மதமாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதமாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கட்டாய மதமாற்றம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பொதுவாக இந்த குற்றச்சாட்டு இஸ்லாமிய கிறிஸ்தவ சமயங்கள் மீதுதான் அதிகமாக உள்ளது. ஆனால் அப்படி கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் சொல்கிறதா? என்று அவைகளின் மூல நூலை ஆய்வு செய்வோம்.

மதங்கள் கட்டாய மதமாற்றம் செய்ய சொல்கிறதா?

என் மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மரணம் என்று கிறிஸ்தவம் சொல்ல வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அது யூதர்களுக்கு வந்த மதம்.

உபதேசமும் உதவியும் யூதர் அல்லாதவர்களுக்கு செய்ய இயேசு மறுத்து உள்ள பொழுது கிறிஸ்தவம் அப்படி சொல்ல வாய்ப்பே இல்லை.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்!….24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார். மத்தேயு 15

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். மத்தேயு 10:5-6

இஸ்லாம் உலகம் முழுமைக்கும் வந்த சமயம் என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் மதம் மாற்ற முகமது நபிக்கே அனுமதி இல்லை.

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

எனவே கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் மற்றவரை கட்டாயப்படுத்துகிறது என்று கூறுவது உண்மை அல்ல.

இந்த மதங்களை சார்ந்தவர்கள் மற்றவர்களை வேறுவகையில் மதம் மாற்றுகிறார்களா?

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மற்றவர்களுக்கு தனது மதத்தை எடுத்து கூறுகிறீர்களா என்று கேட்டால், ஆம் செய்கிறார்கள்! தான் சார்ந்த மதத்தை தத்துவத்தை பிறரிடம் எடுத்துரைப்பது தவறா? என்று கேட்டால் இல்லை என்பது தான் அனைத்து சமயங்களும் கூறும் உண்மை.

இது போல போதனை செய்து இந்து மதத்துக்கு மக்களை யாரும் மாற்றவில்லையா என்று கேட்டால் மாற்றுகிறார்கள் எனபதுதான் உண்மை. ஆதாரங்கள் இங்கே: இந்துக்களும் கிறிஸ்தவர்களைப் போன்று தன் மதத்தைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்!

ஆனால் கிறிஸ்தவ இஸ்லாமிய சமயத்தில் சாமானியர்கள் அல்லது சமய அறிஞர்கள் மக்களை கட்டாயப் படுத்துகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது. இன்று இவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் அரசியல் விளையாட்டுதானே தவிர வேறு இல்லை. போதனையின் மூலம் ஒருவர் விரும்பி ஏற்பதை தடை செய்ய "கட்டாய மத மாற்றம்" என்று திரித்து சொல்லப்படுகிறது. இதன் மூலம் சமய போதனைகளை தடை செய்வதே இவர்களின் நோக்கம்.

சரி, கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் வேலைகளை யாருமே செய்யவில்லையா? என்று கேட்டால் செய்தார்கள் என்பது உண்மை தான். அவர்கள் நிச்சயமாக பாசிசவாதிகள், தனது சொந்த சமயத்தின் கட்டுப்பாட்டை மீறிய தற்குறிகள். உதாரணமாக,

இஸ்லாத்தின் பெயரில்

  • சிரியாவில் ஆட்சியை பிடித்த ISIS இந்த வேலையை செய்தது (யாசிடி இனப்படுகொலை). ஆனால் இஸ்லாமிய சமூகம் ISIS-க்கு எதிராக பேசிய அளவு பொது சமூகம் கூட பேசி இருக்க வாய்ப்பு இல்லை.

கிறிஸ்தவத்தின் பெயரில்,

  • லோரெய்ன், லோயர் ரைன், பவேரியா மற்றும் போஹேமியா, மைன்ஸ் மற்றும் வார்ம்ஸில் சிலுவைப்போர்களால் யூதர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (ரைன்லேண்ட் படுகொலைகள், புழுக்கள் படுகொலை (1096) பார்க்கவும்).

இந்து மதத்தின் பெயரில்,

  • சைவ வைணவங்கள் எல்லாம் சனாதன மதத்துக்குள் உள் இழுக்கபப்ட்டு இந்து என்று பெயர் மாறி நிற்கிறது. இதுவும் ஒரு வகை கட்டாய மதமாற்றம் தான். எந்த சைவராவாது தான் இந்துவாக ஒப்புதல் அளித்தாரா? அல்லது அவரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதா? இவைகளுக்குள் நடந்த கருத்து மற்றும் கள யுத்தங்கள் தான் கடந்த 5000 ஆண்டுகால இந்திய நிலத்தின் வரலாறு ஆகும்.

நன்றாக கவனித்தால் கட்டாய மதமாற்றங்கள் எல்லாம் மதம் சார்ந்த அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. அது இந்தியாவிலும் இப்பொழுது நடைபெறுகிறது. ஆனால் வரலாறு இவைகளை பதிந்து வைத்துக்கொண்டே வருகிறது.

கட்டாய மதமாற்றத்தை எந்த சமயமும் அங்கீகரிக்கவில்லை. போதனை செய், விரும்பினால் ஏற்கட்டும் என்றுதான் சொல்கிறது. ஆனால் அதிகாரம் கிடைத்த மமதையில் எல்லா சமய அரசுகளும் தத்தம் சமய போதனைக்கு எதிராக கட்டாய மத மாற்றம் செய்ய துணிகிறார்கள். இதனால் அந்த அரசுக்கோ, அந்த நாட்டுக்கோ, அந்த சமயத்துக்கோ எந்த பிரயோசனமும் இல்லை, மாறாக அழிவுதான் நேரும் என்கிற அடிப்படை அறிவு அவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

அரேபிய பாலைவன காட்டு மிராண்டி ஆபிரஹாமிய மதங்களின் கோட்பாடுகள் படி இறைவன் மனிதர்களை படைப்பதற்கு முன் சாத்தானை படைத்தாரா அல்லது சாத்தானை படைத்த பின்பு மனிதனை படைத்தாரா? தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யூத மதம் இல்லாமல் போய் இருந்தால் ஏசுவும் முகமதுவும் ஹிந்து மத கதைகளை காப்பி அடித்து இருப்பார்களா?

இந்துக்கள் ஏன் தங்கள் மதத்தை பரப்பவில்லை?

மதமாற்ற தெரசா எப்படி மதர் தெரசா வாக மாற்றப்பட்டார்?

போலி சாமியார்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ன?

கடவுளை நம்பும் மனிதர்கள் ஏன் சாமியார்களை நம்புகிறார்கள்?

ராமாயணத்திலும் மகாபாரத்திலும் வரும் கடவுள்கள் பிறந்த நட்சத்திரங்கள் துல்லியமாக எப்படி கணிக்கப்பட்டன?

சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா?

சிவனைப் பற்றி பலர் அறியாததைப் பற்றி கூற முடியுமா?


ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues)

பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற

ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற