இசுலாமியர்கள் தமிழ் படிக்காமல் அரபி ஏன் படிக்கின்றனர்?

கொள்கைதான் ஒரு மனிதனின் அடையாளம். அது சமயம் சார்ந்தோ அல்லது சமயம் சாரமலோ இருக்கலாம். ஏனென்றால் அதுதான் அவன் எப்படி பட்டவன்? அவன் என்ன செய்வான்? என்ன செய்ய மாட்டான்? என்று தீர்மானிக்கிறது. அவ்வாறு ஒருவன் செய்யும் செயலே சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறது.

ஆனால் ஒரு மனிதனுக்கு மொழியும் இனமும் அடையாளம் என்றும் சொல்லபப்டுகிறதே. அது எப்படி?

ஒருவனது மொழி எந்த அறத்தை அல்லது கொள்கையை சொல்கிறதோ, அதையே அவன் நம்புபவனாகவும் செயல்படுத்துபவனாகவும் இருப்பான். வேறு வார்த்தையில் சொல்வதென்றால் எந்த மொழியில் உள்ள வழிகாட்டுதல்கள் அவனுக்கு புரிகிறதோ எதை அவன் தொடர்ந்து கேட்டும் படித்தும் வருகிறானோ அதுதான் அந்த மனிதனின் அடையாளம்.

சரி இந்த விளக்கத்துக்கும் கேள்விக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு உண்டு.

தமிழன் என்று தன்னை கருதுபவன் தமிழ் கூறும் அறங்களை கொண்டு தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அது இன்று நடைமுறையில் உள்ளதா என்று சிந்தித்து பார்த்தல் இல்லை என்ற பதில் தான் நமக்கு கிடைக்கும்.

உதாரணமாக, எந்த ஒரு தமிழ் ஆட்சியாளரும் குறள் அல்லது திருமந்திரம் கூறும் அரசியல் அறங்களை பின்பற்றுகிறார்களா? குறைந்தபட்சம் அவைகளை அறிந்து வைத்து உள்ளனரா? அந்த நூல்கள் கூறும் கருத்துக்களை திரிபு இல்லாமல் வாசிக்கவோ அல்லது புரிந்து வைத்து இருக்க அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லை.

இதே போல ஆன்மிகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் குடும்பவியல் உட்பட இந்த அறநூல்கள் கூறும் எதையும் தமிழ் மக்கள் அறிந்து வைத்து இருப்பதும் செயல்படுத்துவதும் இல்லை. எனவே தமிழ் அதன் அறத்திலிருந்து பிரிந்து ஜீவன் இல்லாத மொழியாக உள்ளது. இந்த தமிழ் இனம் அதன் பண்புகளை இழந்து இருக்கிறது.

இன்றைய தமிழ் சமுதாயம் மூன்று நிலைகளில் உள்ளது.

  1. வடமொழி ஆதிக்கத்துக்கு பலியாகி உள்ளது, அல்லது
  2. நமது மறை நூலை வழிகாட்டுதலை புறக்கணிக்கும் நாட்டுப்புற சமயங்களை பின்பற்றுகிறது, அல்லது
  3. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இறைமறுப்பு கொள்கையில் இருக்கிறது.

இதற்கான காரணங்கள் என்ன?

  • தமிழ் மொழியில் வேதம் இருப்பதை மக்கள் அறியாமல் இருப்பது
  • அறிந்தவர்களும் அதை கற்று பின்பற்றாமல் இருப்பது
  • எவர் கற்க விரும்பி துவங்கினாலும் 2000 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட நூல்களுக்கு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட, ஒன்றுக்கொன்று முரணான, தவறான பொழிப்புரைகளால் அதன் உண்மை கருத்தை விளங்க முடியாமல் இருப்பது
  • பண்பாட்டு புரட்சி ஏற்பட தடையாக உலகமயமாதலும் பொருளாதாரமும் இருப்பது
  • தமிழர் மதம் என்பது சனாதனமோ அல்லது இந்து மதமோ அல்ல என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் இருப்பது
  • தமிழை, அதன் அறத்தை, அதன் சமயத்தை இதுவரை முழுமையாக மீட்டெடுக்கவில்லை, அது தமிழுக்கு முரணான வடமொழி சமய ஆதிக்கத்தில் பிணைந்து உள்ளது என்கிற புரிதல் இல்லாமல் இருப்பது
  • தமிழர் ஆன்மீகத்தை வடமொழி உண்டு செரித்துவிடும் என்று கருதியதால் தமிழர் சமயத்தை சரிவர விளங்காததால் நாத்திகத்தை நோக்கி நகர்ந்தது.

ஆனால் இதை எல்லாம் விடுத்து தமிழ் இனத்தில் ஒரு சிறு கூட்டம் கடந்த 1400 வருடங்களாக தமிழர் சமயம் கூறும் அதே அறத்தை அதாவது இஸ்லாத்தை பின்பற்றி வருகிறது. தமிழ் சமயம் கூறும் அதே அறத்தை குர்ஆன் கூறுகிறது: ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், இம்மை மறுமை போன்றவற்றை வடமொழி சமயங்கள் தத்துவமாகவும் பயன்பாட்டிலும் மறுக்கிறது ஆனால் இஸ்லாம் இவைகளை அப்படியே வலியுறுத்தி அதன் மேல் இந்த சமயத்தை கட்டி எழுப்பி உள்ளது. இதன் மூலம் தமிழர் அறத்தை படிக்கவும் பின்பற்றவும் இஸ்லாத்தை இவர்கள் பின்பற்றுகின்றனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இஸ்லாமிய நூல்கள் இருந்தும், அவர்களின் வேதத்தை தமிழில் வாசிக்காமல் அதன் மூல மொழியான அரபியில் மட்டுமே ஏன் ஓதி வருகின்றனர் என்பது உங்கள் கேள்வி.

