ஜக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?

 சிவன் என்றால் யார் என்ற கேள்விக்கு ஜக்கி அடிச்சுவிட்ட கதையை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி போல உள்ளது.

அவரது இணையத்தில் இந்த தலைப்பில் இவ்வாறு எழுதி உள்ளார்: சிவன் எங்கே பிறந்தார்? அவரின் தாய்-தந்தையர் யார் என்ற எந்த விவரமும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் கைலாசத்தில் இருப்பார் எனச் சொல்வதுண்டு. சிவனின் பூர்வீகம் பற்றி இந்த வீடியோவில் பேசும் சத்குரு, சிவன் இந்த உலகைச் சேர்ந்தவரில்லை எனச் சொல்கிறார். அப்படியென்றால் சிவன் வேற்றுலகத்தவரா?! உண்மையென்ன என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!  


இந்த காணொளியில் ஜக்கி சிவனை பற்றிய கூறும் செய்திகள்:

  • சிவன் ஆதியோகி,
  • அவன் சுயம்பு அதாவது அவனுக்கு தாய் தந்தை இல்லை,
  • அவன் சிறுவயதில் எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது,
  • வயதான பிறகு எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது,
  • இருந்திருந்தால் அவனது சமாதி இருந்து இருக்க வேண்டும்,
  • ஏதோ ஒரு நேரத்தில் வருவான், இடையிடையே காணாமல் போயிடுவான்,
  • ஒருமுறை வரும்பொழுது அழகாக இருப்பான், ஒருமுறை வரும்பொழுது அசிங்கமா இருப்பான்.
  • இப்படியெல்லாம் நம்ம "இது"ல சொல்லி இருக்குது.
  • அவன் கூட இருக்கவங்க எல்லோரும் விசித்திரமான இருப்பாங்க,
  • விசித்திரமான உடல் அமைப்பு கொண்டவர்,
  • கைலாசா என்று ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்ததாக சொல்லுவார்கள்,
  • அவருக்கு குழந்தை இல்லை என்றால் எந்தப்பெண்மணியும் அவனது விதையை கருவில் வைத்து இருக்க சக்தி பெறவில்லை
  • எனவே பார்வதிக்கு குழந்தை இல்லை
  • மேலும் சிவன் போனால் ஒரு 10, 12 வருஷம் வரமாட்டன், எங்கயோ போயிடுவான், எங்க போறான்னு யாருக்கும் தெரியாது
  • எனவே பார்வதி ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு கணபதியை உருவாக்கினார் (அந்த கதையை விரிவாக சொல்கிறார் - அதி வேறு தலைப்பு)
  • அவர் இந்த பூரியில் பிறந்தவர் இல்லை என்று தெரிகிறது, யக்ஷசொரூபா என்கிறார்கள் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது எங்கிருந்தோ வந்து இங்கு மனித வடிவை எடுத்துள்ளார், அவர்களுடன் வந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள்.
  • வேறு ஏதோ யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொள்கிறார் அவர்களுக்குள்.
  • அவர் இந்த கலாச்சாரத்தை சேர்ந்தவரல்ல
  • அவர் மனிதர் என்று நாம் சொல்ல முடியாது, ஏதோ ஒருவிதமான உயிர் இங்க வந்து மனித ரூபம் போட்டு கொள்கிறார்.

இவ்வாறு அவர் முடிக்கிறார். அறியாமையின் மொத்த ரூபமாய் ஜக்கி அவர்கள் காட்சி அளிக்கிறார். இவ்வளவு விளக்கம் கொடுக்கும் ஜக்கி தமிழிலோ சம்ஸ்கிருதத்திலோ பாண்டியத்துவம் பெற்றவரா என்று தேடினால் இல்லை என்றுதான் அவரே சொல்லி இருக்கிறார்.

அதை காண இங்கே சொடுக்கவும்.

எனவே அவர் தமிழ் வேதத்தின் மூலத்தை வாசிக்கும் வாய்ப்பு இல்லாதவர் என்பதால் இப்படிப்பட்ட தலைப்புகளை பற்றி பேசும் தகுதி அற்றவர் ஆகிறார்..

சரி அவர் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மையை அறிவோம் வாருங்கள். எப்படி ஆராய்வது? தமிழ் சைவ வேதத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில் திருமந்திரத்தை ஆய்வு சேய்வோம்.

அவர் சொன்னதில் சில கருத்துக்கள் பிழை இல்லை. அவையான,

  • அவன் சுயம்பு, அவனுக்கு தாய் தந்தை இல்லை.

ஆம் அவன் பிறப்பிலி என்பதை சைவ ஆகமங்கள் கூறுகிறது.

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25)

அவர் கூறிய மற்ற செய்திகளின் நிலை என்ன?
  • சிவன் ஆதியோகி,

முதலில் ஆதியோகி என்றால் என்ன?

ஆதி + யோகி = ஆதியோகி

ஆதி: ஆரம்ப / முதல் / தொடக்க

யோகி: முனிவன், சிந்திப்பவன், சந்நியாசி

அதாவது முதல் சந்நியாசி. அதாவது முதல் மனிதன் என்று கொள்ளலாம். ஆனால் சிவனின் வேத வரையறைகள் அவன் மனிதனல்ல என்கிறது, அதோடு இவரும் சிவனை மனிதனல்ல என்கிறார். எனவே சிவனை ஆதியோகி என்று அழைப்பது பொருத்தமல்ல.
  • அவன் சிறுவயதில் எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது, 
  • ஏதோ ஒரு நேரத்தில் வருவான், இடையிடையே காணாமல் போயிடுவான்,
  • ஒருமுறை வரும்பொழுது அழகாக இருப்பான், ஒருமுறை வரும்பொழுது அசிங்கமா இருப்பான்.
  • சிவன் விசித்திரமான உடல் அமைப்பு கொண்டவர்,
  • மேலும் சிவன் போனால் ஒரு 10, 12 வருஷம் வரமாட்டன், எங்கயோ போயிடுவான், எங்க போறான்னு யாருக்கும் தெரியாது
  • அவன் கூட இருக்கவங்க எல்லோரும் விசித்திரமான இருப்பாங்க,
முதலில் சிவனை பார்க்க முடியுமா? யாராவது பார்த்து உள்ளார்களா? சிவனை யாரும் காண்டத்தில் என்று திருமந்திரம் 55 பாடல் கூறுகிறது.

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் ,
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே. (திருமந்திரம் 55)

ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தைத் தந்தவன் ஈசன். அந்த இறைவனின் இயல்பினை, உடல் அங்கங்களைக் கொண்டு அறிந்து கொண்டவர் எவரும் இல்லை. இறைவனைத் தம்மிலும் வேறுபட்டவனாக எண்ணிக்கொண்டு தம் விருப்பங்களை பெருக்கித் துன்பம் அடைகின்றார்களே!
  • வயதான பிறகு எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது, இருந்திருந்தால் அவனது சமாதி இருந்து இருக்க வேண்டும்,
இறப்பில்லாதவனின் சமாதியை தேடுவது என்பது எப்படிப்பட்ட அறிவு?

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25)

  • கைலாசா என்று ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்ததாக சொல்லுவார்கள், அது இமயமலை அல்ல.

கைலாசம் என்கிற சொல்லை திருமந்திரம் உள்ளிட்ட ஆகமங்களில் காணகிடைக்கவில்லை, இருந்தால் அறிய விரும்புகிறோம்.

  • இப்படியெல்லாம் நம்ம "இது"ல சொல்லி இருக்குது.

எதுல சொல்லி இருக்கு? எது என்று தெளிவாக பொய்யுரைப்பவர்கள் கூற விரும்புவதில்லை.

  • அவருக்கு குழந்தை இல்லை என்றால் எந்தப் பெண்மணியும் அவனது விதையை கருவில் வைத்து இருக்க சக்தி பெறவில்லை
சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்கிற பொழுது உடலுறவின் மூலம் எப்படி குழந்தை பெறுவது சாத்தியம்?
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)
  • எனவே பார்வதிக்கு குழந்தை இல்லை
  • எனவே பார்வதி ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு கணபதியை உருவாக்கினார் (அந்த கதையை விரிவாக சொல்கிறார் - அதி வேறு தலைப்பு)
சிவன் என்பவன் சக்தி/பார்வதி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற திருமந்திர சொல்லை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரை: சத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி;

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம். .
  • அவர் இந்த பூமியில் பிறந்தவர் இல்லை என்று தெரிகிறது, யக்ஷசொரூபா என்கிறார்கள் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது எங்கிருந்தோ இங்கு வந்து மனித வடிவை எடுத்துள்ளார், அவர்களுடன் வந்தவர்கள் அப்படியே இருந்தார்கள்.
  • அவர் மனிதர் என்று நாம் சொல்ல முடியாது, ஏதோ ஒருவிதமான உயிர் இங்க வந்து மனித ரூபம் போட்டு கொள்கிறார். அவர் இந்த கலாச்சாரத்தை சேர்ந்தவரல்ல
இந்த கூற்றுக்களின் சாரம் என்னவென்றால் சிவன் மனிதனல்ல. அவன் வேற்றுகிரகவாசி என்பதாகும்.

அதற்கு

முதலில் ஏலியன் என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்று நாம் அறிந்து இருக்க வேண்டும்.

இரண்டாவது கடவுள் என்பதன் வரையறை என்னவென்று அறிந்து இருக்க வேண்டும்.

மூன்றாவது, இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கடவுள் என்பது வேறு கோளிலிருந்து வந்த உயிரினமோ அல்லது அயல் நாட்டை சார்ந்த மனிதரோ அல்ல. ஏன்?

  • இறைவன் எங்கே இருக்கிறான்? கடவுள் பூமிக்கு வருவது இல்லை, அவன் உயர்ந்த வானத்தில் இருக்கிறான்
  • கடவுளை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
  • ஏலியன்களுக்கும் ஏதோ ஒரு வகையான உணவும் சுவாசிக்க காற்றும் தேவை, தெய்வத்துக்கு அதுவெல்லாம் தேவை அல்ல.
  • ஏலியன்கள் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது, பிரபஞ்ச விதிகளை ஏற்படுத்திய இறைவன் அவர்களுக்கு அப்பாற்பட்டவன்.
  • ஏதோ யாருக்கும் புரியாத வேறு மொழியை பேசிக்கொள்கிறார்கள்.
யாருக்கும் புரியாத மொழியை பேசிய ஏலியன் ஏன் தமிழில் வேதம் தந்தது?
சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
*மிதா சனியாதிருந்தேன் நின்ற காலம்
இதா சனியாதிருந்தேன் மனம் நீங்கி
உதா சனியாது உடனே #உணர்ந்தோமால் (திருமந்திரம் 76. :4)

ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்! உணவையும் மறந்து சதாசிவ தத்துவம், முத்தமிழ் வேதம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய ஆராய்ச்சியால் மனம் தெளிந்து உண்மைப் பொருளை உணர்ந்திருந்தேன் என்கிறார் திருமூலர்.

81. பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. 9

தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்! தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் தனக்கு நல்ல ஞானத்தை அளித்ததுடன் இறைவன் தனக்கு பிறவியையும் கொடுத்து அருளினான் என்கிறார் திருமூலர்

87. அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. 15

உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்! இறைவன் உடல் சீராக இருக்கும் வண்ணம் உடலில் அங்கிக் குடரைச் சீராக வைக்கும் "சாடாராக்கினி"யை வைத்தான். ஏழுலகங்களும் சீராக இருக்கும் வண்ணம் "வடவாமுகாக்கினி"யை வைத்தான். எந்த குழப்பமும் இல்லாதிருக்க எல்லாப் பொருள்களையும் அடக்கி வைத்துள்ள திருமந்திரத்தை வைத்தான். உலகையும் உயிரையும் வாழவைக்க உதவுவது திருமந்திரம்.

99. மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1

திருமந்திரம் மூவாயிரம் பாடல்கள்! மூவாயிரம் திருமந்திரங்களையும் பொருளுணர்ந்து காலை எழுந்தவுடன் ஓதினால் சிவனை அடையலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – (திருவாசகம் 170)

இதை எல்லாம் எப்படி ஒரு ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும் என்று சிந்திப்பவர்கள் தமிழில் வேதம் உண்டா? என்று அறியவேண்டும்.

அல்லது ஜக்கியை ஒரு சித்தராக ரிஷியாக யாரேனும் கருதினால் பொய் குரு பற்றிய சதகுரு பற்றிய தகவலை அறிந்து இருக்க வேண்டும்.

மேலும் சிவன் அவனைப்பற்றி அவனே அவனது ஆகமத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

சிவனுக்கு ஒப்பான தெய்வம் இல்லை. - சிவன் ஒருவனே தெய்வம் அவன் மனிதனல்ல

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை-(திருமந்திரம் 5)

ஆதியும் அந்தமும்

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான் - பூமியில் அல்ல

ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)

இந்த எந்த தகுதியும் பண்பும் ஜக்கி கூறும் சிவனுக்கு கிடையாது. ஒருவேளை அவர் தமிழ் ஆகமங்கள் கூறாத ஒருவரை பற்றி பேசி இருந்தால் எமது விளக்கம் பிழை அல்லது அவர் முழுக்க முழுக்க பொய்யையே பரப்பிக்கொண்டு இருக்கரியார். தாமிர தெய்வம் சிவனை வியாபார பொருளாக மாற்றிவிட்டார் என்று பொருள்.

மேலும் வாசிக்க தமிழர் தெய்வம் - சிவன் யார்?