தமிழ் ஹிந்து வலையில் ஒரு கட்டுரையினை படிக்க நேர்ந்தது தலைப்பு : "இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்" என்று... கட்டுரையினை தொடந்து வாசிக்க ஆரம்பித்தேன், அதில் கருத்துககளை பதிவிடும் வசதி எனக்கு இருக்கவில்லை மேலும் அதில் பின்னூட்டம் அளித்து இருந்தவர்களில் எந்த ஒரு இஸ்லாமியாரின் பெயரும் இருக்கவில்லை எனவே பதில் அளித்தாலும் நீக்கிவிட வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி இங்கே எழுதுகிறேன்..
அவரது பதிவு ஜாகிர் நாயக் அவர்களின் ஒவ்வொரு கருத்திற்கும் எதிராக பதில் அளிக்கும் விதமாக இருந்தது..
இதுவே அவரது பதிவு : http://www.tamilhindu.net/
"ஏமாற்று வேலை" என்ற வார்த்தை இருந்ததால் பதிவிடும் அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றியது..
எழுதியவரே குறிப்பிட்டு உள்ளார் இதனை உலகுக்கு ஆராய்ந்து சொன்னவர் ஒரு வாங்கள பிராமணர் என்று, குறைந்த பட்சம் அவர் வாங்கள பிராமணரின் "கல்கியா? முகம்மததுவா?" என்ற நூலை படித்த பிறகு பதிவு இட்டு இருந்தால், நேரடியாக இஸ்லாமியர்களை குற்றம் சொல்லும் முன், அவர் உண்மையை அறிய ஆவல் உள்ளவர் என ஏற்று கொள்ளலாம்.. ஆனால் அவரது பதில் அனைத்தும் ஜாகீர் அவர்களின் உரைக்கு மட்டுமே இருந்தது... இதிலிருந்து அவர் ஒரு விஷயத்தைன் உண்மை தன்மையை அறிய ஆவல் உள்ளவர் போல் தெரியவில்லை..
ஏனெனில் உரை நிகழ்த்துபவர் பல-100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அப்படியே மேடையில் பேசுவது என்பது இயலாத காரியம் எனவே ஒருசில அவசியமானவைகளை மட்டுமே மேடையில் பேசுவார்.. எனவே அவர் சொல்லும் மூல நூலை வாசிக்காமல் ஜாகீர் அவர்களின் உரைக்கு மட்டும் பதில் அளிப்பது என்பது, வீண் விவாதமாகவே முடியும் எந்த பயனும் இருக்காது.எனவே அந்த புத்தகத்தை படிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம், அதன் link-ஐ பின்னே இணைத்துள்ளேன், ஆங்கிலம் படிக்க தெரிந்தால் படிக்கட்டும்.
ஆம் அவர் ஒரு வங்காள பிராமணர் மேலும் அவர் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றவர் மேலும் அவர் மதங்களை ஒப்பு நோக்கி வேதங்களை ஆய்வு செய்யும் அறிஞர்... அவர் ஆராய்ந்து ஒப்பிட்டு உலகுக்கு சொல்லுகிறார் முகம்மது நபி அவர்கள்தான் கல்கி என்று, இதை எந்த இஸ்லாமிய அறிஞனும் கண்டுபிடித்து சொல்லவில்லை.... இதனை வெகுவான மக்களிடம் கொண்டு சேர்த்தது மட்டும்தான் ஜாகீர் நாயக் அவர்களின் வேலை.
பண்டிட் வேதிக் பிரகாஷ் உப்பாதேயா இதுதான் அவர் பெயர்.. அவர் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இங்கே கீழே..
English version :
2) http://www.scribd.com/doc/38885420/
KALKI-AVTAR-in-English
Hindi version :
1) http://www.scribd.com/doc/46775221/
Kalki-Avtar-Aur-Muhammad
Urdu version :
1) http://www.scribd.com/doc/17190132/
Kalki-Avtar-Aor-Muhammad-S-URDU
Tamil version:
இந்த புத்தகம் வெளி வந்த ஆண்டு 1970-இல், உண்மையில் இதனை பிரபல படுத்தி இருக்க வேண்டியது இந்துக்கள்தான் ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு அவதாரம் ஏற்கனவே அவதரித்து அவரது போதனைகள் உலகில் பரவ ஆரம்பித்த நிலையில் அதனை ஏற்பதுதான் உங்களது வேதங்களை நீங்கள் முறையாக பின்பற்றுவதாக பொருள். இல்லயேல் பிழை உங்களிடமே.. வேதம் என்றால் என்ன? உபநிஷம் என்றால் என்ன? புராணம் என்றால் என்ன? என்று இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் பெரும்பாலான சகோதரர்களுக்கு தெரியவில்லை.. குரான் வசனம் தெரிந்த அளவுக்கு கூட அவர்களின் வேத வரிகள் அவர்களுக்கு தெரிவதில்லை.. பாவம் அது அவர்கள் குற்றமும் இல்லை.. 110 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் 1.3 சதவீதமே இருந்துகொண்டு 60-70% அரசு மற்றும் அரசியலில் உயர் பதவிகளில் இருந்து மறைமுகமாக இந்தியாவை ஆளும் வர்கத்தினர் செய்த தந்திரம், புத்தியாலும், கீழுள்ளவனை மூளைச்சலவை செய்து கத்தியை தூக்கவைத்து அதன் மூலமாகவும் பிரிவினைகளை தூண்டிவிடும் பாப்பனனின் கை பொம்மைகள் இவர்கள். வேதங்கள் கடவுளின் வார்த்தை அது அனைத்து மக்களுக்கும் பொதுவானது, ஆனால் நீ சூத்திரன், என்னையோ வேதத்தையோ தொட்டால் தீட்டு என்று கூறும் அவர்கள் இவர்களின் பார்வாயில் "சாமி". கொடுமை..
சரி அவரது வாதங்களையும் அவருக்கான பதிலயும் இங்கே எழுதுவோம்..
அவரது கேள்விகள்.
1)
விஷ்ணு என்றால் அல்லாஹ் என குரானில் எந்த வசனத்தில் இருக்கிறது?
பதில் :
நீங்கள் கேட்பது, மில்க் என்றால் பால் என்று எந்த ஆங்கில இலக்கான நூலில் உள்ளது என்பது போல் உள்ளது?
விஷ்ணு என்ற வார்த்தைக்கு வேதங்கள் என்ன வரையறை வைத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒன்றுக்கோ அல்லது ஒருவனுக்கோ பெயரிடும்பொழுது அதன் பண்புகளுக்கு ஏற்ப்பபெயர் இடுவது இயல்பு, மரபு.. எனவே விஷ்ணு மற்றும் அல்லாஹ் இரண்டின் வரையறைகளை நோக்குவதுதான் அறிவாளியின் செயல். விஷ்ணு என்பதற்கு வேதம் என்ன வரைவிலக்கணம் கொண்டுள்ளது என்பதை பாருங்கள், நீங்கள் கொண்ட இலக்கணதோடு அல்ல.. ஒப்பிட்டால் இரண்டிர்குமான வேற்றுமை பாலுக்கும் மில்க்-கிற்கும் என்ன வேற்றுமையோ அதுமட்டும்தான் அதாவது மொழிதான் வேற்றுமை, பொருள் அல்ல.
2)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரத்தில் குறிப்பிட்டு இருப்பது போல் நபியின் பிறப்பிடம் நீரினாள் சூழப்பட்ட அரபு பிரதேசம்.
தமிழ் ஹிந்து :
கல்கி நீரினாள் சூழப்பட்ட பகுதியில்தான் பிறப்பார்.. சரி அரேபியா மட்டும்தான் நீரினாள் சூழப்பட்ட பகுதியா? ஏன் மற்ற இடங்களிலோ இந்தியாவிலோ இல்லயா?
பதில் :
கல்கி அவதாரம் எங்கு பிறக்கவேண்டும் என்ற அதிகாரம் யார் கையில் உள்ளது? இறைவனுடய நாட்டம் அதுவாக இருந்தால் அதை தடுக்க உங்களால் முடியுமா?
3)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரத்தில் குறிப்பிட்டது போலவே முகமது அவர்களும் உயர் குலத்தில் பிறந்தார்..
தமிழ் ஹிந்து :
மதிப்பு மிகுந்த குலத்தில் பிறந்தவரெல்லாம் கல்கி ஆகிவிட முடியுமா?
பதில் :
முடியாது தான், ஆனால் இதேபோல குறிப்பிடப்பட்டுள்ள மற்ற முன்னறிவிப்புகளும் பொருந்தும் ஒருவர் கல்கி அவதாரமாக தானே இருக்க வேண்டும். இது ஒன்று மட்டுமே ஒற்றுமை என்றால் உங்கள் கேள்வி சரி ஆனால் மற்ற ஒற்றுமைகளை அறிய நீங்கள் படிக்க வேண்டியது பண்டிதர் வெடிக் பிரகாஷ் எழுதிய புத்தகத்தை அதுவும் முழுமயாக. ஜாகிர் நாயக்-இன் உரை ஒரு முன்னுரை மட்டுமே.
மேலும் அவர் கேட்கும் அடுத்தடுத்த குதிரை மற்றும் வாள் போன்ற கேள்விகளுக்கு பிரகாஷ் அவர்களின் புத்தகமே அவருக்கு பதில் கூறும்.
4)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரம் வாள் ஏந்தி எதிரிகளுடன் சண்டை இடுவார் என்பது கல்கி புராணத்தில் சொல்லப்பட்ட தீர்க தரிசனம், மேலும் வாள் ஏந்தி சண்டையிடும் முறை வழக்கொழிந்து போய்விட்டது, எனவே அவர் ஏற்கனவே வந்து இருக்கவேண்டும், இனி வரப்போவது இல்லை.
தமிழ் ஹிந்து :
ஆகா என்ன கண்டுபிடிப்பு, பல காரணங்களுக்காக 3ம் உலகப்போர் வெகு விரைவில் ஏழபோகிறது எனவே அதன் காரணமாக பீரங்கி துப்பாக்கிகள் எல்லாம் அழிந்து போகும் பின்பு வில்லும் அம்பும்தான்
பதில் :
உங்களின் அதிசிறந்த கற்பனை திறன் நம்மை திகைக்க செய்கிறது ஹாலீவுட்ல் உங்களை போன்ற ஆட்களுக்கு வரவேற்ப்பு அதிகம்..
5)
தமிழ் ஹிந்து :
ஏன் முகலாயர்கள் இந்த உண்மையை வெளிகொண்டு வரவில்லை? அப்பொழுது இருந்த இஸ்லாமிய அறிங்கர்கள் ஏன் இதை செய்யவில்லை?
பதில் :
அருமயான கேள்வி.. கல்கி புராணம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது, எனவே அதனை ஆராய்ந்து சொல்லும் கடைமையும் பொறுப்பும் சமஸ்கிருத மொழியில் வேத புராணங்களை கொண்ட உங்களுக்குத்தான் உள்ளது.. இப்பொழுது நாங்கள் கேட்கிறோம் இதை கண்டு பிடித்து சொல்ல உங்களுக்கு 1200 வருசமா? சரி தாமதம்தான் செய்துவிட்டேர்கள் பரவாயில்லை, உங்கள் பண்டிதர் ஆராய்ந்து விளக்கியபிறகாவது ஒத்துக்கொண்டீர்களா? ஏறக்குறைய 30 வருசத்திற்கு மேல்தான் எங்கள் அறிவிற்க்கு வந்தது, இதனை உலகறிய செய்தால் இஸ்லாமியர்கள் ஏமாற்று வேலை செய்கிறோம் என்கிறீர்கள்..
6)
தமிழ் ஹிந்து :
முகம்மது நபி அவர்களை முன்பே சொன்ன ஹிந்து மதத்தை ஏன் பின்பற்ற கூடாது?