தமிழில் குர்ஆனை அவர்கள் ஒதுவது இல்லை என்பது பிழை, புரிந்துகொள்ள தமிழில் தான் வாசிக்கின்றனர். ஆனால் அரபியில் அதை ஓத பழகுவதற்கு சில ஆழமான வலுவான காரணங்கள் உண்டு.

  • அரபியில் ஓதப்பட்டால்தான் அது வேத நூல், தமிழில் வாசித்தால் அது மொழிபெயர்ப்பு நூல். வேதம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது, அதை அந்த மொழியில் வாசிப்பதுதான் அறம். அதை மொழிபெயர்த்து பொருளை மாற்றி அதை வேதம் என்று அழைக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை.
  • ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ப அவரின் விளக்க உரையில் ஒரு வசனத்தின் சொல்லும் பொருளும் மாறுபடும். எனவே ஒரு வேதம் அதன் தூயவடிவில் பாதுகாக்கப்பட அது அருளப்பட்ட மொழியில் பாதுகாப்பது அவசியம். தமிழில் உள்ள குறளை மறந்துவிட்டு, இன்று ஆங்கிலம் பேசுகிறோம் என்பதற்க்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குறளை ஒருவர் வாசிப்பது பொருத்தமாகுமா? அது குறளை வாசிப்பது ஆகுமா? இல்லை.
  • தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது, ஆனால் அரபி கற்று கொடுக்க படுவது இல்லை. எனவே இந்த ஊர்களில் அரபி மொழி தனியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. எப்படி தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், மயிலை போன்ற இடங்களில் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கபப்டுகிறதோ அதே போல.
  • 5000 ஆண்டு பழமையான திருமந்திரம் திருக்குறளுக்கு கிபி 1400 முதல் 1900 ஆண்டுகளில் தான் விளக்கவுரை எழுதப்பட்டு உள்ளது. அந்த பொழிப்புரைகளை நீங்கள் வாசித்தால் ஒன்றுக்கொன்று முரண் படுவதை பார்க்கலாம். இதற்கான காரணம் ஒரு மொழியின் அழிவு அந்த வேதத்தின் பொருளை திரிக்கும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது. பொருள் திரிபு அந்த நூல் கூறும் அறத்தை தவறாக மறுவரையறை செய்கிறது. இவ்வாறு தமிழ் அதன் அறத்தையும் தமிழ் இனம் அதன் குணத்தையும் இழந்துவிட்டது.
  • குரானுக்கு விளக்கவுரை முகமது நபி காலத்தில் இருந்தே எழுதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஆரமப கால அரபி நூல்களை வாசித்ததால் தான் தமிழில் குர்ஆனை அதன் பொருள் மாறாமல் மொழிபெயர்க்கும் வாய்ப்பு 100 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.
  • மேலும் திருமந்திரம் முகமது நபி பற்றி முன்னறிவிப்பு செய்து உள்ளது, எனவே ஒரு தமிழனாக அவரை பின்பற்றுவது கடமையாகிறது .

சுருக்கமாக சொன்னால், தமிழர் அறத்தை போதிக்கும் இஸ்லாமிய வேதமும் அதற்கான ஆரம்பகால விளக்க உறையும் அரபியில் தான் உள்ளது. எனவே உண்மை தமிழனின் அறத்தை உள்வாங்க வேண்டும் என்றல் அரபி படிப்பது அவசியம்.

அன்னை ஆயிஷா 9 வயதாக இருக்கும் போது நபிகள் நாயகம் ஏன் திருமணம் செய்து கொண்டார்?

ஆயிஷா நாயகி 9 வயதாக இருக்கும் போது நபிகள் நாயகம் அவரை திருமணம் செய்து கொண்டார். அவரால் ஆயிஷாவுக்கு பாதுகாவலராக இருந்திருக்க முடியும், பின் அவர் ஏன் ஆயிஷா நாயகியை திருமணம் செய்து கொண்டார்?

முஹம்மது நபியின் அந்தரங்க வாழ்வை பற்றி அறிய கிடைக்கும் செய்திகள் அனைத்தும் அன்னை ஆயிஷாவால் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு நபி ஸல் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நீங்கள் அந்த சம்பவத்தை படித்தால் உங்களுக்கு புரிந்து இருக்கும். 

அதை சுருக்கமாக காண்போம்:

எனக்கு ஆறு வயதாக இருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.... நான் அல்லாஹ்வின் தூதரை (ஸல்) கண்டேன். அவர்கள் என்னை அவரிடம் ஒப்படைத்தார்கள். அப்போது எனக்கு ஒன்பது வயது. (புகாரி, 3894; முஸ்லிம், 1422)

"நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான் (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்" என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5078
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இது அந்த கால வழக்கத்தில் சகஜமான ஒன்று.

