இறைவனின் பெயரால்

 தமிழர் சமயம் 


தொல்காப்பியத்தில் ஒரு முயற்சிக்கு குற்றம் இல்லாதொழிவதற்கு கடவுள் வாழ்த்து முக்கியமானது என்பதனை வரைவிலக்கணப்படுகின்றது.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். புறத்திணைவியல்: 85)
  • வழிபடும் கடவுளின் ஏற்றம் கூறுவது கொடிநிலை
  • பெரும்பொருள் என்பது கந்தழி-யின் பொருள் 
  • வள்ளண்மையைக் கூறுவது வள்ளி
(பொருள்) 
வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும் - கொடிநிலை, கந்தழி மற்றும் வள்ளி போன்ற , 
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.

இஸ்லாம்


ஸஹாபிகளில் சிலர், யாரஸூலல்லாஹ்!, நாங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வயிறு நிரம்புவதில்லை’ எனச் சொன்னார்கள், நீங்கள் தனித்தனியாகச் சாப்பிடுகிறீர்கள் போலும்? என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கேட்டார்கள், அவர்கள் ஆம்’ என்றார்கள், நீங்கள் சாப்பிடும் போது ஒன்று கூடி, அல்லாஹுத்தஆலாவின் (பிஸ்மில்லாஹ்) பெயர் சொல்லிச் சாப்பிடுங்கள். உங்கள் உணவில் பரக்கத் உண்டாகும்’ என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘தமது தொழுகையை பிஸ்மில்லாஹ் கூறிதொடங்குவார்கள் (திர்மிதி 228

நான் ஒரு கழுதையின் மீது நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அந்தக் கழுதையின் கால் சறுக்கியது. நான் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று கூறினேன். அப்போது நபியவர்கள் என்னிடம் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று சொல்லாதே! “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று நீ கூறும் போது ஷைத்தான் தன்னுடைய உள்ளத்தில் தன்னை மிகப் பெரிதாக நினைத்து “அவனை நான் என்னுடைய வலிமையால் வீழ்த்தி விட்டேன்” என்று கூறுகிறான். நீ பிஸ்மில்லாஹ் என்று கூறினால் அவனே அவனிடத்தில் இழிவடைந்து ஈயை விட மிகச் சிறுமையடைந்தவனாக ஆகிவிடுகிறான்” என்று கூறினார்கள். - நூல்: அஹ்மத் (20591)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் (“பிஸ்மில்லாஹ்” என்று கூறி) அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை’’ என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது’’ என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்’’ என்று சொல்கிறான். - நூல் : முஸ்லிம் (4106)

குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் (சூரா தவ்பா) தவிர மற்ற அனைத்து அத்தியாயங்களின் தொடக்கத்திலும் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்னும் வசனம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இதன் பொருள் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்" என்பதாகும். 

கிறிஸ்தவம் 

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். (நீதி 18:10)

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார். - (யாத்திராகமம் 20:7)

5 கருத்துகள்:

  1. கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய நாமத்தைக் கூப்பிடுங்கள் ( சங்கீதம் 105:1a )

    பதிலளிநீக்கு
  2. வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும் - கொடிநிலை, கந்தழி மற்றும் வள்ளி போன்றவற்றில் குற்றம் நீங்கும் சிறப்பினை அடைய ,
    கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - கடவுள் வாழ்த்துப் உடன் துவங்க வேண்டும் அவ்வாறு துவங்க அச்செயல் கண்ணியம் பெரும்.

    பதிலளிநீக்கு

  3. வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
    நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு.

    பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
    பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும்,
    பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும்
    கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  4. மூதுரை
    வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன.


    கடவுள் வாழ்த்து



    வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
    நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு.

    பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
    பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும்,
    பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும்

    பதிலளிநீக்கு
  5. கொலோசெயர் 3:23
    நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்காக அல்ல, கர்த்தருக்காக மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு