களால், மெசாயாக்களால், ரிஷிகளால் படத்த இறைவனை மட்டுமே வணங்குமாரு போதிக்க பட்டுள்ளனர். அதை அவர்கள வாசித்தால் அவர்களுக்கு அது நலம் பயக்கும்.

உலகின் இறுதி தூதர் (நபி, ரசூல், மெசாயா, சித்தர், நாதன், குரு, ரிஷி) மூலம் மற்றும் இறுதிவேதம் இதை பற்றி தெளிவாக கூறுகிறது. 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளித்து அழிக்கும் ஏக இறைவனைத் தவிர, வணங்கப்படும் மற்ற) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (திருக்குர்ஆன் 16:36)

இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா?

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124) 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல செயல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (குர்ஆன் 47:2)

 இஸ்லாத்தை ஏற்கும் முறைமை என்ன?

"அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" (புகாரி 3861)

கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். 

கிறிஸ்தவம்

 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். (அப்போஸ்தலர் 10:43)

இயேசுவின் முக்கிய போதனை என்ன? 

வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை (மாற்கு 12:28-29)

ஒரே இறைவனை தவிர மற்றவைகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள். 
 
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல 
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (கடுவெளிச் சித்தர் 27) 

இஸ்லாம் 

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (குர்ஆன் 2:21)

(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

கிறிஸ்தவம் / யூதம் 

வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10) 

 முடிவுரை

கடவுள் ஒன்று என்று நம்மில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் வணங்குதல் என்று வரும் பொழுது அதில் சிலைகளையும், நல்ல மனிதர்களையும், தாய் தந்தையினரையும் மற்ற சில உயிரினங்களையும், இயற்கையும் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் நான்மறைகள் அதை வன்மையாக கண்டிக்கிறது.

38 கருத்துகள்:

  1. யெகோவாதான் வானம், பூமி என எல்லாவற்றையும் படைத்தவர், இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அவர் மட்டுமே உண்மையான கடவுள், உலகத்தில் இருக்கிற எந்தவொரு கடவுளும் அவருக்கு நிகரில்லை. (2 சா. 7:22)

    வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10)

    யெகோவா ஒருவரே நம்முடைய கடவுளாக இருக்க வேண்டுமென்றால் நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு கொடுக்க வேண்டிய வணக்கத்தை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. யெகோவாவுக்கு செலுத்தும் வணக்கம் சுத்தமாக இருக்க வேண்டும். அதில் பொய்மத பழக்கவழக்கங்கள் துளிக்கூட கலந்துவிடக் கூடாது. மற்ற கடவுளைவிட யெகோவா உயர்ந்தவர் அல்லது ரொம்ப சக்தியுள்ளவர் என்று நினைத்தால் மட்டும் போதாது, அவர் ஒருவர் மட்டும்தான் உண்மையான கடவுள் என்பதை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். அவர் ஒருவரையே நாம் வணங்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. தென்னாடுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – திருவாசகம் 170

    (விளக்கம். தென்னாட்டில் சிவன் என்று அறியப்படுகிறவனே, அனைத்து நாடுகளுக்கும் இறைவனாக இருப்பவனே உன்னை போற்றுகிறேன், இதில் சிவன் என்பதை தற்பொழுது அறியப்படுகிற உருவத்தை இங்கே மாணிக்கவாசகர் கூறவில்லை )

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமன் இல்லை - திருமந்திரம் 2104

    (விளக்கம்: ஒரே தேவனை நாணாமல் (தலைகுனிந்து வணங்காமல்) வேறு வழி இல்லை)

    எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
    உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டு இல்லையே. – சிவவாக்கியர் பாடல் 224
    அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
    பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
    விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
    அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே! - சிவவாக்கியர் பாடல் 225

    எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
    இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
    அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
    வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே - சிவவாக்கியர் பாடல் 133

    மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

    “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே.”—உபா. 6:4.

