இதற்கு நெருக்கமான பொருள் கொண்ட பாடல்…
அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - சிவவாக்கியம் 224
பொ-ரை: தானாக அரியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே!
தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. - தேவாரம் 67
பொ-ரை: ஒளிவடிவினனாய்,உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய், அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய், பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய், மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
அரியும் சிவனும் ஒன்று. ஆனால் திருமாலும் அரியும் வேறு வேறு.