ஒப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாலடியாரும் இஸ்லாமும்

ஏகஇறைவனின் திருப்பெயரால்!

ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக! 

முன்னுரை :

  இஸ்லாமிய பண்பாடு மற்றும் தமிழர் பண்பாடுகளின் ஒப்பீட்டின் நோக்கம் கொள்கைரீதியாக நாம் எந்த அளவு ஒத்துபோகின்றோம் என்ற புரிதல் ஏற்படவும் ஒற்றுமைக்கு வழிவகுக்கவும் செய்யப்படும் சிறுமுயற்சி.

   தமிழராய் இருக்கும் நாம், தமிழராய் பெருமை கொள்ளும் நாம் நம் வாழ்வியல் அறநெறியாக எதை கொண்டிருந்தோம் என்பதை தமிழ் பிரியர்கள் அறிவதும், அறிய முயற்சிப்பதும் இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவதில் திருக்குறளுக்கு அடுத்து மிகமுக்கியமானது "நாலடியார்". 

   "குர் 'ஆன் 3:64"-லும்,  "எசாயா 1:18-20"-இல் பைபிளிலும், "ரிக் 1.25,3-6"-லும் குறிபிட்டுள்ளதுபோல, வேதங்களிலே உள்ள பொதுவான விசயங்களை ஆராயும் நோக்கத்தில் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை கூறும் புனித குரானையும், தமிழர் வாழ்க்கை நெறியை கூறும் நாலடியாரையும் ஒப்பிடுகையில் 11(பழவினை) & 13(தீவினைஅச்சம்) அத்தியாயங்களில் சிலவைதவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய நெறிகளை அப்படியே வலியுறுத்துவதாக அமைந்துகின்றன.

  முரண்பாடுகளை பார்பதற்குமுன், ஒற்றுமைகளில் மிக முக்கியமானவைகளை மட்டும் இங்கே பார்ப்போம், முழுவதையும் எழுதுவதென்றால் தனிஆய்வு புத்தகமாக வெளியிடலாம், நேரமும் பொருளாதாரமும் அனுமதிக்கின்ற காலத்தில் இறைவன் நாடினால் அந்த பணியை செய்வோம்.

     இவ்விரு பண்பாடுகளில் மிகப்பெரும் வேற்றுமைகளாக கருதபடுபவைகள் அவ்வாறு இருந்திருக்கவில்லை, அவைகளை மட்டும் இங்கே பதிகிறோம். முரண்பாடுகளின்  காரண காரியங்களை பிறகு பார்ப்போம். கீழே கொடுக்க பட்டவைகள் நாலடியாரின் அத்தியாய தலைப்புகள், இதில் சிகப்பு வண்ணமிட்டது முரண்பட்ட பகுதியை குறிக்கும், மற்றவை அனைத்தும் ஒரே போதனைகள்.

அறத்துப்பால் 
1. செல்வம் நிலையாமை
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அறன் வலியுறுத்தல்
5. தூய் தன்மை
6. துறவு
7. சினம் இன்மை
8. பொறையுடைமை
9. பிறர்மனை நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினை அச்சம்
பொருட்பால் 
14. கல்வி
15. குடிப்பிறப்பு
16. மேன் மக்கள்
17. பெரியாரைப் பிழையாமை
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற் பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
37. பன்னெறி
காமத்துப்பால்
38. பொது மகளிர்
39. கற்புடை மகளிர்
40. காம நுதலியல்
குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள நாலடியாரின் விளக்கஉரைகள் திரு தி.சு.பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தில் 1945ல் வெளியிட்டது.

ஒற்றுமைகள்  : 

1) "இறைவன்" வரையறை & அவனை வணங்கும் முறை 

நாலடியார் செயுள் - 01 :

வான் இடு வில்லின் வரவு அறியா,வாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம் 
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று. 
பொருள் :
வான்இடு வில்லின் - மேகத்தால் உண்டாகின்ற  வில்லைப்போல,
வரவு அறியா வாய்மையால் - பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மையினால்,
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் (புவியில்) படிதலில்லாத  இறைவனை, 
நிலம் சென்னி உற வணங்கி - தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது,
சேர்தும் -அடைக்கலமாகிறேன் .

கருத்து :
 மேகத்தால் உண்டாகின்ற வில்லைப்போல பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மை ஆகயால், எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது அடைக்கலமாகிறேன்.
இஸ்லாம் : 

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா?  அல்குர்ஆன் 67: 16
கருத்து : வானத்தில் இருப்பவன் என்பதற்கு பூமிக்கு (நிலத்திற்கு) இறைவன் வருவது இல்லை என்று பொருள்.
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 32: 15
கருத்து :
ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்) என்று 30 வசனங்களை கொண்ட முழு தனி அத்தியாயம் புனித குர்ஆன் -இல் உள்ளது, சஜிதா/ஸுஜூது /ஸஜ்தா என்பதற்கு நெற்றியும் அதன் முடியும் தரையில் பொருந்தும்படி தொழுதல் அல்லது வணங்குதல் என்றுபொருள்.
ஒப்பீடு :

இரண்டு  நூல்களிலும்,
இறைவனின் வரையறை : இறைவன் என்பவன் புவியில் கால் பதிப்பவன் இல்லை, அவன் வானத்தில் இருப்பவன் என்று மறைமுகமாகவும் நேர்முகமாகவும் குறிப்பிடபடுகின்றது.
தொழும்முறை : இறைவனை தரையில் தலையை வைத்து தொழுதல் வேண்டும் என்றே குறிப்பிடுகிறது.