    உங்களைத் தவிர வேறு கடவுள் இல்லை. (2 சா. 7:22)

    பதிலளிநீக்கு
  3. வேதங்கள் அனைத்தாலும் (அவற்றின் துணை கொண்டு) அறியப்படும் அறிவின் பொருள்கள் நானே. வேதாந்தங்களின் ஆசிரியன் நானே, நான் மட்டுமே வேதங்களை அறிவேன். கீதை 15:15

    வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி - II தீமோத்தேயு
    3:16

    என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - குர்ஆன் 2:38.

    எல்லா வேதங்களும் ஒரே இறைவனால் அருளப்பட்டதா?
    எனில் எதையும் பின்பற்றலாமே?

    நல்வழி வரும் பொழுது அதனை பின்பற்ற வேண்டும் அதாவது புதிய வேதத்தை பின்பற்றுபவர்கள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து கொண்டவர்கள். தேர்ந்தெடுப்பது வேதமா இல்லையா என்று ஆய்வு செய்வது அவசியம். அந்த வகையில் இறுதி வேதமான திருக்குர்ஆன் இந்த காலகட்டத்தில் உலக மக்கள் அனைவரும் பின்பற்ற தகுதியான வேதம்.

    இறைவனின் இறுதி வேதம் சொல்லும் வேத ஞானம் என்ன?

    வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. [அல்குர்ஆன் 5:15.]

    10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

    12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?

    (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” [அல்குர்ஆன் 2:38]

    நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். [அல்குர்ஆன் 2:159.]

    அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். [அல்குர்ஆன் 2:101]

    அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவரு(நபியு)டைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். [அல்குர்ஆன் 69:44]

    (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். [அல்குர்ஆன் 10:94]

    இந்த குர்ஆன் இறைவன் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. [அல்குர்ஆன் 10:37]

    பதிலளிநீக்கு

  4. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. [அல்குர்ஆன் 10:38]

    (நபியே!) இன்னும் இறைநம்பிக்கை உடையவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். [அல்குர்ஆன் 2:4]

    எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். [அல்குர்ஆன் 4:162.]

    “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும். [அல்குர்ஆன் 2:4]

    எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். [அல்குர்ஆன் 3:184]

    (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. [அல்குர்ஆன் 6:10.]

    “வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. [அல்குர்ஆன் 5:59.]

    (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? [அல்குர்ஆன் 12:109]

    (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. [அல்குர்ஆன் 2:120.]

    முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். [அல்குர்ஆன் 4:136.]

    4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.

    4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

    பதிலளிநீக்கு

  5. 5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்

    6:8. (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.


    இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. - 2:23-24.

    இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது.. 2:41.

    மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! - 2:78&79.

    யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. 2:97.

    அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன். - 2:105.

    வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான். - 2:109.

    யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே! - 2:121.

    பதிலளிநீக்கு

  6. 2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

    2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்

    2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.

    2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

    2:176. இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.

    2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

    அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). - குர்ஆன் 6:93


    Ref :
    http://mahabharatham.arasan.info/2015/12/Bhagavad-Gita-In-Tamil.html
    http://www.bibleintamil.com/
    http://www.tamililquran.com/revelation.html
    araneriislam.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும். எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

    செப்பனியா 2:11 அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
    பைபிள் கதாசிரியர் தேவன் பேசுவதாக

    யாத்திராகமம்12:12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன்.

    எண்ணாகமம்33:4 கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.

    எரேமியா 46:25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய அரசர்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன்.

    யாத்திராகமம் 12:12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்று போடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன்.

    https://tamilsamayam.wordpress.com/2014/04/13/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/

    பதிலளிநீக்கு
  8. உள்ளம் அடங்கினவன் உயர் தெய்வம்

    தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
    பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
    எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
    அருள்கண்ணே நிற்பது அறிவு. - அறநெறிச்சாரம் பாடல் - 144

    விளக்கவுரை ஒருவன் தன்னை இன்பம் தருவது போன்று தீ நெறிகளில் முன்னம் செலுத்திப் பின்பு வருந்தும் மனத்தை அடக்குவான் ஆயின், அவனைப் போன்ற தெய்வம் வேறு ஒன்று இல்லை; இலக்கணம் சோதிடம் முதலியவற்றை ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது? இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் அளிக்கும் நூல்களையே ஆராய்ந்துணர்ந்து அருளை மேற்கொண்டு ஒழுகுவதே அறிவுடைமையாகும்

    பதிலளிநீக்கு
  9. முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (பைபிள் பழைய ஏற்பாடு ஏசாயா 46:9)
    நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (பைபிள் பழைய ஏற்பாடு எசாயா 45:5)

    “என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!” என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை. (குர்ஆன் 21:25)

    பதிலளிநீக்கு
  10. “இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!’’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

    (அல்குர்ஆன்:16:51.)

    பதிலளிநீக்கு
  11. ஏசு கிறிஸ்து இறைவனின் மகனா?

    “உஸைர் அல்லாஹ்வின் மகன்’’ என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் (இயேசு கிறிஸ்து) அல்லாஹ்வின் மகன்’’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

    (அல்குர்ஆன்:9:30.)

    பதிலளிநீக்கு
  12. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

    (அல்குர்ஆன்:41:37.)
    https://www.bayanapp.indiabeeps.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/

    பதிலளிநீக்கு
  13. அரியுமாகி யயனுமாகி யண்டமெங்கு மொன்றதாய்ப் - அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
    பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ - பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
    விரிவிதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே - விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
    அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே. - அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே
    - சிவவாக்கியம் 224

    தானாக அறியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே!

    பதிலளிநீக்கு
  14. ரிக் வேதம் , டி.ஆர். ரால்ப் TH கிரிஃபித், [1896], sacred-texts.com இல்

    கீதம் XXV. வருணா.

    19 வருணா, என்னுடைய இந்த அழைப்பைக் கேள்: இன்றைக்கு எங்களிடம் கருணை
    காட்டுவாயாக, உதவிக்காக ஏங்கி உன்னிடம் அழுதேன்.
    20 ஞானமுள்ள கடவுளே, நீரே அனைவருக்கும் ஆண்டவர், நீரே பூமிக்கும் வானத்திற்கும் அரசன்,
    நீர் செல்லும் வழியில் கேளுங்கள்.

    https://www.sacred-texts.com/hin/rigveda/rv01025.htm

    பதிலளிநீக்கு
  15. 1) ஆதிப் பிரானும்
    2) அணிமணி வண்ணனும்
    3) ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
    சோதிக்கில் - சோதனை செய்தால்
    மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் - மூன்றுமே ஒன்றுதான்
    பேதித் துலகம் - அறிவற்ற உலகம்
    பிணங்குகின் றார்களே. - முரண் படுகிறார்கள்

    சோதித்தால் மூன்று பெயரும் ஒரே தெய்வத்தை குறிக்கிறது அறிவில்லாமல் மக்கள் இதில் முரண்படுகிறார்கள்.
    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/323/thirumoolar-nayanar-thirumandiram-payiram-mummoorthikalin-muraimai

    பதிலளிநீக்கு
  16. 16:51. இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. 124.எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
    பல்லோர்க்கு முண்டோ பவம். ஞாணக்குறல்

    சீவர்களுக்கெல்லாம் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்தோருக்கு மரணபயமில்லை.

    பதிலளிநீக்கு
  18. 125.ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
    ஆயுங்கா லொன்றே சிவம்.

    ஆராய்ந்து பார்க்குங்கால், பரந்த உலகுக்கு ஒரே சூரியன் இருப்பதைப் போல அதில் வாழும் அனைத்து சீவன்களுக்கும் சிவம் ஒன்றே. பின்னர்தான் விஞ்ஞானிகளால் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு சூரியன் இருப்பதாக நிறுவப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. நாராயணன் ஒருவன்தான்; இரண்டாமவன் ஒருவனும் இல்லை.

