தமிழர் சமயம்
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)
பொருள்: உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன். கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது என்பது கருத்தாம்.
கிறிஸ்தவம்பதவுரை: புரை - ஒத்திரு, போன்றிரு; திரை - அலை; புரி - மிகுந்திரு; சடை - படர்ந்த, விரிந்த;
இஸ்லாம்தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது: எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது! தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது! - (ஏசாயா 40:18)
இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள். (குர்ஆன் 3:94)
மேலும், “எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரக)நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள்; (அதற்கு நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் வாக்குறுதியை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வாறாயின், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (கற்பனை செய்து) கூறுகின்றீர்களா? - (குர்ஆன் 2:80)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (குர்ஆன் 4:48)
முடிவுரை
- இறைவன் யார்?
- அவனது ஆற்றல் என்ன?
- அவனது பண்புகள் என்ன?
- அவனது பெயர் என்ன?
- அவன் எதை விரும்புகிறான்?
- யாரை விரும்புகிறான்?
- எதை வெறுக்கிறான்?
- யாரை வெறுக்கறான்?
- அவனது விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் என்ன?
- உலகை எப்படி படைத்தான்?
- விதியை எப்படி வடிவமைக்கிறான்?
- எது அறம்?
- எது மறம்?
போன்றவற்றை மனிதர்கள் கற்பனை செய்து வரையறுக்க முடியாது. அவனது நான்மறைகள் மூலம் அவனே சொன்னவைகளை ஏற்பதுதான் குணமுடைய மனிதன் செய்ய வேண்டிய செயல் ஆகும்!