2) சோதிடம் கூடாது 

நாலடியார் செயுள் - 52 :

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். 
பொருள் :
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து,
தலையாயார் - சிறந்தவர்கள்,
தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள்,
தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட,
பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.
கருத்து :
நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து. சிறந்தவர்கள் தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள் கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட அறிவிலாதவர் பிறர் இல்லை
இஸ்லாம் : 

    யாரேனும் சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்  (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட இறைவனின் சட்டத்தை (ஷரீஅத்தை) அவர் நிராகரித்து விட்டார்”  - அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

ஒப்பீடு :

இரண்டு நூல்களும் சோதிடம் பார்ப்பதை, கற்பதை ஊக்குவிக்கவில்லை மட்டுமின்றி தடைசெய்கிறது.

3) சாதி கூடாது :

நாலடியார் செயுள் - 136 :

தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

பொருள் :
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்று இகழார் அவன் துணையா ஆறுபோயற்று -
படகுசெலுத்துவோன் பழைமையான சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாகஆற்றைக் கடந்துபோதல் போல;
நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று.
கருத்து :
படகுசெலுத்துவோன் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாக ஆற்றைக் கடந்துபோதலை போல, நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று. (கல்வியாலே உயர்வு தாழ்வு, சாதியால் அல்ல என்பது கரு.) 
இஸ்லாம் :

கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? அல் குர்ஆன் 39:9

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" அல் குர்ஆன் 49:13

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

ஒப்பீடு :

தமிழர் வாழ்வியல் நெறியும் இஸ்லாமும் போதிப்பது ஒன்றே, ஒரு மனிதனின் உயர்வு மற்றும் தாழ்வை அறிய அளவுகோலாய் இருப்பது இறைவனிடம் அவன் கொண்ட பயபக்தியும், நன்னடத்தையும், கல்வியுமே அன்றி தொழிலோ, பிறப்போ, சாதியோ இல்லை.

வேற்றுமைகள் : 

1)...

பதிவு தொடரும்...

குறிப்பு : 
1) மறுமை வாழ்க்கை பற்றி குர்'ஆன்-ஐ போல் மிகவும் வலியுறுத்தும் நூல் நாலடியார்.
2) பல கடவுள் கொள்கையோ, பெயர்களோ, உருவ வழிபாட்டு முறையோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சான்றாதாரங்கள் :

In PDF :

1) http://noolaham.net/project/38/3800/3800.pdf

In tamil :
1) http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar.html#.VJ_1_ABA
2) http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm
3) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0016.html

In Englishhttp://tamilnation.co/literature/pathinen/naladiyar_english.htm

History :
1) http://www.thoguppukal.in/2012/04/blog-post.html
2) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
4) http://www.valaitamil.com/literature_old-literature-books_pathinen-kezhkanakku/

Other :
1) https://www.facebook.com/Thonmai.Tamizh/posts/219218961543752
2) http://literature-comp.blogspot.in/2011/12/naladiyar.html
3) http://agarathi.com/

Islamic source:
1) http://labbaikudikadutoday.blogspot.in/2012/10/blog-post_4484.html
2) http://www.islamiyapenmani.com/2012/05/muslim-womens-education.html
3) http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/thozil_adipadayil_uyrvu_thazvu_unda/rss#.VKJ9oABA


ஆத்திசூடி & இஸ்லாம் - ஒரு ஒப்பீடு

ஆத்திசூடி & இஸ்லாம்

ஓர் ஒப்பீடு


1. ஆத்திசூடி அறம் செய விரும்பு
பொருள் அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு – ஆசை கொள்
விளக்கம் தர்மம்/கடமை/நன்மை செய்ய ஆவல் கொள்.
    இஸ்லாம் 
நன்மை செய் - எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (குர்ஆன் 16:128)
   
2. ஆத்திசூடி ஆறுவது சினம்
பொருள் ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபம்.
விளக்கம் கோபம் தணியத் தகுவதாம். / ஆத்திரம் அடக்கு.
சினம் கூடாது : கோபத்தை மென்றுவிழுங்கு (குர்ஆன் 3:134)

3. ஆத்திசூடி
 இயல்வது கரவேல்
பொருள் இயல்வது-முடிந்தததை, கரவேல்- மறைக்காதே
விளக்கம் கொடுக்கமுடிந்த பொருளை கேட்பவர்களிடம் மறைக்காதே
முடிந்தததை தானம் செய் : வறுமை நிலைமையிலும் (முடிந்தததை)தானம் செய் - (குர்ஆன் 3:134)

4. ஆத்திசூடி  ஈவது விலக்கேல்
பொருள் ஈவது-கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.
விளக்கம் ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.
கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டாதே: எவர் கருமித்தனம் செய்வதுடன் மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம் - (குர்ஆன் 4:37)

