உழைப்பும் செல்வமும்

தமிழர் சமையம் 


சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்
நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும்
காப்பு இகழல் ஆகாப் பொருள். - (திரிகடுகம் 47)

பொருள் மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய செல்வமும், நாக்கில் நீர் ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும்.

கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்
முழு மக்கள் ஆகற்பாலார். 87

பொருள்: ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.

இஸ்லாம் 

பின்னர் (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லா ஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள 62:10

 



இஸ்லாம் சோம்பேறித்தனத்தை முற்றிலுமாக ஒழித்து உழைப்பை வலியுறுத்துகிறது
பூமியில் பல இடங்களுக்கு பரவிச்சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது.
அவற்றில் சில: ……

இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (கடலை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (16:14)

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது (2:198)

”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (புகாரி: 1470, 1471)

”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார். (புகாரி: 2072, 2073.)

கிறிஸ்தவம் 

நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய். - நீதிமொழிகள் 14:23

ஆனால் செல்வத்தை பெருக்கும் ஆசை பாவமாகும் 

13 கருத்துகள்:

  1. அறநெறிச்சாரம் பாடல் - 88

    தனக்குத் தகவுஅல்ல செய்து ஆங்குஓர் ஆற்றால்
    உணற்கு விரும்பும் குடரை - வனப்புஅற
    ஆம்பல்தாள் வாடலே போல அகத்து அடக்கித்
    தேம்பத்தாம் கொள்வது அறிவு.

    விளக்கவுரை ஒருவன் தனக்கு தகுதியற்றவற்றைச் செய்து ஒருவாறு உண்ணுவதை விரும்பும் குடலை, ஆம்பற்கொடி வாடுதலைப் போல் அழகு கெடவும் இளைக்கு மாறும் தாம் உள்ளே அடக்கிக்கொண்டிருப்பது அறிவுடைமையாகும்.

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 2120 அறிவுள்ளவன் தனக்குத் தேவையானவற்றைச் சேகரித்துக்கொள்கிறான். அறிவற்றவனோ தான் பெற்றதை பெற்ற வேகத்திலேயே செலவு செய்துவிடுகிறான்.

    பதிலளிநீக்கு
  3. நீதிமொழிகள் 21 .25-26 சோம்பேறி மேலும் மேலும் ஆசைப்படுவதால் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவன் அதற்கென உழைக்க மறுப்பதால் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். ஆனால் நல்லவனிடம் ஏராளமாக இருப்பதால் அவனால் கொடுக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 28
    19 கடினமாக உழைப்பவன் உணவை ஏராளமாகப் பெறுவான். ஆனால் எப்போதும் கனவுகள் கண்டு தன் காலத்தை வீணாக்குபவன் ஏழையாகவே இருப்பான்.

    பதிலளிநீக்கு
  5. முதுமொழிக் காஞ்சி தண்டாப் பத்து 10:6.

    மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான்.

    மிகுதி வேண்டுவோன் - செல்வ மிகுதியை விரும்புவோன்

    செல்வம் வேண்டுபவன் இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.

    https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/mudhumozhikanchi.html

    பதிலளிநீக்கு
  6. ‘தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் நீங்கள் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளிலிருந்து தேடிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.”
    (62:9-10)

    பதிலளிநீக்கு
  7. உலகம் முழுவதும் உழை ப்பாளர்களுக்காக உழைப்பாளிகள் பட்ட கஷ்டங்களும் அதற்கான சான்றுகளும்

    18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள் முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர்.எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.

    இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.

    இங்கிலாந்தில்
    ‘உழைப்பாளிகள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வார்கள்’ என்ற 6 அம்சக்கோரிக்கைகளில் இதை பிரதான கோரிக்கையாக வைத்து ‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

    ஃபிரான்ஸில்
    1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .

    அமெரிக்காவில்
    1832 ல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.

    1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    1886 ல்
    பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது இதுவும் மே தினம் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில்
    1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

    ரஷ்யாவில்
    1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.

    சிக்காக்கோவில்
    1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000 க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் டத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே போலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத் தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.

    1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.
    8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.

    பாரீசில்
    1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

    அன்றிலிருந்துதான் வருடந்தோரும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பட்ட கஷ்டங்கள் இன்று வரை தீர்ந்தபாடில்லை.

    போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. இஸ்லாம் சோம்பேறித்தனத்தை முற்றிலுமாக ஒழித்து உழைப்பை வலியுறுத்துகிறது
    பூமியில் பல இடங்களுக்கு பரவிச்சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது.
    அவற்றில் சில: ……

    இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (கடலை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.16:14

    (மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்துக் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான், 17:66

    (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, 2:198

    பின்னர் (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லா ஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள 62:10

    மேற்கூறப்பட்ட வசனங்கள் உழைப்பை வலியுறுத்தும் வசனங்கள்
    மேலும் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் செலவழிக்கவும், ஜக்காத் ஸதக்கா வழங்கவும் செல்வத்தை சேமித்து வைத்துக்கொண்டு செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வோருக்கு கடும் தண்டனை உண்டு எனவும் கூறக்கூடியவைகள் உழைப்பை வலியுறுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. எல்லா இறைத்தூதர்களும் உழைத்திருக்கின்றார்கள்

    தாவூத் நபியைக்குறித்து அல்லாஹ் கூறும்போது ‘…..நாம்; அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கித் தந்தோம் ‘வலுப்பமுள்ள போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்'(என்றும் சொன்னோம்) 34:10,11.
    இவ்வாறு குறிப்பிடுகிறான்.

    அவர் போர்க்கவசங்கள் செய்யக்கூடியவராக இருந்தார் என்பதையே மேற்கூறப்பட்ட வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
    முஹம்மது நபி(ஸல்)அவர்களும் உழைத்திருக்கிறார்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள் நபி(ஸல்)அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள்.

    உழைப்பதை வலியுறுத்தும் நபிமொழிகள்:
    ‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான்அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி: 3406, 5453.

    ”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
    புகாரி: 1470, 1471.

    நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 2071.

    ”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 2072, 2073.

    உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது
    ” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புகாரி: 1474, 1475.

    பதிலளிநீக்கு
  10. உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி,அவர்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளும் பணியாளரிடம் நபி(ஸல்)அவர்கள் நடந்து கொண்ட விதமும் நடக்கச்சொன்ன விதமும்

    உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 5460.

    ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.
    புகாரி: 30.

    ”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 2270.

    ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?என்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.திர்மிதீ: 1949.

    நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லைஎன அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி: 6038.

    அதே நேரத்தில் உழைப்பாளிகளும் தங்களின் உழைப்பில் அக்கறை செலுத்துவதோடு முதலாளிகளை ஏமாற்றாமல் விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
    உழைத்து செலவழிப்பவரின் சிறப்புகள்
    ஒரு மனிதன் (உழைத்துச்)செலவழிக்கிற தீனார்களில் சிறந்தது தன் குடும்பத்தாருக்கு செலவழிப்பதாகும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் (தனக்கு போர் புரிய உதவும் ) வாகனத்திற்கும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியும் தன் தோழருக்கும் செலவழப்பதுமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
    முஸ்லிம்: 2357.

    பதிலளிநீக்கு

  11. ‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை — வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
    புகாரி: 1425.

    ”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்ற வனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 1427.

    நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும் உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும் தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
    புகாரி: 1428

    ”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 1442.

    நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 7430.

    1434 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது ஆக இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும் இஸ்லாம் என்ற கொள்கையால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகளை களைய முடியும்.

    சான்று : http://qsiakponline.blogspot.in/2015/06/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  12. எபேசியர் 4:28 ESV / 79 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    திருடன் இனி திருடாமல் இருக்கட்டும், மாறாக அவன் உழைப்பு, நேர்மையான வேலையைத் தன் கைகளால் செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  13. சோம்பேறியின் ஏக்கம் அவனுக்கு மரணமாக இருக்கும், ஏனென்றால் அவன் கைகள் வேலை செய்ய மறுக்கிறது. நாள் முழுவதும் அவர் அதிகமாக ஏங்குகிறார், ஆனால் நீதிமான்கள் விடாமல் கொடுக்கிறார்கள். - நீதிமொழிகள் 21:25-26, NIV



    பதிலளிநீக்கு