இரத்தல்


இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று (அதிகாரம்:இரவு குறள் எண்:1058)

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

மணக்குடவர் குறிப்புரை: இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

பதவுரை: இரப்பாரை-ஏற்பவர் ('ஐகாரம்' அசைநிலை); இல்லாயின்-இல்லாமல் இருந்தால், இல்லாவிடில்; ஈர்ங்கண்-குளிர்ந்த இடம்; மா-பெரிய; ஞாலம்-உலகம்; மரப்பாவை-மரத்தால் செய்யப்பெற்ற பதுமை; சென்றுவந்துஅற்று-செல்வதும் வருவதும் போலும், போய்வந்தாற் போல்வது.

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை 222)

பதவுரை:
நல்-நல்ல; ஆறு-நெறி; எனினும்-என்றாலும்; கொளல்-ஏற்றல்; தீது-கொடிது; மேல்உலகம்-உயர்வாகிய உலகம் (வீட்டுலகம்); இல்லெனினும்-இல்லை என்றாலும்; ஈதலே-கொடுத்தலே; நன்று-நன்மையுடையது.

மணக்குடவர் உரை: ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும். (நாலடியார்)

பதவுரை: மறுமையும் இம்மையும் நோக்கி --- மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் --- கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் --- அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை --- பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் --- அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.

வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை.

முழுக்கருத்து: இரப்பார் இல்லையென்றால் உலகம் இயங்காது என்று கூறும் வள்ளுவம், இரத்தல் தீது என்கிறது. 
____________________________

‘ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி), நூல்: அபூதாவூத்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது, மக்களிடத்தில் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். நூல் : புகாரி-1480 , 1471

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும். அல்லது அதிகமாக யாசிக்கட்டும். நூல் : முஸ்லிம்-1883 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் என்னை விட ஏழைக்கு இதைக் கொடுங்களேன் என்பேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள். நூல் : புகாரி-1473 

முழுக்கருத்து: தேவை இருப்பின்பெற்றுக்கொள்வதை தடுக்காத மார்க்கம், ஆனால் தேவைக்கு அதிகமாக கேட்பவரை சபிக்கிறது. இயன்றால் உழைத்து உண்பதையே வலியுறுத்துகிறது. 

_____________________________

உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். Luke 11:41

இப்படி கடினமாக உழைத்து பலவீனமானவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், 'வாங்குவதைவிட கொடுப்பதே அதிக பாக்கியம்' என்று கர்த்தராகிய இயேசு சொன்னதை நினைவுகூர வேண்டும் என்றும் எல்லாவற்றிலும் நான் உங்களுக்குக் காட்டினேன்-  சட்டங்கள் 20:35 

20 கருத்துகள்:


  1. பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
    இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
    வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
    உயிர் விடுகை சால உறும். 14


    பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது. http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/nalvazhi_3.html

    பதிலளிநீக்கு
  2. நாம் ஏழையாக இருந்தாலும் பிறரிடத்தில் கேட்கக் கூடாது. நமது சுயமரியாதையை நாம் பேண வேண்டும். அவர்களே நமது கஷ்டங்களைப் பார்த்து நமக்குத் தந்தால் அதை வாங்கலாம். அதை மறுக்கக் கூடாது.

    உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள்.

    நூல்: புகாரி 1473

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வலிந்து) கேட்காமலும் உள்ளம் ஆசைப்படாமலும் தனது சகோதரனிடமிருந்து ஏதாவது பொருள் ஒருவருக்கு வந்தால் அதை அவர் ஏற்கட்டும். அதை மறுக்க வேண்டாம். அது அல்லாஹ்விடமிருந்து வந்த உணவாகும்.

