உலகில் பற்றற்று வாழ்

தமிழர் சமயம் 


எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு - (நல்வழி வெண்பா : 7)

விளக்கம்: எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.

கிறிஸ்தவம் 


உலகத்தையோ உலகத்தில் உள்ள பொருட்களையோ நேசிக்காதீர்கள். ஒருவன் உலகத்தை நேசித்தால், தந்தையின் அன்பு அவனில் இல்லை. ஏனென்றால், உலகத்தில் உள்ள அனைத்தும் - மாம்சத்தின் ஆசைகள் மற்றும் கண்களின் ஆசைகள் மற்றும் உடைமைகளில் பெருமை ஆகியவை - தந்தையிடமிருந்து அல்ல, ஆனால் உலகத்திலிருந்து வந்தவை. மேலும் உலகம் அதன் ஆசைகளுடன் அழிந்து வருகிறது, ஆனால் கடவுளின் சித்தத்தின்படி செய்கிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான். - (1 ஜான் 2:15-17)

இஸ்லாம் 


ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்! அதைச் செய்தால் அல்லாஹ்வும் என்னை நேசிக்க வேண்டும்! மனிதர்களும் என்னை நேசிக்க வேண்டும்!” எனக் கேட்டார். “உலகில் பற்றற்று வாழ்! அல்லாஹ் உன்னை நேசிப்பான்! மனிதர்களிடத்தில் தேவையற்று இரு! அவர்கள் உன்னை நேசிப்பார்கள்!” எனக் கூறினார்கள். (இப்னுமாஜா 4102)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்கüல் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாüல் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். - (நூல்: புகாரி 6416

 

14 கருத்துகள்:

  1. கல்லான் முதலியவர் இயல்பு
    அறநெறிச்சாரம் பாடல் - 105

    கல்லான் கடைசிதையும் காமுகண் கண்காணான்
    புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் - நல்லான்
    இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்
    நடுக்கமும் நன்மகிழ்வும் இல்.

    விளக்கவுரை கற்க வேண்டியவற்றைக் கல்லாதவன் கீழானவனாய் அழிவான். காமம் கொண்ட ஒருவன் கண் தெரியாதவன் ஆவான். அற்பன் பொருளைப் பெற்ற அளவிலேயே தன் நிலைமை மறந்து நடந்துகொள்வான். அறிவுடையவன் துன்பமும் இன்பத்தையும் அடைந்தபோதும் நடுங்குதலும் நல்ல மகிழ்ச்சியும் அடைவதில்லை.

    பதிலளிநீக்கு
  2. முதுமொழிக் காஞ்சி 8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.

    துன்பம் வேண்டுவோன் - பின்பு துன்பத்தை ஏற்றுக் கொள்பவன்
    இன்பம் தண்டான் - முன்பு இன்பப்பட்டிருத்தலைத் தவிரான்

    சிற்றின்பத்தில் மூழ்குபவன் துன்பமடைவான்.

    பதிலளிநீக்கு
  3. பற்றற்றால் வீடுபேறு கிட்டும்
    அறநெறிச்சாரம் பாடல் - 195

    அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
    பொருளால் பொருள்வளரும் நாளும் - தெருளா
    விழைவு இன்பத் தால்வளரும் காமம்அக் காம
    விழைவுஇன்மை யால்வளரும் வீடு.

    விளக்கவுரை துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்வதால் அறமானது வளரும். முயற்சியால் பெருவாழ்வு உண்டாகும். எக்காலத்தும் செல்வத்தால் செல்வமானது பெருகும். மயக்கம் தரும் சிற்றின்பத்தினால் ஆசை பெருகும். காம ஆசையை விடுவதால் வீடுபேறு கிட்டும்.

