ஏகஇறைவனின் திருப்பெயரால்!
ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக!
முன்னுரை :
இஸ்லாமிய பண்பாடு மற்றும் தமிழர் பண்பாடுகளின் ஒப்பீட்டின் நோக்கம் கொள்கைரீதியாக நாம் எந்த அளவு ஒத்துபோகின்றோம் என்ற புரிதல் ஏற்படவும் ஒற்றுமைக்கு வழிவகுக்கவும் செய்யப்படும் சிறுமுயற்சி.
தமிழராய் இருக்கும் நாம், தமிழராய் பெருமை கொள்ளும் நாம் நம் வாழ்வியல் அறநெறியாக எதை கொண்டிருந்தோம் என்பதை தமிழ் பிரியர்கள் அறிவதும், அறிய முயற்சிப்பதும் இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவதில் திருக்குறளுக்கு அடுத்து மிகமுக்கியமானது "
நாலடியார்".
"குர் 'ஆன் 3:64"-லும்,
"எசாயா 1:18-20"-இல் பைபிளிலும்,
"ரிக் 1.25,3-6"-லும் குறிபிட்டுள்ளதுபோல, வேதங்களிலே உள்ள பொதுவான விசயங்களை ஆராயும் நோக்கத்தில் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை கூறும் புனித குரானையும், தமிழர் வாழ்க்கை நெறியை கூறும் நாலடியாரையும் ஒப்பிடுகையில் 11(பழவினை) & 13(தீவினைஅச்சம்) அத்தியாயங்களில் சிலவைதவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய நெறிகளை அப்படியே வலியுறுத்துவதாக அமைந்துகின்றன.
முரண்பாடுகளை பார்பதற்குமுன், ஒற்றுமைகளில் மிக முக்கியமானவைகளை மட்டும் இங்கே பார்ப்போம், முழுவதையும் எழுதுவதென்றால் தனிஆய்வு புத்தகமாக வெளியிடலாம், நேரமும் பொருளாதாரமும் அனுமதிக்கின்ற காலத்தில் இறைவன் நாடினால் அந்த பணியை செய்வோம்.
இவ்விரு பண்பாடுகளில் மிகப்பெரும் வேற்றுமைகளாக கருதபடுபவைகள் அவ்வாறு இருந்திருக்கவில்லை, அவைகளை மட்டும் இங்கே பதிகிறோம். முரண்பாடுகளின் காரண காரியங்களை பிறகு பார்ப்போம். கீழே கொடுக்க பட்டவைகள் நாலடியாரின் அத்தியாய தலைப்புகள், இதில் சிகப்பு வண்ணமிட்டது முரண்பட்ட பகுதியை குறிக்கும், மற்றவை அனைத்தும் ஒரே போதனைகள்.
அறத்துப்பால்
1. செல்வம் நிலையாமை
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அறன் வலியுறுத்தல்
5. தூய் தன்மை
6. துறவு
7. சினம் இன்மை
8. பொறையுடைமை
9. பிறர்மனை நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினை அச்சம்
பொருட்பால்
14. கல்வி
15. குடிப்பிறப்பு
16. மேன் மக்கள்
17. பெரியாரைப் பிழையாமை
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற் பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
37. பன்னெறி
காமத்துப்பால்
38. பொது மகளிர்
39. கற்புடை மகளிர்
40. காம நுதலியல்
குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள
நாலடியாரின் விளக்கஉரைகள் திரு தி.சு.பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தில் 1945ல் வெளியிட்டது.
ஒற்றுமைகள் :
1) "இறைவன்" வரையறை & அவனை வணங்கும் முறை
நாலடியார் செயுள் - 01 :
வான் இடு வில்லின் வரவு அறியா,வாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று.
பொருள் :
வான்இடு வில்லின் - மேகத்தால் உண்டாகின்ற வில்லைப்போல,
வரவு அறியா வாய்மையால் - பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மையினால்,
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் (புவியில்) படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி - தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது,
சேர்தும் -அடைக்கலமாகிறேன் .
கருத்து :
மேகத்தால் உண்டாகின்ற வில்லைப்போல பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மை ஆகயால், எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது அடைக்கலமாகிறேன்.
