தோரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிறிஸ்தவர்களின் பைபிள் முஸ்லிம்களின் குரான் இரண்டுமே தோரா புத்தகத்திலிருந்து வந்ததாக அறியப்படுகிறதே, இது உண்மையா?

இதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ள உலக சமயங்களின் மாபெரும் வடிவமைப்பின் அடிப்படையை தெரிந்து இருக்க வேண்டும்.

முதலில் நூல் / புத்தகம் என்றால் என்ன? நூல் என்றாலே இறைவனால் வழங்கப்பட்டதுதான்.



 

தொல்காப்பியத்தில் முதல்நூல் வழிநூல் தத்துவத்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?











அதாவது ஆரம்பகாலத்தில் நூல் என்றாலே அது இறைவனால் வழங்கப் பட்ட சமய நெறி நூல் தான், அது பின்னாளில் வேதம், ஆகமம், மறைநூல், கிதாப் என்று அறியப்பட்டது. அது ஒருமுறை வழங்கப்பட்டதும் முடிந்துவிடவில்லை. அது தொடர்ந்து வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முனைவர்கள் மூலம் வரக்கூடியது ஆகும். அதில் முதலில் வந்த நூல் முதல் நூல் என்றும், அந்த குறிப்பிட்ட முதல் நூலை தொடர்ந்து வரக்கூடிய நூல்கள் அதன் வழிநூல்கள் ஆகும். இவ்வாறு வரக்கூடிய நூல்கள் சில பொழுது ஒரே பெயரில் வழங்கப்பட்டது எனவே அது ஒரே நூலாக தொகுக்கப் பட்டது. சில பொழுது வெவ்வேறு பெயரில் வழங்கப்பட்டு அது வழி நூல் என அடையாளம் காணப்பட்டு அதன் முதல் நூலின் கீழ் இணைக்கப்பட்டது. உதாரணமாக,

  • ரிக் வேதம் எழுதியவர்கள் 346 ரிஷிகள் ,
  • பைபிள் எழுதியவர்கள் 10 இயேசுவின் சீடர்கள் மற்றும் துறவிகள்,
  • தோராவை எழுதியவர்கள் 22 தீர்க்கதரிசிகள்,
  • தேவாரம் எழுதியவர்கள் 3 நாயன்மார்கள்,
  • புறநானூறு எழுதியவர்கள் 150 புலவர்கள்,
  • அகநானூறு எழுதியவர்கள் 146 புலவர்கள்,
  • நற்றிணை எழுதியவர்கள் 275 புலவர்கள் ,
  • குறுந்தொகை எழுதியவர்கள் 206 புலவர்கள் ,
  • நாலடியார் எழுதியவர்கள் பல சமண முனிவர்கள்,
  • நபிமொழி எழுதியவர்கள் பல இமாம்கள்

மேலும் இந்த பட்டியல் மிக நீண்டது. அனைத்து சமயங்களிலும் இது எப்படி சாதித்தியமானது என்று நாம் சிந்தித்ததுண்டா?

இந்த வழிநூல்கள் அடையாளம் காணப்படாமல், அல்லது அடையாளம் காணப்பட்டும் ஒரே பெயரில் இணைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. உதாரணமாக,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

இந்த பாடல் மூலம்

  • திருக்குறள்
  • உலகில் உள்ள நான்கு மறைகள்
  • மூவர் தமிழனா தேவாரம்
  • திருவாசகம்
  • திருமந்திரம்

ஒன்று என்று அறிய முடிகிறது. இந்த பாடலின் அடிப்படையில் ஆராய்ந்தால் இவை அனைத்தும் ஒரே கருத்தை கூறுவதை உணர முடியும். மேலும் நாலடியாரின் சுருக்கம்தான் குறள் என்பதும், குறளின் சுருக்கம்தான் ஆத்திச்சூடி என்பதை ஆய்வாளர்கள் அறிவர்.

சரி, இதற்கும் ஆபிரகாமிய மதங்களுக்கும் என்ன தொடர்பு.?

ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் ஒரே மொழியை பேசியதையும் அவர்கள் ஒரே சமயத்தை பின்பற்றியதையும் நாம் அறிவோம்.

பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது” (ஆதியாகமும்11:1)

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)

பின்னாளில் அவர்கள் அனைவருக்கும் தூதர்கள் மூலம் வேதம் சென்றடைய வேண்டுமே? அதற்கு கடவுள் என்ன வழியை கையாண்டார்? இந்த திருமந்திர பாடல் ஒரு தெளிவான பதிலை தருவதாக நம்பலாம்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால்,

  • நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர்
  • அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்
  • அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நந்திகள் உள்ளனர்.
  • (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
  • மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர்
  • நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது
  • மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
  • வடக்கு (பதஞ்சலி (அ) வியாக்ரமர்) - ஆரிய வேத பொருள்
  • தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
  • கிழக்கு (பதஞ்சலி (அ) வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)

அதாவது முதல் நூல் மொத்தம் நான்கு உண்டு, அதனை தொடர்ந்து வரக்கூடிய நூல்கள் அந்த குறிப்பிட்ட முதல் நூலின் வழிநூல்கள் ஆகும்.

மேற்கில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் வேதம் கொண்டு வந்தவர் ஒரே தேவர், அவர் சிவயோக மாமுனி என்று தமிழர் சமயத்திலும், ஆபிரகாமிய மதங்களில் தேவர்களின் தலைவரான அவர் ஜிப்ராயீல் / கேபிரியேல் என்று அழைக்கப் படுகிறார்.

முடிவுரை:

குர்ஆன் காப்பி அடித்தது அல்ல. மாறாக இந்த வேதங்கள் அனைத்தின் மூலமம் ஒரே கடவுள், அவை அனைத்தையும் தூதர்களுக்கு கொண்டுவந்த தேவர் ஒருவர், இந்த மக்கள் அனைவரும் ஒரே பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் (ஆப்ரஹாமின் குடும்பம்) என்பதால் ஒற்றுமைகள் பல உண்டு எனபதுதான் சரியான புரிதல்.