5. ஆத்திசூடி  உடையது விளம்பேல்
பொருள் உடையது - உள்ள பொருளை, விளம்பேல் - சொல்லாதே
விளக்கம் உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி(பெருமையாய்) சொல்லாதே / தற்பெருமை கூடாது
தற்பெருமை கூடாது : எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. - (குர்ஆன் 4:36)
 
6. ஆத்திசூடி  ஊக்கமது கைவிடேல்
பொருள் ஊக்கம் - மன உறுதியை, கைவிடேல் – கைவிடாதே
விளக்கம் நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே / உற்சாகத்தை (தன்னம்பிக்கை / விடாமுயற்சி) இழக்காதே
மன உறுதி கொண்டவர்கள் இறைவனுக்கு பிடித்தமானவர்கள். : உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? - (குர்ஆன் 4:36)

7. ஆத்திசூடி  எண் எழுத்து இகழேல்
பொருள் எண் - கணித, எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழாதே.
விளக்கம் கற்றலை இகழாதே / கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்
கல்வி மேலானது : கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? - (குர்ஆன் 39:9)

8. ஆத்திசூடி  ஏற்பது இகழ்ச்சி
பொருள் ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்.
விளக்கம் இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. / இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்)
பிச்சை வெறுக்கதக்கது : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”…யாசகம் கேட்பதை, அல்லாஹ் வெறுத்துள்ளான்.” - (ஸஹீஹ் புஹாரி [3:591])
 
9. ஆத்திசூடி ஐயமிட்டு உண்
பொருள் ஐயம் - பிச்சையை, இட்டு - கொடுத்து, உண் - உண்ணு
விளக்கம் பிச்சையிட்டுப் பிறகு உண்
பசித்தவருக்கு கொடுத்து உண் - ‘அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறை விசுவாசியாக இருக்க முடியாது’ - (நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா-20160, By : இப்னு அப்பாஸ் (ரழி))

10. ஆத்திசூடி ஒப்புர வொழுகு
பொருள் ஒப்புர- ‘ஒப்பு’ என்றால் சமம் என்று பொருள், ‘உரவு’ என்றால் வலிமை, அறிவு, பரத்தல், மிகுதி, உளத்திட்பம் என்று பொருள் ‘ஒப்புரவு’ என்றால் பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு உதவுதல். ஒழுகு- அந்த வழியிலே நட
விளக்கம் உலகத்தோடு ஒற்றுவாழ் / பகிர்ந்துண்டு வாழ் / பிறரையும் தமக்குச் சமமாகக்கருதி வாழ் என்று பலபொருள்படும்
    இஸ்லாம் 
அனைவரும் சமம் : ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல

11. ஆத்திசூடி ஓதுவது ஒழியேல்
பொருள் ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் – விடாதே
விளக்கம் ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே.
    இஸ்லாம் 
கல்வி கடமையாகும் : கல்வி கற்பது இறைநம்பிக்கையாளரின் மீது கடமையாகும் - (திரிமிதி 74)

12. ஆத்திசூடி ஒளவியம் பேசேல்
பொருள் ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.
விளக்கம் நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
பொறாமை கொள்ளாதே : நபி (ஸல்) அவர்கள் ''பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ, புட்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத் தின்று விடும்''. (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (ஆதாரம் : அபூதாவூத்))

13. ஆத்திசூடி 
அஃகஞ் சுருக்கேல்
பொருள் அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைக்காதே
விளக்கம் மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே
எடையைக் குறைத்து விடாதீர்கள் : நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்- (குர்ஆன்:55:9)
 
14. ஆத்திசூடி கண்டொன்று சொல்லேல்.
                      பொருள் கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே.
                      விளக்கம் கண்ணாற் கண்டதற்கு மாறாகச் (பொய்ச்சாட்சி) சொல்லாதே.
       இஸ்லாம் 
பொய்ச்சாட்சி) சொல்லாதே: அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்.)

  15. ஆத்திசூடி ஙப்போல் வளை.
                    பொருள் ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு.
விளக்கம்: ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள். 
பொய்ச்சாட்சி) சொல்லாதே: அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்.)


 
  16. ஆத்திசூடி சனிநீ ராடு.

(பதவுரை) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு

(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)

 
  17. ஆத்திசூடி ஞயம்பட வுரை.

(பதவுரை) ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.

(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]

 
  18. ஆத்திசூடி இடம்பட வீடெடேல்

(பதவுரை) இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதே

(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

 
  19. ஆத்திசூடி இணக்கமறிந் திணங்கு

(பதவுரை) இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நண்பு கொள்.

(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.

 
  20. ஆத்திசூடி தந்தைதாய்ப் பேண்

(பதவுரை) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று

(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

 
21. ஆத்திசூடி நன்றி மறவேல்.

(பதவுரை) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
    உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.

 
22. ஆத்திசூடி பருவத்தே பயிர்செய்.

(பதவுரை) பருவத்தே - தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு.

(பொழிப்புரை) விளையும் பருவமறிந்து பயிரிடு. 
    எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.

 
23. மன்றுபறித் துண்ணேல்.

