தேவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரக்கர்களும் அசுரர்களும் - இறைவனின் மூன்று படைப்புகள்

தமிழர் சமயம்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேதொல்காப்பியம் 573 என தொல்காப்பியத்துக்கு விளக்க உரை எழுதிய இளம்பூசனர் கூறுவார் "பிறவாவது தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்"

அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை - (திருமந்திரம் 5)

பொருள்: சிவனன்றி அவனால் படைக்கப்பட்ட மூவர்களாகிய தேவர்கள், மனிதர்கள், அசுரர்களால் செய்ய முடிந்தது ஏதும் இல்ல.

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... - (பரிபாடல் 60)

 கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி - (காலிததகை 1:3)

 மாயம் செய் அவுணரை - (கலித்தொகை 2:3)

சொற்ப்பொருள்: அவுணர் - அசுரர், கூளிபேய், சாத்தான், அரக்கன்  


உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் - (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)

பொழிப்பு: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
 
சொற்ப்பொருள்: அலகை - பேய் (evil sprit)

இஸ்லாம்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

மேலும் சூரத்துல் ஜின் என்கிற அத்தியாயம் குர்ஆனில் இறக்கி அருளப்பட்டுள்ளது. அதில் அவர்களது உணவு, உறைவிடம் உட்பட  ஆற்றல், செயல்கள் மற்றும் பண்புகள் என பலவும் விரிவாக கொடுக்கப் பட்டுள்ளது.

கிறிஸ்தவம்

எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனிதனை படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். - (ஆதியாகமம் 1:27)

ஒருநாள், தேவதூதர்கள் யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள் சாத்தானும் அவர்களோடு வந்து நின்றான். - (யோபு 1:6)

சாத்தான் என்பவன் fallen Angel என்ற கருத்து கிறிஸ்த்தவர்களிடம் நிலவுகிறது அது பிழை என்பதற்கு ஆதாரம்  இந்த வசனம். தேவர்களுடன் சாத்தான் வந்து நின்றான் என்கிற வசனம் சாத்தான் தேவர் இனத்தை சார்ந்தவன் அல்ல என்று கூறுகிறது. ஆனால் சாத்தான் என்கிற பெயர் அவனது (அரக்க) செயலால் அவனுக்கு  வழங்கப் பேட்ட பெயர். எனவே மனிதனும் அல்லாமல், தேவரும் அல்லாமல், பேராற்றல் (அசுர பலம்) வழங்கப்பட்ட இனத்தை சார்ந்தவன் சாத்தான் என்று விளங்க முடிகிறது. 

சாத்தான் என்பவன் நிஜமான ஒருவன் என்பதாகவே பைபிள் சொல்கிறது; அவனுடைய பொல்லாத, மூர்க்கமான குணங்களைப் பற்றியும் அவனுடைய கெட்ட செயல்களைப் பற்றியும் அது நமக்குச் சொல்கிறது. (யோபு 1:13-19; 2:7, 8; 2 தீமோத்தேயு 2:26) அதுமட்டுமல்ல, கடவுளுடனும் இயேசுவுடனும் அவன் பேசிய விஷயங்களையும் அது பதிவு செய்து வைத்திருக்கிறது.​—யோபு 1:7-12; மத்தேயு 4:1-11.

எசேக்கியேல் 28- 14:18 (அசுரர் பற்றி) 
 
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது சிறகுகள் என் சிங்காசனத்தின் மேல் விரிந்தன. நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன். நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய். நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய். 
 
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய். ஆனால் பிறகு கெட்டவனானாய். 
 
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது. ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய் எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன். நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன். உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன. ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும் நகைகளைவிட்டு விலகச் செய்தேன். 
 
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது. உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது. எனவே உன்னைத் தரையில் எறிவேன். இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர். 
 
18 நீ பல பாவங்களைச் செய்தாய் நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய். இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய். எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன். இது உன்னை எரித்தது! நீ தரையில் எரிந்து சாம்பலானாய். இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.

சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”— (யோபு 1:6)

பாம்பு; “ஏமாற்றுக்காரன்” என்ற அர்த்தத்தைத் தருவதற்காக பைபிள் சில சமயம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.— (2 கொரிந்தியர் 11:3)
 
சாத்தான்; சோதனைக்காரன்.— (மத்தேயு 4:3)
 
பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். (யோவான் 44)

உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 12:9)

முடிவுரை

இறைவனால் படைக்கப்பட்ட மூன்று இனங்கள்

  1. தேவர்கள் (அ) தேவ தூதர்கள் (அ) வானவர்கள் (அ) மலக்குகள் (அ) Angel - இறைவனுக்கு பணிவிடை செய்பவர்கள் - with no free will
  2. அசுரர்கள் (அ) ஜின்கள் (அ) பூதம் (அ) அவுணர் (அ) கேரூப்கள் - பல்வேறு பிரமாண்ட "அசுர பலம்" கொடுக்கப்பட்டவர்கள் - with free will
  3. மனிதர்கள் (அ) இயக்கர்கள்  - இது நாம் with free will 
இமூவரும் வெவேறு பரிமானங்களில் (Dimensions) வாழுகிறார்கள். அறிவியல் பதினோரு பரிமாணங்கள் இருப்பதாக கூறுகிறது.

அரக்கர்கள் - "அரக்க குணம்" என்பார்களே அவர்கள் தன் இனத்தில் சக நபருக்கு இடையில் இரக்கம் காட்டாதவர்கள். இறைவன் வகுத்த அறங்களை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாதவர்கள், பின்பற்றாதவர்கள்.

அலகை (அ) கூளி (அ) அரக்கன் (அ) சாத்தான் (அ) சைத்தான் என்று இவர்கள் அழைக்கப் படுகிறார்கள். இந்த பண்பு முதலில் அசுரர் குலத்தில் தோன்றியதால் அரக்கர்கள் அசுர குலத்தை சார்ந்தவர்களாக கருதபடுகிறார்கள் ஆனால் மனிதர்களிலும் அசுரர்களிலும் அரக்கர்கள் உள்ளார்கள்.