இறைவனின் இருப்பிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவனின் இருப்பிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவனின் அரியணை

தமிழர் சமயம் 

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே - (8ம் தந்திரம் - 14. அறிவுதயம் 2356.)

அங்கே அடற்பெரும் தேவரெல்லாம் தொழச்
சிங்காதனத்தே சிவன் இருந்தானென்று
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்கு ஆர் குழலியும் போற்றி என்றாளே

கிறிஸ்தவம் 

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:4-5)

 இஸ்லாம் 

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 57:4)

இறைவன் எங்கே இருக்கிறான்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்பது மிக சிக்கலான கேள்வியாக சமகாலத்தில் உள்ளது. ஆனால் மறைநூல்களில் உதவியை நாடினால் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்த கருத்தாகும்.

சமகாலத்தில் இறைவனின் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டே சில பிரிவுகள் உள்ளது. அவையாவன,
  1. இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்  
  2. நல்லோர் உள்ளத்தில் இருக்கிறான் 
  3. இறைவன் மேலே இருக்கிறான், அவன் அங்கிருந்தே அனைத்தையும் கட்டுப் படுத்தும் ஆற்றல் உடையவன்.
வாருங்கள் எந்த கருத்து சரி என்று ஆராய்வோம்.

கடவுள் வானங்களுக்கு மேலுள்ளான்!


தமிழர் சமயம் 


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
ஏழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே - (திருமந்திரம் 01)

ஒன்றவன் தானே - அவன் ஒருவன், தானே இருப்பவன் (எவரும் அவனை உருவாக்கவும் படிக்கவும் பெற்றெடுக்கவும் இல்லை)

இரண்டவன் இன்னருள் - அறக்கருணை(நன்மை), மறக்கருணை(தீமை) அனைத்தும் அவனிடமிருந்தே

நின்றனன் மூன்றினுள் - ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார்

நான்குணர்ந் தான்- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக் காட்டுகிறது

ஐந்து வென்றனன்- மரணம், உறக்கம், சோர்வு, மறதி  மற்றும் பசி என்ற ஐந்தும் இல்லாதவன்.

ஆறு விரிந்தனன் - ஆறு நாட்களில் உலகம் அனைத்தையும் விரித்தான் (படைத்தான்)

ஏழும்பர்ச் சென்றனன் தான்- ஏழுலகங்கட்கும் மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும். (உம்பர்-வானம்)

இருந்தானுணர்ந் தெட்டே - உணர்வார்ல் அனைத்தையும் எட்டக்கூடியவனாய், அடையக்கூடியவனாய் இருந்தான்.

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று.வேண்டுறோம்.

இஸ்லாம்


நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் (ஏழு வானகளுக்கு அப்பால் உள்ள) அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் -(7:54)

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். - (2:29)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். - (அல்குர்ஆன் 2:255) 
 
ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? என்றும் கேட்பீராக. - (23:86)

"பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) 
 
நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி) 

கிறிஸ்தவம் 


.... “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்... - (1 இராஜாக்கள் 22:19)

தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். - (சங்கீதம் 20:6)

பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார். - (சங்கீதம் 103:19)


இந்துமதம்


அவனது கண்கள் மிக உயர்ந்த வானத்தில் இருந்து இந்த உலகை கட்டுப்படுத்துகிறது. - (ரிக் 129:7)

 

கடவுள் தனது ஞானத்தினால் எங்கும் நிறைந்து இருக்கிறான்!


இஸ்லாம் 

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 20:46)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 2:186) 

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (குர்ஆன் 57: 04) 

கிறிஸ்தவம் 

"கர்த்தர்தாமே உமக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பர்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்." - (உபாகமம் 31:8)

நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். (உபாகமம் 4:7)

தமிழர் சமயம்  

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்;
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடிஇருந் தானே. (திருமந்திரம் 579)

பொருள்: உந்திச்சுழிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கிறது "உள்ளம்" என்கிற மூலாதாரம். அதை நெறிப்படுத்தும் மந்திர சொல்லை அவர்கள் அறிவதில்லை. அறிந்தபின் கூவிக்கொண்டு வந்து அங்கே குடியிருப்பான் ஈசன்.   
 
