தேவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேவர்களின் எண்ணிக்கை என்ன?

தேவர்கள் என்றதும் பெரும்பாலானோர் சம்ஸ்கிருத வேதங்களில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை தேடி செல்கின்றனர். நாம் நமது மொழியில் வந்த வேதத்திலும், நமது மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேதங்களையும் தேடி பார்ப்போம் வாருங்கள். 

தமிழர் சமயம்

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

குறிப்பறிந்தேன் உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந்தேன் மிகுதேவர் பிரானை
மறிப்பறியாது வந்துள்ளம் புகுந்தான்
கறிப்பறியா மிகும் கல்வி கற்றேனே.

குறிப்பு: உள்கருத்து
செறிப்பு: செறிவு, நெருக்கம்
மிகு தேவர்: அளவில்லா தேவர்கள்
மறிப்பு: தடை
கறிப்பு: காரம், கடினம் 

விளக்கம்: உடலோடு உயிர் கூடிய உட்கருத்தை தெரிந்து கொண்டேன், எண்ணிலடங்கா தேவர்களின் தலைவனுடைய நெருக்கம் அறிந்தேன். தடையேதும் இல்லாமல் உடனே என் உள்ளத்தில் புகுந்து வீட்டிருப்பதையும் தெரிந்து கொண்டேன். தானாக பெருகும் குணமுடைய கல்வியை கடினம் அறியாமல் கற்றேன்.

இஸ்லாம்

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (குர்ஆன் 74:30)

கிறிஸ்தவம்

11 Then I looked and heard the voice of many angels, numbering thousands upon thousands, and ten thousand times ten thousand. They encircled the throne and the living creatures and the elders.

11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது (வெளி 5) 

முடிவுரை  

தேவர்களின் எண்ணிக்கையை யாரும் அறியார். அதை முப்பத்து முக்கோடி என்று கூற எந்த வேத ஆதாரமும் இல்லை.

தேவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களா?

தமிழர் சமயம்

தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்

சிவத்து இடை நின்றது தேவர் அறியார்

தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்

பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே. (திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 13 பாடல் 1685)

விளக்கம்இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற வழியில் நிற்கின்ற தவசிகள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய கர்மங்கள் அனைத்தும் இறைவன் இடத்திலேயே சென்று சேர்ந்து விடுவதை தேவர்களும் அறிய மாட்டார்கள். தவத்தின் வழியில் நின்று இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் பிறவி எனும் கட்டுக்குள் அகப்பட்டு நின்றது ஒரு முடிவில்லாத வினைகளை அனுபவிக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள்.

இஸ்லாம் 

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே” என்று கேட்டனர். “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!” என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர். “ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான். (குர்ஆன் 2:30-32)

(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார் (அல்-குர்ஆன் 27:65) 

மறைவானவற்றின் சாவிகள் என்னிடம் தான் இருக்கின்றது. அவனைத்தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். (குர்ஆன் 6:59)

கிறிஸ்தவம் / யூதம் 

இயேசு கூறினார் "அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களும், குமாரனும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்." (மத்தேயு 24:36

முடிவுரை 

தேவர்கள் கூட அனைத்தையும் அறிந்தவர்கள் அல்ல. ஆனால் மனிதர்கள் சிலர் அனைத்தையும் அறிந்தவர்கள், முக்காலமும் உணர்ந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இறைவன் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன், முக்காலமும் உணர்ந்தவன். 

தேவர்கள் புவிக்கு மனிதர்களாக வருவார்கள் *

தமிழர் சமயம் 

மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே. (திருமந்திரம் 31
 
பொருள்: உள்ளத்தில் இசையானான்! தேவர்கள் பூவுலக வாசிகளுக்கு மனித வடிவிலும், புவர் லோக வாசிகளுக்கு ஒளிவடிவிலும், சுவர்லோக வாசி களுக்கு தேவவடிவிலும், சித்திகளை விரும்பியவர்க்கு சித்தராகவும், நிறைவு பெற்ற மனத்தை உடையவர்க்கு நாத மாகவும் காட்சியளிக்கிறான். அத்தகைய சிவனை அகக் கண்ணில் அறிவாக எண்ணி அன்பு பூண்டிருக்க வேண்டும்.

இஸ்லாம் 

ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த கடும் கறுத்த  நிறமுடைய முடி நிறைந்த ஒரு மனிதர் வந்தார். அவரிடத்தில் பயணத்தின் அடையாளம் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்ததுமில்லை. அவர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தனது முழங்கால்களை நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் இணைத்து தனது இரு உள்ளங்கைகளை தனது இரு தொடைகளின் மேல் வைத்தார். (பிறகு) நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் மற்றும் மறுமை நாள் பற்றியும் அதன் அடையாளங்கள் பற்றியும் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் விளக்கப்படுத்தினார்கள். பிறகு அவர் போய் விட்டார். பிறகு நபி(ஸல்) அவர்கள் உமரே! இப்போது வந்து கேள்வி கேட்டவரை அறிவீரா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள் எனக் கூறினேன். "நிச்சயமாக அவர்தான் ஜிப்ரீல். உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு உங்களிடம் வந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (ஹதீஸின் சுருக்கம்). அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப்(ரலி)  (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 1)

