புனிதநூல்கள்

புனித நூல்கள் பல்வேறு மொழிகளில் வெவ்வேறு காலங்களில் பல்வேறு பெயரில் பெயரில் கையாளப் பட்டுள்ளது. தமிழ் நூல்களைப் பொறுத்த வரையில் தொடக்கத்தில் வேதங்களை தவிர ஏதும் இல்லை என்கிற நிலை இருந்த பொழுது "நூல்" என்று குறிப்பிடப் பட்டு அது முதல் மற்றும் வழி நூல் என்று வகை படுத்தப் பட்டது. பிறகு அனுபவத்தைக் கொண்டு உலகம் தொடர்பான நூல்கள் மனிதர்களால் எழுத தொடங்கிய பொழுது அவைகளை உலக நூல்கள் என்றும் அல்லாததை "மறை நூல்கள்" என்றும் குறிப்பிடப் பட்டது. பிறகு வட மொழி நூல் மற்றும் மதம் ஊடுருவ துவங்கிய பிறகு "வேதம்" மற்றும் "ஆகமம்" (முதல்வன் வாக்கு) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   
 

 வெவ்வேறு சமயங்களில் புனித நூல்கள் என்னென்ன பெயரில் அறியப்படுகின்றன?

தமிழர் சமயங்கள் நூல், மறை, மந்திரம், காப்பியம்வேதம், ஆகமம்

இந்து மதம் வேதம் (ரிக், யஜுர், சாம, அதர்வனா), உபநிஷம் (எ.கா - ஈஷா உபநிஷம் உட்பட மொத்தம் 108), புரணம் (கருட புராணம் உட்பட மொத்தம் இந்து மத பெரியோர்களால் அங்கீகரிக்கப் பட்ட 18 புராணங்கள் உண்டு), இதிகாசம் (ராமாயனம், மகாபாரதம்), கீதை மற்றும் மனுஸ்ம்ரிதிகள் (வேதத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள்)

இஸ்லாம் அல் கிதாப் (நூல்), அல் குர்ஆன் (ஒதப்படுவது), திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது), தன்சீல் (வெளிப்படுத்தப் பட்டது) போன்ற பல பெயர்கள் உள்ளன.  

கிறிஸ்தவம் இதில் பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் அல்லது புத்தகம் என்று பெயர். மேலும் அதன் பெயர்களாக Book of the Law (Deuteronomy 31:26)Gospel (Romans 1:16), Holy Scriptures (Romans 1:2) Law of the Lord (Psalm 19:7), Living Words (Acts 7:38), Scriptures (2 Timothy 3:16), The Scroll (Psalm 40:7), Truth (John 17:17),  Word of God (Luke 11:28)

வேதம் என்பதன் வரையறை என்ன?

 
பல சமய புனித நூல்களை சிறிதளவேனும் வாசித்த பிகு வேதம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிய முற்படும் பொழுது கீழ்கண்ட இலக்கணங்கள் வேதங்களுக்கு பொருந்தும் என தோன்றியது.
  1.  முன்னறிவிப்புகள்: பின்வருபவனவற்றை முன்னமே அறிவிக்கக் கூடியது (Prophecy) - உதாரணமாக பின்வரும் சம்பவங்கள் தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள்.   
  2.  கடந்த கால வேதத்தை மெய்ப்பிக்கக் கூடியது: எடுத்துக்காட்டாக, அவ்வையாரின் நன்னூல்,குறளையும், திருமந்திரத்தையும் ஒரே வாக்கு என்று கூறுவதும், ஆபிரகாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் முன் தோன்றிய வேதங்களை குறித்து கருத்துக்களை சொல்வதும், ரிக் யஜுர் சாம வேதங்கள் அதே போல முன் வந்த தூதர்களை பெருமை படுத்துவதும் இதில் அடங்கும்.
  3.  மனிதன் அறியாத உண்மைகளை விளக்குவது: கடவுளின் வரையறை, கடவுள் துதி முறைகள் மற்றும் மனித அறிவுக்கு எட்டாத விதி, சொர்கம் நரகம், உயிர், பிறப்பு இறப்பு தொடர்பான செய்திகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
  4.  நன்மை தீமையை வரையறுப்பது: மனிதனின் வாழ்க்கையில் எவையெவை அறம் எவையெவை  மறம் என்று பிரித்து வரையறுத்து கூறக்கூடியதாகவும், அறம் செய்தால் விளையும் நன்மையையும் மறம் செய்வதால் ஏற்படும் தீமையையும் விளக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஆனால் இந்த வரையறை முறையானதல்ல. இந்த வரையறை குறள் மற்றும் தொல்காப்பியம் என்ற இருவேறு பண்புகளை கொண்ட ன்னோர்களுக்குப் பொருந்துமா? பொருந்தாது.! இவை இரண்டையும் வேதம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வரையறையை ஏற்படுத்த முயன்றதாக நீங்கள் கருதினால் அதில் பிழை ஏதும் இல்லை. 
 
குறள் ஒரு மறை நூல் என்பது "தேவர் குறளும்.....,மூலர் சொல்லும்....ஒன்றே என்றுனர்" எனும் அவ்வையார் வாக்கிலிருந்து புலப்படுகிறது. ஏனென்றால் மூலர் தனது திருமந்திரத்தில் "வேதம் செப்ப வந்தேனே" என்கிறார். இதன் மூலம் குறள் ஒரு மறைநூலாக இருக்க வாய்ப்புள்ளது.
தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்பதை அறிவோம். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அது எவை எவைக்கெல்லாம் இலக்கணம் சொல்கிறது என்று நாம் அறிந்தால் அதுவும் ஓர் மறைநூல் என்று நாம் கருதாமல் இருக்க முடியாது. 
  • தெய்வம் பாலினமற்றது: தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே - (சொல்லதிகாரம் 1:4)
  • மறைநூலுக்கான வரையறை: முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  • உலகத்தின் இயற்க்கை: நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல். பொருள். மரபியல் - 635)
எனவே மனிதன் அறியாத பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதால் தொல்காப்பியமும் மறைநூல் எனக் கருதலாம். சொல்லும் எழுத்தும் புணரும் விதி உட்பட தொல்காப்பியத்தின் பல சூத்திரங்கள் மனித வாழ்வுக்கும் பொருந்தும் என தொல்காப்பிய அறிஞர்கள் கூறுவார். ஒரு சூத்திரம் பல இடங்களுக்கும், இனங்களுக்கும் பொருந்தும்என்றால் அதை மறைநூலாக கருதாமல் இருக்க  முடியவில்லை. எனவே வேதத்தின் வரையறையை தேடும் முயற்சியில் கீழ்கண்ட செய்திகள் கிடைத்த்துள்ளது.

தமிழர் சமயம்

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

பொருள்: உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் முனைவனுக்கு வெளிப்பட்டு மக்களுக்கு போதிக்கப்பட்டு பின்பற்ற பட்டு நின்றது நூல் என உணர்க. 

குறிப்பு: இன்று புத்தகமாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நூல் என்பது மறை நூலையே குறிக்கும். எனவே திருக்குறள் உட்பட அனைத்து வேதத்திலும் நூல் என்று குறிப்பிடப்படுவது வேதத்தையே ஆகும்.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
    • வினை-யின்: செயல்-இன் 
    • நீங்கி: அதை நீக்கி (அ) இல்லமால் 
    • விளங்கிய: உணரும் உணர்ச்சி 
    • அறிவு: அறிவு ஞானம் 
    • முனைவன்: முந்தியவன், மூத்தவன் 
    • கண்டது: "எழுதப்பட்டது" என்பது இதற்க்கு பொருந்தாது. ஏனென்றால் மனிதன் எழுத துவங்கும் முன்பே அறிவு நூற்கப் பட துவங்கி விட்டது. எனவே கண்டது என்பதே இங்கே குறிப்பிட சிறப்பான சொல், "எழுதப்பட்டது" என்பது "கண்டது" என்கிற சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. எடுத்துக் காட்டாக, கீதை - பாடல், வேதம் என்பது கீர்த்தனைகளின் தொகுப்பு, அத்-திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது) திருக்குர்ஆன் அழைக்கப் படுகிறது. அகத்தியம் (அகம்+இயம்) என்பதும் அகத்தில் ஒலிப்பது , பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் என்று பெயர்.
    • முதல்: ஆதி, ஆரம்ப, தொடக்க
    • நூல்: (கோர்வையாக, வரிசைப் படுத்தி) நூற்கப்பட்டது 

பேராசிரியர் உரை: வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். 
 
முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது. 
 
மற்று மேலே சொல்லப் பட்ட சூத்திரத்தின்படி நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம். (தொல்.பொருள்.649.பேரா.)

கருத்து: முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641) 

பேராசிரியர் உரைஎன்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். 
 
கருத்து: வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும். விக்கி 

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)

பேராசிரியர் உரைமுதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், பிற மொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு. 

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

உலக வழக்கமும் ஒருமுக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான் (அகத்தியம் 381)

நூற்பா விளக்கம்: உலக வழக்கமும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும் நிலைபெற உணர்வை தருபவன் முதுமறை நெறியை வழங்குபவனாவான்.

குறிப்பு: மேற்கண்ட இந்த அடிப்படை வரையறையோடு திருமந்திரம் கூறும் "நான்மறை"-யை வாசித்து தெளிவு பெற்றால், உலக வேதங்கள் அனைத்தும் ஒரே தெய்வத்தின் ஏற்பாடு என்பதை அறியலாம். உலக சமயங்கள் எத்தனை, தமிழர் சமயங்கள் எத்தனை, அவைகள் ஒரு புள்ளியில் எப்படி இணைகிறது என்கிற தெளிவு பிறக்கும்.  

இஸ்லாம்


தமிழர் சமயம் கூறுவது போல "நூல்" (அல் கித்தப் - The Book) என்றும் குர்ஆன் தன்னை அடையாள படுத்துகிறது.

இது, சந்தேகத்துக்கு இடமில்லா அல் கிதாப் (நூல்) ஆகும். பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - (குர்ஆன்  2:2)

குர்ஆன் நூலானது அவரின் அனுபவமன்றி அவருக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் ஆகும். அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். இதில் வஹீ என்பது சில முறைகளில் வழங்கப் பட்டது.

(நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (தேவதூதர்) என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? - (குர்ஆன் 6:50)

1) வஹீயின் மூலமோ 2) திரைக்கப்பால் இருந்தோ அல்லது 3) ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன்:42:51)

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.
  1. வஹீயின் மூலம் பேசுவது - உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக (அசரீரியாகவோ, கனவிலோ ) அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. (திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)
  2. திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது - அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (திருக்குர்ஆன்:4:164.)
  3. வானவர் (ஜிப்ரீல்) மூலம் செய்தியைத் தெரிவிப்பது - என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (திருக்குர்ஆன்:16:2.)
ஆகியவை அம்மூன்று வழிகளாகும். 

சுருக்கமாக, முகமது நபி, தான் செய்த வினையின் மூலம் விளைந்த அறிவின்றி, அதாவது அனுபவத்தின் மூலமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கொண்டு குர்ஆனை மக்களுக்கு போதித்தார்.

மறைநூல் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று 
 
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - (குர்ஆன் 2:38)  
 
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்
 
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213) 

பிற்காலத்தில் மொழிகள் வேறுபட்டதும், ஒவ்வொரு மொழிக்கும் வேதம் வழங்கப் பட்டது (ஒவ்வொரு சமுதாயத்துக்கும் முதல் நூல் உண்டு) 

 "ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" - (குர்ஆன் 14:4)

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்-ஆன் 10:47)

வழிநூலை புறக்கணித்தவர்கள்

அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். - (குர்ஆன் 40:83)

அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்ஆன் 2:101)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது. (குர்ஆன் 5:46)  

அனைத்து மறைநூல்களும் நம்பப்பட்ட வேண்டும்  

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (குர்-ஆன் 2:4) 

"(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான். இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்". 