உதாரணமாக:

  • சிலப்பதிகாரத்தில் திருமணத்தின் போது கண்ணகிக்கு 12 வயது
  • கந்தபுராணத்தில் முருகன் – வள்ளிக்குத் திருமணம் நடைபெறும் போது வள்ளியின் வயது 12
  • பாரதிக்கு திருமணமானபோது அவரது மனைவிக்கு வயது என்ன? 7.
  • ராமணுடன் திருமணம் நடைபெற்றது பொழுது சீதைக்கு வயது 6.
  1. சீதை வயது 6 | Sanjay Sanjay on Reels
  2. Sita ji was 6 years old while Ram ji was 15 years old at the time of marriage, says Hindu priest Ramaswaroop Acharya Ji.
  3. https://youtube.com/shorts/rPkmxCRngfY?si=kcwh8YdX0SPgwiGU.
  • ராதாவுக்கு எத்தனை வயதில் திருமணம் நடைபெற்றது? 12. (பிரம்ம வைவர்த புராணம் பிரகிருதி காண்ட அத்தியாயம் 11 வசனம் 95-97; பிரம்ம வைவர்த்த புராணம் பிரகிருதி காண்ட அத்தியாயம் 35 வசனம்)
  • யூதர்களின் தாளமுத் 3 வயது பெண் குழந்தையை மணம் முடிக்க அனுமதிக்கிறது. "Must watch ☝🏻 Know the Truth
  • குழந்தை திருமண சம்மத வயது சட்டம் 1891 இல் ஏன் ஏற்படுத்தப்பட்டது? திருமண உறவின் மூலம் மரணமடைந்த 10 வயது இந்து குழந்தை தான் காரணம். Age of Consent Act, 1891 - Wikipedia

ஆனால் முகமது நபி அவர்களையும் இஸ்லாத்தையயும் இழிவுபடுத்தும் நோக்கோடு இது ஒரு பரப்புரையாக சமீப காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. இது தவறு என்றால் 100 வருடத்துக்கு முன் உள்ள எந்த ஒரு நூலிலும் இது ஒரு தலைப்பாக விவாதிக்க பட்டத்தை கண்டுபிடிக்க முடியுமா? முடியாது.

எனவே தீய என்னத்தோடு பரப்புரை செய்வோரை நீர் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவை இல்லை.


இந்த பதில் சிறுவயது பெண்களை மணம் முடிக்கும் வழக்கம் அக்காலத்தில் எல்லா சமூகத்திலும் எல்லா வயதினரிடமும் இருந்தது என்பதை ஏற்க போதுமானதாக நேர்மையாளர்களுக்கு இருந்தாலும் இழி பிறவிகள், குறிப்பாக சங்கிகள் நபி அவர்களுக்கும் அன்னை ஆயிஷா அவர்களுக்குமான வயது இடைவெளியை இழிவாக பேசுவது உண்டு. அதை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இதற்கு முக்கிய. காரணம் இரண்டு: ஒன்று, தனது மத நூல்களை அறியாத மடமை. மற்றொன்று, அறிந்தாலும் மறைக்கும் நயவஞ்சக தனம் ஆகும்.

இதிகாசங்கள் முதல் வரலாறு வரை: முதியவர்கள் மற்றும் சிறுமியர் இடையிலான திருமணங்கள் - ஓர் ஆய்வு

​இந்திய சமூக மற்றும் இலக்கிய வரலாற்றில், முதியவர்கள் இளம் பெண்களை (குறிப்பாக 10 முதல் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை) மணந்ததற்கான குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவை ஆன்மீகத் தவம், சமூக அந்தஸ்து அல்லது அக்கால சட்ட விதிகளின் அடிப்படையில் அமைந்திருந்தன.

​1. புராண மற்றும் இதிகாசக் குறிப்புகள்

​புராணங்களில் "முதியவர்" என்பது பெரும்பாலும் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்த முனிவர்களையும், "இளம் பெண்" என்பது பூப்படையாத சிறுமிகளையும் குறிக்கிறது.

​முக்கிய உதாரணங்கள்:

  • சியவன முனிவர் மற்றும் சுகன்யா: மகாபாரதத்தின் வன பருவத்தில் (பகுதி 122), புற்று மூடிய நிலையில் இருந்த முதிய சியவன முனிவருக்கு, அரசன் சர்யாதி தன் இளம் மகள் சுகன்யாவை மணம் முடித்துக் கொடுத்தான்.
  • தசரதர் மற்றும் கைகேயி: தசரதர் தள்ளாத வயதில் இருந்தபோது, மிகவும் இளையவரான கைகேயியை மணந்தார். இந்த திருமணத்திற்காகவே அவர் 'இராஜ்ய சுல்கம்' (அடுத்த வாரிசு கைகேயியின் மகனாக இருக்க வேண்டும்) என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
  • அகஸ்தியர் மற்றும் லோபாமுத்திரை: அகஸ்திய முனிவர் தான் உருவாக்கிய லோபாமுத்திரையை, அவள் சிறுமியாக இருந்தபோதே விதர்ப்ப நாட்டு மன்னனிடம் ஒப்படைத்து, பின் அவளை மணந்து கொண்டார்.
  • சௌபரி முனிவர் மற்றும் மாந்தாதாவின் 50 மகள்கள்: இது புராணங்களில் காணப்படும் மிகவும் வியக்கத்தக்க ஒரு கதையாகும். புத்தக ஆதாரம்: விஷ்ணு புராணம் (புத்தகம் 4, அத்தியாயம் 2) மற்றும் ஸ்ரீமத் பாகவதம் (ஒன்பதாம் ஸ்கந்தம், அத்தியாயம் 6). நிகழ்வு: சௌபரி என்ற முதிய முனிவர், பல ஆண்டுகள் நீருக்கடியில் தவம் செய்தவர். அவர் மாந்தாதா மன்னனின் 50 மகள்களையும் மணக்க விரும்பினார். வயதுக் குறிப்பு: முனிவர் மிகவும் வயதானவர், ஆனால் தனது யோக வலிமையால் இளமையாக மாறி அந்த 50 ராஜகுமாரிகளையும் மணந்தார். அவர்கள் அனைவரும் 'யுவதிகள்' (இளம் பெண்கள்) என்று குறிப்பிடப்படுகிறார்கள். இணைப்பு: Vishnu Purana - Saubhari Story
  • ​பராசர முனிவர் மற்றும் மச்சகந்தி (சத்யவதி): மகாபாரதத்தின் தோற்றத்திற்கு மிக முக்கியமான நிகழ்வு இது. ​புத்தக ஆதாரம்: மகாபாரதம், ஆதி பருவம், பகுதி 63. நிகழ்வு: பராசர முனிவர் ஒரு முதிய ஞானி. அவர் ஆற்றைக் கடக்கும்போது படகு ஓட்டிய மீன் மணமுடைய (மச்சகந்தி) சிறுமி சத்யவதியைக் கண்டார். வயதுக் குறிப்பு: சத்யவதி அப்போது பருவமடையாத அல்லது மிகவும் இளையவளாக இருந்ததாகப் பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முனிவர் அவளிடம் கொண்ட ஈர்ப்பால் பிறந்தவரே வேத வியாசர். இணைப்பு: Mahabharata Adi Parva - Birth of Vyasa
  • ​சந்தனு மன்னன் மற்றும் சத்யவதி (முதிர்ந்த வயதில் திருமணம்): இது பீஷ்மரின் சபதத்திற்கு வழிவகுத்த திருமணம். ​புத்தக ஆதாரம்: மகாபாரதம், ஆதி பருவம், பகுதி 100. ​நிகழ்வு: சந்தனு மன்னன் ஏற்கனவே முதியவர் மற்றும் ஒரு மகனுக்குத் (பீஷ்மர்) தந்தை. அவர் யமுனை ஆற்றங்கரையில் இளம் பெண்ணான சத்யவதியைக் கண்டு காதலித்தார். வயதுக் குறிப்பு: சந்தனு 'விருத்தா' (முதியவர்) என்றும் சத்யவதி 'யுவதி' என்றும் அழைக்கப்படுகிறார்கள். சத்யவதியின் தந்தை ஒரு நிபந்தனை விதித்தார்: "முதியவரான உமக்கு பிறக்கும் மகனுக்கே அரசுரிமை வேண்டும்". இதற்காகவே பீஷ்மர் பிரம்மச்சரிய சபதம் எடுத்தார்.​இணைப்பு: Mahabharata Adi Parva - Shantanu & Satyavati
  • ரிசீக முனிவர் மற்றும் சத்தியவதி: ஆதாரம்: மகாபாரதம் (அனுசாசன பருவம்) மற்றும் விஷ்ணு புராணம். விவரம்: ரிசீக முனிவர் மிகவும் வயதானவர், தவக்கோலத்தில் இருந்தவர். அவர் காதி மன்னனின் மகளான சத்தியவதியை மணக்க விரும்பினார். வயது: மன்னன் தனது இளம் மகளை ஒரு முதியவருக்குத் தரத் தயங்கினான். ஆனால் முனிவரின் சாபத்திற்கு அஞ்சி, 1,000 வெள்ளை குதிரைகளை வரதட்சணையாகக் கேட்டு, பின் திருமணத்திற்குச் சம்மதித்தான்.
  • ​யயாதி மன்னன் மற்றும் தேவயானி/சர்மிஷ்டை: புத்தக ஆதாரம்: மகாபாரதம், ஆதி பருவம், பகுதி 81-83. ​நிகழ்வு: யயாதி மன்னன் தனது மாமனாரான சுக்ராச்சாரியாரின் சாபத்தால் திடீரென்று முதுமை அடைந்தார்.​வயதுக் குறிப்பு: அவர் முதியவராக இருந்தபோதே, தனது மகனிடம் இருந்து இளமையைப் பெற்றுக்கொண்டு இளம் பெண்களுடன் வாழ்ந்தார். சாபத்திற்குப் பின் அவர் முதியவராகவே தனது இளம் மனைவியருடன் வாழ்ந்த காலமும் உண்டு. ​இணைப்பு: Mahabharata Adi Parva - Yayati Story
  • கர்தம முனிவர் மற்றும் தேவஹூதி: ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் (3-வது ஸ்கந்தம், அத்தியாயம் 21). ​விவரம்: கர்தம முனிவர் 10,000 ஆண்டுகள் தவம் செய்தவர். மனுவின் மகளான தேவஹூதி மிகவும் இளவயது சிறுமி. ​வயது: பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்த ஒரு முதிய முனிவருக்கு, ஒரு சிறுமியை மணம் முடித்துக் கொடுத்த நிகழ்வு இது. இருப்பினும், திருமணத்திற்குப் பின் முனிவர் தனது யோக சக்தியால் இளமையாக மாறியதாகக் கதை கூறுகிறது.
  • கௌதம முனிவர் மற்றும் அகல்யை: பிரம்மா தனது படைப்பிலேயே மிகவும் அழகான பெண்ணாக அகல்யையைப் படைத்தார். புத்தக ஆதாரம்: ராமாயணம் (பால காண்டம்) மற்றும் பிரம்மாண்ட புராணம். விவரம்: அகல்யையை யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாகப் பிரம்மா அறிவித்தார். இந்திரன் தனது வாகனத்தில் உலகைச் சுற்றினான். ஆனால் முதியவரான கௌதம முனிவர், ஒரு பசுவை (புண்ணிய நதி அல்லது காமதேனு) சுற்றி வந்து முதலில் வெற்றி பெற்றார். வயது வித்தியாசம்: கௌதமர் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்த ஒரு முதியவர். அகல்யை அப்போதுதான் படைக்கப்பட்ட ஒரு இளம் பெண் (நித்திய இளமை கொண்டவர்). இணைப்பு: Valmiki Ramayana - Ahalya's Story
  • ​ஜரத்காரும முனிவர் மற்றும் மானசா தேவி (வாசுகியின் தங்கை) ​மகாபாரதத்தில் வரும் இந்தத் திருமணம் மிகவும் விசித்திரமானது. புத்தக ஆதாரம்: மகாபாரதம் (ஆதி பருவம், அஸ்தீக பருவம்). விவரம்: ஜரத்காரும முனிவர் திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்ற உறுதியுடன் இருந்த ஒரு முதியவர். ஆனால் அவரது முன்னோர்கள் நரகத்தில் தொங்குவதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்றத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். நிபந்தனை: "என்னுடைய அதே பெயருடைய (ஜரத்காரும) ஒரு பெண்ணை மட்டுமே மணப்பேன், அவளை யாராவது எனக்குத் தானமாகத் தரவேண்டும்" என்று நிபந்தனை விதித்தார். ​வயது: முனிவர் மிகவும் வயதானவர், உடல் மெலிந்தவர். நாகராஜனான வாசுகி, தனது இளம் தங்கை மானசாவை (ஜரத்காரும) அந்த முதியவருக்குத் தானமாக அளித்தார். இணைப்பு: Mahabharata Adi Parva - Jaratkaru's Marriage
  • ​விஸ்ரவ முனிவர் மற்றும் கைகசி (இராவணனின் பெற்றோர்): புத்தக ஆதாரம்: ராமாயணம் (உத்தர காண்டம்). ​விவரம்: புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவர் ஒரு வேதியியல் மற்றும் ஆன்மீக முதிர்ச்சி பெற்ற பெரியவர். கைகசி என்ற அரக்கப் பெண் (மாலியவானின் மகள்) தனது தந்தை சொன்னபடி முனிவரை மணக்கச் சென்றாள். வயது: முனிவர் ஏற்கனவே ஒரு திருமணமானவர் மற்றும் முதியவர். கைகசி மிகவும் இளம் பெண்ணாக இருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன் மற்றும் விபீஷணன். இணைப்பு: Ramayana Uttara Kanda - Birth of Ravana
  • ​வசிஷ்டர் மற்றும் அருந்ததி: புத்தக ஆதாரம்: சிவபுராணம் மற்றும் தேவி பாகவதம். விவரம்: அருந்ததி (முந்தைய பிறப்பில் சந்தியா) தவம் செய்து மறுபிறப்பு எடுத்தபோது, பிரம்மா அவளை வசிஷ்ட முனிவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார் ​வயது: வசிஷ்டர் பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர், காலங்களைக் கடந்த முதியவர். அருந்ததி மீண்டும் பிறந்தபோது ஒரு சிறுமியாகவே வசிஷ்டரிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சில குறிப்புகள் கூறுகின்றன

​தர்ம சாஸ்திரங்களின் திருமண வயது விதிகள்

​அக்கால சமூகச் சட்டங்களான ஸ்மிருதிகள், பெண்களின் திருமண வயதைத் துல்லியமாக வகைப்படுத்தியிருந்தன: பெரும்பாலும் திருமணம் பூப்பு அடைவதற்கு முன்பே நடந்து வந்துள்ளது.

மனு ஸ்மிருதி (9.94): 30 வயது ஆடவன் 12 வயதுப் பெண்ணையும், 24 வயது ஆடவன் 8 வயதுப் பெண்ணையும் மணக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

​3. வரலாற்றுப் பதிவுகள் (18 & 19-ஆம் நூற்றாண்டு)

​வரலாற்று ரீதியாக, சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக முதியவர்கள் சிறுமிகளை மணந்த நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

  • நானா பட்னாவிஸ் (மராட்டிய அரசு): மராட்டியப் பேரரசின் அமைச்சரான இவர், தனது 50-களின் இறுதியில் 9 வயது சிறுமியான ஜிவுபாயை மணந்தார்.
  • வங்காளத்தின் குலின் முறை: 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் 70-80 வயதுடைய பிராமணர்கள், ஒரே நேரத்தில் பல சிறுமிகளை (5-10 வயது) மணப்பது வழக்கமாக இருந்தது. இது சமூக அந்தஸ்திற்காகச் செய்யப்பட்டது.
  • ஃபுல்மணி தாசி வழக்கு (1889): 10 வயது சிறுமி ஃபுல்மணி, 35 வயது கணவனால் உயிரிழந்த சம்பவம், இந்தியாவில் திருமண வயது குறித்த சட்ட மாற்றங்களுக்கு வித்திட்டது.

​4. சமூக மாற்றமும் சட்டங்களும்

​இத்தகைய திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட காலப்போக்கில் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன:

  • Age of Consent Act (1891): உடலுறவுக்கான ஒப்புதல் வயதை 10-லிருந்து 12-ஆக உயர்த்தியது.
  • சாரதா சட்டம் (Sarda Act, 1929): பெண்களின் திருமண வயதை 14-ஆகவும், ஆண்களுக்கு 18-ஆகவும் நிர்ணயித்தது.
  • தற்போதைய சட்டம்: இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 (தற்போது 21-ஆக உயர்த்தும் மசோதா பரிசீலனையில் உள்ளது).

புராணங்களில் இவை தவம் மற்றும் தெய்வீக நோக்கங்களுக்காகச் சித்தரிக்கப்பட்டாலும், வரலாற்றில் இவை சமூக மற்றும் பாலினப் பாகுபாட்டின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகே, இன்றைய நவீன சமூகத்தில் திருமண வயது என்பது முதிர்ச்சியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்:

  • வால்மீகி ராமாயணம் (ஆரண்ய & பால காண்டம்)
  • ஸ்கந்த புராணம் (பிரம்மோத்தர காண்டம்)
  • மகாபாரதம் (வன & அனுசாசன பருவம்)
  • பிரிட்டிஷ் இந்திய வரலாற்று ஆவணங்கள் (1891 Age of Consent Act).

எனவே முகமது நபிகள் தனது 52 ஆவது வயதில் அன்னை ஆயிஷாவை மணந்தது அக்காலத்தில் உலகில் எங்கும் நடக்காது அல்ல என்பதற்கு இந்த புராண இதிகாச தரவுகள் போதுமானவை.

ஆனால் இந்த பதிலும் குறை சொல்லுபவர்களுக்கு போதுமானவையாக இருக்காது. ஏனென்றால் அவர்களை தேவை நியாயமான் பதில் அல்ல, இழிவாக அவதூறு பேசி தங்களது இச்சையை தீர்த்து கொள்ளுவது தவிர வேறு எந்த நோக்கமும் அவர்களுக்கு இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

மது அருந்திவிட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்று புத்தகம் சொல்கிறதா?

கள் உண்ணுவதை எல்லா வேதமும் எல்லா நேரங்களிலும் தடை செய்யும் அதே வேளையில், இறைவணக்கத்தின் போது அறவே செய்யக்கூடாத கருமமாக உறுதியாக கூறுகிறது.

இஸ்லாம்

இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பேசுவதை நீங்களே அறிய முடியாதவாறு போதையாக இருக்கும் நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (குர்ஆன் 4:43)

கிறிஸ்தவம் & யூதம்

ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - (லேவியராகமம் : 10: 8 - 11)

தமிழர் சமயம் 

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.

(திருமந்திரம்: கள்ளுண்ணமை 318)

பொருள்: உண்மையான யோகிகள் அமர்ந்து (கால்கட்டி), சிறந்த அழகிய ஞான அமுதத்தைப் பருகி, எண்வகைச் சித்திகளையும் பெற்றுச் சிவானந்தத்தில் திளைப்பர். ஆனால், அத்தகைய யோக நிலையை விடுத்து, இச்சை கொண்டு கள்ளைக் குடிப்பவர்கள், அறிவை இழந்து, மூடர்களாகி, மோகத்தில் ஆழ்ந்து, கள் தரும் மதத்தால் (போதையால்) அறிவு கெட்டு, அழியும் நிலையை அடைவர்.

இந்த வேத வரிகள் அனைத்தும் போதையும் இறைவணக்கம் ஒன்றாக அமையக்கூடாது அமையாது என்று தெளிவுபட கூறுகிறது.

இறைவனின் கோபம் *

கிறிஸ்தவம் 

கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். (யாத்திராகமம் 34:6)

இஸ்லாம்  


அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லுஃலுவு வல்மர்ஜான்)

வேதம் ஓதும் பொழுது வாய்மூடி கேட்க*

தமிழரசமயம்


பால்: பொருட்பால்
அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல் 

எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. - குறள் 695:

விளக்கம்: மறைநூல் ஓதப்பபிடும்பொழுது வேறு எப்பொருளையும் உற்றுக் கேட்காமல், தொடர்ந்து சிந்திக்காமல் அது ஓதி முடிக்கும் பொழுது அது பற்றி விளக்கத்தை கேட்டறிய வேண்டும். ஒதப்படும் வரை வேறு எதுவும் செய்யமல் மன ஒர்மையுடன் கேட்க தகுதியானது மறை நூல் என்பது இக்குறளின் பொருள்.

இஸ்லாம்


(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி,செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். [அல்குர்ஆன் : 7:204]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது எங்களுக்கு (நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய) எங்களது வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள். எங்களுக்குத் தொழும் முறையை விளக்கினார்கள். “இமாம் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடுங்கள்” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்தக்ரஜ் அபீ உவானா)

தமிழ் உலகில் அல்லாஹ் இறைதூதர்களை அனுப்பவில்லையா? அனுப்பி இருந்தால் அவர்கள் யார்?

தமிழ் உலகில் இறைத்தூதர்கள் வந்துள்ளனரா என்பதை அறிந்துகொள்ளும் முன் நல்ல புரிதல் ஏற்பட சில அடிப்படைகளை அறிந்துகொள்ள வேண்டும்.

இறைத்தூதர் என்றால் என்ன?

வேதம் வரும் வழிமுறையில் குரு என்று குறிப்பிடப்பிடப்படுபவர்கள் தான் இறைத்தூதர்கள் ஆவர். அவர்கள் மேலுலகத்துக்கும் கீழுலகத்துக்கும் ஒரு இணைப்பு பலமாக செயல்படுவார்கள்.

இப்படிப்பட்ட இறைத்தூதர்கள் 25 பேரை குர்ஆன் குறிப்பிடுகிறது.

  1. ஆதம் (Adam) - முதல் மனிதர் & நபி
  2. இத்ரீஸ் (Enoch)
  3. நூஹ் (Noah)
  4. ஹூத் (Heber)
  5. ஸாலிஹ் (Methusaleh)
  6. இப்ராஹீம் (Abraham) நபிமார்களின் தந்தை
  7. லூத் (Lot)
  8. இஸ்மாயீல் (Ishmael)
  9. இஸ்ஹாக் (Isaac)
  10. யஃகூப் (Jacob)
  11. யூசுப் (Joseph)
  12. அய்யூப் (Job)
  13. ஷுஐப் (Jethro)
  14. மூஸா (Moses)
  15. ஹாரூன் (Aaron)
  16. துல்கிஃப்ல் (Ezekiel)
  17. தாவூத் (David)
  18. சுலைமான் (Solomon)
  19. இல்யாஸ் (Elias/Elijah)
  20. அல்யஸஃ (Elisha)
  21. யூனுஸ் (Jonah)
  22. ஜகரிய்யா (Zachariah)
  23. யஹ்யா (John the Baptist)
  24. ஈஸா (Jesus) - இயேசு
  25. முஹம்மது (Muhammad) - இறுதித்தூதர்

இதில் அனைவரும் மேற்குலகிற்கு வந்தவர்களா?

இல்லை. இதில் இப்ராஹிம் நபிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரும் மேற்குலகிற்கு வந்த தூதர்கள் ஆவர். அதில் முகமது நபி அவர்கள் ஆப்ரஹாமின் மகன் இஸ்மாயிலுக்கு பிறகும் எந்த வேதமும் தூதரும் வந்திராத சமுதாயத்திலிருந்து இறைத்தூதராக வந்தவர் என்றாலும் அவர் உலகம் முழுமைக்கும் வந்த இறுதி தூதராக இருக்கிறார்.

இதை குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது

”அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.” (குர்ஆன் 028:046 034:044, 032:003, 036:005,006)

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்ஆன் 33:40)

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (குர்ஆனின் 21:107)

முதல் மூன்று இறைத்தூதர்களும் மனிதர்கள் முழுமைக்கும் வந்தவர்கள் ஆவர். அதுவரை மனிதர்கள் அனைவரும் ஒரே மொழியை பேசிவந்தார் எனவே ஒரே காலகட்டத்தில் பல தூதர்கள் இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்கவில்லை.

நூஹ் நபி காலத்தில் உலகம் நீரால் அழிக்கப்பட்டு, நல்லோர்கள் மாட்டும் கப்பலில் ஏற்றப்பட்டு, கப்பல் ஒரு மலையில் தரைதட்டி நின்றபிறகு அவர்கள் அதிலிருந்து இறங்கி ஒரு சமவெளி பிரதேசத்தில் குடியேறினர் என்கிறது பைபிள். நவீன ஆய்வாளர்கள் மூன்று இடங்களை அடையாளம் கண்டு கப்பல் ஒதுங்கிய மலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அது அனைத்தும் துருக்கியில் உள்ளது.

அவர்கள் அங்கிருந்து பயணம் செய்து குடியேறிய சமவெளி பகுதி அவர்களுக்கு அருகில் உள்ள வளமான பகுதியான ஹரப்பா மற்றும் சிந்துசமவெளி பிரதேசங்கள் ஆகும். நோவாவின் சந்ததி இங்கிருந்துதான் இனங்களாக, நாடுகளாக , சமயங்களாக, மொழியாக பிரிய துவங்கியது. இதைப்பற்றி ஆதியாகமம் 10 & 11 தெளிவாக விளக்குகிறது.

இவ்வாறு பிரிந்த மக்கள் கூட்டத்தில் இருந்துதான் தமிழர்களாகிய நாம் வந்து உள்ளோம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எப்படி? சிந்துசமவெளி சுற்றிய பகுதிகளில் உள்ள தமிழ் ஊர் பெயர்களும் அங்கே கிடைக்கப்பெறும் எழுத்துக்களும் அதற்கான சான்றுகள் ஆகும்.

இப்படி இருக்க மறைநூல் பெரும் இந்த வழிமுறை தமிழில் இருந்திருக்க வாய்ப்பு உணடா? இல்லையா? என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

சரி இருக்கிறது என்று கருதினால் அதற்கான ஆதாரம் என்ன? ஏராளமாக கொட்டி கிடக்கிறது. உதாரணமாக திருமந்திரத்தை மட்டும் பார்ப்போம்.

திருமந்திரம்

இஸ்லாத்தில் அல்லாஹ் தேவர்கள் மனிதர்களுக்கு போதிக்கும் பொருட்டு முதலில் வேதத்தை தேவர்களுக்கு கொடுத்ததாக அறிந்துள்ள நாம், தமிழர் சமயத்தில் அந்த வழிமுறை உள்ளதா என்று ஆய்வு செய்யும் பொழுது திருமந்திரம் இப்படி சொல்வதை கண்டோம்.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10)

பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் வேதத்தை சொல்பவன் ஈசன் ஆவான்.

குறிப்பு: சிவன் என்பதற்கும், நந்தி என்பதற்கும் சிவபுராணம் அல்லது மற்ற புராணங்கள் கூறிய கதைகளை மறந்துவிட்டு இப்பாடல்களின் விளக்கத்தை நேரடியாக திருமந்திரம் எனும் வேதம் வழியாக தமிழ் சொற்களின் பொருள்களை கொண்டு வாசிக்கும் பொழுதுதான் அதன் உண்மை பொருளை அறிய முடியும்.

இதில் மூவர் யார்?

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி

போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி

போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி

போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. - (திருமந்திரம்)

குறிப்பு: அமரர் என்பது டெஹவர்களி குறிக்கும் என்பதை யாவரும் அறிவர். அசுரர் என்பது மனிதர்கள் அணுகமுடியாத வேறு ஒரு படைப்பு. எனவே நரகாசூரன் பத்மாசூரன் போல சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும்.

நால்வர் யார்?

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

மனிதர்களில் நந்தியின் அருள்பெற்ற நாதனை / குருவை நீங்கள் தேடினால், 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியக்ராமர் 4) எண்மர் இந்த நால்வரும் தான் நதிதேவர் ஆவார்கள். இவர்கள் ஒவ்வொரு திசையில் வெவ்வேறு விதமான விதத்தில் மனிதஅ குருக்களுக்கு தேவ குருவாகா ஆனார்கள் என்று மேற் சொன்ன பாடல்கள் விளக்குகிறது.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - (திருமந்திரம்)

எண்மர் நந்தி தேவரை குருவாக பெற்ற திருமூலர் அவர்கள் அந்த நந்தி மூலம் மக்களுக்கு குருவாக ஆக்கபட்டதாவகவும், அவர் வழிகாட்ட அந்த வழியை பின்பற்றியதாகவும் அவர் மேற்குறிப்பிட்ட பாடலில் கூறுகிறார்.

இது முகமது நபி அவர்கள் தேவதூதர் ஜிப்ரியேலின் மூலம் எப்படி தூதுத்துவத்தை பெற்றாரோ அச்சுப்பிசகாமல் அவ்வாறே உள்ளது. மொழி மாற்றம் காரணமாக இறைவன், தேவர்கள், இறைத்தூதர்களின் பொதுப்பெயர் வேறுபடுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே வரையறையுடனும், ஒரே பண்புடனும் காணப்படுகின்றனர்.

ஆனால் இங்குள்ள ஆன்மீக மாரபும் கடவுளும் ஆபிரகாமிய மாதங்கள் கூறும் இறைத்தூது முறைமைக்கு மாற்றமாக தெரிகிறதே?

ஆம் இதற்கு காரணம் முகமது நபி இறுதி தூதராக இருந்தமையால் அவருக்கு பிறகு எந்த தூதரும் வராமல் ஏறக்குறைய 1440 வருடங்கள் கடந்துள்ளது. இதன் தாக்கம் இஸ்லாம் அல்லாத எல்லா சமய மரபுகளுக்கு நிகழ்ந்தது, அந்த கால கட்டங்களில் அறத்தை மறந்து தனது மொழி இனம் சமய சடங்குகள் ஆகியவற்றை மக்கள் பெரிதாக என்ன துவங்கினர், அதில் வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு மொழியில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு நுழைய முயன்றபொழுது அதற்கான உத்தியாக அவர்கள் ராஜ்யங்களை இணைபப்து போல மதங்களை இணைத்தனர். ஒவ்வொரு சமயத்திலும் உள்ள கடவுளின் பெயரை ஒரு கதா பாத்திரங்களாக வடிவமைத்து புறங்களை எழுத துவங்கினர். அது இந்த தமிழ் மறைநூல்களுக்கும் நிகழ்ந்தது. தமிழை பொறுத்தவரை அது இன்னும் மோசமான நிலைக்கு சென்றது. இங்கே இந்து மறை நூலகளை மறந்து மக்கள் இதிகாச புராணங்களை மட்டும் பின்பற்ற துவங்கினர். பழைய நூலகள் இதில் அழிந்து போனது. இதை மீட்டெடுக்க ஆங்கிலேயர்கள் வரவேண்டி இருந்தது. நம்மிடம் உள்ள மறை நூல் எச்சங்களை கொண்டே நமது அறம் என்ன நமது சமய கட்டமைப்பு என்ன என்று நம்மால் அறிய முடியும். அதற்க்கு வழு சேர்ப்பதாக கீழடி போன்ற தொல்பொருள் வாழ்விடங்கள் கிடைக்கப்பெறுகிறது.

இவைகளை முறையாக சீர்தூக்கி பார்த்தால் தமிழர் சமயம் இஸ்லாம் என்பதை மறுக்க முடியாது.