 கிறிஸ்தவம் 

அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர். (ஆதியாகமம் 19:1-2)

தேவர்களின் எண்ணிக்கை

தமிழர் சமயம்  

ஏத்தினர் எண்ணிலி தேவரெம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தனர் அண்டங் கடந்தப் புறநின்று
காத்தனன் என்னுங் கருத்தறி யாரே. (திருமந்திரம் 1686. )

(ப. இ.) எம்மை ஆளும் பெருமானாகிய அழிவில் செல்வனை முப்பத்து முக்கோடி என வரையறுக்கப்பெறும் அளவிலாத தேவர்கள் மணம் கமழ்கின்ற இளம்தென்றலாகக் கருதப்படும் காற்றும் ஏனைப் பூத நான்கும் ஐந்து திருவுருவில் வைத்து வழிடுகின்றனர். அதற்கு மேலுள்ள அருவுருவத் திருமேனியையேனும், அருவத் திருமேனியையேனும். அத்தேவர்கள் அறியார். சிவன் இம் முத்திற்த் திருமேனிக்கும் அண்டங்களுக்கும் அப்பால் விளங்கும் இயற்கை உண்மை உணர்வுத் திருமேனியை அத்தேவர் எங்ஙனம் உணருவர்?

(அ. சி.) வாசப் பசுந்தென்றல் வள்ளல் என்று - பஞ்சபூதங்களையே தன்னுருவாக்கொண்ட சகுண பரசிவத்தை. வாழ்த்தினர் - தேவர் பூசித்தனர். அண்டங்.....யாரே - நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார். 
 
 
கிறிஸ்தவம் 

11 அதன் பின்பு, சிம்மாசனத்தையும் நான்கு ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றி கோடிக்கணக்கிலும்* லட்சக்கணக்கிலும் தேவதூதர்கள் இருப்பதைப் பார்த்தேன்,sவெளிப்படுத்துதல் 5:11
 

இஸ்லாம் 

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 74:31
 
(ஏழாம் வானத்தில் வைத்து) எனக்கு பைதுல் மஃமூர் எனும் இறை இல்லம் எடுத்துக் காட்டப்பட்டது. அதைப் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டேன். இதுதான் பைதுல் மஃமூராகும். ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் இங்கே நுழைந்து தொழுகிறார்கள். அதிலிருந்து வெளியேறியவர்கள் மறுபடியும் அதனுள் நுழைவதில்லை என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 3207. ஸஹீஹ் முஸ்லிம் 259, 264.


தேவர்களை வணங்கலாமா ?

தமிழர் சமயம்

கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்

உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்

சிலப்பறி யார் சில தேவரை நாடித்

தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே

(நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 45)


பொழிப்புரை இறைவனை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு. - (அருங்கலச்செப்பு தேவ மூடம் 31) 

இஸ்லாம்

மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80)

கிறிஸ்தவம்

ஜான், நான் இவற்றைக் கேட்டதும் பார்த்ததும் இருக்கிறேன். நான் அவர்களைக் கேட்டதும் பார்த்ததும், அவர்களை எனக்குக் காட்டிய தேவதூதரின் பாதத்தில் விழுந்து வணங்கினேன், ஆனால் அவர் என்னிடம், “நீ அப்படிச் செய்யாதே! நான் உங்களுக்கும் உங்கள் சகோதரர்களான தீர்க்கதரிசிகளுக்கும் இந்த புத்தகத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் உடன் வேலைக்காரன். கடவுளை வணங்குங்கள். (வெளிப்படுத்துதல் 22:8-9)

சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. (கொலோசெயர் 2:18) 

முடிவுரை 

தெய்வம் ஒன்று என்பதும், அது மட்டுமே வணங்கி வழிபட தகுதி படைத்தது என்கிற கருத்து தேவர்கள் வணங்கி வழிபட தகுதி அற்றவர்கள் என்று மறைமுகமாக கூறுவதோடு மட்டுமல்லாமல் மேற்சொன்ன வசனங்கள் மூலம் நேரடியாகவும் கூறுகிறது. தேவர்களே வெளிப்பட தகுதி அற்றவர்கள் என்கிற பொழுது நாம வணங்கும் தாய் தந்தை முன்னோர்கள் விலங்குகள் இயற்கை சிலைகள் படங்கள் எல்லாம் எந்த அளவு ஒதுக்கப்பட வேண்டியது எனபதை உணர்வோம்.

தேவர்களும் இறைவனின் கட்டளையின்றி எதையும் சுயமாக செய்ய இயலாது

தமிழர் மதம்


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். - (குறள் 1073
 
உரை: தேவர்கள் கயவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது. 
 
பொருள் : இறைவனின் அனுமதியின்றி தேவர்கள் மனம் விரும்பியபடி செயவார்களாயின் அவர்களும் கயவர்களே.