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவு; ஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்; அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனுமாய், படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

பொருள்: ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய சிவன் அகத்துள் இருக்கிறான், அவன் உயிர் எடுக்கும் காலன் என்று கூறுவது பிழை.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் - (நல்வழி வெண்பா : 38)

விளக்கம்: நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது

உள்ளத்தில் குடியிருக்கும் இறைவன்

தமிழர் சமயம்  


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' - (திருமூலர் திருமந்திரம்

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

கிறிஸ்தவம்  

அல்லது உங்கள் உடல் உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீ உனக்கு சொந்தமில்லை - (1 கொரிந்தியர் 6:19

இஸ்லாம்   

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் அதிகாரத்தில் கூறினார்: அல்லாஹ் (வல்லவனும் உன்னதமானவனுமாக) கூறினான்: யார் எனக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒருவருக்கு விரோதம் காட்டுகிறாரோ, அவருடன் நான் போரில் ஈடுபடுவேன். என் அடியான் அவனுக்கு நான் விதித்துள்ள மார்க்கக் கடமைகளை விட எனக்குப் பிரியமான எதையும் என்னிடம் நெருங்குவதில்லை, மேலும் நான் அவனை நேசிப்பதற்காக என் அடியேன் மிகையான செயல்களால் என்னிடம் நெருங்கி வருகிறான். நான் அவரை நேசிக்கும்போது, ​​அவர் கேட்கும் செவிப்புலன், அவர் பார்க்கும் பார்வை, அடிக்கும் கை, அவர் நடக்கிற கால். அவன் என்னிடம் [ஏதாவது] கேட்டால், நான் அதை அவனுக்கு நிச்சயமாகக் கொடுப்பேன், அவன் என்னிடம் அடைக்கலம் கேட்டால், நான் அவனுக்கு நிச்சயமாக அதை வழங்குவேன். என் உண்மையுள்ள அடியானின் ஆன்மாவைப் பற்றி நான் தயங்குவது போல் எதற்கும் நான் தயங்குவதில்லை: அவன் மரணத்தை வெறுக்கிறான், அவனை காயப்படுத்துவதை நான் வெறுக்கிறேன். (ஹதீஸ் 25, 40 ஹதீஸ் குத்ஸி)

இதன் பொருளும் அவன் தனது ஞானத்தால் நிறைந்திருக்கிறான் எனபதாகும்.  

முடிவுரை 

இறைவனின் இருப்பிடம் ஏழாவது வானத்திற்கு மேல், அனைத்து உலகங்களுக்கும் அப்பால் உள்ளது என்பதும், அவன் ஞானத்தினால் ஒவ்வொன்றையும் பார்க்கிறான் சூழ்ந்தது இருக்கிறான் என்பதும் நான்மறைகளின் கூற்று.

  • ஏழு வானங்கள் உண்டு என்பது அனைத்து சமய வேதங்களும் ஏற்கும் உண்மை.
  • இறைவன் இருப்பிடம் அவை அனைத்திற்கும் மேலுள்ளது என்பதையும் அவைகள் ஏற்கின்றன.
  • இறைவனின் பார்வையும் ஞானமும் நுணுக்கமாக ஒவ்வொரு பொருளின் மீதும் எப்பொழுதும் பதிகிறது என்று அனைத்து மறைநூல்களும் சாட்சி கூறுகிறது.

இதற்கு முரணான கடவுள் கொள்கை அனைத்தும் பிழையானது. அவற்றில் சில,

    • கடவுள் (தனது உருவுடன்) எங்கும் நிறைந்தவன் 
    • கடவுள் மனிதனாக அவதரிப்பான் 
    • மனிதன் சில நல்ல குணங்களால் தெய்வமாக முடியும் 
    • தாயும் தந்தையும் தெய்வம் 
    • இயற்கைதான் தெய்வம் 
    • இறந்தவர்கள் தெய்வமாகி விடுவார்

ஏனென்றால் இறைவனின் இருப்பிடம் தொடர்பான செய்தியில் இவை அனைத்தும் முற்றிலும் முரணானவை.