(பதவுரை) மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே.

(பொழிப்புரை) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
    'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.

 
24. இயல்பலா தனசெயேல்.

(பதவுரை) இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

 
25. அரவ மாட்டேல்.

(பதவுரை) அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.

(பொழிப்புரை) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.

 
26. இலவம்பஞ்சிற் றுயில்.

(பதவுரை) இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு.

(பொழிப்புரை) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.

 
27. வஞ்சகம் பேசேல்.

(பதவுரை) வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) கபடச் சொற்களைப் பேசாதே.

 
28. அழகலா தனசெயேல்.

(பதவுரை) அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) இழிவான செயல்களைச் செய்யாதே.

 
29. இளமையிற் கல்.

(பதவுரை) இளமையில் - இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்.

(பொழிப்புரை) இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.

 
30. அறனை மறவேல்.

(பதவுரை) அறனை-தருமத்தை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.

 
31. அனந்த லாடேல்.

(பதவுரை) அனந்தல் - தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.

(பொழிப்புரை) மிகுதியாகத் தூங்காதே.

 
32. கடிவது மற.

(பதவுரை) கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு.

(பொழிப்புரை) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.

 
33. காப்பது விரதம்.

(பதவுரை) காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் - நோன்பாகும்.

(பொழிப்புரை) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
    தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.

 
34. கிழமைப் படவாழ்.

(பதவுரை) கிழமைப்பட-(உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.

 
35. கீழ்மை யகற்று.

(பதவுரை) கீழ்மை - இழிவானவற்றை, அகற்று - நீக்கு.

(பொழிப்புரை) இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

 
36. குணமது கைவிடேல்.

(பதவுரை) குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.

 
37. கூடிப் பிரியேல்.

(பதவுரை) கூடி - (நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே.

(பொழிப்புரை) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.

 
38. கெடுப்ப தொழி.

(பதவுரை) கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - விட்டு விடு.

(பொழிப்புரை) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)

 
39. கேள்வி முயல்.

(பதவுரை) கேள்வி - கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்கு; முயல் - முயற்சி செய்.

(பொழிப்புரை) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.

 
40. கைவினை கரவேல்.

(பதவுரை) கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே.

(பொழிப்புரை) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
    (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

 
41. கொள்ளை விரும்பேல்

(பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே.

(பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.

 
42. கோதாட் டொழி.

(பதவுரை) கோது-குற்றம் பொருந்திய, ஆட்டு- விளையாட்டை, ஒழி-நீக்கு.

(பொழிப்புரை) குற்றமான விளையாட்டை விட்டுவிடு.

கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.

 
43. சக்கர நெறிநில்.

(பதவுரை) சக்கரநெறி – (அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் – அடங்கி யிரு.

(பொழிப்புரை) அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.

 
44. சான்றோ ரினத்திரு.

(பதவுரை) சான்றோர் – அறிவினால் நிறைந்தவர்களுடைய, இனத்து – கூட்டத்திலே, இரு – எந்நாளும் இரு.

(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

 
45. சித்திரம் பேசேல்.

(பதவுரை) சித்திரம்-பொய்ம்மொழிகளை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.

 
46. சீர்மை மறவேல்.

(பதவுரை) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல்- மறந்துவிடாதே.

(பொழிப்புரை) புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.

 
47. சுளிக்கச் சொல்லேல்.

(பதவுரை) சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக,சொல்லேல் - (ஒன்றையும்) பேசாதே.

(பொழிப்புரை) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.

 
48. சூது விரும்பேல்.

(பதவுரை) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

 
49. செய்வன திருந்தச்செய்.

(பதவுரை) செய்வன-செய்யும் செயல்களை, திருந்த - செவ்வையாக, செய் - செய்.

(பொழிப்புரை) செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.

 
50. சேரிடமறிந்து சேர்.

(பதவுரை) சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர் - அடை.

(பொழிப்புரை) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.

 
51. சையெனத் திரியேல்.

(பதவுரை) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி, திரியேல் - திரியாதே

(பொழிப்புரை) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த்
திரியாதே

 
52. சொற்சோர்வு படேல்.

(பதவுரை) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே

(பொழிப்புரை) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே

 
53. சோம்பித் திரியேல்.

(பதவுரை) சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு, திரியேல் - வீணாகத் திரியாதே.

(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

 
54. தக்கோ னெனத்திரி.

(பதவுரை) தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி - நடந்துகொள்.

(பொழிப்புரை) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.

 
55. தானமது விரும்பு.

(பதவுரை) தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு - ஆசைப்படு.

(பொழிப்புரை) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி

 
56. திருமாலுக் கடிமை செய்.

(பதவுரை) திருமாலுக்கு - விட்டுணுவுக்கு, அடிமைசெய் - தொண்டுபண்ணு

(பொழிப்புரை) நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.

 
57. தீவினை யகற்று.

(பதவுரை) தீவினை-பாவச் செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு.

(பொழிப்புரை) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.

 
58. துன்பத்திற் கிடங்கொடேல்.

(பதவுரை) துன்பத்திற்கு - வருத்தத்திற்கு, இடங்கொடேல் - (சிறிதாயினும்) இடங்கொடாதே.