இஸ்லாம்


தேவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். - (குர்ஆன் 2:32) 
 
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (குர்ஆன்  21:26,27)  
 
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் (குர்ஆன் 16:50

 

கிறிஸ்தவம் 


தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள்.. (சங்கீதம் 103:20, 21)

தேவர்கள்

தமிழர் சமயம்


விண்ணுலகம் என்ற ஓர் உலகம் இருக்கிறது, அங்கு தேவர்களும் தெய்வங்களும் வாழ்கிறார்கள் என்பது தமிழர்களிடம் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வள்ளுவரிடமும் இருந்திருக்கிறது என்பதைத் திருக்குறள் பல இடங்களில் உணர்த்துகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (குறள் எண் 18)

சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (குறள் எண் 84)

 மலர்ந்த முகத்துடன் எவனொருவன் விருந்தினரை உபசரிக்கிறானோ, அவன் இல்லத்தில் அகம் மலர்ந்து லட்சுமி வாசம் செய்வாள். (எனவே லட்சுமி தேவி விண்ணுலகில் வாசம் செய்கிறாள் என்பதும் அவள் மண்ணுலகம் வந்து வசிப்பாள் என்பதும் வள்ளுவம் வலியுறுத்தும் நம்பிக்கைகள்.)

 செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு!

வானுலகில் வாழும் வானவரோடு இணைந்து வாழ்வதற்கு எளிதான வழி ஒன்றிருக்கிறது. வந்த விருந்தினரை உபசரித்து, வரும் விருந்தினரை எதிர்பார்த்து நாம் காத்திருப்போமானால், வானகத்துத் தேவர்கள் நம்மை விருந்தினராக ஏற்பார்கள்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள். (ஆக விண்ணுலகில் லட்சுமி, மூதேவி ஆகிய இருவரும் உறைகிறார்கள் என்பதும் அவர்கள் மண்ணுலகில் வந்து வசிப்பதுண்டு என்பதும் வள்ளுவர் கருத்தாக இருக்க வேண்டும்.)

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்! (குறள் எண்: 617)

(சோம்பல் உள்ளவனிடம் மூதேவிதான் குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் தாமரைச் செல்வியான திருமகள் வாசம் செய்வாள். (இந்தக் குறளிலும் ஸ்ரீதேவி, மூதேவி என இருவர் இருப்பதை வள்ளுவர் ஏற்கிறார்.)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
 வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.’(குறள் எண்: 24)

மனக் கட்டுப்பாடு என்ற அங்குசத்தால் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்பவன் மேலுலகிற்கு விதை போன்றவன் ஆவான். (விண்ணுலகம் உண்டு என்பதை இக்குறளில் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’ (குறள் எண்: 50)

 உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி எவன் வாழ்கிறானோ அவன் வானுலகில் உள்ள தெய்வத்தோடு வைத்து எண்ணப்படுவான்.

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (குறள் எண்: 346)

 உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் தோன்றும் கர்வத்தை எவன் விட்டொழிக்கிறானோ அவன் வானவர்கள் வசிப்பதற்கும் மேலான உலகை அடைவான்.

தேவ ரனையர் கயவர் அவரும் தான்
மேவன செய்தொழுக லான்!’ (குறள் எண்: 1073)

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் வாழ்வதால் கயவர்கள் தேவர்களைப் போன்றவர். (வஞ்சப் புகழ்ச்சி அணியாகச் சொல்லப்பட்ட இக்குறளில் வள்ளுவர் தேவர் என்ற பிரிவினர்இருப்பதை ஏற்கிறார்.) தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் நிலங்களை ஐந்தாகப் பகுத்து ஒவ்வொரு வகை நில மக்களும் வழிபடுவதற்குரிய தெய்வம் எது என்பதையும் வரையறுத்து விளக்கியுள்ளது. 

கிறிஸ்தவம்


தேவதூதர்கள் மனிதர்களைவிட மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11

அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம். (1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38

ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.— (1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10)

இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.— யோபு 38:4-7 (மாற்கு 12:25

அவர்களுடைய எண்ணிக்கையை பைபிள் சொல்வதில்லை; ஆனால், மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தேவதூதர்கள் இருக்கிற ஒரு காட்சியை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார்.— வெளிப்படுத்துதல் 5:11

இரண்டு தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. ஒன்று மிகாவேல் மற்றொன்று காபிரியேல். (தானியேல் 12:1; லூக்கா 1:26)

 வேறுசில தேவதூதர்கள் தங்களுக்குப் பெயர் இருப்பதாக ஒத்துக்கொண்டபோதிலும், அவற்றைத் தெரிவிக்கவில்லை.—ஆதியாகமம் 32:29; நியாயாதிபதிகள் 13:17, 18

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற தன் ஊழியர்களை வழிநடத்த தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7

இதனால், அந்தச் செய்தியை அறிவிக்கிறவர்களும் சரி, கேட்கிறவர்களும் சரி, நன்மையடைகிறார்கள்.— அப்போஸ்தலர் 8:26, 27
 

இஸ்லாம்


மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும் ’மலகைன்’ இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன. 