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. 6 ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
    ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
    நன்று கண்டீர் நல் நமச்சிவாயப் பழம்
    தின்று கண்டேற்கு இது தித்தித்த வாறே.
    உரை

    7 சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
    வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
    அந்தமும் ஆதியும் இல்லா அரும் பொருள்
    சிந்தையின் மேவித் தியக்கு அறுத்தானே.
    உரை

    8 பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
    கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
    விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
    துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே.
    உரை

    9ஆம் தந்திரம் 20

    இதில் ஈன் நெடிமால் பிரமன் = சிவன்.என்கிறது

    பதிலளிநீக்கு
  22. “நான் யெகோவா; நான் மாறுவதில்லை. மல்கியா 3:6https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/3/#v39003006

    பதிலளிநீக்கு
  23. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.}[ஸூரதுல் பகாரா 165]

    பதிலளிநீக்கு
  24. பாடல் எண் : 54
    சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
    ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
    நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
    பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

    பொழிப்புரை : சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.

    https://keyemdharmalingam.blogspot.com/2012/02/43-5656-4.html

    பதிலளிநீக்கு
  25. ஈசன் ஒருவனே
    தேவாரம் பாடல் எண் :2078

    நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
    ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
    ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
    ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.

    பாடல் எண் :2078
    நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயண ரங்ஙனே
    ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
    ஈறி லாதவன் ஈச னொருவனே.

    பொ-ரை: நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.

    https://www.tamilvu.org/library/l4150/html/l4150inx.htm

    பதிலளிநீக்கு
  26. மத்தேயு 4:10

    அப்போது இயேசு அவரிடம், “போ சாத்தானே! ஏனெனில், "'உன் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுது, அவரையே ஆராதிக்க வேண்டும்' என்று எழுதப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  27. 35:3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  28. 40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.

    பதிலளிநீக்கு
  29. அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
    மாற்கு 12:32

    இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
    மாற்கு 12:29



    https://wordproject.org/bibles/verses/tamil/40_simplicity.htm

    பதிலளிநீக்கு
  30. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
    1 தீமோத்தேயு 2:5

    பதிலளிநீக்கு
  31. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை எந்த அமலும் முந்தி விடமாட்டாது. அது எந்தப் பாவத்தையும் விட்டு வைக்க மாட்டாது. (நூல்: இப்னு மாஜா)

    · லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை தராசின் ஒரு தட்டிலும், ஏழு வானங்கள் ஏழு பூமிகளை மற்றொரு தட்டிலும் வைக்கப் பட்டால் கலிமாவின் தட்டு கனத்தால் தாழ்ந்து விடும். மேலும் ஏழு வானங்கள் ஏழு பூமிகளைத் தடுப்பு வளையமாக்கினாலும் இக் கலிமா அதை உடைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் சென்றடையும். (நூல்: பஸ்ஸார்; மஜ்மஉஸ் ஸவாஇத் - 92/10)

    எந்த அடியார் லாஇலாஹ இல்லல்லாஹ்வை மொழிந்து, அந் நிலையிலேயே இறந்து விடுவாரானால் அவர் சுவனம் சென்றடைவார். (நூல்: புகாரி - 5827)

    பதிலளிநீக்கு
  32. https://pranavjournals.com/tamil/wp-content/uploads/16-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf

    பதிலளிநீக்கு
  33. ஏசாயா 44:6
    இஸ்ரவேலின் ராஜாவும் அவருடைய மீட்பரும், சேனைகளின் கர்த்தருமாகிய கர்த்தர் இவ்வாறு கூறுகிறார் : “நானே முந்தினவன், நானே கடைசியாயிருக்கிறேன்; என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.

