முகமது நபி ﷺ அவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அறிவார்கள்..!

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)

இந்த குர் ஆனின் வசனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம் வாருங்கள்..!

தமிழர் மதம்


ஏழாம் தந்திரம் - 13. குருபூசை, மாகேசுர பூசை
 
அழி தகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. - (திருமந்திரம் பாடல் - 1864)

பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே. - (திருமந்திரம் பாடல் - 1865)

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)

  • சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இந்த நூலுக்கு விளக்கவுரை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. எனவே அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் ஆய்வுக்கு உரியது.
  • இக்கட்டுரையின் தலைப்போடு முரண்படுவதால் அல்ல, இப்பாடல்களின் விளக்க உரைகளே ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறும் திருமந்திரத்தின் முதல் பாடலாக "வினாயகர் வணக்கம்" சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் இதில் இடைச்சொருகள் இருப்பது உறுதியாகிறது.
  • பாடலுக்கு விளக்கமும் பிழை, இடைச் செருகளும் உண்டு. இருந்தாலும் இந்த நூலை தேர்ந்தெடுக்க காரணம் தொல்காப்பிய நூல் விதி இதை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இதுபற்றிய விளக்கம் "புனித நூல்கள்" தலைப்பில் விளைவாக எழுதப்பட்டுள்ளது.

பிழையான விளக்கவுரை 1 - ஜி வரதராஜன்


பிழையான விளக்கவுரை 2 - Tamil Virtual University


பிழையான விளக்கவுரை 3 - thevaaram.org


பிழையான விளக்கவுரை 4 - தினமலர் 


சரியான விளக்கவுரை (இதற்கு முந்தய பாடலில் இருந்து துவங்குவோம்)

அழிதகவு இல்லா அரன் அடியாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கி இருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே.  (திருமந்திரம் பாடல் - 1864)

பதவுரை
அழிதகவு - வருந்துதல்
இல்லா - இல்லா
அரன் - தீவினைகளை அரிப்பவனின்
அடியாரைத் - அடியாரை 
தொழுகை - வழிபாடு (பின்பற்றல்) 
ஞாலம் - உலகம் 
தூங்கியிருள் - செறிந்தஇருள், மிகுந்தஇருள்.
நீங்கும் - நீங்கும்
பழுது படாவண்ணம் - குறையில்லாத வகையில் 
பண்பனை நாடித் -  நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி 
தொழுதெழ - தொழுது எழுந்தால் 
வையகத்து - உலகத்தில் 
ஓர்இன்பம் ஆமே - ஒரு இன்பம் ஆகுமே

விளக்கம்: வருந்துதல் இல்லா தீவினைகளை அரிப்பவனின் அடியாரை பின்பற்ற உலகத்தின் மிகுந்த இருள் நீங்கும். குறையில்லாத வகையில் நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி அவனுடன் தொழுது எழுந்தால் உலகத்தில் இன்பம் உண்டாகும். 

பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப் 
புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி
அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)

பதவுரை
பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு
ஏதாகிலும் - எது ஆகினாலும்
பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி
புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்
நின்று - நின்று
பூசனை - அன்றாட இறை வணக்கம்
செய்யும் - செய்யக்கூடிய
முகமத் - ஓடு - முகமத் உடன்
ஒத்து - சேர்ந்து, இணங்கி
நின்று - நின்று
ஊழி தோறூழி - ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்
அகமத் - தராகி - அகமத் தராகி
நின்று - நின்று
ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்
ஒழிந்தாரே - நீக்கினார்

விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு  நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.

வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)

பதவுரை
வித்தகமாகிய - தூதுத்துவ
வேடத்தர் - வடிவத்தார்
உண்ட - உண்ட
ஊண் - உணவு
அத்தன் - தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன்
அயன்மால் - அயன்மால்
அருந்திய வண்ணமாம் - குடித்தது போல
சித்தந் தெளிந்தவர் - அறிவு தெளிவு பெற்றவர்
சேடம் - மிச்சப்பொருள்; கழிந்தமீதி; எச்சில்;
பருகிடின் - குடித்தால்
முத்தியாம் - வீடு பெறலாம்
என்று நம் மூலன் மொழிந்ததே. - என்று திருமூலர் சொல்கிறார்

விளக்கம்: தூதராகிய வந்தவர் உண்ட உணவை குரு அயன்மால் அருந்தியது போல மீதமுள்ளதை அருந்தினால் அறிவு தெளிவு பெற்று வீடு பெறலாம் என்று திருமூலர் சொல்கிறார். (வேத ஞானத்தை உணவோடு உவமையாக்கி கூறுகிறது இப்பாடல், இதை ஒத்த ஒரு நபி மொழி உண்டு - கனவில் நபியிடமிருந்து பெற்று உமர் அருந்திய பால் தொடர்பான நபிமொழி)

குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகமதோடு என்றும் அகம்+அது+ராகி = அகமதராகி =  என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+தராகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு.  எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.


