குறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாம் ஏன் அடுத்தவர்களை குறை கூறுகிறோம்? காரணமென்ன?

 நாம் நம்மை குறையற்றவர்களாக கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று பலநேரங்களில் நாமே உணர்கிறோம்.

மனிதர்கள் எல்லோரும் பாவம் (அ) தவறு செய்பவர்கள் தான் என்று உணர வேண்டும்.

யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். - யோவான் 8:7

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்,பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6274)

அதை உணர்ந்தால் மற்றவரை குறைகூறுவது குறைந்துவிடும்.

நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மேலும் குறை கூறினால் நமக்கு என்ன நடக்கும்?

குறை கூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்'' குர்ஆன் (104:1)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும் - 
குறள் 186

விளக்கம்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்

குறையை மறைத்தல்

தமிழர் சமயம் 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். (குறள் 980)

பொருள்: பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

இஸ்லாம்  

''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்

 நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். (பிறரின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் (49:12))

கிறிஸ்தவம் 

நீயும் இன்னொருவனும் ஒத்துப்போகாவிட்டால் இனி என்ன செய்யலாம் என்பதை உங்களுக்குள் பேசி முடிவுசெய். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே. நீ அவ்வாறு செய்தால், பிறகு அவமானப்படுவாய். அதற்குப் பிறகு உன் அவப்பெயர் எப்போதும் நீங்காது. (நீதிமொழிகள் 25:9-10)

கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும். ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள். எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும். (சங்கீதம் 5:8)