    பதிலளிநீக்கு

  4. காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார்,
    ஆம் ஆடார், ஆயந்தார் நெறி நின்று, தாம் ஆடாது,
    ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான்
    மாற்றாரை மாற்றி வாழ்வார். ஏலாதி 58


    காமநுகராது, பொருளின்மேற் காதலியாது, கல்லாரினஞ் சேராது, நீரில் விளையாடாது, கற்றார் நிற்கு நெறியின்க ணின்று, தாம் வழுவா திரந்தேற்றாரை யின்புறும் வகை முற்பிறப்பின்க ணீய்ந்தார் இப்பிறப்பின்கண் பகைவரை வென்றரசராய் வாழ்வார்.

    கருத்து: முற்பிறப்பில் நல்லொழுக்கத்தினின்று பிறர்க்குதவி செய்பவர்களே, இப்பிறப்பில் அரசர்களாய் வாழ்கின்றவராவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. குர்ஆன் 89:20.
    இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
    அஞ்செழுத்தி னுண்மையை யறிகிலாத மாந்தர்காள்
    வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
    அஞ்செழுத்தி னுண்மையை யறிந்துகொள்ள லாகுமே. சிவவாக்கியம் 250

    அஞ்செழுத்தால் ஆகிய இவ்வுடல் எதற்குக் கிட்டியது எனும் உண்மையை அறியாத மாந்தர்களே! வஞ்சகப் பிறவியாம் மானிடப் பிறவியின் மேல் ஆசை கொண்டு, அதனால் இன்னல்பல பட்டு வாழும் மனிதர்களே! மனதின் ஆசைகளைக் களைந்து, ஞானவினை புரிந்து இப்பிறவியை அறுக்க முடியுமானால், ஐந்தெழுத்தின் உண்மைத் தத்துவத்தை அறியமுடியும்.

    பதிலளிநீக்கு
  7. உலக வாழ்க்கை மாயமானது பாடல் - 115

    தோற்றமும் சம்பிரதம்; துப்புரவும் சம்பிரதம்;
    கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்; - தோற்றம்
    கடைப்பட்ட வாறு அறநிது கற்று அறிந்தார் துஞ்சார்
    படைப்பட்ட நாயகனே போன்று.

    விளக்கவுரை பிறப்பும் மாய வித்தையாகும். பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் மாயவித்தையாகும். இயமனும் வாழும் உயிர்களைக் கொண்டு செல்வதும் மாய வித்தையாகும். ஆதலால் ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்தோர் பிறப்பின் இழிவை அறிந்து போர் முனையை அடைந்த படைத்தலைவனைப் போன்று தளர்வு இல்லாது பிறப்பை அறுக்க முயல்வர்.

    பதிலளிநீக்கு
  8. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.

    அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5663

    பதிலளிநீக்கு
  9. 1 யோவான் 2:15-17: "உலகிலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதீர்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூரினால், பிதாவின் அன்பு அவனிடத்தில் இல்லை. உலகத்தில் உள்ளவைகள் யாவும் மாம்சத்தின் இச்சைகளே. மேலும், கண்களின் ஆசைகளும், வாழ்வின் பெருமையும் - தந்தையிடமிருந்து அல்ல, உலகத்திலிருந்து வந்தவை, உலகம் அதன் ஆசைகளுடன் அழிந்து வருகிறது, ஆனால் கடவுளின் சித்தத்தின்படி செய்கிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான்.

    பதிலளிநீக்கு
  10. காயாதி பூதம் கலைகால மாயையில்

    ஆயாது அகல அறிவுஒன்று அனாதியே

    ஓயாப் பதிஅதன் உண்மையைக் கூடினால்

    வீயாப் பரகாயம் மேவலும் ஆமே

    (திருமந்திரம் 643)

    ‘மாயை’ என்பது ஆகாயம் முதலிய பூதங்களையும் கலை, காலம் முதலியவற்றையும் உள்ளடக்கிய சடப்பொருள். உலகமோ சடப்பொருளாகிய இந்த மாயையின் விளைபொருள். ஆகவே தோன்றி, நின்று, அழிவது; நிலையில்லாதது. நிலையில்லாத இந்த உலகத்தின் தன்மையை ஆராயாமல், அதையே நிலை என்று நம்பி, அதிலேயே அறிவு ஒன்றித் தோய்ந்து கிடக்கிறது அனாதியாகிய உயிர். சார்ந்து நிற்கத்தக்க பொருள் நிலையற்றதாகிய இந்த உலகம் அன்று; உயிரின் ஈடேற்றத்துக்காக இடையறாது இயங்கிக்கொண்டிருக்கிற இறைவன்தான்.

    பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

    மருளானாம் மாணாப் பிறப்பு

    (குறள் 351)

    நிலையில்லாதவற்றை நிலையானவை என்று நம்புகிற அறியாமைதான் எல்லாச் சிடுக்குகளுக்கும் காரணமென்று வள்ளுவரும் சொல்கிறார் இல்லையா? எனவே, நிலையில்லாத பொய்ப்பொருளைவிட்டு நிலையான மெய்ப்பொருளில் தோயும்போது அழியாத ஒளியுடம்பை அடையலாம் என்பது திருமூலர் கருத்து. வள்ளலார் இந்தக் கருதுகோளை எடுத்துக்கொண்டு,

    பதிலளிநீக்கு
  11. வீடுபேற்றை அடையும் விதம்

    அறநெறிச்சாரம் பாடல் - 192

    உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கை
    செயிர்வித்திச் சீலம்தின்று என்னை - செயிரினை
    மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
    கூற்றம் குறுகா இடம்.

    விளக்கவுரை உயிர்களாகிய விதையை விதைத்து உடல்களாகிய தானியத்தை விளைவித்து, கூற்றுவன் உண்ணுதற்குக் காரணமாகிய இவ்வுலக வாழ்க்கையை மெய்யென நம்பி, தீமையை விதைத்து நல்லொழுக்கமாகிய விதைகளை விதையாமல் தின்பதால் வரும் பயன் யாது? தீவினையை மாற்றி மறுமை இன்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைச் செய்யின் எமன் அணுகாத வீட்டினை அடைந்து இன்புறலாம்.

    பதிலளிநீக்கு
  12. முதல் தந்திரம் - 13. நல்குரவு பாடல் எண் : 2

    பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
    றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
    எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
    அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.
    பொழிப்புரை :
    `பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10113

    பதிலளிநீக்கு
  13. உண்மைப் பெரியார் உலக வாழ்வை வெறுப்பர் பாடல் - 133

    முடையுடை அங்கணம் நாள்தோறும் உண்ட
    கடைமுறைவாய் போதரக் கண்டும் - தடுமாற்றில்
    சாவாப் பிறவாஇச் சம்பிரத வாழ்க்கைக்கு
    மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு.

    விளக்கவுரை அழுகும் நாற்றத்தையுடைய சாக்கடை போல நாள்தோறும் உண்ட உணவுப் பொருள்கள் இழிந்த நிலையில் எருவாய் முதலியவற்றின் வழியாக வெளிவருதலைப் பார்த்திருந்தும் மக்கள் மனமாற்றத்தினால் செத்தும் பிறந்தும் வாழ்கின்ற இந்த நிலையில்லா வாழ்க்கையில் உண்மைப் பொருளை உணர்ந்த சான்றோரின் மனம் பொருந்தாது. https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  14. மண்ணிற் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
    எண்ணிற் கலங்கி இறைவன் இவனென்னார்
    உண்ணிற் குளத்தின் முகந்தொருபால்
    வைத்துத்
    தெண்ணிற் படுத்த சிவனவன் ஆமே
    (திருமந்திரம்-2991)

    கருத்து: மண்ணில்(சேற்றில்) கலங்கி இருக்கும் நீரின் தன்மை தெரியாததைப் போல, மக்கள் உலக மயமான எண்ணத்தால் கலக்கமடைந்து, இறைவன் இன்ன தன்மையன் என்று உணரமாட்டார்கள். உண்பதற்கு உரிய குளத்தில் இருந்து நீரை முகந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துத் தெளிவாக்குகிறோமல்லவா? அதுபோல, சிந்தையைச் சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்த, சீவன் சிவமாவான்.

    http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2805&id1=52&id2=0&issue=20150816

    பதிலளிநீக்கு