கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குழப்பம் உண்டாக்குதல் கொலையை விட கொடியது

தமிழர் சமயம் 

ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்‌
மாண்‌ இழை மகளிர்‌ கருச்சிதைவோர்க்கும்‌
பார்ப்பார்‌ தப்பிய கொடுமையோர்க்கும்‌
வழுவாய்‌ மருங்கஇல்‌ கழுவாயும்‌ உள என
நிலம்‌ புடை பெயர்வது ஆயினும்‌, ஒருவன்‌
செய்‌இ கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பாடிற்றே ஆயிழை கணவ - (புறநானூறு பாடல்‌-34)

பசுவின்‌ காம்பினை அறுத்தவன்‌ கெடுங்கோலாளன்‌. மகளிர்‌ கருவினைச்‌ இதைத்தவன்‌ மனிதநேயம்‌ அற்றவன்‌. அந்தணர்களுக்குக்‌ கொடுமை இழைத்தவன்‌ என இம்மூன்று பேரை மன்னிக்கலாம்‌. ஆனால்‌, தவறான செய்தி சொல்லி பெரும்‌ கேடுவிளைவிப்பவனுக்கு மன்னிப்பே இல்லை. அவனுக்கு மேலுலகத்திலும்‌ உய்தி இல்லென என்று கூறி இதுவே அறநெறி போற்றும்‌ வழியாகும்‌ என உவமை கூறுஇறது.

இஸ்லாம் 

 (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும் (குர்ஆன்  2:191

கிறிஸ்தவம் & யூதம் 

தாவீதைப் பின்தொடந்தவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், குழப்பம் செய்வபவர்களாகவும் இருந்தனர்.  - (1 சாமுவேல் 30:22)

நம்பிக்கையற்றவர்களை கொல்லலாமா? *

கிறிஸ்தவம் & யூதம்  

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

இஸ்லாம் 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190) 

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)  

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 2:192) 

 'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறான்;மக்காவிற்கு நீங்கள் செல்லுங்கள் மக்காவை வெற்றி கொள்ளுங்கள் அங்கிருந்து முஷ்ரிக்களை வெளியேற்றுங்கள் என்று. (அல்குர்ஆன் 9 : 28)

எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:40)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

 '(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 09:6)

முடிவுரை 

இறைவனை அவன் தந்த கட்டளையை இவர்கள் மறுக்க செய்வார்கள் என்கிற  அடிப்படையில் ஒரு நாட்டின் படைக்கு, அதன் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சட்டம் ஆகும். இது தனி மனிதன் இன்னொரு தனிமனிதனை கொலை செய்வதை ஆதரிக்கும் சட்டமல்ல.

கொலை - மாபெரும் பாதகம்

கொலை செய்ய அனுமதி உண்டா?  


சமகாலத்தில் எதற்க்கெடுத்தாலும் கொலை. 
  • வாக்குவாதத்தால் கொலை, 
  • கள்ளத்தொடர்பால் கொலை, 
  • அரசியல் கொலை, 
  • சாதி ஆணவக் கொலை, 
  • கொள்ளை அடிக்கும் பொழுது கொலை, 
  • சைக்கோவின் தொடர் கொலைகள், 
  • மத மோதல்களால் கொலை, 
  • பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கொலை, 
  • கட்சிகளுக்கு இடையிலையான பூசல்கள் காரணமாக கொலை, 
  • பதவி மோகத்தால் கொலை, 
  • பொருளாதாரத்தை அடைய கொலை 
என அடுக்கி கொண்டே போகலாம்.  

பொதுவாக ஒரு உயிரை எடுப்பதற்கு எவருக்கும் அனுமதி இல்லை, அது நரகத்தில் சேர்க்கும் மாபெரும் பாவம் என்பது அனைத்து சமயமும் கூறும் ஒற்றை செய்தி ஆகும். 

தமிழர் சமயம் 


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும் - (குறள் 321) 
 
உரைநல்வினை யாதெனின், கொல்லாமை ; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால் (என்றவாறு) இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. - (குறள் 323)

 உரை: இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (குறள் 325)

உரை: மறுமை பிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசையெல்லாம் விட்ட நீத்தார்களுள் எல்லாம் கொலைத் தீமையினை அஞ்சிக் கொல்லாமையை ஏற்றவன் உயர்ந்தவனாவான்.