1. வானவர்கள் என்றால் யார் ? 


மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.

2. வானவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்?


அவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்? என்பது இறைவனைத்தவிர எவருக்கும் தெரியாது. குர்ஆனிலோ நபிமொழிகளிலோ இது பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்ட காலம் குறித்து சில நபிமொழிகள் காணப்படுகின்றன. அறிவிப்பாளர் தொடர் பலம் குன்றியதாலும் முன்பின் முரணான ஆதாரமற்ற செய்திகள் என்பதாலும் அவற்றை நாம் நம்பகரமான தகவலாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் அவர்கள் ‘மனிதன் படைக்கப்படுமுன் படைக்கப் பட்டவர்கள்’  என்பதை ‘பூமியில் என் பிரதிநிதியைப் படைக்கப்போகிறேன் என வானவர்களிடம் இறைவன் கூறிய போது’ என வரும் 2.30-வது வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உறுதியாகக் கூறமுடியும்.

3. வானவர்களின் எண்ணிக்கை. وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو


அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 74:30) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                                                                          ‘மிஃராஜின் போது ‘பைத்துல் மஃமூர்’ (வானவர்கள்தொழுமிடம்) உயர்த்தப்பட்டபோது (இது எந்த இடம்?) எனஜிப்ரீலிடம் கேட்டேன்.இது ‘பைத்துல் மஃமூர்’ என்ற இடமாகும். இங்கு ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் உள்ளே செல்வார்கள். சென்றவர்கள் மிண்டும் திரும்பி வருவதில்லை. (அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஸஃஸஆ, நூல்: புகாரி 3207, முஸ்லிம் 162.) மறுமைநாளில் நரகில் 70,000 கடிவாளங்கள் கட்டப்பட்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 வானவர்கள் இழுத்து வருவார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்கள் : முஸ்லிம் 2842-29, திர்மிதி : 2573)
 
இவர்களை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இதற்கு ஆதாரமாக ‘அல்லாஹ்வையும், வானவர்களையும், நம்பிக்கை கொண்டோரும்’என வரும் அல்குர்ஆனின் 2:285 வசனமேயாகும்..

4. வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியுமா?                                        


நபிமார்கள் வானவர்களை நேரிலே பார்த்தும் பேசியுமுள்ளனர். நாயகத்தோழர்களும் ‘திஹிய்யத்துப்னு கலீஃபத்துல் கல்பி’ எனும் ஸஹாபியின் தோற்றத்தில் பார்த்துள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஜிப்ரீல் (அலை) அவர்கள் திஹிய்யத்துல் கல்பி அவர்களின் உருவத்தில் வருவார்கள். (அதாரம்: அஹ்மத்)
மனித உருவத்தில் முன் வாழ்ந்த நபிமார்கள் பார்த்துள்ளனர் என்பதை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. இப்றாஹீம் (அலை) அவர்களிடம் வானவர்கள் மனித உருவத்தில் விருந்தினராக வந்தபோது லூத் நபியின் மக்களும் பார்த்தனர் என்ற செய்தியை 11.69 வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகத்தின் காலத்திற்குப்பிறகு எவரும் வானவர்களைப் பார்த்ததில்லை.இனி எவரும் பார்க்கவும் முடியாது. ஆயினும் மறுமையில் நிச்சயம் அவர்களைப் பார்க்க முடியும்.

5. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை நேரில் கண்டார்களா?                       


முதல் தடவையாக நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை (அலை) ஹிரா மலைக்குகையில் இயற்கையான தோற்றத்தில் கண்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி:)

இரண்டாவது தடவையும் அவரது இயற்கைத் தோற்றத்தில் வானிற்கும் பூமிக்கும் இடையே ஒர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கண்டேன் என நபிகளார்(ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) தெரிவிக்கிறார்கள். (நூல்:புகாரி:4)

மூன்றாவது தடவையாக மிஃராஜின் போது கண்டார்கள் ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக்கண்டார். (53:13,13) அங்கே தான் சொர்க்கமெனும் தங்குமிடம் உள்ளது.(53:15)அந்த இலந்தை மரத்தை மூடவேண்டியது மூடியபோது அவரது பார்வை திசைமாறவில்லை. தாண்டவுமில்லை. (53:16,17) தமது இறைவனின் பெரும் சான்றுகளைக் கண்டார்.(53:18)தூய்மையான வெண்ணிற ஆடையில் ஒரு மனிதர் வந்தார் என அறிவிக்கும் நபி மொழி, ‘நபி(ஸல்) அவர்களும்,நாயத்தோழர் களும் மனித உருவத்தில் கண்டதற்கான ஆதாரமாகும்.’ (முஸ்லிம் 1-8)                                                     

(நபி (ஸல்) அவர்கள் ஜப்ரீலை அசல் தோற்றத்தில் இரு தடவைகள் தான் பார்த்துள்ளதாகவும் முதலாவது தடவை பார்த்தது மனித உருவத்தில் என்றும் கூறுகின்றனர். இறைவனே அறிந்தவன்)

6. மனிதர்கள் வானவர்களாக முடியுமா ?                                                       


மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.

7. வானவர்கள் இறைவனின் பிள்ளைகளா ?  


சில மதத்தவர் வானவர்களை இறைவனின் பிள்ளைகள் எனக்கூறுவதையும் இறைமறை மறுக்கிறது.

‘ உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை வழங்கிவிட்டு தனக்கு வானவர்களை பெண்மக்களாக ஆக்கிக் கொண்டானா? (17:40) என்ற வசனமும், அவன் பெறவுமில்லை. பெறப்படவுமில்லை என்ற 112:1-4 வசனமும் இதற்கு ஆதாரமாகும்.

8. வானவர்கள் பெண்களா ? أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُون


வானவர்களை சிலர் தேவைதைகளாகவும் பெண்களாகவும்; சித்தரித்துக்கூறும் பொய்ச் செய்திகளையும் மறுத்து அவர்கள் பெண்களல்ல என இறைவனின் வசனங்கள் 43:19,37:150,53:27 தெளிவுபடுத்துகின்றன.

9. வானவர்களின் உருவத் தோற்றம்.


 நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ஆதாரம்: புகாரி,தப்ரானி). (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள்; கொண்ட தூதர்களாக அனுப்புவான் (அல்குர்ஆன் 35:1)

‘அதன் மேல் (நரகின் மீது)கடுமையும்,கொடுமையும் கொண்ட வானவர்கள் உள்ளனர். 66:6  عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக் கொடுக்கிறார். (53:5,6).  ‘அழகிய தோற்றமுடையவர்’ என 12:31 என்ற வசனமும் தெளிவு படுத்துகிறது. ذُو مِرَّةٍ ‘தூ மிர்ரத்தின்’ என்பதற்கு ‘அழகிய தோற்றமுடையவர்,பெரும் வலிமை மிக்கவர்’ என இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளிக்கிறார்கள்.

10. வானவர்களின் உணவு, பானம்


நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.

11. வானவர்கள்-வெட்கப்படுவார்கள்.


ஒருமுறை அபூபக்கர் (ரலி) ,உமர் (ரலி) நபிகளாரிடம் வந்தபோது, நபி(ஸல்)தமது ஆடைகளைச் சரி செய்யாத போது, உத்மான் (ரலி) வந்ததும் தமது ஆடையைச் சரிசெய்தார்கள். காரணம் வினவியபோது நபி (ஸல்) கூறினார்கள். ‘வானவர்கள் எவர் விசயத்தில் வெட்கப்படுகிறார்களோ அவர் விசயத்தில் நானும் வெட்கப்படுகிறேன்’ என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் :முஸ்லிம்:2401)

12. வானவர்கள்-வேதனை-அடைகிறார்கள்


இறைவனின் நேசத்திற்குரியவரே மலக்குகளின் நேசத்திற்கும் உரியவர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வெங்காயம், பூண்டு (போன்றவற்றை) உண்டுவிட்டு நமது பள்ளிவாசல் பக்கம் வரவேண்டாம். நிச்சயமாக ஆதமின் மக்கள் வேதனை அடையும் (துர்வாடை வீசும்) பொருட்களி லிருந்து வானவர்களும் வேதனை அடைகிறார்கள்.’ (அறிவிப்பவர்:ஜாபிர்இப்னு அப்துல்லாஹ்,நூல் முஸ்லிம்-1655)  
 

13. இறைவனின் விருப்பமே வானவர் விருப்பம்    

 

இறைவன் நேசிப்பவர்களை வானவர்களும் அவரவர் அமலுக்கேற்பவும், தகுதிக்கேற்பவும் நேசிப்பார்கள்.

‘உயர்வும், மாண்பும் மிக்க அல்லாஹ், ஒரு அடியாரை நேசிக்கும் போது வானவர் ஜிப்ரீலை அழைத்து ‘நான் இன்னாரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசியுங்கள் எனக் கூறுவான்.அவ்வாறே ஜிப்ரீலும் அவரை நேசிப்பார்.பின்னர் ‘வானுலகில் அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள’ என அவரும் அழைத்துக் கூறுவார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். (அதன்படி மண்ணகத்தாருக்கு மத்தியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி: 7485) 
  

14. வானவர்கள் இறைவனை மிகவும் அஞ்சுவர். 

 

 தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் ( 16:50) 
 

15. முற்றிலும் அவனுக்கு வழிப்படுவர். 

 

அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75) 
 

16. இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள். 

 

உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).

நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)  
 

17. நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.  

 

(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5) 
 

18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)  

 

வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.

‘ ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161) 
 

19. உருவமுள்ள வீட்டில் நுழையார்.  

 

நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649, 
 

20. வானவர்களின் பணிகள்  

 

தூதுவச்செய்தியை அறிவிப்பது,மழைபொழிவிப்பது,காற்றை வீசச்செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது,நன்மை தீமைகளை பதிவு செய்வது,உயிரைக்கைப்பற்றுவது,மண்ணறையில் விசாரணை செய்வது,நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது,ஸூர்ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்iஷ சுமப்பது போன்ற சில பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்தனையும் அல்லாஹ்வால் தான் செய்யப்படுகின்றன.ஆயினும் நிர்வாக சீரமைப்புக்காhவும், உலகின் ஒழுங்கு முறைக்காகவும்,கட்டுப்பாடான இயக்கத்திற் காகவும், மனிதன் பாடம் பெறுவதற்காகவும் வானவர்களிடம் இவ்வாறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யார் யாரிடம் என்னென்ன பொறுப்புகள் ?

இறைவன் வானவர்களுக்கு பல பொறுப்புகளை வழங்கியுள்ளான்.            

1. வஹி -இறை தூதின்- பொறுப்பு.

 இப்பொறுப்பு வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும். (ஜிப்ரீலின் பெயர் குர்ஆனில் 2:97,2:98,66;4 ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன.) இவர்களுக்கு சில சிறப்புப் பெயர்களும் உள்ளன.1.ரூஹுல் குத்ஸ். (16:102) 2. ரஸூலுன் கரீம் ( 81:19) 3.தூ குவ்வத்( 81:20) 4. ரூஹுல் அமீன்(26:193) 5. ஷதீதுல் குவா (52:5)

2. மழை, காற்றின் பொறுப்பு.

இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் மீக்காயீல் எதன் பொறுப்பாளர் எனக் கேட்டபோது,’ மரம் செடிகொடிகளுக்கும், மழைக்கும் என்றார்கள்.

3. சூர் ஊதுவதின் பொறுப்பு.

இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை). இரண்டு தடவைகள் சூர் ஊதப்படும். முதல் தடவை ஊதும் போது உலகிலுள்ள யாவும் அழிந்து விடும்.
‘ சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளளோர் மடிந்து விடுவர். (39:68) ஒரே ஒரு தடவை சூர் ஊதப்படுபோது (69:14), பூமியும்; மலைகளும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கித் தூள்தூளாக ஆக்கப்படும் போது (69: 13,14) இரண்டாவது தடவை சூர் ஊதப்படும் போது மரணித்தவர் யாவரும் உயிர்ப் பிக்கப்படுவர்.

‘ (இரண்டாவது தடவை) சூர்ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து இறைவனை நோக்கி விரைவார்கள். (36:51) பின்னர் மீண்டும் ஒருமுறை ஊதப்படும். அவர்கள் எழுந்து பார்ப்பார்கள் ( 39:68)

4. உயிரைக் கைப்பற்றும் வானவர். 
 
(மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவரை சிலர் ‘இஸராயீல்’ என்பர். இந்தப் பெயருக்கு நபி மொழிகளில் ஆதாரம் கிடையாது.

5. உயிரைக் கைப்பற்ற தனித்தனி வானவர்கள்.

நாம் நினைப்பது போல உயிகை;கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் கிடையாது. இது தவறான கருத்தாகும். ஒவ்வொருவரின் உயிரையும் கைப்பற்றுவதற்கு தனித்தனிவானவர் உள்ளனர் என குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ‘ உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரியவானவர் உற்களை கைப்பற்றுவார்.பிறகு உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள் (32:11) உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அதில்) குறை வைக்கமாட்டார்கள். (6: 61) இதில் ஹஃபளத்தன்-பாதுகாவலர்கள், ருஸுலுனா-நமது தூதர்கள் என்பது வானவர்களைக் குறிக்கம். 
 
6. நல்லோரின் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.

இறந்த அடியார் நல்லவராக இருந்தால் உயிரைப் கைப்பற்ற வரும் வானவர் நல்ல அழகிய தோற்றத்தில் வந்து நற் செய்தி கூறும் முகமாக ‘ ஸலாமுன் அலைக்கும், உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! நீங்கள் செய்த (நல்ல) வற்றின் காரணமாக சொக்க்கம் செல்லுங்;கள்’ எனக் கூறுவார்கள். (16: 32)

7. தீயோர் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.

 இறந்த அடியார் தீயோராக-பாவியாக- இருப்பின் அவரிடம் வரும்வானவர் காணச்சகிக்காத விகாரமாகன பயங்கரத் தோற்றத்தில் வந்து தொண்டைக் குழியை நெருங்கும் அவனது உயிரை கருணை காட்டாது கடுமையாகப் பறித்துச் செல்வர்.

‘ ஒருவனது உயிர் தொண்டைக்குழியை அடையும் போது அந்நேரத்தில் நீங்கள் (எதுவும் செய்ய முடியாது) பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகிலிருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள். (56:83, 84,85) அவர் இறைவனுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தால் அவருக்கு உயர்வும், நறுமணமும், சுகந்தரும் சுவர்க்கச்சோலையும் உளளன. அவர் வலப் புறத்தைச் சார்ந்தவராக (சுவர்க்க வாசியாக) இருந்தால் வலது சாராரிடமிருந்து (சுவர்க்க வாசிகளிடமிருந்து) உமக்கு ஸலாம் உண்டாவதாக. (இறையாணைகளை) பொய்படுத்திய வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் வெந்துருகுவதும் விருந்தாகும். இது உறுதியான உண்மையாகும். எனவே மகத்தான உமது இறைவனைகப் (பணிந்து ) துதி செய்வீராக!

8. மனிதனை சதாவும் பாதுகாக்கும் வானவர்.

மனிதனது விழிப்பிலும், தூக்கத்திலும், ஓய்விலும், இயக்கத்திலும், பயணத்திலும் எல்லா நிலையிலும் வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பர்.

‘ மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை (இடி, மின்னல், விபத்துகள் போன்ற சகல ஆபத்துகளிலிருந்து இறைவனின் விதி வருவது வரை) காப்பாற்றுகின்றனர். (13:11)

9. மனிதனைக் கருவிலும் காக்கும் வானவர்

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான்.மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318)

10. மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்கள்

மனிதன் செய்யும் நன்மை தீமை யாவற்றையும் பதிவு செய்வதற்காக கண்ணியத்திற்குரிய வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்துள்ளான்.

‘ வலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது , அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (50: 17,18) வலது பக்கம் இருப்பவர் நன்மைகளைப் பதிவு செய்வார். இடது பக்கம் இருப்பவர் தீமைகளைப் பதிவு செய்வார். இவர்களின் பெயர்களை ரகீப், அத்தீத் என்று சொல்வார்கள். இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும்.. வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’ கண்காணிக்கும் எழுத்தாளர் என்று சொல்லலாம். இவர்களை ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)

11. இரவும் பகலும் சுற்றிவரும் வானவர்கள்.(பாதுகாப்புப்பணியினர்)

வானவர்களில் சிலரை ‘தனது நல்லடியார்களை கண்காணிக்கவும் பாதுகாத்து வரவும் கட்டளையிட்டுள்ளான்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இரவிலும் பகலிலும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையிலும், மாலை (அஸ்ரு)த் தொழுகையிலும் இருசாராரும் சந்திக்கின்றனர்.பின்னர் இரவுப் பணியிலுள்ளவர்கள் மேலேறிச் சென்றுவிடுவர். இறைவன் அறிந்து கொண்டே அவர்களிடம் என் அடியார்களை எவ்வாறு விட்டு வந்தீர்கள்? என விசாரிப்பான். (அதற்கவர்கள்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (அங்கே) விட்டு வருகிறோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் போய் சேருகிறோம் என விடையளிப்பர். (நூல்: புகாரி :555)

12. லைலத்துல் கத்ர் இரவில் இறங்கும் வானவர்கள்.

லைலத்துல் கத்ர் என்னும் (மாண்பார்) இரவு ஆயிரம் மாதங்களை விட மாண்புடையது. வானவர்களும் (அவர்களின் தலைவர்) ரூஹும் (ஜிப்ரீலும்) தமது இறைவனின் கட்டளைப் படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (97:3,4) 
 
13. கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் அங்கிருந்து நகரும் போது, அவன் அவர்களின் காலணிகளின் ஓசையை செவியுறுவான். அப்போது அவனிடம் இரு வானவர்கள் வந்து அமர்ந்து கொண்டு (பல கேள்விகளைக் கேட்டபின்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கேட்பார்கள்) இந்த மனிதரைப்பற்றி என்ன சொல்கிறாய்? என்று கேட்பார்கள்.

(ஒரு முஃமின்)- நம்பிக்கை கொண்டவனாயின், ‘அவன் அல்லாஹ்வின் அடியாரும் அவனது திருத்தூதருமாவார்’என்று சாட்சி சொல்கிறேன் என்று கூறுவான். அப்போது அவனை நோக்கி, (இதோ, உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப் பார்! அதற்குப் பதிலாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படவிருக்கிறது என்று அவனிடம் கூறப்படும். (அப்போது சுவர்க்கம், நரகம் ஆகிய) இரு இடங்களையும் அவன் பார்ப்பான். அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி),நூல்: முஸ்லிம்: 2870).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நிலைப்படுத்துகிறான். (14:27) என்ற இறைவசனம் கப்ருடைய வேதனை சம்மந்தமாக அருளப்பட்டது. (கப்ரில் அடக்கமாயிருக்கும்) அவனிடம், (மன் ரப்புக்க) உன் இரட்சகன் யார்? அதற்கவன் ‘அல்லாஹ் தான்’என்று பதிலளிப்பான்.( உனது நபி யார்? ) எனது நபி முஹம்மத்(ஸல்)அவர்களாவார் என்று பதில் கூறுவான். இதைத்தான் அல்லாஹ் (14:27-ல்) கூறுகிறான். (அறிவிப்பவர்:ஃபரா இப்னு ஆஸிஃப்(ரலி), நூல் : முஸ்லிம் :2871)
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர் என ஹதீஸ் நூல்களில் வருகின்றன.