யூத மதம் / கிறிஸ்தவம் 


பைபிளின் மூலப் பிரதியான ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டிலும் கிரேக் மொழியில் புதிய ஏற்பாட்டிலும் முஹம்மத என்ற தீர்க்கதரசி வருவார் என்பது முன்மொழியப்பட்டுள்ளது.

ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டை பிறட்டுகின்ற போது சங்கீதம் என்ற புத்தகத்தில் அத்தியாயம் 5, வசனம் 16 சொல்லுகின்றது.

மூலமொழியில்: חִכּוֹ מַמְתַקִּים וְכֻלּוֹ מַחֲמַדִּים זֶה דוֹדִי וְזֶה רֵעִי בְּנוֹת יְרוּשָׁלִָם

உச்சரிப்பு: Hik.ko ma m.taq.qim we.kul.low ma.ha.mad.dim zeh do.w.di we.zeh re.‘i be.no.wt ye.ru.sha.lim

ஆங்கில மொழிபெயர்ப்பு: “His mouth is most sweet: yea, he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem”.
தமிழ் மொழிபெயர்ப்பு: “ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது,  இத்தகையவரே என் நேசர்” - (சங்கீதம் 5:16)

இங்கு முஹம்மதிம் என்ற சொல்லில் முஹம்மத் என்ற பெயருக்கு பின்னால் ”திம்” பாவிக்கப்பட்டிருப்பது; ஹீப்ரு மொழியில் பன்மைக்கு பயன்படுத்தும் இலக்கிய நடையாகும்.

பொதுவாக அரபு, ஹீப்ரு போன்ற மொழிகளில் இரண்டு பன்மை இருக்கின்றது.

1. மரியாதைக்காக பயன்படுத்துவது.
2. பல என்ற ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிக்க, பன்மைக்கு பயன்படுத்துவது.
 
இந்த நடைமுறையை பைபிளில் பல இடங்களில் பார்க்க முடியும். உதாரணமாக,
 
”துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்”. (ஆதியாகம்ம் 1-1)
 
இங்கு ”தேவன்” என்பதற்கு ஹீப்ரு மொழியில் இலோஹிம் என்று சொல்லப்படுகின்றது. இலா என்ற சொல்லுடன் ஹிம் என்ற மரியாதைக்குரிய பன்மை பாவணையை பயன்படுத்தி யிருக்கின்றார்கள்.

இன்று வரை கிறிஸ்தவர்களால் மூலப்பிரதியாக பார்க்கப்படும் ஹீப்ரு மொழி பைபிளில் முஹம்மதிம் என்ற சொல் இடம்பெறுகிறது, இருந்துவருகிறது. ஆனால் மொழிபெயர்க்கும் போது தமிழாக இருந்தால் ”விரும்பத்தக்கவர்” ஆங்கிலமாக இருந்தால் “Lovely” ” “Praised” என்று மொழிமாற்றம் செய்கின்றார்கள்.

ஆயிரம் தடவை விரும்பத்தக்கவர் பொருந்திக் கொள்ளத்தக்கவர் என்று வாசித்தாலும் அது எந்த வகையிலும் நியாயமற்றதும் பொருத்தமற்றதுமாகும். ஒரு பெயரை அவ்வாரு மொழிபெயர்ப்பதற்கு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை.

எவரது பெயரையும் இவ்வாரு மொழிபெயர்ப்பு செய்து பாவிப்பதற்கு எவருக்கும் எந்த தகுதியுமில்லை.

தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிகளில் ஒருவர்தான் ”முன்னியர் சுவாட்” இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் முன்னியர் என்பது திரு (Mr.) சுவாட் என்பது கருப்பு (Black) என்றும் பொருள். இதனை இவ்வாறு மொழிபெயர்த்து சொன்னால் திரு கருப்பு, (Mr. Black) என்று சொல்ல வேண்டும். இவரது பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரை ஆங்கிலயராக அல்லது தமிழில் மொழிபெயர்த்தால் அவரை ஒரு த்மிழனாகத் தான் பார்க்கமுடியும்.

ஆனால் இவ்வாறு மொழிபெயர்த்ததால் தான் முஹம்மதிம் என்பதற்கு ‘altogether lovely’ , ’loved one’ என்று பாவிக்கப்படுகின்றது.

ஆனால் இன்றுவரை மூலப்பிரதி முஹம்மதிம் என்றே இருந்துவருகிறது. எனவே அந்த வசனம் இவ்வாறு இருக்க வேண்டும்.👇👇👇👇

“ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், முகமதுவரே என் நேசர்” - (சங்கீதம் 5:16)  

 


மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (குர்ஆன் 61:6)

குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்ய பைபிளை நோக்கினால்,

கர்த்தருடைய விசேஷ ஊழியன் என்ற தலைப்பில் கீழுள்ள வசனத்தை காணலாம்.
 
"இதோ! என் வேலைக்காரன், אחמד (நான் அவரை ஆதரிக்கிறேன்); நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன் அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்" [ஏசாயா 42:1-4]

ஹீப்ருவில், (எட்மோக்) אחמד என்பதை ஆங்கிலத்தில் "WHOM I UPHOLD" என்று அல்லது தமிழில் "நான் அவரை ஆதரிகிறேன்" என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால் பெயரை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. இப்பொழுது கூகுளில் இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யுங்கள். 

ஹீப்ரு முதல் ஆங்கிலம்
ஹீப்ருவிலிருந்து அரபு = அலிஃப், ஹா, மிம், தால் = அஹ்மத் / அஹ்மத்
ஹீப்ருவிலிருந்து சீனம்
சீனத்திலிருந்து ஆங்கிலம்
ஹீப்ரு முதல் பிரஞ்சு வரை
ஹீப்ரு முதல் கிரேக்கம் வரை
கிரேக்கத்திலிருந்து ஆங்கிலம்

விக்கிபீடியாவில் இருந்து: ஏசாயா 42 முஸ்லீம்களால் குறிப்பிடப்படும் ஆரம்பகால மற்றும் மிகவும் பொதுவான தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும். முஹம்மது [ﷺ] காலத்திலிருந்தே, அது அவரைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்றப்படவில்லை என்று முஸ்லிம்கள் நம்பினர். முதல் வசனம் இவ்வாறு தொடங்குகிறது: “இதோ, நான் ஆதரிக்கும் என் வேலைக்காரன்; என்னுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட…”. "நான் யாரை ஆதரிக்கிறேன்" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தையானது "אתמך" (Etmokh) ஆகும். இந்த வார்த்தை இங்கு தவிர முழு பைபிளிலும் எங்கும் காணப்படவில்லை. முஸ்லீம் ஆசிரியர்கள், "அத்மாச்"(etmokh) மற்றும் அஹ்மத் என்ற பெயரான "אחמד" எழுத்துக்கு இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி, ஒரு நோக்கம் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியரின் பெயரை மறைப்பதற்காக இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வேதாகமத்தின் எழுத்தாளர்களால் செய்யப்பட்டது, அது "אחמד" (அஹ்மத்). முஹம்மது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரன் என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது 
 

 

இந்து மதம்


A spiritual reformer will come from a foreign land (outside Bharat) with his disciples (companions). His name will be Mahamad (Muhammad). He will dwell in a desert. (Bhavisyath Purana 3:5-8)

முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகள்

அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500 (சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1)

ஆ) சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 (சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)

இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18

ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10

உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16

ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14

எ) சாம வேதம் - உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2

ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1

'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.' - (சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை)


முடிவுரை


1. முன்னைய வேதங்களில் முஹம்மது நபி,
2. இந்து வேதங்களில் இஸ்லாம் 
போன்ற நூல்களில் முகமது நபி பற்றிய தீர்க்கதரிசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.' (குர்ஆன் 34:28)

"மேலும் நாங்கள் உங்களை அனுப்பவில்லை, ஆனால் அனைத்து உலகங்களுக்கும் (அதாவது, மனித ஜின் உலகங்களுக்கும்) கருணையின் உருவகமாகவே அனுப்பினோம்" (குர்ஆன் 21:108) 

15 கருத்துகள்:

  1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். (ஏசா 42: 1-4).

