மொழிகள் மனிதனால் வளந்தவைகள் என்பதற்கு என்ன சான்று? உலக சமயங்கள் இதற்கு மாற்றமாக கூறுகிறது.
கடவுள் தான் மொழியை கற்றுக் கொடுத்தார். மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழியை பேசினார்கள். வெள்ளப்பெருக்கு வரை ஒரே மொழியை பேசினர்.
கிறிஸ்தவம்
ஆதியகமம் 11:11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.
ஆதியகமாம் 11:7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். 8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.
விளக்கம்: கடவுள் பல மொழிகளை உருவாகியதை இங்கே குறிப்பிடுகிறார்.
இஸ்லாம்
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)
(குர்ஆன் 30:22). மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்: மொழிகள் வேறுபட்டு இருப்பது இறைவனால்.
தமிழர் சமயம்
என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)
ஆரம்ப காலத்தில் நூல் என்றாலே இறைவன் வழங்கியதுதான் என்று அருங்கலச்செப்பு கூறுகிறது.
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
அதை முதல் மற்றும் வழி நூல் என்று பிரித்த தொல்காப்பிய நூல் இறைவன் வழங்கிய தமிழ் இலக்கண நூல் ஆகும்.
அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம் (தொல்.பொருள்.649.பேரா.)
மேலும் தமிழ் வளர்க்க தன்னை அனுப்பியதாக திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)
முடிவுரை
மொழிகள் இறைவன் வழங்கியது மட்டுமே. பிற்கால மொழிகளான ஆங்கிலம், ஹிந்தி போன்றவைகள் இறைவன் வழங்கிய மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அவற்றின் மூல கருப்பொருள்களான எழுத்துரு, இலக்கணம், சொற்கள் ஆகியவை வெவ்வேறு மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது கண்கூடு. இவ்வாறு பிரித்தும் சேர்த்தும் செய்யப்படும் மாற்றங்கள் மொழியில் மட்டுமல்ல, மாறாக அரசியல் தத்துவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதாரம் போன்ற பல தலைப்புகளில் நீண்டு செல்கிறது. எனவே உலக வேதங்கள் உள்ளடக்கிய நான்மறைகளை வாசிக்கமல் எல்லாவற்றையும் கற்பனையாக யூகமாக பேசுவதை நாம் குறைத்து கொண்டு இந்த நூல்களை கற்க வேண்டும். எனவே கடவுள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்