இஸ்லாம் :
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? - அல்குர்ஆன் 67: 16
கருத்து : வானத்தில் இருப்பவன் என்பதற்கு பூமிக்கு (நிலத்திற்கு) இறைவன் வருவது இல்லை என்று பொருள்.
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். - அல்குர்ஆன் 32: 15
கருத்து :
ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்) என்று 30 வசனங்களை கொண்ட முழு தனி அத்தியாயம் புனித குர்ஆன் -இல் உள்ளது, சஜிதா/ஸுஜூது /ஸஜ்தா என்பதற்கு நெற்றியும் அதன் முடியும் தரையில் பொருந்தும்படி தொழுதல் அல்லது வணங்குதல் என்றுபொருள்.
ஒப்பீடு :
இரண்டு நூல்களிலும்,
இறைவனின் வரையறை : இறைவன் என்பவன் புவியில் கால் பதிப்பவன் இல்லை, அவன் வானத்தில் இருப்பவன் என்று மறைமுகமாகவும் நேர்முகமாகவும் குறிப்பிடபடுகின்றது.
தொழும்முறை : இறைவனை தரையில் தலையை வைத்து தொழுதல் வேண்டும் என்றே குறிப்பிடுகிறது.
2) சோதிடம் கூடாது
நாலடியார் செயுள் - 52 :
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
பொருள் :
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து,
தலையாயார் - சிறந்தவர்கள்,
தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள்,
தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட,
பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.
கருத்து :
நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து. சிறந்தவர்கள் தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள் கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட அறிவிலாதவர் பிறர் இல்லை
இஸ்லாம் :
யாரேனும் சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட இறைவனின் சட்டத்தை (ஷரீஅத்தை) அவர் நிராகரித்து விட்டார்” - அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904
ஒப்பீடு :
இரண்டு நூல்களும் சோதிடம் பார்ப்பதை, கற்பதை ஊக்குவிக்கவில்லை மட்டுமின்றி தடைசெய்கிறது.
3) சாதி கூடாது :
நாலடியார் செயுள் - 136 :
தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
பொருள் :
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்று இகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாகஆற்றைக் கடந்துபோதல் போல;
நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று.
கருத்து :
படகுசெலுத்துவோன் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாக ஆற்றைக் கடந்துபோதலை போல, நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று. (கல்வியாலே உயர்வு தாழ்வு, சாதியால் அல்ல என்பது கரு.)
இஸ்லாம் :
கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? - அல் குர்ஆன் 39:9
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" -
அல் குர்ஆன் 49:13
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
ஒப்பீடு :
தமிழர் வாழ்வியல் நெறியும் இஸ்லாமும் போதிப்பது ஒன்றே, ஒரு மனிதனின் உயர்வு மற்றும் தாழ்வை அறிய அளவுகோலாய் இருப்பது இறைவனிடம் அவன் கொண்ட பயபக்தியும், நன்னடத்தையும், கல்வியுமே அன்றி தொழிலோ, பிறப்போ, சாதியோ இல்லை.
வேற்றுமைகள் :
1)...
பதிவு தொடரும்...
குறிப்பு :
1) மறுமை வாழ்க்கை பற்றி குர்'ஆன்-ஐ போல் மிகவும் வலியுறுத்தும் நூல் நாலடியார்.
2) பல கடவுள் கொள்கையோ, பெயர்களோ, உருவ வழிபாட்டு முறையோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சான்றாதாரங்கள் :
In PDF :
1)
http://noolaham.net/project/38/3800/3800.pdf
In tamil :
1)
http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar.html#.VJ_1_ABA
2)
http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm
3)
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0016.html
In English :
http://tamilnation.co/literature/pathinen/naladiyar_english.htm
History :
1)
http://www.thoguppukal.in/2012/04/blog-post.html
2)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
3)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
4)
http://www.valaitamil.com/literature_old-literature-books_pathinen-kezhkanakku/
Other :
1)
https://www.facebook.com/Thonmai.Tamizh/posts/219218961543752
2)
http://literature-comp.blogspot.in/2011/12/naladiyar.html
3)
http://agarathi.com/
Islamic source:
1)
http://labbaikudikadutoday.blogspot.in/2012/10/blog-post_4484.html
2)
http://www.islamiyapenmani.com/2012/05/muslim-womens-education.html
3)
http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/thozil_adipadayil_uyrvu_thazvu_unda/rss#.VKJ9oABA