    அறிவிப்பவர்: காலித் பின் அதீ அல்ஜுஹ்னி (ரலி)

    நூல்: அஹ்மத் 17257https://tamildhawa.blogspot.com/2010/12/3_05.html

    பதிலளிநீக்கு

  3. ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,
    ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்
    வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்
    நிரயத்துச் சென்று வீழ்வார். திரிகடுகம் 45


    திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_9.html

    பதிலளிநீக்கு

  4. கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப்
    பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்
    நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும்
    கேள்வியுள் இன்னாதன.திரிகடுகம் 57


    தாளத்தோடு சேராத பாட்டும், இரந்து உண்பவனுடைய இரைச்சலும், ஒதுக்குக் குடி இருந்தான் பெரு வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது. http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_12.html

    பதிலளிநீக்கு

  5. 'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,
    பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,
    விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்
    அரிய துணிந்து ஒழுகுவார். திரிகடுகம் 73


    பிச்சை எடுத்துப் பெரும் பொருள் ஈட்டுபவனும், வேசியை நம்பும் காமுகனும், தக்க கருவிகள் இன்றி கடலில் பொருள் ஈட்டச் செல்லும் வணிகனும், தன் முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  6. சங்கீதம் 37:25
    Tamil Bible: Easy-to-Read Version
    நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  7. 59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை

    இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை.

    https://thamizhkanal.com/6-illaip-pttu/

    பதிலளிநீக்கு

  8. 60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை

    இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை.

    பதிலளிநீக்கு
  9. முதுமொழிக் காஞ்சி 6:9.

    இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.

    இரத்தலின் ஊங்கு - இரத்தலை விட
    இளிவரவு - இகழ்ச்சி

    ஒருவனுக்கு இரத்தலை விட வேறு இகழ்ச்சி இல்லை.

    பதிலளிநீக்கு
  10. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்
    (அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1069)

    பொழிப்பு (மு வரதராசன்): இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைந்தால், உருகுமளவும் இல்லாமல் அழியும்.

    மணக்குடவர் உரை: இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும்.
    இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.

    பரிமேலழகர் உரை: இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும்.
    ('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305) என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.)

    சி இலக்குவனார் உரை: இரத்தலின் கொடுமையை நினைக்க மனம் உருகும்; ஒளித்தலின் கொடுமையை நினைக்க, உருகும் உள்ளமும் இல்லாமல் அழிந்துவிடும்

    பதிலளிநீக்கு
  11. சங்கீதம் 37:25
    நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  12. நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும் உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும் தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
    புகாரி: 1428

    பதிலளிநீக்கு
  13. ”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்ற வனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 1427.

    பதிலளிநீக்கு
  14. உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது
    ” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புகாரி: 1474, 1475.

    பதிலளிநீக்கு
  15. ”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
    புகாரி: 1470, 1471.

    பதிலளிநீக்கு
  16. ‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான்அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி: 3406, 5453.

    பதிலளிநீக்கு
  17. பூமியில் நடமாடித் (தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அல்குர்ஆன் (2:273)

    பதிலளிநீக்கு
  18. வெண்பா : 14 நல்வழி

    பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
    இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
    வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
    உயிர்விடுகை சால உறும்

    விளக்கம்:
    நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.

    பதிலளிநீக்கு

  19. ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
    வழிபடுதல் வல்லுத லல்லால் - பாசழிந்து
    செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
    பையத்தான் செல்லும் நெறி? நாலடியார் 309

    வறியவர் ஒருவர் செல்வர் ஒருவரைச் சார்ந்து, அவர் சொன்னபடி செய்து வணங்கித் தாழ்ந்து வாழ்தல் உலக முறைமை கும். அப்படியின்றி மானம் கெட்டு 'எனக்கு ஏதேனும் தரமாட்டீர்களா?' என்று இரப்பதைவிட, மெல்லப் பிறரைச் சார்ந்து அவர் ஏவல் கேட்டு வாழும் முற்கூறிய வாழ்க்கை அவ்வளவு துன்பம் தருவதோ? (ஒரு தொழில் இன்றிப் பிறரைத் தொழுது உண்டு வாழ்தல் துன்பம் தருவதுதான். ஆயினும் அதை விடத் துன்பம் தருவது இரந்து உண்டு வாழ்தல் என்பது கருத்து).

    https://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/naaladiyar/naaladiyar31.html

    பதிலளிநீக்கு
  20. ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,
    ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்
    வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்
    நிரயத்துச் சென்று வீழ்வார். . . . .[திரிகடுகம் 45]

    விளக்கம்:
    திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர்.

    பதிலளிநீக்கு