- இஸ்ரவேலரே கேள்! நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே (மாற்கு 12:29)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
கர்த்தரை கண்டவர் உண்டா?
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18)
கர்த்தருக்கு பிறப்பு இறப்பு உண்டா?
கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார். (சங்கீதம் 9:7)
கடவுளை கொலை செய்ய முடியுமா ?
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே! (எசக்கியேல் 28:9)
பூமியில் உள்ளவர்கள் இறைவனாவார்களா?
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா(இறைவன்) என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:9)
சிலைகள் இறைவனா?
அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள் (1 கொரி 10:7)
சரி இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று கூறுகிறார்?
என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். (மத்தேயு 10:40,41)
இந்த வசனம் இயேசு கிறிஸ்து அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கிறது. மேலும் அவர் போதகர் என்று அறியப்பட்டு இருந்தார்.
இயேசு இஸ்ரவேலருக்கு மட்டும் அனுப்பபட்டவர் !
அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். - மத்தேயு 15:24
இயேசு சீடர்களிடம் ,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். (மத்தேயு 10:5)
எதற்கு இயேசு உலகுக்கு அனுப்பபட்டார் ?
மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)
இயேசு தாமாகவே அனைத்தையும் செய்தாரா?
நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)
எனவே அவர் கர்த்தரும் இல்லை கர்த்தரின் மகனும் இல்லை என்று பொருள்.
வேத வசனங்களை மனிதர்கள் எழுதலாமா?
தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)
பைபிளில் மாற்றம் செய்ய மனிதருக்கு உரிமை உண்டா?
அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர்உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய் - (நீதிமொழிகள் 30:6)
எனில் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தைகள் மட்டுமே இறைவனின் வசனங்கள் மற்றவைகள் பவுல் என்பவரால் எழுத பட்டது : இறைவசனததோடு பவுல் சேர்த்த வார்த்தைகள் பொய் என்பது உறுதியாகிறது மேலும் அதில் இயேசு கிறிஸ்து அவர்களின் போதனைக்கு எதிரான வசனங்களும் உள்ளது? கர்த்தர் ரட்சிப்பானாக...
மேலுள்ள அனைத்து கொள்கைகளும் போதனைகளும் முகமுது நபி அவர்களாலும் போதிக்க பட்டுள்ளது. ஒவ்ருவொம் முஸ்லிமும் இயேசு கிறிஸ்து அவர்கள் மீது அன்பு கொள்வதும் அவரை நம்புவதும் கடைமை ஆகும்.
முகமது நபி அவர்கள் பற்றி மோசே மற்றும் இயேசு கிறிஸ்துவும் முன்னறிவிப்பு செய்து உள்ளனர். இயேசு கிறிஸ்து அவர்களை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் உண்மையில் கிருஸ்துவை நேசிப்பது உண்மையானால் அவர்கள் முகமுது நபி அவர்களை நம்புவதும் பின் பற்றுவதும் அவசியமாகிறது.
1. "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)
2. மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)
3. உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது,
4. உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது
கிறிஸ்து சத்தியத்தை போதித்தார் :
ஆனால் இன்றைய நடைமுறையில்
- கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாட படும் நாள் அவரின் உண்மை பிறந்த நாள் அல்ல என்பதை அனைவரும் அறிவர்.
- பைபிளில் சுவிசேசம் எழுதிய பலர் இயேசுவின் உண்மை சீடர்கள் இல்லை.
- பவுல் இயேசு அவர்களை நேரில் பார்க்காத பல வருடங்களுக்கு பின் வந்த மனிதர், தன்னை தானே இயேசுவின் சீடராக அறிவித்து கொண்ட யூதர்.
- இயேசு அவர்களின் போதனைக்கு எதிரான போதனைகளை பவுல் செய்கிறார்.
- கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் பைபிளில் எங்கும் இல்லை.
- இயேசு தன்னை கர்த்தர் என்றோ கர்த்தரின் நேரடி மகன் என்றோ தன் வாயால் சொன்னதே இல்லை.
- இயேசு ஒரே இறைவனை வணங்க சொல்லியும் சிலை வணக்கம் கூடாது என்றும் சொல்லி இருக்க நடப்பது அனைத்தும் அவருக்கு எதிரான செயல்களே..
- கிருஸ்தவர்கள் என்பவர்கள் இயேசு கிறிஸ்து போதித்ததை மட்டும் பின்பற்றுபவர்கள். தேவை என்கிற பட்சத்தில் சிகப்பு பைபிள் என்ற ஒரு பதிப்பில அவரது வார்த்தைகள் மட்டும் சிகப்பு நிறத்தில் அச்சிட பட்டு இருக்கும் அவைகளையும் திருக்குரானில் இயேசு கிறிஸ்து பற்றிய வாசகங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும்..
- பவுல் என்பவர் இயேசு கிறித்து அவர்களின் போதநீகு எதிராக செய்தவற்றின் சில எடுத்துக்காட்டுகள் கீழே..