    பதிலளிநீக்கு
  2. யோவான் 16:13
    13 ஆனால் சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, ​​அவர் உங்களை எல்லா சத்தியத்துக்குள்ளும் நடத்துவார். தன்னிச்சையாகப் பேச மாட்டார்; அவர் கேட்பதை மட்டுமே பேசுவார், வரவிருப்பதை உங்களுக்குச் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  3. எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

    திருக்குர்ஆன் 7:157

    பதிலளிநீக்கு
  4. வேதம்+அந்தம்

    பாடல் எண் : 04
    திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
    பெருநெறி யாய பிரானை நினைந்து
    குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
    ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

    பொழிப்புரை : வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.

    பதிலளிநீக்கு
  5. ஏசாயா 56
    Tamil Bible: Easy-to-Read Version
    அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும்
    56 கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.” 2 ஓய்வு நாளில் தேவனுடைய சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். தீமை செய்யாதவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

    3 யூதரல்லாத சிலர் கர்த்தரோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். அவர்கள், “கர்த்தர் தமது ஜனங்களோடு எங்களைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்” என்று சொல்லமாட்டார்கள். “நான் ஒரு காய்ந்த மரத்துண்டு. நான் குழந்தைகளைப் பெற முடியாதவன்” என்று அலிகள் சொல்லக்கூடாது.

    4-5 அலிகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால், கர்த்தர் கூறுகிறார், “ஓய்வு நாளில் அலிகளில் சிலர், என் உடன்படிக்கைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் நான் விரும்புகின்றவற்றைச் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, நான் ஆலயத்தில் ஒரு ஞாபகக் கல்லை அவர்களுக்காக வைப்பேன். அவர்களின் பெயர் என் நகரத்தில் நினைவுகூரப்படும். ஆம், நான் அந்த அலிகளுக்கு மகன்கள் மகள்கள் ஆகியோரைவிடச் சிறந்ததான சிலவற்றைக் கொடுப்பேன். நித்தியமான ஒரு பெயரை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் எனது ஜனங்களிடமிருந்து வெட்டப்படமாட்டார்கள்.”

    6 கர்த்தரோடு யூதரால்லாத சில ஜனங்களும் சேருவார்கள். அவர்கள் இதைச் செய்வார்கள். எனவே, அவருக்குத் தொண்டு செய்யமுடியும். கர்த்தருடைய நாமத்தை நேசிக்கின்றனர். அவர்கள் தாங்களாகவே கர்த்தரோடு அவரது ஊழியக்காரர்களாகச் சேருவார்கள். அவர்கள் ஓய்வுநாளை வழிபாட்டுக்குரிய சிறந்த நாளாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்து எனது உடன்படிக்கையை (சட்டம்) நெருக்கமாகப் பின்பற்றுவார்கள். 7 கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.” 8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%2056&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  6. 61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.

    http://www.tamililquran.com/qurandisp.php?start=61

    பதிலளிநீக்கு
  7. புணர்ச்சி விதியின்படி திரிபு சொல்லின் இறுதியில் ஏற்ப்படாது

    https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)

    பதிலளிநீக்கு
  8. https://m.facebook.com/100064031760830/videos/sri-sri-ravi-shankar-confirmes-prophet-muhammad-saw-mentioned/1673364566267396/

    பதிலளிநீக்கு
  9. பாடல் எண் : 7
    யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
    போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
    ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
    யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே .

    http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10717&padhi=%20&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    பதிலளிநீக்கு
  10. ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்

    பாடல் எண் : 8
    துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்;
    அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும்
    தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
    நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே .

    http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10717&padhi=%20&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    பேதம்
    pētam
    s. Difference, dissimilarity, வேற்றுமை. 2. Disagreement, variance, dis affection, பிரிவினை. 3. Diversity, variety, திரிபு. 4. Subdivision, sect, division, பகுப்பு.

    https://agarathi.com/word/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

    முத்திரைகுத்த--முத்திரைபோட, inf. To seal, to stamp.

    https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88

    எனவே சமய பகுப்பு முடிவுறுவதை இது குறிக்கிறது

    பதிலளிநீக்கு
  11. பாடல் எண் : 9
    மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
    ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
    தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
    காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே .

    முத்திரை - முடிவு
    மோனம் - அமைதிக்கு
    ஞானம் - வேதம்
    நாதர் -ஆசிரியர், குரு
    சித்தாந்தம் - சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். (அந்தம் - முடிவு)
    காணி - நிலம்
    தேனி
    முத்தர்


    பதிலளிநீக்கு
  12. யோவான் 16:13
    13 உண்மையின் ஆவியானவர் வரும்போது, ​​அவர் உங்களை எல்லா உண்மையிலும் நடத்துவார்; ஆனால் அவன் எதைக் கேட்டாலும் அதையே பேசுவான்;

    பதிலளிநீக்கு
  13. எனது தேசத்தைச் சேர்ந்த கோத்திரங்கள் இணைவைப்பவர்களுடன் சேரும் வரை, அவர்கள் சிலைகளை வணங்கும் வரை அந்த நேரம் நிறுவப்படாது. நிச்சயமாக, என் இனத்தில் முப்பது பொய்யர்கள் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்கிறார்கள், ஆனால் நான் நபிமார்களின் முத்திரை. எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை.

    ஆதாரம்: சுனன் அல்-திர்மிதி 2219, தரம்: ஸஹீஹ்

    பதிலளிநீக்கு
  14. 3:81. (நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.

    3:82. எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.

    https://www.tamililquran.com/qurandisp.php?start=3

    பதிலளிநீக்கு
  15. முன்னோர்கள் எதை செய்தாலும் நன்மை இருக்குமா? 😳 சரி எந்த முன்னோர்கள்?

    சாதி கூடாது, மனிதர்கள் சமமுன்னு நமது முன்னோடிகளான சித்தர்கள் வழிவழியாக சொல்லியும் அதை பிடித்து தொங்கியதோடு இன்றுவரை அதை கொண்டு வந்து சேர்த்த முன்னோர்கள் இருவரில் எந்த முன்னோரை நாம் பின்பற்றுவது?

    தமிழ் நூல்கள் தான் தமிழருக்கான மறை நூல்கள் என்று கூறிய முன்னோரையா? இல்லை ரிக் யஜுர் சாம அதர்வணம் தான் வேதம் என்று கூறிய முன்னோரையா?

    கற்கள், செம்பு ஆகியவை உருவங்கள் இறைவனின் குறியீடு இல்லை, மனிதனின் உயிர்தான் இறைவனின் குறியீடு என்று கூறிய முன்னோரையா? இல்லை சிலையில மந்திரம் ஓதி அதை சக்தி உள்ளதாக மாற்றுகிரோம் என்று கூறிய முன்னோரையா?

    செல்வம் இளமை வாழ்க்கை நிலையில்லாதது எனவே இளமையில் இயலும் பொழுதே ஆன்மீகமும் அறமும் செய்து விட வேண்டும் என்று கூறிய முன்னோரையா? இல்லை ஆண்டு அனுபவிச்சுட்டு பிறகு துறவறம் என்ற பெயரில் வீட்டை விட்டு சென்று விடலாம் என்று கூறிய முன்னோரையா?

    சிவனை கண்டவர் என்வரும் இல்லை, அவனுக்கு மனைவி மக்கள் இல்லை, அவனுக்கு பாலினம் இல்லை, அவன் முத்தொழிலையும் செய்பவன் என்று கூறிய முன்னோரையா? இல்லை சிவன் ஒரு ஆண், சுடுகாட்டில் இருப்பான், அவனுக்கு இரண்டு மனைவியும் இரண்டு குழந்தையும் உண்டு, அவன் அழிவுக் கடவுள் என்று கூறிய முன்னோரையா?

    முன்னோர்கள் கூறினார்கள் என்று எதை சொன்னாலும் நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதை எப்படி என்ன விதிகளின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று நாம் அறியும் முறைமைக்கு பெயர்தான் கல்வி. ஏனென்றால் கல்வி என்பதை ஈருலகுக்கும் நன்மை தரக்கூடியது ஆகும்.

    இந்து போலவே முன்னோர்களில் சான்றோரும் உண்டு அறிவிலிகளும் உண்டு. நமக்கு கிடைக்கும் செய்தி யாரிடத்தில் இருந்து வந்தது என்று ஆய்ந்து அறிய வேண்டும்.

    பதிலளிநீக்கு