    ஏசாயா 46:9
    பழைய காரியங்களை நினைவுகூருங்கள்; ஏனென்றால் நான் கடவுள், வேறு யாரும் இல்லை; நானே கடவுள், என்னைப் போல் யாரும் இல்லை

    பதிலளிநீக்கு
  34. கடவுள் சர்வ வியாபித்தவர்,
    ஒளிமயமானவர்,
    உருவமற்றவர்,
    உடல் காயங்கள் இல்லாதவர்,
    ஏனெனில் அவர் நரம்புகள் இல்லாதவர்,
    மிகவும் புனிதமானவர்,
    எந்தப் பாவத்தாலும் துளைக்கப்படாதவர்.
    எல்லாம் அறிந்தவர்,
    அனைவரின் மனதையும் அறிந்தவர்,
    அனைத்தையும் வென்றவர் மற்றும்
    சுயமாக இருப்பவர்.
    அவர் தனது நித்திய உட்பிரிவுகளுக்காக (அழியாத ஆத்மாக்களுக்காக) உலகின் பொருட்களைப் படைத்துள்ளார்.

    (யஜுர் வேதம் 40-8 (https://www.aryagan.org/pdf/literature/ved/Vedic-Conception-of-God.pdf))

    பதிலளிநீக்கு
  35. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை:

    சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
    தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
    அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
    தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

    வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். - திருக்குர்ஆன் 3:62

    4 “இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! 5 உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். 6 இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். உபாகமம் 6:4-12

    பதிலளிநீக்கு
  36. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை:

    சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
    தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
    அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
    தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

    வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். - திருக்குர்ஆன் 3:62

    4 “இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! 5 உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். 6 இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். (உபாகமம் 6:4-12)

    எனவே இந்த வேதங்கள் எப்படி வேறு வேறு இறைவனிடம் இருந்து வந்து இருக்க முடியும்

    பதிலளிநீக்கு
  37. Rudra is truly one; for the knowers of Brahman do not admit the existence of a second, He alone rules all the worlds by His powers. He dwells as the inner Self of every living being. After having created all the worlds, He, their Protector, takes them back into Himself at the end of time. [Svetasvatara Upanishad 3.2]

    https://hinduism.stackexchange.com/questions/237/how-were-the-trimurti-born?noredirect=1&lq=1

    பதிலளிநீக்கு
  38. அல்லாஹ் ஒருவன்

    2:163. மேலும், உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அவனைத் தவிர வேறு கடவுளில்லை; அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

    5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள்; ஏனென்றால், ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால், நிச்சயமாக அவர்களில் நிராகரித்தோருக்கு துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

    9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிமார்களையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டனர்; ஆனால், அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; (வணக்கத்திற்குரியவன்) அவனன்றி வேறு கடவுள் இல்லை; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.


    12:39. "சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?"

    14:48. இந்த பூமி வேறு பூமியாகவும் இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்); மேலும், அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

    14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே இறைவன்தான் என்று அவர்கள் அறிந்துகொள்வதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.


    16:22. உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன; மேலும், அவர்கள் (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.


    16:51. இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்: "இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவன்தான்; எனவே, என்னையே நீங்கள் அஞ்சுங்கள்."

    21:108. "எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம், 'உங்கள் இறைவன் ஒரே இறைவன்' என்பதுதான்; ஆகவே, நீங்கள் முஸ்லிம்களாக (இறைவனுக்கு வழிப்பட்டவர்களாக) இருப்பீர்களா?" (என்று நபியே!) நீர் கேட்பீராக!

    37:4. நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒருவனே

    38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே!" (என்றும் கூறினர்).

    38:65. (நபியே!) நீர் கூறுவீராக!: "நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே; அன்றியும், ஏகனும் (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வம் இல்லை."

    39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்தவற்றிலிருந்துதான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும், இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன்; அவனே (யாவரையும்) அடக்கியாளும் ஏகனான அல்லாஹ்.

    40:16. அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. ஆட்சி இன்று யாருக்கு? ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்வுக்கேயாகும்.

    https://www.tamililquran.com/qurantopic.php?topic=82

    பதிலளிநீக்கு