பதில் :
மிக மிக அருமயான கேள்வி.. அதற்கு முன் ஒரு சின்ன கேள்வி? நீங்கள் 4 வேதத்தில் எந்த வேதத்தை பின்பற்றுகின்றீர் அல்லது எந்த புராணத்தை பின்பற்றுகின்றீர், எதாவது ஒன்றை சொன்னால் மற்றவைகளை புறக்கணிக்கின்றீர் ஏனெனில் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துககளை கொண்டது .. நீங்களே உங்கள் மதத்தை புறக்கணிக்கும்போது நாம் ஏன் செய்யக்கூடாது.. அனைத்தயுமே பின்பற்றுகின்றேன் என்று சொல்வீர்கலான ரிக் வேதத்தில் அக்னி தான் பெரிய கடவுள் யாஜுர்-இல் ஈஷ்வரன் தான் பெரியகாடவுள், அடுத்த இரண்டில் விஷ்ணு தான் பெரிய கடவுள்.. இதில் எது உண்மை..? ஒவ்வொரு புரணமும் அந்தந்த கடவுளைதான் பெரிய கடவுள் என்கிறது.. ஐதாரேய உபநிஷத்தை எடுத்து படியுங்கள், அது படைப்பு பற்றி பேசுகிறது.. கடவுள் முதன் முதலில் பிரம்மனை படைத்தார் என்கிறது, யார் அந்த கடவுள்? பதில் எங்களிடம் உள்ளது.. அவன் ஒரே இறைவன், வணங்க தகுதி உடையவன்.. மற்ற அனைத்தும் படைக்க பட்டவைகள்.. ஆனால் பிரம்மனையே கடவுள் எங்குறீர்கள்.
யார் அசம்பூதியை (இயற்கை/படைக்க பட்டவைகள் ) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - அதர்வவேதம் 40 : 09
அவனது வேத உபதேசங்கள் அதன் சாரத்தை விட்டு மக்களால் மருவும்போதும் மாறும்போதும் அவன் அடுத்த தவறுகள் திருத்தப்பட்ட வேதத்தை மக்களுக்கு ரிஷிகள் மூலம் அனுப்புகிறார்.
புதுமயான கருத்தாக இருக்கிறதா? ரிக் வேதம் 10 பகுதிகளை கொண்டது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரிஷிகளால் பெரும் கால இடைவெளிகளில் எழுதப்பட்டது என்பது பதிவு செய்யப்பட்ட உண்மை. இதேதான் மற்ற அனைத்து வேதங்களுக்கும் பொருந்தும் . மேலே குறிக்கப்பட்ட இஸ்லாத்தின் கருத்து சரியென்றால் தான் இந்த உண்மை சாத்தியம்
முகம்மது நபி அவர்கள் ஒரு குரு/ஆசிரியர் என்று கல்கி புராணம் சொல்லுகிறது, என்றால் அவர் போதனைகளை பின்பற்றவா இல்லை நீர் சொல்லுவதாயா? அல்லது ஒன்றுக்கொன்று முரணான ஹிந்து மாத்தையா?
எந்த மதத்தையும் இழிவு படுத்த விரும்பவில்லை என்ற வார்த்தையை பயன் படுத்தியதற்கு நன்றி.. ஆனால் பொய்யான பரப்புரை மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துவத விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. இது பொய் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்? வேத புராணங்களையும், குர்ஆன் ஹதீசையும் அதன் மூல மொழியில் படித்து இவைகளை பற்றிய தீர்காமான அறிவு கொணாடவரா நீங்கள்? இல்லை இந்திய மற்றும் இஸ்லாமிய மதங்களின் வரலாற்றை முழுவதும் அறிந்தவரா? நீங்கள் வலைத்தளங்களில் இது சம்பந்தமான பதிவுகளுக்கு பதில் விரைவில் அளிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. நல்லது, அதற்குமுன் இஸ்லாமை பற்றி தீர்காமாக படித்து கொள்ளுங்கள், ஏனென்றால் ஹிந்து மதத்தினரை போல் நாம் ஏன் எதற்காக இந்த மதத்தில் இருக்கிறோம் என்று உள்ளவர்கள் இங்கு குறைவு...
மேலும் வேறொரு பதிவில் முகம்மது அவர்களின் பெயர் பாவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் - http://www.tamilhindu.net/
முகம்மது அவர்களின் பெயர் பாவிஷ்ய புராணத்தில் குறிப்பிட பட்டு உள்ளது என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒத்துக்கொண்டு உள்ளார், அவரை போன்ற ஹிந்து மத அறிஞர் சொல்லுவதை கேட்கவா? இல்லை நீர் சொல்லுவதை உண்மை என்று நம்பவா? https://www.youtube.com/
“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் இறைவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். - 3:64
மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)
உங்களுக்கு நான் உபதேசம் செய்ய நாடினாலும்! அல்லாஹ்! உங்களை வழிகெடுக்க நாடியிருந்தால் என் உபதேசம் உங்களுக்கு பலனளிக்காது! அல்லாஹ் பக்கமே! நீங்கள் மீட்டப்படுவீர்கள்! -ஹூது 11:34
அஸ்லலாமு அழைக்கும்.
குறிப்பு : தமிழ்ஹிந்து இணயததளம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவாவை பரப்பும் ஒரு இணயதளம் என்பதை இந்த கட்டுரை எழுதிய சில மதங்களுக்கு பிறகே தெரிந்து கொண்டேன்.. இந்த இணயததாளத்தின் குறிப்பிடத்தக்க வேண்டிய சில செயல்பாடுகளாவது,
1) இஸ்லாமியர்களையும், அவர்களது வரலாறு, வேதம், மற்றும் கலாச்சாரத்தை கடுமையாக சாடிஇருக்கின்ற நிலையில், அவர்களுக்கு பதில் கூறும் வகையில் இஸ்லாமியர்கள் கருத்து எழுத அனுமதிக்க படுவதில்லை. ஒரு இஸ்லாமியாரின் பின்னோட்டத்தையும் காண முடியவில்லை. இவர்களின் சிந்தனை போக்கு இதன் மூலம் அறியப்படுகிறது.2) ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவா-க்களின் செயல்பாடுகளை வரலாறு அறியாதவர் நம்பிவிடும் அளவுக்கு ஞாயபடுத்தி எழுதப்பட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். & ஹிந்துதுவா என்பது என்ன? அதன் வரலாற்று பின்னணி என்ன? என்பதெல்லாம் நான் பேசிய எனது பெரும்பாலான நண்பர்களுக்குத் தெரியவில்லை, எனவே அவர்கள் யேமாறுவது சுலபமே..3) குருஜி கோல்வால்கேர்-ஐ ஏகத்துக்கும் புகழ்கிறது, அவ்வளவு தகுதி உடையவர் என்றால் ஏன் தேர்தலின் பொழுது அவரது பெயரையோ கொள்காயையோ முன்னிறுத்தவில்லை?4) அவர்களின் இணயத்தளத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் "தமிழரின் தாய்மதம் ஹிந்து மதம்"! தமிழ் தோன்றிய காலமே ஒரு குத்துமதிப்பகத்தான் கணிக்கப்பட்டு உள்ளது, ஆனால் சைவம் தமிழ்நாட்டில் வந்தது 1200 ஆண்டுகள் முன்புதான், சைவ வரலாறு சொல்லும் உண்மை இது, 1250 ஆண்டுகளுக்கு முந்தய சிவன் கோவில் ஒன்றை தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் எவராலும் காட்ட முடியாது. அப்படி இருக்க ஹிந்து எப்படி தமிழரின் தாய் மதமானது?5) அனைத்து மதமும் சொல்லும் ஒரே கொள்கையை "படைத்தவனை மட்டும் வணங்குவது, அந்த இறைவன் மட்டுமே வணங்க தகுதி படைத்தவன்" அதில் திரிபு ஏற்படும் பொழுது மறுமலரிச்சியாய் வரும் போதனைகளை புதிய மதமாக பார்க்கும் கண்களில் தான் பழுது. என்மதம் பழமையானது அதுவே சிறந்தது என்று பெருமை அடிப்பது எனபது, இந்த வாள்தான் பரங்கியரின் தலயை கொய்த வாள் இதை வைத்தே நான் இன்று சீனர்களை யுத்தத்தில் வெல்லுவேன் என்பது போல் ஆகும்... வாளின் காரணம் யுத்தம், மதத்தின் காரணம் வாழ்க்கை நெறி, வாள் துருப்பிடிக்க, வேறுவரால் வேறொரு இடத்தில் அது மெருகேற்ற பட்டால் அது வேறு வாள் ஆகாது.. அதே போல் மதங்கள் மனிதனுக்கான போதனைகளுடன் ஒரே இறைவனிடமிருந்து வந்தது, அதை வேறொரு மொழி பேசுபவர் வேறொரு நாட்டிலிருந்து வருபவர் சீர்செய்தால் அது எப்படி வேறொரு மதமாகும்? துருப்பிடித்த வாளும் திரிந்துபோன மதமும் யாருக்கு என்ன பலன் தர முடியும்?
மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை