தண்ணீர் தானம்

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

பொருள்: மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.

இஸ்லாம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : " ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் , ( எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் , அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும் , ( பள்ளிவாசல்கள் , மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும் , அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும் , வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் , அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும், அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மரணத்துக்குப்  பிறகும் அவனைப் போய்ச்சேரும். அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு - (இப்னுமாஜா : 242)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா) 2. பயன்பெறப்படும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - (ஸஹீஹ் முஸ்லிம் : 3358) 

கிறிஸ்தவம் 


நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான். - (மாற்கு 9 :41

2 கருத்துகள்:

  1. மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்... அதில் ஒருவர், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளி­ருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ 2369 https://www.qatartntj.com/2015/02/bayan-notice-77.html

    பதிலளிநீக்கு

  2. உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,
    தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர
    பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,
    கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. ஏலாதி 51


    நாட்டினுள் நீர்வளத்தையும் குளத்தையும் கிணற்றையும் பலருஞ் செல்லும் வழியிற் றங்குதற்குரிய சிறு வீடுகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் மண்டபங்களையும் வகையினால் அமைப்பித்தவன், சிறந்த செல்வமுடைவனாய், இசையோடு பொருந்தின இயல்புடைய பாடலையும் ஆடலையும் பன்முறை கேட்டுங் கண்டும் அனுபவித்து உள்ளன்புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலை மிகுந்துள்ளவன் ஆவான்.

    பதிலளிநீக்கு