விபச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விபச்சாரமும் வறுமையும்

தமிழர் சமயம்


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் (நல்வழி வெண்பா : 20)

விளக்கம்: கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

இஸ்லாம்


'விபசாரத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1. முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2. வருமானத்தை அறுத்துவிடும்
3. ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4. நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

கிறிஸ்தவம் 


ஒரு விபச்சாரி உன்னை வறுமையில் தள்ளுவாள், ஆனால் வேறொருவரின் மனைவியுடன் உறங்குவது உங்கள் உயிரை இழக்க செய்யும்- (நீதிமொழிகள் 6:26)

விபச்சாரம் : மனைவி அல்லாத பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இந்த வகைதான்

கிறிஸ்தவம்


"விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மத்தேயு 5:27-28

இஸ்லாம்


ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

”அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்: ”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)

தமிழர் மதம்


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் (பிறனில் விழையாமை குறள் 141)

பொருள்[தன்னுடைய மனைவியல்லாமல்] பிறனுடைய [மகளாக & மனைவியாக] பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. - நாலடியார் 86

பொருள்: பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).