இஸ்லாம்
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
கிறிஸ்தவம்
"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." - (அப்போஸ்தலர் 17:26)
தமிழர் சமயம்
திருமந்திரம் - மனித இன மூலம்
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்திபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9. பாடல் 6)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)
பதவுரை: ஆதி - தொடக்க; பகவன் - ‘பகு’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும். பகுத்தவன் பகவன் எனப்பட்டான். எனவே தன்னுடம்பை பகுத்து/பிரித்து தன் துணைக்கு தந்த முதல் மனிதன் ஆதி பகவன் எனப்பட்டான். அவரிடமிருந்தே உலகில் உள்ள மக்கள் அனைவரும் தோன்றினார்.
மணக்குடவர் உரை: உலக மொழிகளில் உள்ள எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
இந்து மதம்
அவர் மகிழ்ச்சியாக இல்லை. எனவே மக்கள் (இன்னும்) தனியாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இல்லை. அவர் ஒரு துணையை விரும்பினார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கட்டித்தழுவுவது போல் அவர் பெரியவரானார். இந்த உடலையே இரண்டாகப் பிரித்தார். அதிலிருந்து கணவனும் மனைவியும் வந்தனர். எனவே, யாஜ்ஞவல்கியர் கூறினார், இது (உடல்) ஒரு பாதி, பிளவுபட்ட பட்டாணியின் இரண்டில் ஒன்று போன்றது. எனவே இந்த இடம் மனைவியால் நிரப்பப்படுகிறது. அவன் அவளுடன் ஐக்கியமானான். அதிலிருந்து மனிதர்கள் பிறந்தார்கள். (பிருஹதாரண்யக உபநிஷத் 1.4:3)