கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்நாடு கெடினும் நமர்கெடு வாரில்லைவீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்பாடது நந்தி பரிசறி வார்க்கே. (திருமந்திரம் 2852)
பொருள்: சீவனுக்கு கிடைத்த உடல் கெட்டுவிட்டால் மற்றொரு நல்ல உடலை வழங்குவதற்கு இறைவன் இருக்கின்றான். அதிக மழை அதிக வறட்சி நிலவும் நாட்டை விட்டு விட்டு வேறு நாடு சென்று பிழைப்பர் மனிதர்கள். குடியேறிய வீடு பழுது பட்டால் வேறு வீட்டுக்கு குடியேறுவது போல சீவன் ஓர் உடலை விட்டுவிட்டு வேறு ஓர் உடலை எடுத்துக் கொள்ளும். சிவஞானம் பெற்றவர்கள் இதனை நன்கு அறிந்து கொள்வார்கள்.
இஸ்லாம்
மனிதன் - (மடிந்தபின் உக்கிப்போன) அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகிறானா? அன்று! அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (குர்ஆன் 753-4)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும், கத்னா செய்யப்படாதவராகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “ நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்.” (குர்ஆன் 21:104)
இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கிறார்கள்: அப்படியல்ல! அவனது (உயிர்கொடுத்து எழுப்புவதான) வாக்கு மிக உறுதியானதாகும்; எனினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (குர்ஆன் 16:38)
கிறிஸ்தவம்
3 அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.
4 அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.
5 இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6 ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. 7 நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ 8 காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார். (யோவான் 3)