இது மிக ஆழமான ஒரு கேள்வி. இது கடவுளைப்பற்றி என்பதால், வேதங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
தமிழர் சமயம்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)
இந்த திருமந்திர பாடலின் முதல் வரி இறைவன் ஒருவனே அவன் தானே உருவானவன் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதன் உள்ளடக்கம் என்னவென்றால்
ஒன்று - அவனை போல வேறு எதுவும் இல்லை, உண்மையில் ஈடு இணை ஏதும் இல்லா ஒரே ஒருவன்
அவன் தானே - அவன் தானே ஆனவன், அவனுக்கு தாயோ தந்தையோ அலல்து இன்னொரு கடவுளோ, வேறொரு படைப்பாளனோ இல்லை
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லிதுளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றிவிளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே (திருமந்திரம் 2684)
பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)
இஸ்லாம்
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.- (குர்ஆன் 112:3&4)
அல்லாஹ் வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? (குர்ஆன் 35:3)
மக்கள் (இதைப் படைத்தவர் யார்? அதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் ‘அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, ‘அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்’ (ஆமன்து பில்லாஹ்) என்று சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 212)
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். - (திருக்குர்ஆன் 21:22)
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91)
கிறிஸ்தவம்
என்றென்றைக்கும் நீரே கடவுள் - (சங்கீதம் 90:2)ஏனென்றால், நான் என் கையை வானத்திற்கு உயர்த்தி, நான் என்றென்றும் வாழ்கிறேன் என்று சொல்கிறேன் - (உபாகமம் 32:40)மேலும், அவர் எல்லாவற்றுக்கும் முந்தியவர். - (கொலோசெயர் 1:17)
முடிவுரை
எப்பொழுதும் அழிவில்லா ஆற்றல் பிறந்த பிறப்பிடமாம் கடவுள், யாரும் படைக்கும் ஒன்றாக இருக்க வில்லை.