- இஸ்லாமும் கிறித்தவமும் புனிதர்களால் ஏற்படுத்தப் பட்டதென்றும் அவர்களின் பாரம்பரியமும் வரலாறும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு தெரியும், ஆனால் இந்துமதம் ஆங்கிலேயர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.
- கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியும். இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரிந்தவர் எத்தனை பேர்?
- இந்துக்களுக்கு சம்ஸ்கிருத வேதம் பற்றி அந்த மொழி பற்றி எந்த அறிவும் இல்லை. எனவே அரைகுறை சமஸ்கிருத்தைல் யாரேனும் பேசினால் ஆ-வென்று பார்த்து அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணுகிறார்கள். மொழி அறிவின், தத்துவ அறிவின் ஆழம் அறியாததால் இந்த நிலை. "வேதம் ஓதி வீடு பெற்றார்" என்று தமிழர்களுக்கு சொல்கிறது திருமந்திர வேதம்.தமிழர் வேதத்தை ஓதும் சைவர் அல்லது தமிழர்கள் யார்?
- இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அவர்களுக்கு ஓர் பிரச்சனை என்றதும் அவர்கள் அவர்களது வேதத்தில் தீர்வை தேடுகிறார்கள், கிடைப்பதாக நம்புகிறார்கள். தம் வேதத்தை வாசிக்க கூட தெரியாத இந்துக்களோ, வேதம் என்ன என்ற அக்கறை கூட இல்லாத தமிழர்களோ அவர்களின் பிரச்னைக்கு வேதத்திலே தீர்வு தேடுவது சாத்தியமில்லை.
- வேதம் கடவுளால் வழங்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள், கடவுள் மீதுள்ள பற்றே அவர்களின் வேதத்தின் மீதும், அவர்களின் சமயத்தின் மீதும், அந்தந்த மக்களின் மீதும் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியாமல், தெரிந்தால் வாசிக்க முடியாமல், வாசிக்க முடிந்தால் பின்பற்றாமலும் பிறருக்கு சொல்லாமலும் வாழும் பொழுது சமய பற்றை எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
- இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ வேதத்தில் இந்துக்கள் கூட படித்து குறை சொல்லும் அளவுக்கு வேதங்கள் எல்லோரையும் அடையும் வண்ணம் பொதுமை படுத்தி உள்ளனர். ஆனால் இந்துக்கள் அல்லது தமிழர் வேதத்தில் ஒரு குறை சொன்னால், அது பொய்யான நூல் அல்லது பொய்யான விளக்க உரை என்று சொல்லி தப்பித்து கொள்ளும் அளவுக்கு எந்த நூல் சரி அல்லது பிழை, எந்த விளக்கம் சரி அல்லது பிழை என்று எல்லோரும் அறியும் படி அல்லது எல்லோரும் ஏற்கும் படி ஓன்று இல்லை!
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நம்பும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் உலக வேதங்களில் உள்ள ஒற்றுமையை பட்டியலிடும் பொழுது பல்வேறு மதங்களை இனங்களை உள்வாங்கிய இந்துமதம் அவற்றுக்கு இடையேயான வேத ஒற்றுமைகளை பண்பாட்டு ஒற்றுமைகளை வெளிப்படுத்தவும் மற்ற வேதங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரிக்கவும் தயாராக இல்லாத நிலையே இந்து மதப்பற்று இல்லாமைக்கான காரணம்.
"கல்வி, கல்வி" என்று அனைத்து சமைய அறநூல்கள் கதறுவது வேத கல்வியையே..! ஒரு சிலருக்கு மருத்துவ கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு பொறியியல் கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு கணக்கியல் கல்வி கிடைக்கலாம் ஆனால் அனைவருக்கும் வீடுபேரு அடையும் வழிக்கான கல்வி அவசியம். அவரவர் வேத அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவோம். நிச்சயமாக உண்மை வேத அறிவு மதங்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தவிடு பொடியாகும்.