தமிழர் சமையம்
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும்காப்பு இகழல் ஆகாப் பொருள். - (திரிகடுகம் 47)
பொருள் மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய செல்வமும், நாக்கில் நீர் ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும்.
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்குஅகன்ற இனம் புகுவானும், இருந்துவிழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்முழு மக்கள் ஆகற்பாலார். 87
பொருள்: ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.
இஸ்லாம்
பின்னர் (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லா ஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள 62:10
இஸ்லாம் சோம்பேறித்தனத்தை முற்றிலுமாக ஒழித்து உழைப்பை வலியுறுத்துகிறதுபூமியில் பல இடங்களுக்கு பரவிச்சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது.அவற்றில் சில: ……இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (கடலை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (16:14)
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது (2:198)
”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (புகாரி: 1470, 1471)”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார். (புகாரி: 2072, 2073.)
கிறிஸ்தவம்
நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய். - நீதிமொழிகள் 14:23
ஆனால் செல்வத்தை பெருக்கும் ஆசை பாவமாகும்