(நபியே!) இன்னும் இறைநம்பிக்கை உடையவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். [அல்குர்ஆன் 2:4] 

 “வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 5:59)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும்,  அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். [அல்குர்ஆன் 4:136.]  

குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது  

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.  (குர்ஆன் 25:1) 

அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் - அவரு(நபியு)டைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். [அல்குர்ஆன் 69:44] 

குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது 

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (குர்-ஆன் 15:9) 

இஸ்லாத்தை பொறுத்தவரை குர்ஆன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது, அவற்றில் சில

1 அல் கிதாப் (புத்தகம் (அ) நூல்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது).... etc.

அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன,

– நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “தௌராத்”
– நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “ஸபூர்”
– நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “இன்ஜீல்”
– நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட “அல்குர்ஆன்"


இந்து மதம்

மாறாத அது மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண்டது. ஆலமரம் போன்ற அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான். -  (கீதை - 15.1)

குறிப்பு: ஒரே மூல நூலிலிருந்து அனைத்து வேதங்களும் வழங்கப்பட்டதை இந்த வசனம் மறைமுகமாக கூறுகிறது. மேலும் வேர்கள் அழியாது, இலைகள் அவ்வப்பொழுது உதிரும், மறையும். புதிய இலைகள் துளிர்க்கும். காய்ந்த பழைய இலைகளை நம்பி இருத்தல் அறிவுடைமை அல்ல. 

 நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே. - (Bg 15.15)

குறிப்பு: அனைத்து வேதங்களும் பிறப்பு இறப்பு இல்லாத தன்னை பற்றியே பேசுவதாகவும்அவை அனைத்தையும் வழங்கியது தான்தான்இறைவன் கூறுவதாக இந்த வசனம் அமைந்து இருக்கிறது.  

கிறிஸ்தவம்

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49) 
 
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நல்லறம் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி - (II தீமோத்தேயு 3 அதிகாரம் 16) 
 

 பௌத்தம்


புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் இருந்தபொழுது ஞானம் கிடைத்தது என்று நாம் படித்துள்ளோம். யாரிடமிருந்து? புத்தமதம் நாத்தீக மதம் என்று சொல்லப்படுகிறது. முதலில் பகுதி தொலைந்த  அரைகுறை தகவல் உள்ள நூலையோ, அதன் முழு வரலாறு அறியாத நிலையிலோ அந்த முடிவுக்கு நாம் வர முடியாது.  
 

முடிவுரை

எனவே மனிதனின் அனுபவ அறிவுமின்றி ஒரு கல்வி எல்லா காலங்களிலும், எல்லா மொழயிலும், எல்லா  நிலத்திலும் வழங்கப் பட்டுக் கொண்டே இருந்து இருக்கிறது. அவைகள்தாம் மறை நூல்களாகும், அவைகள் ஒரே இறைவனிடமுள்ள ஒரே மூல நூலின் சிறு சிறு பகுதிகளாம்.  



56 கருத்துகள்:

  1. செயற்கு அரியவற்றைச் செய்வதே சிறந்தது!
    அறநெறிச்சாரம் பாடல் - 186

    சோறியாரும் உண்ணாரோ! சொல்லியாரும் சொல்லாரோ
    ஏறியாரும் வையத்துள் ஏறாரோ - தேறி
    உரியதோர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
    அரிய துணிவதாம் மாண்பு.

    விளக்கவுரை சோறு உண்ணுவதை யாரும் செய்யாரோ? அரியவற்றைச் செய்வேன் என்று யாரும் சொல்லாரோ? எருதுகள் பூட்டும் வண்டியில் எவரும் ஏறிச் செல்லாரோ? இவற்றையெல்லாம் உலகத்துள் உள்ளவர் யாவரும் செய்வர். ஆயின் கற்பதற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து மனத்தில் உள்ள அழுக்கை அகற்றி அரியவற்றைச் செய்து வீடுபேற்றை அடைய எண்ணுவதே பெருமை தருவதாகும்.

    பதிலளிநீக்கு
  2. ஞானநூல் அறிவை வளர்க்கும்
    அறநெறிச்சாரம் பாடல் - 187

    பாம்புஉண்ட நீர்எல்லாம் நஞ்சுஆம்; பசுஉண்ட
    தேம்படு தெள்நீர் அமுதமாம் - ஓம்பற்கு
    ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோல்
    களியாம் கடையாயார் மாட்டு.

    விளக்கவுரை பாம்பு உண்ட நீர் முழுவதும் நஞ்சாக மாறும்; அதுபோலக் கயவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் மயக்கத்தையே ஏற்படுத்தும்; பசுக்கள் குடித்த இனிய தெளிந்த நீர் பாலாக ஆகும்; அதைப் போல் உயர்ந்தவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் போற்றுதற்குரிய அறிவை வளர்க்கும்.

    பதிலளிநீக்கு
  3. ஞானநூல் பயிற்சியாண்டும் வேண்டும்
    அறநெறிச்சாரம் பாடல் - 188

    கெடுக்கப் படுவது தீக்கருநூம்; நாளும்
    கொடுக்கப் படுவது அருளே; - அடுத்துஅடுத்து
    உண்ணப் படுவது நல்ஞானம்; எப்பொழுதும்
    எண்ணப் படுவது வீடு.

    விளக்கவுரை எக்காலத்தும் அழிக்கப்படுவது தீயசெயலாகும்; பிறரிடம் செய்வதற்குரிய அருள் ஆகும்; பல முறையும் ஆராய்ந்து இன்பம் அடைவதற்கு உரியது நல்ல ஞான நூலே ஆகும்; எப்பொழுதும் மனத்தால் நினைக்கப்படுவது வீடு பேறாகும்.

    பதிலளிநீக்கு
  4. அறநெறிச்சாரம் வீட்டினை அடைவிக்கும்
    அறநெறிச்சாரம் பாடல் - 216

    எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
    பொய்ந்நூல் அவற்றின் பொருள்தொ¢ந்து - மெய்ந்நூல்
    அறநெறிச் சாரம் அறிந்தான்வீடு எய்தும்
    திறநெறிச் சாரம் தெளிந்து.

    விளக்கவுரை பொய்ந் நூல்களாகிய பிற நூல்களைக் கற்றாலும் கேட்டாலும் அவற்றின் பொருளை உணர்ந்து கொள்வதாலும் யாது பயன்? உண்மை நூலான அறநெறிச்சாரம் என்னும் நூலைக் கற்று உணர்ந்தவன் உறுதி தரும் நெறியின் பயனை அறிந்து அதில் நின்று முத்தியினை அடைவான். (அறநெறிச் சாரம் உணர்ந்து அதன் வழி நடப்போர் முத்தியடைவர்).

    பதிலளிநீக்கு

  5. தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
    தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
    தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
    தானே எழுந்த மறையவ னாமே. - திருமந்திரம்

    பதிலளிநீக்கு
  6. வணங்கத் தகாதார்

    41. மிச்சை இலிங்கியர்நூல், தெய்வம், அவாவினோடு
    அச்சம், உலகத்தோடு ஆறு

    * பொய்க்காட்சியுடைய தவத்தர், நூல், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தாலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவிநயம் ஆகும்.
    https://marainoolkal.blogspot.com/2022/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  7. அவிநய நீக்கம்

    42. இவ்வாறும் நீக்கி வணங்கார்; அவிநயம்
    எவ்வாறும் நீங்கல் அரிது.

    * இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.

    பதிலளிநீக்கு
  8. அறநெறிச்சாரம்

    பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை

    மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
    பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
    கேட்கும் திருவுடை யாரே பிறவியை
    நீக்கும் திருவுடை யார். பாடல் - 2

    விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

    பதிலளிநீக்கு
  9. கீதை - 15.2 - சம்சாரம் எனும் மரம்

    अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
    अधश्च मूलान्यनुसंततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥१५- २॥

    அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா: |
    அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே || 15- 2|

    அத = கீழே

    ச = மேலும்

    உர்த்வம் = மேலே

    ப்ரஸ்ருத = பரந்து விரிந்த

    தஸ்ய = அதன்

    ஸாகா = கிளைகள்

    குணப்ரவ்ருத்தா = குணங்களால் உருவாக்கப்பட்ட

    விஷயப்ரவாலா: = புதிதாக முளை விட்டு

    அத = கீழே

    ஸ்ச = மேலும்

    மூலாநி = மூல காரணமான

    அநுஸந்ததாநி = பரவியுள்ள

    கர்மாநுபந்தீநி = கர்மங்களால் பிணைக்கப்பட்டு

    மநுஷ்ய லோகே = மனித குலமே

    அந்த ஆல மரத்தின் கிளைகள் குணங்களால் வளர்ந்து; விஷயங்களால் துளிர்விட்டு, பரந்து விரிந்து , கர்ம வினைகளால் பிணைக்கப் பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  10. கீதை - 15.3 - பற்றின்மை என்ற வாள்

    न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा ।
    अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥१५- ३॥

    ந ரூபமஸ்யேஹ ததோ²பலப்யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா |
    அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூல மஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா || 15- 3||


    ந = இல்லை

    ரூபம் = உருவம்

    அஸ்ய = இதற்கு

    இஹ = இங்கே

    ததோ = அப்படியாக

    உபலப்யதே = நினைக்கப் பட்டது

    ந = இல்லை

    அந்த = முடிவும்

    ந = இல்லை

    ஆதி = தொடக்கமும்

    ந = இல்லை

    ச = மேலும்

    ஸம்ப்ரதிஷ்டா = அடிப்படையும்

    அஸ்வத்தம் = ஆல மரத்தின்

    ஏனம் = இந்த

    ஸுவிரூடமூல = ஆழமான அதன் மூலம்

    அஸங்க = பற்றின்மை என்ற

    ஸஸ்த்ரேண வாளால்

    த்ருடேந = திட சிந்தையால்

    சித்த்வா = வெட்டுவாய்

    இந்த வாழ்கை என்ற ஆல மரத்தின் வடிவத்தை யாரும் முழுவதும் கண்டதில்லை . இதன் ஆரம்பமும், நிகழ் காலமும், முடிவும் தெரிவதில்லை; ஆழமான வேர் ஊன்றிய இந்த ஆல மரத்தை பற்றின்மை என்ற வாளால் வெட்டி எறிந்து விட்டு;

    பதிலளிநீக்கு
  11. 2 தீமோத்தேயு 3:16
    எல்லா வேதவாக்கியங்களும் தேவனால் ஊதப்பட்டிருக்கிறது, போதனைக்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதியைப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.

    வேதாகமம் ஓர் விளக்கவுரை 2https://tcarticle.wordpress.com/2017/03/29/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2/


    ஆதியாகமம் 10:5
    மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.


    ஆதியாகமம் 11:1
    உலகம் பிரிக்கப்பட்டது
    வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.

    ஆதியாகமம் 11:6
    கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.


    ஆதியாகமம் 11:7
    எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார்.



    ஆதியாகமம் 11:9
    உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.

    பதிலளிநீக்கு
  12. வீடு அடைபவனின் இயல்பு பாடல் - 51
    நூல்உணர்வு நுண்ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
    சால்புஇன்மை காட்டும் சவர்ச்செய்கை - பால் வகுத்துப்
    பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றுஇன்மை
    ஓட்டுவான் உய்ந்துபோ வான்.