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (குறள் 329)

 உரை: உயிரை உடம்பிலிருந்து நிக்கியவர் (கொலைசெய்தவர்கள்) எனப்படுவர்கள் குற்றமுள்ள உடம்புடன் போகக்கூடா தீயுடன் வாழ்க்கை வாழ்வார்கள்.

இஸ்லாம்  

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி-6533)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், “பொய் கூறுவதும்‘ அல்லது “பொய்ச் சாட்சியம் சொல்வதும்‘ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும். அறிவிப்பவர் அனஸ் (ரலி), (நூல்: புகாரி-6871)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகின்ற போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும், அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி-6809)

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (திருக்குர்ஆன்:25:68.)

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ ) அன்றி , மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் ' ' என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் . மேலும் , நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் ; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 5:32
 

கிறிஸ்தவம் & யூதம் 


“எவனாவது ஒரு கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை உண்டு. (லேவியராகமம் 24:17)

‘யாரையும் கொலை செய்யாதிருக்க வேண்டும்(உபாகமம் 5:17)

 “கொலை செய்யாதிருப்பாயாக” (யாத்திரகாமம் 20:13)

கொலைக்காரர்கள் நேர்மையானவர்களை எப்பொழுதும் வெறுக்கின்றனர். அவர்கள் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் கொலைசெய்யப் பார்க்கிறார்கள் (நீதிமொழிகள் 29:10)

இயேசு அவனிடம்,, “என்னை ஏன்நல்லவர் என்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார். “எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன். அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” என்று பதில் சொன்னார். (மத்தேயு 19:17-19) 
 

யாருக்கு கொலை செய்ய அனுமதி உண்டு? 


கொலையைப் பொறுத்தவரை அடிப்படையில் மூன்று வகைப்படும்.
  • தனிமனிதன் செய்யும் கொலை, 
  • அரசு செய்யும் கொலை, 
  • யுத்தத்தில் செய்யப்படும் கொலை 
என்று வகைப்படுத்தலாம். தனிமனிதனாக கொலை செய்ய எந்த சமயமும் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் அரசின் உதவியோடு தான் அடைந்த அநியாயத்திற்க்காக நியாயம் பெரும் நோக்கில் அரசின் வழிமுறைக்கு ஏற்ப செய்யலாம். அல்லது ஒருவர் செய்த கொலை தண்டனைக்கு உரிய குற்றம் நிரூபிக்கப் படும் பட்சத்தித்தில் அரசு கொலை செய்யலாம். யுத்தத்தில் நிகழும் கொலை தொடர்பாக "யுத்தம்" என்கிற தனி தலைப்பில் பார்க்கலாம்.  
 

தமிழர் சமயம் 


நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. (குறள் 328)

உரை: நல்லதாக மாறும் பெரிய காரியம் ஆகும் என்றாலும் சான்றோர்களுக்கு கொன்றுதான் ஆகவேண்டும் என்பது வேறு வழியில்லாமல் செய்யப்படும் இறுதி செயலே

எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அனைத்து அறமும் பின்பற்றப்பட்டு ஒரு உயிர் எடுக்கப்படுவதை மேற்கண்ட குறள் அனுமதிக்கிறது. 

இஸ்லாம்  


(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால் , அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதில் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்குர்ஆன் : 17:33)

அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:179)

கிறிஸ்தவம் & யூத மதம்


12 “ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும்."
 
14 ஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.

15 “தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

16 “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

17 “தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

18 “இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்கவில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது. 
 
19 தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்." 
 
23 ..ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும். 
 
24 கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும், 
 
25 சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும். (யாத்திராகமம் 21) 

முடிவுரை 

கொலைக்கு கொலை அனுமதிக்கப்பட்டு இருந்தும், மன்னிப்போரை இறைவன் நேசிக்கிறான். 

கிறிஸ்தவம் 

மத்தேயு 5 பழிவாங்குதல் பற்றிய போதனை

38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

அனைவரையும் நேசியுங்கள்

43 ,“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும். 
 

இஸ்லாம் 


ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் ( கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப் படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு ( உங்களில் ) யார் வரம்பு மீறுகிறாரோ , அவருக்குக் கடுமையான வேதனையுண்டு . (அல்குர்ஆன் : 2:178) 

அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள், கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள், மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள், அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (குர்ஆன் 3:134)