எழுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"எழுமை எழுபிறப்பும்" என்னும் குறளின் மூலமாக வள்ளுவர் ஏழு பிறப்பு உண்டு என்கிறாரா? ஆக மொத்தம் மனிதனுக்கு 8 பிறவியா?

பல பிறப்புகள் உண்டு என்கிற வாதமுமும் இம்மை மறுமை என இரண்டே பிறப்புகள் தான் உண்டு என்றும் பலர் பல விதமாக பிறப்பு தொடர்பான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம்.

இதில் வள்ளுவர் கூறும் எழுமை என்பது ஏழு பிறப்பை கூறுகிறது என்று பொழிப்புரையில் எழுதபட்டு இருப்பதை காணலாம். இந்த பொழிப்புரை வள்ளுவர் வாழ்ந்த ஆண்டிலிருந்து ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு பிறகு வட மொழி ஆதிக்கம் வந்த பிறகு எழுதப்பட்டது.

இந்த சொல்லை பயன்படுத்தும் குறளை மறுவாசிப்போம் வாருங்கள்.

எழுமை

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்

தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை:

ஒருமை - ஒரு பிறப்பு, தனிமை;

செயல் - செய்தல்;

ஆற்றும் - செய்யும்;

பேதை - அறிவிலி;

எழுமையும் - எழுபிறப்பும், நீண்ட காலத்தும்;

தான் - தான்;

புக்கு - புகுந்து;

அழுந்தும் - ஆழ்வதற்குக் காரணமாகிய;

அளறு - நரகம், நிரயம்.

மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் உலகிலும் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள். 

    • "எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
    • எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு நமது கண்முன் கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
    • முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
    • நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
    • கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை. இந்த நிலையாமை தத்துவத்தை தான் வள்ளுவரும் கூறுகிறார்.
    • நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
    • எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் மீண்டும் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கற்பனை கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள்.

எழுபிறப்பு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62)

உரை: எழுபிறப்பினுந் (மறுமையினுந்) துன்பங்கள் சாரா: பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின். 

  • ஏழு பிறவி இருப்பதை ஏற்றால் கூட மகனை பெற ஒருவர் குறைந்தது ஒரு பிறவி எடுக்க வேண்டும். எனவே மீதம் 6 பிறவி மட்டுமே இல்லாது, 7 அல்ல. எனவே இப்படல் ஏழு பிறவி கொள்கையை கூறவில்லை என்று ஏற்கலாம். 

எழுமை எழுபிறப்பு

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்

விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

குறிப்பு: இந்த இரண்டில் ஒன்று இறந்த பிறகு உள்ள அனைத்து நிலைகளையும் குறிக்கிறது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட நிலையை குறிக்கிறது.

எழுமை நிலைகள்: 1) இறந்த பிறகுக்கும் மீண்டும் எழுப்பப்படும் வாழ்வுக்கும் இடைபட்டது, 2) அடுத்து வினைகளை விசாரிக்கும் காலம், 3) சொர்கம் அல்லது நரகம் அடையும் காலம்.

இதில் எழுபிறப்பு இரண்டாவது நிலையை குறிக்கலாம்.  

இந்து மதத்தின் ஏழு பிறவி கொள்கை என்ன?

மேலே உள்ள பாடலில் 7 பிறவிகளை எடுத்து களைத்து விட்டதாக மாணிக்கவாசகர் சொல்கிறர். கல்லாய் எப்படி ஒரு உயிர் பிறக்க முடியும்?  

அதை இன்றைய பொழிப்புறையளர்கள் கீலுள்ளவாரு கூறுகிறார்கள். ஏழு முறை பிறவி என்று குறிப்பிட பட்டது ஏழு வகை பிறவி என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

ஆனால் புராணங்கள் கூறும் இந்த கருத்துக்கு தமிழ் மறைகளில் எந்த ஆதாரமும் இல்லை.

முடிவுரை

இந்த ஏழு பிறவி கொள்கை இந்து மதத்திற்கு தமிழில் இருந்துதான் சென்று உள்ளது என்றே தோன்றுகிறது ஏனென்றால் 7 பிறவி தொடர்பாக சம்ஸ்கிருத மொழியில் உள்ள நூல்களில் எந்த ஆதாரமும் இல்லை. இது தமிழர் சமயங்களில் உள்ள வார்த்தைகளுக்கு தவறான பொழிப்புரை தந்ததால் ஏற்பட்டது. எழு பிறப்பும் என்பது ஏழு பிறப்பு அல்ல.