    விளக்கவுரை ஒருவனின் சிறந்த ஒழுக்கம் அவன் கற்றறிந்த நூலில் உள்ள நுண் உணர்வைப் புலப்படுத்தும்; ஒருவனது வெறுக்கக்கூடிய இழிவான செய்கை அவனது இழி தகைமையான நல்ல நூல் பயிற்சி இன்மையைப் புலப்படுத்தும்; பகுதி தோறும் வேறுபட்டு ஒருவன் செய்யும் பொய்யான ஒழுக்கத்தால் பரம்பொருளை அடைய இயலாது; உண்மையாகவே ஒருவன் பற்று அற்ற இயல்பை மேற்கொள்வானானால் அவன்

    பதிலளிநீக்கு
  13. அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? - திருக்குர்ஆன் 2:170

    இந்த குர்ஆன் இறைவன் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. [அல்குர்ஆன் 10:37]

    ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக் கட்டுபவர் எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன் 16:101

    மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

    இந்த வசனத்தை அபூஹுரைரா (ர­லி) அவர்கள் சுட்டி காட்டி ''இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)லி நூல்: புகாரீ 118

    அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

    ஜிப்ராயீல் (அலை) - வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
    மீக்காயீல் (அலை) - மழை கொண்டு வரும் மலக்கு https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். (அல்குர்ஆன் 14:4)

    நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.(அல்குர்ஆன் 15:9)

    பதிலளிநீக்கு
  14. (முஃமின்களாகிய) அவர்கள் அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் ஈமான் கொண்டுள்ளனர். அவனது தூதர் களில் எவருக்குமிடையில் வேறுபாடு காட்ட மாட்டோம். எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பை கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது என்றும் கூறுகின்றனர். (2:285)

    முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் (4:136)

    ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனது மலக்கு களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர் களையும் மறுமை நாளையும் கலாகத்ரையும் விசுவாசம் கொள்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (அறிவிப்பவர்: உமர் (ரழி), நூல்: முஸ்லிம்)

    எவர் அல்லாஹ்வையும். அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களை யும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்று விட்டார்.(4:136)

    தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர் களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாள னாகவும் இருக்கின் றான்.(4:165)

    உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து; “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக; (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
    அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே, நாங்களோ அவர் களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விட லாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினை வூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
    அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.(7:172-174)

    முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக் கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (33:40)

    (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம். இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம். ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூற வில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:64)

    திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரு டைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். இன்னும் எவர்களுடைய வர லாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர். (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ் வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக் கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (40:78)

    அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின் றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின் றான். (2:253)

    “அல்லாஹ்வையும்,எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும்,இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்க ளுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்ட வற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக(3:84)

    பதிலளிநீக்கு
  15. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். [அல்குர்ஆன் 4:136.]

    4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.

    4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

    5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்

    6:8. (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது

    பதிலளிநீக்கு
  16. இந்த குர்ஆன் இறைவன் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. [அல்குர்ஆன் 10:37]

    இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. [அல்குர்ஆன் 10:38]

    (நபியே!) இன்னும் இறைநம்பிக்கை உடையவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். [அல்குர்ஆன் 2:4]

    எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். [அல்குர்ஆன் 4:162.]

    “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும். [அல்குர்ஆன் 2:4]

    எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். [அல்குர்ஆன் 3:184]

    (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. [அல்குர்ஆன் 6:10.]

    “வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. [அல்குர்ஆன் 5:59.]

    (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? [அல்குர்ஆன் 12:109]

    (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. [அல்குர்ஆன் 2:120.]

    பதிலளிநீக்கு
  17. என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - குர்ஆன் 2:38.

    எல்லா வேதங்களும் ஒரே இறைவனால் அருளப்பட்டதா?
    எனில் எதையும் பின்பற்றலாமே?
    நல்வழி வரும் பொழுது அதனை பின்பற்ற வேண்டும் அதாவது புதிய வேதத்தை பின்பற்றுபவர்கள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து கொண்டவர்கள். தேர்ந்தெடுப்பது வேதமா இல்லையா என்று ஆய்வு செய்வது அவசியம். அந்த வகையில் இறுதி வேதமான திருக்குர்ஆன் இந்த காலகட்டத்தில் உலக மக்கள் அனைவரும் பின்பற்ற தகுதியான வேதம்.
    இறைவனின் இறுதி வேதம் சொல்லும் வேத ஞானம் என்ன?
    வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. [அல்குர்ஆன் 5:15.]

    10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

    12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
    (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” [அல்குர்ஆன் 2:38]

    நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். [அல்குர்ஆன் 2:159.]

    அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். [அல்குர்ஆன் 2:101]

    அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவரு(நபியு)டைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். [அல்குர்ஆன் 69:44]

    (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். [அல்குர்ஆன் 10:94]

    பதிலளிநீக்கு

  18. ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம். (குர்ஆன் 17: 16)
    வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. [அல்குர்ஆன் 5:15.]

    (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். [அல்குர்ஆன் 10:94]

    இந்த குர்ஆன் இறைவன் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. [அல்குர்ஆன் 10:37]

    இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. [அல்குர்ஆன் 10:38]

    எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். [அல்குர்ஆன் 4:162.]

    பதிலளிநீக்கு
  19. சான்றுகள்:
    http://www.tholkappiyam.org/porulathikaram.php
    http://www.tamilvu.org/slet/l6140/l6140son.jsp?subid=3361
    http://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012115.htm
    https://www.biblegateway.com/
    http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2383
    http://www.thevaaram.org/thirumurai_1
    https://www.vedabase.com/ta/bg/15/15
    https://www.vedabase.com/ta/bg/15
    https://134804.activeboard.com/t63726291/topic-63726291/?page=1&w_r=1542877786
    http://iraivali.blogspot.com/p/blog-page_9758.html
    http://nidur.info/old
    http://mahabharatham.arasan.info/2015/12/Bhagavad-Gita-In-Tamil.html
    http://www.bibleintamil.com/
    http://www.tamililquran.com/revelation.html
    araneriislam.blogspot.in

    பதிலளிநீக்கு
  20. ஹா, மீம் விளக்கமான இவ்(இறை) நெறி நூலின் மீது சத்தியமாக, நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். இன்னும் நிச்சயமாக, இது நம் மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக் கிறது. (இதுவே இறைநெறி நூல்களில்) மிக்க மேலா னதாகும். ஞானம் மிக்கதுமாகும். (அல்குர்ஆன் : 43:1-4)

    பதிலளிநீக்கு
  21. அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யாக்கிறார்கள். இவர்க ளுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித் தார்கள். ஆகவே இந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்கு வீராக. (அல்குர்ஆன் : 10:37-39)

    பதிலளிநீக்கு
  22. எனக்கும், எனக்கு முன்சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் இது தான். ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டினான். அதை அழகுபடுத்தினான். ஒரு மூலையில் ஒரு செங்கல் தவிர மற்ற அனைத்தையும் அழகுற அமைத்தான். மக்கள் அதைச் சுற்றிப்பார்த்து அதில் வியப்படைந்தார்கள். இந்த ஒரு செங்கல்லையும் வைத்திருக்கக் கூடாதா என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த ஒரு செங்கல். நான்தான் நபிமார்களுக்கு முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 3535

    பதிலளிநீக்கு
  23. இஸ்ரவேலர் சமுதாயத்தை நபிமார்கள் வழிநடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்ததும் அடுத்த நபி வழிநடத்துவார். எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல் : புகாரி 3455, 3249

    பதிலளிநீக்கு
  24. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி; இறுதித் தூதர். உலகம் முழுமைக்கும் இறுதி நாள் வரை அவர்களே தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும், தூதரும் வரவே முடியாது என்பதற்கு 4:79, 4:170, 6:19, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்கள் சான்றுகளாகவுள்ளன.

    பதிலளிநீக்கு
  25. 12.தவ்ராத்தை பின்பற்றி வந்த ஜின்கள்

    திருக்குர்ஆனுக்கு முன்பாக இறக்கி அருளப்பட்ட தவ்ராத்தை ஜின்கள் பின்பற்றி வந்ததாக 46:30 வாசகம் அறிவிக்கின்றது. மேலும் அவர்கள், திருக்குர்ஆன் தவ்ராத்தை உண்மைப் படுத்துவதாகவும் தம் சமூகத்தாரிடம் அறிவிக்கிறார்கள். இன்றைக்கும் திருக்குர்ஆனின் உண்மைகளை அவர்களுக்கும் எடுத்துரைத்து உலகை சிறப்பிக்கச் செய்யலாம்.

    https://www.quranthelivurai.com/topic-18.html

    46:29. மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

    46:30. (ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.

    http://www.tamililquran.com/qurandisp.php?start=46

    பதிலளிநீக்கு
  26. ஜேம்ஸ் 3:17 ESV / 25 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    ஆனால் மேலிருந்து வரும் ஞானம் முதலில் தூய்மையானது, பின்னர் அமைதியானது, மென்மையானது, பகுத்தறிவுக்குத் திறந்தது, கருணை மற்றும் நல்ல பலன்கள் நிறைந்தது, பாரபட்சமற்றது மற்றும் நேர்மையானது.

    பதிலளிநீக்கு
  27. 2 தீமோத்தேயு 3:16
    எல்லா வேதவாக்கியங்களும் தேவனால் ஊதப்பட்டிருக்கிறது, போதனைக்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதியைப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
  28. நீதிமொழிகள் 1:2
    ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

    பதிலளிநீக்கு
  29. நீதிமொழிகள் 30:5
    கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கிறது; தம்மிடம் அடைக்கலம் புகுபவர்களுக்கு அவர் கேடயமாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  30. அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன் 6 : 59)

    பதிலளிநீக்கு
  31. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன் 6 : 59)

    பதிலளிநீக்கு
  32. பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 27)

    பதிலளிநீக்கு
  33. அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
    பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
    மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
    இறை புரிந்து வாழ்தல் இயல்பு.

    புரிந்து - விரும்பி
    விண்ணோர்க்கு - தேவர்களுக்கு

    மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்ற புகழமைந்த தனது சிவந்த பாதங்களால் இட்ட பணியைச் செய்ய ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்ற பிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக் கொடுத்து, நான்மறை கற்று, அவ்வொழுக்கத்துடன் வாழ்ந்தால் அவன் தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்வான்.

    நூல்

    சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
    நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
    அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
    வழிவந்தார்கண்ணே வனப்பு. 1

    வள்ளன்மை - ஈகைத்தன்மை
    வனப்பு - அழகு

    நிறைந்த நவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரவிய புகழ், செல்வம், மேன்மையான சொல், வீரத்தில் அசையாத நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறி ஒழுகுவோரது இலக்கணம் ஆகும்.


    பதிலளிநீக்கு
  34. பாடல் எண் : 05
    ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
    கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
    வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
    பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

    பொழிப்புரை : ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்

    பாடல் எண் : 14
    முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
    ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
    செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
    தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

    பொழிப்புரை : சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச்சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.

    பாடல் எண் : 01

    அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
    அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
    அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
    அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

    பொழிப்புரை : சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப்பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக்களைக் கேட்டுணர்ந்தனவாம்.