14 பரிந்துரைக்கும் வானவர்கள்

அல்லாஹ் அனுமதியளித்தவர்களுக்காக வானவர்கள் பரிந்துரைப்பர்.

இறைமறை கூறுகிறது. ‘வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டோரைத்தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை பயன் தராது. (53:26)

15. மரணவேளையிலும், இறுதிநாளிலும் வாழ்த்தும் வானவர்கள்.

 ’எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி,

‘அஞ்சாதீர்கள்!கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ எனக்கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் உதவியாளர்கள்.நிகரற்ற அன்புடைய மன்னிப்ப வனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும்.நீங்கள் கேட்பதும் கிடைக்கும் என்றும் கூறுவர். (41:30,31)

16. சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة )

காஸின் என்பதன் பன்மைச் சொல்லே கஸனத் என்பதாகும். கஸனத்துல்ஜன்னா- சுவர்க்கத்தின் காவலர்கள்) ‘தமது இறைவனை அஞ்சியோர் சுவர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்படு வார்கள். அதன் வாசல்கள்திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் ‘உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும!(இனி)நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நிரந்தரமாக தங்குவதற்காக இதில் நுழையுங்கள். (39:73.)

17. நரகின் காவலர்கள் (خزنة جهنم)

இவர்கள் ஸபானியாக்கள் என்றும் கூறப்படும்.(96:18).நரகிற்கு 19 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.’அதன் மேல் பத்தொன்பது வானவர்கள் உள்ளனர்’.74:30 என குர்ஆன் கூறுகிறது.

அதன் தலைவர் மாலிக் (அலை)ஆவார் என ஹதீஸ் நூல்களும் அறிவிக்கின்றன.இதை திருமறையும் உறுதிப்படுத்துகிறது.

‘ யாமாலிக்! (நரகக்காவலரான) மாலிக்கே! உமது இறைவன்    எங்கள் பிரச்சனையை விரைவில் முடிக்கட்டும் என்று (நரக வாசிகள்) அழைப்பார்கள்.’ நீங்கள் இங்கேயே கிடப்பீர்கள் என்று அவர் கூறுவார்.(43:77).

(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகிற்கு இழுத்து வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் இறைதூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா? இந்த நாளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா? என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்பார்கள். எனினும் (ஏக இறைவனை மறுப்போருக்கு வேதனை என்னும் (கடும்) உத்தரவு உறுதியாகிவிட்டது. (39:71)

18. அர்ஷய் சுமக்கும் வானவர்கள்.

அர்ஷய் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர்.’ ஒவ்வொரு பொருளையும் (உன்) அருளாலும், அறிவாலும் சூழ்ந்திருக்கிறாய். எனவே (உன்னிடம்) மன்னிப்புக்கேட்டு உனது பாதையை பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகைவிட்டும் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக (அந்த வானவர்கள்) பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.(40:7); 
 
அர்ஷய் சுமப்பவர்களை’கரூபிய்யூன்-ஈச்சமரத்தின் அடிப்பாகம் கனத்திருப்பதைப் போன்ற பலமிக்க அகன்ற கால்களை உடையவர்கள்’ என பொருள் விரிக்கப்படுகிறது.

19. மலைகளைக்காக்கும் வானவர்கள் (முவக்கலுன் பில் ஜிபால்)

தாயிப் நகருக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் சென்றபோது பனூ அப்து யாலைல் சென்று திரும்புகையில் நீங்கள் இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததையும் அவர்கள் கூறிய பதில்களையும் இறைவன் செவியுற்றான்.’நீங்கள் விரும்பினால் இந்த மலைகளுக்கிடையே இவர்களை அழித்து விடுகிறோம்.’ அங்கே வானவர் ஜிப்ரீலும், மலைகளைக் காக்கும் அமரர்களும் வந்து கேட்டனர் என்ற நபி மொழி இதற்கு ஆதாரமாகும்.

20. பைத்துல் மஃமூரை வலம் வரும் வானவர்கள்

‘பைத்துல் மஃமூர்’ என்பது கஃபாவுக்கு மேலே வானிலுள்ள வானவர்கள் தொழுமிடமாகும்.. அங்கே நாள் தோறும் 70,000 வானவர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதில்லை. (ஆதாரம்: புகாரி)

21. அணிவகுத்து நிற்கும் வானவர்கள்

‘நின்ற நிலையிலே சதாவும் நின்று வணக்கம் புரிபவர்கள்! நிமிராமல் ருகூவிலே குனிந்து வணங்குபவர்கள்! ஏழாமல் சுஜீதிலே சிரம் பணிந்து வணக்கம் புரிபவர்கள்!’ என அணிஅணியாக இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கும் இலட்சக்கணக்கான வானவர் படையும் உள்ளனர் என்பதையும் குர்ஆன், சுன்னா ஒளியில் நாம் ஈமான் (நமபிக்கை) கொள்ளவேண்டும். நம்ப மறுப்போர் நிராகரிக்கப்படுபவர்கள் என்றே கருதப்படும்