    பதிலளிநீக்கு
  35. நூல் இயல்பு

    என்றும்உண் டாகி இறையால் வெளிப்பட்டு
    நின்றது நூலென்பர் உணர். (அருங்கலச்செப்பு 9)

    ஆகமத்தின் பயன்

    மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
    துக்கம் கெடுப்பது நூல். (அருங்கலச்செப்பு 10)

    பதிலளிநீக்கு
  36. டவுள் துணை
    நீதி நூல்

    காப்பு

    படைத்துக் காக்கும் பண்பினன் பரமன்


    ஆதிநூ லொன்றும் அரும்பயன்யா ருந்தெளிவான்
    நீதிநூ லொன்று நிகழ்த்தவே - மாதிரமோ
    இத்தரைய னைத்தையுமி யற்றினி தில்திதிசெய்
    கத்தன்மலர் ஒத்தகழல் காப்பு.
    வினையின் நீங்கிவிளங்கிய அறிவின் மெய்க் கடவுளை யுணர்த்தும் தொன்னூல்களைத் தெளிதற்குக் கருவியாக யான் இந் நீதி நூலை இயற்றுகின்றேன். இதற்கு, உலகெலாம் படைத்துக் காக்கும் தெய்வத் திருவடி காப்பு.
    மாதிரம்-திசை. திதி-காவல்.

    வேறு

    ஆதிக் கடவுள் அடியிணை போற்றி

    மாதி ரந்தனில் வாழ்பவர் யாவரும்
    தீதி கந்தறச் செய்கை முயலுவான்
    நீதி நூலை நிகழ்த்த நிகரிலா
    ஆதி தேவ னடியிணை யேத்துவாம்.
    நிலவுலகத்துள்ளார் அனைவர்களும் தீமையினின்று விலகி நன்மையே செய்தற்பொருட்டு நீதி நூலை இயற்ற ஆதிக்கடவுள் அடியிணை போற்றுவாம்.
    மாதிரம்-நிலம்.

    https://www.tamilvu.org/node/154572?linkid=84320%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மீனாட்சிசுந்தரம்பிள்ளை எழுதிய நீதி நூல் முதல் நூலாகவோ வழிநூலாகவோ இருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
  37. புலவர்கள் பாடலை பாடி அதை அரசரிடம் பாடி காட்டி பரிசுகள் பெறுவார் என்கிற கருத்து முதல் நூல் வலி நூல் எழுதிய ஆசிரியர்களுக்கு பொருந்தாது. ஏனென்றால் அவர்கள் தனது திறமையினால் எழுதிய பாடல்கள் அல்ல மாறாக அவர்களுக்கு ஞானமாக வழங்கப்பட்ட பாடல்க ள்

    பதிலளிநீக்கு
  38. வேதத்தை மறைத்தல் பெரும்பாவம் – 2:159, 2:174, 3:187

    பதிலளிநீக்கு
  39. ** நூல்

    அருங்கலச்செப்பு9. என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
    நின்றது நூல்என்று உணர்

    * உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் ஒலி வடிவில் வெளிப்பட்டு, பிறகு எழுத்தில் நிலைபெற நின்றது நூல் என உணர்க.

    அருங்கலச்செப்பு10. மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண்ஆகித்
    துக்கம் கெடுப்பது நூல்

    * பொருள்களின் உண்மை இயல்பை உணரச் செய்து, உயிர்களுக்குப் பாதுகாப்பாகி, பிறவித் துயரங்களை கெடுக்கவல்லது நூல்.

    பதிலளிநீக்கு
  40. வெளி 14:6
    மூன்று தேவதூதர்கள்
    பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  41. நம்பிக்கை என்பது பொய்யை நம்புவதல்ல.
    கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் உண்மையை உண்மை என நம்புவதாகும்.
    கண்ணுக்கு தெரியாத எல்லாவற்றையும் நம்பும் அவசியமில்லை. கூறப்படும் கண்ணுக்கு தெரியாத விடயங்களில் எதை நம்புவது எதை மறுப்பது என்பதை அறியவே மறைநூல்கள் உள்ளன. இதை வாசிப்பதும், இதிலுள்ள வேறுபாட்டை ஆய்வத்தும் அறிவதும் தான் கல்வி.

    பதிலளிநீக்கு

  42. மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)
    .
    உங்களிடம் ஒரு வேதத்தை அருளி னோம். அதில் உங்களுக்கு ‘அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (21:10).
    .
    இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (38:29)
    .
    அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24).
    .
    “அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:84).
    .
    நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (17:9).
    .

    பதிலளிநீக்கு
  43. உண்மை வேதம் பொய் வேதம் என பிரித்து அறிவதன் நோக்கம்
    என்பது சரியானவற்றை பின்பற்ற வேண்டும் என்பதால்.

    ஏனென்றால்
    1) நூலில் உண்மையும் பொய்யும் அடிப்படையில்
    முரண்படும்
    2) உண்மைக்கு இடையேயும் முரண்கள் இருக்கும்
    3) உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில் ஒற்றுமையும் இருக்கும், ஏனென்றால் பொய் உண்மையையை வாசித்து அதிலிருந்து எழுதுவதால்.

    ஆக மிக நுட்பமான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். உண்மையையும் பொய்யையும் பிரித்து அறியும் இலக்கணமும் முறையும் அறிந்து இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  44. பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
    மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
    விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
    உரையாமைச் செல்லும் உணர்வு. 20

    தாவா - கெடாதிருக்க
    நாறுவ - முளைப்பன

    பூவாது காய்க்கும் மரம் போல, வயதில் இளையவரும் அறிவினால் மூத்தவராவார். பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கிற விதை போல பிறர் சொல்லித் தராமலேயே அறிவுடையவர்களுக்கு அறிவு வளரும்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  45. ஆண், ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த
    மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்
    கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்
    நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். (சிறுபஞ்சமூலம் 27)

    இயைந்த - பின்தொடர்
    கடிந்தான் - ஒழித்தவன்

    பொருள்: ஆசான் என்பவன் விளக்கம் பெற வினை ஆற்றும் தேவை அற்ற ஆண்மகன் ஆவான், அவனை பின் தொடர்பவன் மாணாக்கன் ஆவான். மாணாக்கன் ஆசானை அன்பு செய்வான், கட்டுப்படுவான். மாணவர்கள் காமம், வெகுளி, மயக்கங்கள் ஆகிய மூன்றையும் விட்டுவிடுவான். இல்லையெனில் அவர்கள் ஆசிரியருக்கு நோயாவார்கள்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  46. பழைய வேதம் - வழக்கொழிந்த வேதம்

    மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

    பண் :
    பாடல் எண் : 1
    கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
    கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
    பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
    இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
    பொழிப்புரை :
    மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டு தொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதி யோடு இருத்தலும் கூடும்.

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10306

    பாழ்
    pāẕ
    s. Desolation, devastation, dilap idation, சேதம். 2. Damage, waste, loss, நஷ்டம். 3. Corruption, decay, putrifaction, கெடுதி.

    https://agarathi.com/word/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  47. 186. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்2
    போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
    நாதன் நடத்தால்3 நயனங் களிகூர
    வேதந் துதித்திடப் போயடைந் தார்விண்ணே.

    (ப. இ.) சிவஞான போதத்தைச் செந்தமிழால் அருள்செய் தளிக்க நிற்பவன் நம் தவப்பேறாகிய புண்ணிய நந்தி. அவனருளால் ஆருயிர் உணர்வில் அகந்தழீஇ வைத்த புண்ணியராயினார். அனைத்துயிரானும் நத்தும் தன்மையராவர். அவர்கள் நாதன் என்னும் திருப்பெயர் பூண்டனர். அகம்புறம் காண்பார் காட்சிக் கண்கள் மிகவும் களிப்பினை எய்தச் செந்தமிழ்த் திருமறை போற்றினர். தூயவிண்ணாகிய சிவவுலகினை அடைந்தனர். வேதம் - இறைவன் நூல். இதன்கண் அடைந்தார் என்பதனால் உண்மையும், போதம் என்பதனால் அறிவும், களிகூர என்பதனால் இன்பமும் பெறப்படும். எனவே ஆவி எய்தும் 'உண்மை அறிவு இன்ப' உயர்வற உயர்ந்த ஒண்மை வண்மைச் சிவன்நிலை பெறப்படும்.

    (அ. சி.) போத நந்தியை - தமிழ்ச் சிவஞானபோதப் பன்னிரண்டு சூத்திரங்களையும் உபதேசித்த நந்தியை. போதந்தனில் தெளிந்த சிந்தையினிடத்து.

    https://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=187&book_id=118&head_id=67&sub_id=2384

    பதிலளிநீக்கு
  48. ஜேம்ஸ் 3:17 ESV / 10 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    ஆனால் மேலிருந்து வரும் ஞானம் முதலில் தூய்மையானது, பின்னர் அமைதியானது, மென்மையானது, பகுத்தறிவுக்குத் திறந்தது, கருணை மற்றும் நல்ல பலன்கள் நிறைந்தது, பாரபட்சமற்றது மற்றும் நேர்மையானது.

    பதிலளிநீக்கு
  49. வேதத்தை மனப்பாடம் செய்யுங்கள்.

    நீங்கள் பிசாசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்... இரட்சிப்பின் தலைக்கவசத்தையும், தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுங்கள்... (எபேசியர் 6:11, 17)

    https://openthebible.org/article/20-practical-ways-to-kill-sin-every-day/

    பதிலளிநீக்கு
  50. மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ்

    மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்

    மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

    மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே. (திருமந்திரம் 3046)

    திருமந்திரம் என்று அறியப்படுகிற திருமந்திரம் மூவாயிரம், திருமந்திரம் முந்நூறு, திருமந்திரம் முப்பது ஆகிய மூன்று நூல்களும் திருமூலனால் எழுதப்பட்டவை; மூன்றும் ஒரே தன்மை உடையவை.

    ஆனால் அவ்வாறல்ல. திருமந்திரம் எனப்படும் மூவாயிரம் தனிமுதல் நூல். திருமந்திரம் முந்நூறு என்பது, வசியம், மோகனம், மாரணம் போன்ற குறக்களி வித்தைகளைப் பேசுவது. முப்பது உபதேசம் என்று சொல்லப்படுகிற திருமந்திரம் முப்பது தனி நூலே அல்ல. திருமந்திரம் மூவாயிரத்தின் முதல் தந்திரத்தின் தொடக்கப் பகுதி அது; சைவ சித்தாந்தம், சித்தர் மரபு ஆகியவற்றின் சாரம் பிழிவது. அதன் மேல்விளக்கமாகவே மொத்தத் திருமந்திரமும் எழும்பி நிற்கிறது. https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/561048-uyir-valarkum-thirumandhiram-4.html

    பதிலளிநீக்கு
  51. வெண்பா : 37
    வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க் கில்லை விதி.
    விளக்கம்:
    பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.

    பதிலளிநீக்கு
  52. ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
    தோதிய நூலின் பயன். 1 ஞானக் குறள்

    - கல்வி என்பதின் பயன் ஆதிப் பொருளாய் நிற்கும் இறைநிலையை உணர்வதாகும்

    பதிலளிநீக்கு
  53. 60. அண்ணல் அருளால் அருளுந் திவ்ய் ஆகமம்
    விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
    எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
    எண்ணிலும் நீர் மேல் எழுத்து அது ஆகுமே. 4

    பயனற்றவை. சிவபெருமானால் அருளப்பட்ட கடவுள் தன்மை உடைய எழுபது கோடியே நூறாயிரம் ஆகமங்கள் தேவர்களின் அனுபவத்துக்கு வாராதவை. ஆகமத்தை அறிந்தாலும், அவற்றை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு
  54. நெறியைப் படைத்தான்;

    நெருஞ்சில் படைத்தான்!

    நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!

    நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு

    நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

    பதிலளிநீக்கு