(பொழிப்புரை) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது

 
59. தூக்கி வினைசெய்.

(பதவுரை) தூக்கி - (முடிக்கும் வழியை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (அதன் பின்பு) செய்.

(பொழிப்புரை) முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.

 
60. தெய்வ மிகழேல்.

(பதவுரை) தெய்வம் - கடவுளை, இகழேல் - பழிக்காதே.

(பொழிப்புரை) கடவுளை இகழ்ந்து பேசாதே

 
61. தேசத்தோ டொத்துவாழ்

(பதவுரை) தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து - (பகையில்லாமல்) ஒத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமலபொருந்தி வாழு.

 
62. தையல்சொல் கேளேல்

(பதவுரை) தையல் - (உன்) மனைவியினுடைய, சொல்- சொல்லை, கேளேல் - கேட்டு நடவாதே.

(பொழிப்புரை) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

 
63. தொன்மை மறவேல்

(பதவுரை) தொன்மை - பழைமையாகிய நட்பை,மறவேல் - மறந்துவிடாதே

(பொழிப்புரை) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே

 
64. தோற்பன தொடரேல்

(பதவுரை) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்-சம்பந்தப்படாதே

(பொழிப்புரை) தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே.

 
65. நன்மை கடைப்பிடி்

(பதவுரை) நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி-உறுதியாகப் பிடி

(பொழிப்புரை) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள்.

 
66. நாடொப் பனசெய்

(பதவுரை) நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும்,ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை,செய் - செய்வாயாக.

(பொழிப்புரை) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய்.

 
67. நிலையிற் பிரியேல்.

(பதவுரை) நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே.

(பொழிப்புரை) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்துவிடாதே

 
68. நீர்விளை யாடேல்.

(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.

(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.

 
69. நுண்மை நுகரேல்.

(பதவுரை) நுண்மை - (நோயைத்தருகிற) சிற்றுண்டிகளை,நுகரேல் - உண்ணாதே.

(பொழிப்புரை) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே

 
70. நூல்பல கல்.

(பதவுரை) நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும், கல் - கற்றுக்கொள்.

(பொழிப்புரை) அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள்.

 
71. நெற்பயிர் விளை.

(பதவுரை) (நெற்பயிர் - நெல்லுப் பயிரை, விளை- (வேண்டிய முயற்சி செய்து) விளைவி.

(பொழிப்புரை) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே மேல்.

 
72. நேர்பட வொழுகு.

(பதவுரை) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப் பட, ஒழுகு - நட.

(பொழிப்புரை) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட

 
73. நைவினை நணுகேல்.

(பதவுரை) நை - (பிறர்) கெடத்தக்க, வினை - தீவினைகளை, நணுகேல் - (ஒருபோதும்) சாராதே.

(பொழிப்புரை) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச்செய்யாதே.

 
74. நொய்ய வுரையேல்.

(பதவுரை) நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

 
75. நோய்க்கிடங் கொடேல்.

(பதவுரை) நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல்-இடங்கொடாதே.

(பொழிப்புரை) உணவு, உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே.

 
76. பழிப்பன பகரேல்.

(பதவுரை) பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழி சொற்களை, பகரேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச்
சொற்களுமாம்.

 
77. பாம்பொடு பழகேல்.

(பதவுரை) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக்கொடுக்கிற) பாம்பைப்போல்பவர்களுடனே, பழகேல் -சகவாசஞ் செய்யாதே.

(பொழிப்புரை) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே.

 
78. பிழைபடச் சொல்லேல்.

(பதவுரை) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி,சொல்லேல்-ஒன்றையும் பேசாதே.

(பொழிப்புரை) குற்ற முண்டாகும்படி பேசாதே.

 
79. பீடு பெறநில்.

(பதவுரை) பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக,நில் - (நல்ல வழியிலே) நில்..

(பொழிப்புரை) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு.

 
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

(பதவுரை) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை,போற்றி - (கைவிடாமற்) காப்பாற்றி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) அடுத்தவரை ஆதரித்து வாழு.

 
81. பூமி திருத்தியுண்.

(பதவுரை) பூமி - (உன்) விளைநிலத்தை, திருத்தி-சீர்திருத்திப்பயிர் செய்து, உண் - உண்ணு.

(பொழிப்புரை) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு.

 
82. பெரியாரைத் துணைக்கொள்.

(பதவுரை) பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை,துணைக்கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

(பொழிப்புரை) பெரியாரைத் துணையாக நாடிக்கொள்.

 
83. பேதைமை யகற்று.

(பதவுரை) பேதைமை - அஞ்ஞானத்தை, அகற்று - போக்கு.

(பொழிப்புரை) அறியாமையை நீக்கிவிடு.

 
84. பையலோ டிணங்கேல்.

(பதவுரை) பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - கூடாதே.

(பொழிப்புரை) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

 
85. பொருடனைப் போற்றிவாழ்.

(பதவுரை) பொருள்தனை - திரவியத்தை, போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு.

 
86. போர்த்தொழில் புரியேல்.

(பதவுரை) போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை,புரியேல் - செய்யாதே.

(பொழிப்புரை) யாருடனும் கலகம் விளைக்காதே.

 
87. மனந்தடு மாறேல்.

(பதவுரை) மனம் - உள்ளம், தடுமாறேல் - கலங்காதே.

(பொழிப்புரை) எதனாலும் மனக்கலக்க மடையாதே.

 
88. மாற்றானுக் கிடங்கொடேல்.

(பதவுரை) மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடம் கொடேல் - இடங்கொடாதே.

(பொழிப்புரை) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே.

 
89. மிகைபடச் சொல்லேல்.

(பதவுரை) மிகைபட - சொற்கள் அதிகப்படும்படி, சொல்லேல் - பேசாதே.

(பொழிப்புரை) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே.

 
90. மீதூண் விரும்பேல்.

(பதவுரை) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல்-இச்சியாதே.

(பொழிப்புரை) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே.

 
91. முனைமுகத்து நில்லேல்.

(பதவுரை) முனைமுகத்து - சண்டை முகத்திலே, நில்லேல் - (போய்) நில்லாதே.

(பொழிப்புரை) போர் முனையிலே நின்றுகொண்டிருக்காதே.

 
92. மூர்க்கரோ டிணங்கேல்.

(பதவுரை) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனே, இணங்கேல் - சிநேகம் பண்ணாதே!

(பொழிப்புரை) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே.

 
93. மெல்லினல்லாள் தோள்சேர்.1

(பதவுரை) மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டியாகிய, நல்லாள் - பெண்ணுடைய, தோள் - தோள்களையே, சேர் - பொருந்து.

(பொழிப்புரை) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு.

1. மெல்லியா டோன் சேர்' என்றும் பாடம்.

 
94. மேன்மக்கள் சொற்கேள்.

(பதவுரை) மேன்மக்கள் - உயர்ந்தோருடைய, சொல் - செல்லை, கேள் - கேட்டு நட.

(பொழிப்புரை) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

 
95. மைவிழியார் மனையகல்.

(பதவுரை) மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய வேசையருடைய, மனை - வீட்டை, அகல் - (ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ.

(பொழிப்புரை) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு.

 
96. மொழிவ தறமொழி.

(பதவுரை) மொழிவது - சொல்லப்படும் பொருளை, அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி - சொல்லு.

(பொழிப்புரை)சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு.

 
97. மோகத்தை முனி.

(பதவுரை) மோகத்தை - ஆசையை, முனி - கோபித்து விலக்கு.

(பொழிப்புரை) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு.

 
98. வல்லமை பேசேல்.

(பதவுரை) வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (புகழ்ந்து) பேசாதே.

(பொழிப்புரை) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

 
99. வாதுமுற் கூறேல்.

(பதவுரை) வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.

 
100. வித்தை விரும்பு.

(பதவுரை) வித்தை - கல்விப்பொருளையே, விரும்பு - இச்சி.

(பொழிப்புரை) கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

 
101. வீடு பெறநில்.

(பதவுரை) வீடு - மோட்சத்தை, பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய ஞானவழியிலே) நில்.

(பொழிப்புரை) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு.

 
102. உத்தம னாயிரு.

(பதவுரை) உத்தமனாய் - உயர்குணமுடையவனாகி, இரு-வாழ்ந்திரு.

(பொழிப்புரை) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு.

 
103. ஊருடன் கூடிவாழ்.

(பதவுரை) ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி - (நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு.

 
104. வெட்டெனப் பேசேல்.

(பதவுரை) வெட்டு என - கத்திவெட்டைப்போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே.

(பொழிப்புரை) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே.

 
105. வேண்டி வினைசெயேல்.

(பதவுரை) வேண்டி - விரும்பி, வினை - தீவினையை,செயேல்-செய்யாதே.

(பொழிப்புரை) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே.

 
106. வைகறைத் துயிலெழு.

(பதவுரை) வைகறை-விடியற்காலத்திலே, துயில்-நித்திரையை விட்டு, எழு - எழுந்திரு.

(பொழிப்புரை) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.

 
107. ஒன்னாரைத் தேறேல்.

(பதவுரை) ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - நம்பாதே.

(பொழிப்புரை) பகைவரை நம்பாதே.

'ஒன்னாரைச் சேரேல்' என்றும் பாடமுண்டு.

 
108. ஓரஞ் சொல்லேல்.

(பதவுரை) ஓரம் - பட்சபாதத்தை, சொல்லேல் - (யாதொரு வழக்கிலும்) பேசாதே.

(பொழிப்புரை) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.

             ஆத்திசூடி மூலமும் உரையும்முற்றிற்று











திருக்குறளும் திருக்குர்ஆனும்

இறைவனின் திருப்பெயரால்...

குறளும் குர்ஆனும்

முன்னுரை

இதற்குமுன் பலமுறை திருக்குறளை படித்து இருக்கிறேன், சமீபமாக இஸ்லாமிய கொள்கைகளை எனது நெறியாக நான் எடுத்துக்கொண்ட பிறகு திருக்குறளை மற்றும் ஒருமுறை வாசிக்க நேர்ந்தது, அதிசயிக்க நேர்ந்தது.

ஆம் குறளின் கடவுள் கொள்கைக்கும் குரானின் கடவுள் கொள்கைக்கும் அணு அளவோ அதைவிட சிறிய அளவோ வேறுபாடு இல்லை.

எனவே இரண்டையும் ஒப்பிடு பார்க்க நினைத்தோம். இதைப்பற்றி புத்தகங்கள் ஏதும் வந்துள்ளதா என்று இணயத்தளத்தில் துழவும்பொழுது முருகன் என்பவர் எழுதிய புத்தகம் கண்ணில் பட்டது. ஆனால் அவர் முஸ்லிம் அல்லாதவர் என்பதால் இஸ்லாத்தை பற்றிய புரிதல் எந்த அளவு இருக்குமோ என்ற அச்சத்தினால் அதனை வாசிக்கும் எண்ணம் தோன்றவில்லை. மேலும் தமிழக முதல்அமைச்சராக திரு மு.கருணாநிதி அவர்கள் இருந்தபொழுது இந்த தலைப்பிலான ஆராய்ச்சிக்கு நிதி ஒதிக்கியதாக படித்தேன், அவற்றின் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிவந்ததாக என் அறிவுக்கு புலப்படவில்லை.

எனவே ஒப்பீடு செய்து படிக்க நாமே தொடங்கிவிட்டோம். மேலும் இரண்டு காரணங்களுக்காக நான் கற்பதை தொடராக பதிவிட முடிவு செய்து உள்ளேன், ஒன்று செய்தி பரிமாற்றதிக்காக, இரண்டு என் புரிதல் தவறாக இருந்தால் தெரிந்தவர்கள், அறிஞர்பெருமக்கள் தெளிவுபடுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்.

முன்னால் முதல் அமைச்சர் கலஞர் அவர்கள் நிதி ஒதுக்கிய செய்தியின் பினூட்டத்தில் "நிச்சயமாக இது சரியான மோசடி வேலையாகத்தான் இருக்க வேண்டும். எந்த முகமதியனும் குரானை விட்டுக் கொடுக்கமாட்டான். ஆகவே இப்படி போலித்தனமாக “திருக்குறளும், திருக்குர்ஆனும்”, ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு, ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) பணம் வேறு கொடுப்பது என்ன நியாயம்?", யார் பணத்த ஆருக்கு செலவழிக்குது இந்த அரசு போன்றவைகள் இடம் பெற்று இருந்தது.

அவர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை பல உள்ளது,
1) இஸ்லாத்தை ஏற்காதவரை நாமும் அவர்களில் ஒருவராக இருந்தோம்,
2) நாமும் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துள்ளோம்,
3) தமிழர்களுக்கு பிரச்னை என்ற பொழுது நாமும் மொழிப்பற்றொடு போராட்டங்களில் கலந்துகொண்டோம்,
4) நாமும் வரி கட்டுகிறோம்,
5) நாமும் இந்த சமுதாய வளர்ச்சியில் பங்கெடுத்துள்ளோம்,
6) நம்மால் அந்நிய செலவாணி பல ஆயிரம் கோடி நாம் நாட்டிற்கு இலாபம் எய்தி தருகிறோம்,
7) வட்டி-யை வாங்காததால் பெறப்படாத பணம் 75-ஆயிரம் கோடிக்கு மேல் RBI-கு லாபம், என எண்ணிலடங்கா சேவைகள் தமிழுக்கும் இந்தியாவுக்கும் எங்களால் தொடரும்..

குறளும் குர்ஆனும் 001


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. குறள் - 01:01

விளக்கம்: அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

தமிழ் : அ, (அ - அகரம் )
ஆங்கிலம் : A, (அ - அகரம்)
ஹிந்தி : अ, (அ - அகரம் )
தெலுகு : అ, (அ - அகரம்)
அரபிக் : ا, (அலீஃப் - அகரம்)
சீனமொழி : 诶, (அ - அகரம்)
எபிரேயமொழி : א, (அலீஃப் - அகரம்)
சம்ஸ்கிருதம் : अ, (அ - அகரம்)
கிரேக்கம் : α (ஆல்ஃபா - அகரம்)

மேலும் எத்தனை மொழிகளை ஆராய்ந்தாலும் அதன் முதல் எழுத்து அகரமாகவே இருக்கிறது. எனவே அடுத்த வரியும் நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்க முடியும்,எனவே முழு உலகமும் ஒரே இறைவனிடம் இருந்து தோன்றியதே.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்குர்ஆன் : 01:01

விளக்கம் : உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மயான அதாவது படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

குறிப்பு : ஆதிபகவனே வணங்க தகுதியானவன் மேலும் அவனது குணங்களாக திருக்குறளில் குறிப்பிடுவதும் அல்லாஹ்வின் குணங்களாக இஸ்லாத்தில் குறிப்பிடுவதும் ஒரு வார்த்தையை இரு மொழிகளில் எழுதியது போல் உள்ளது. மேலும் விரிவான பதிவுக்கு குரல் 9-ஐ வாசிக்கவும்

குறளும் குர்ஆனும் 002


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்குறள் - 01:02

விளக்கம்: நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவின் பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், "ஆனால், அந்நாளில் (இறைவனை தொழாது) அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" குர்ஆன் : 30:56-57

விளக்கம் கல்வியறிவு பெற்றவர்கள் தூய இறைவனை தொழாது இருந்ததனால் மறுமையில் தீர்ப்பளிக்கப்படுவர்

குறளும் குர்ஆனும் 003


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - குறள் - 01:03 

விளக்கம் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்த நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். குர்ஆன் : 2:207
இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! - குர்ஆன் 3:136.

விளக்கம் இறைவனின் பொருத்தத்தை நாடி உயிரைக்கூட விட துணிந்தவர், இறைவனின் கருணையால் சுவர்கத்தில் நிலைத்து வாழ்வார்.


குறளும் குர்ஆனும் 004


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. - குறள் - 01:04

விளக்கம் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறுவீராக. - குர்ஆன் : 27:40.

விளக்கம் : எந்த தேவைகளுமற்ற இறைவனை பொருந்த எண்ணி நன்றி செலுத்துபவர் அவருக்கு அவரே நன்மை செய்துக்கொள்கிறார் எனவே அவருக்கு எப்பொழுதும் எங்கும் அவருக்கு துன்பம் இல்லை.

குறளும் குர்ஆனும் 005


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - குறள் - 01:05

விளக்கம் : இறைவனுடைய கீர்த்தியை விரும்பி அருஞ்செயல் புரிந்தவருக்கு, துனபம் சேர்க்ககூடிய இருவினைகளும் சேராது.

"... எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே (அறஞ்செயல்களே) மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்". - குர்ஆன் : 30:38
- "...அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்". -  & 2:262.

விளக்கம் : எவர்கள் அல்லாஹ்வுடைய கீர்த்தியை விரும்புகின்றார்களோ அவர்கள் புரிவதற்கு அறஞ்செயல்கள் மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள், அவர்களை துன்பம் தீண்டாது.

குறளும் குர்ஆனும் 006


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - குறள் - 01:06.

விளக்கம் : மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார் எக்காலத்தும் வாழ்வார்
 
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். - குர்ஆன் : 91:7-10

விளக்கம் : நன்மை தீமை பிரித்து அறிவிக்க பட்ட உள்ளதை நன்மை மட்டுமே செய்து தூய்மை படுத்துகிறவர் வெற்றிபெற்றவர் முடிவில்லா சுவர்க வாழ்க்கை வாழ்வார்.

குறளும் குர்ஆனும் 007


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் - 01:07.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது.

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே இணையற்ற இறைவனான அல்லாஹ் அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.. நன்மை செய்தவர்களுக்கு நன்மைதான். அதிகமாகவும் கிடைக்கும். அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.. - குர்ஆன் : 10:25 & 26

விளக்கம் : இணையற்ற இறைவனான அல்லாஹ்வை வழிபடுபவர்களை கவலை சூழ்ந்து கொள்ளாது.

குறளும் குர்ஆனும் 008


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. - குறள் - 01:08

விளக்கம் : அறமாகிய கடலையுடைய அந்தணனது (இறைவனுக்கு அடிபணிந்தவனது) இடம் சேர்ந்தவனல்லாது, மற்றவர்க்கு பிறவி கடலை நீந்துவது கடினமாகும்.

குறிப்பு : அந்தணன் என்பது சாதி அல்ல, பண்புப்பெயர் ஆகும், மேலும் குறள் 30 இவ்வாறு விளக்குகிறது "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்". மற்றும் இக்குறள் அந்தணணோடு சேர்ந்து இருப்பதை மட்டும் பொருளாக எடுத்து கொள்ளமுடியாது, மேலும் அவனது குணங்களை தன்னுள்ளே எடுத்து கொள்ளுவதையும் குறிக்கும் எனவே அந்தணணுடன் சேர்ந்து அந்தணனாக மாறுவதே முதல் பத்தியின் பொருள்

"இவர்கள் நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து நிராகரிப்பவர்களையே நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? .." குர்ஆன் 4:139.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்." குர்ஆன் 3:102.
"இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை" - குர்ஆன் 3:185.

விளக்கம் : முஸ்லிம்களையே நண்பர்களாக எடுத்துக்கொண்டு இறைவனுக்கு வழிபட்டவர்களாக முஸ்லிம்களாகவே மரணியுங்கள். இல்லயேல் மயக்கும் இவுலக வாழ்க்கையை கடப்பது கடினமாகும்

குறிப்பு : இங்கு முஸ்லிம் என்பது சாதியல்ல, பிறப்பால் முஸ்லிமாக இருந்தும் பாழிப்பாவத்திற்கு அஞ்சாது இறைவனின் கட்டளையான அறத்தை பேணாது இருக்கும் முஸ்லிம்கள் இதில் அடக்கம் இல்லை. அந்தணன் முஸ்லிம் இரண்டுமே படைத்த உவமையற்ற ஒரே இறைவனுக்கு அடிபணிந்தவன் என்னும் ஒரே பொருள் தரக்கூடியது.

குறளும் குர்ஆனும் 009


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09

விளக்கம் : குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - குர்ஆன் - 2:171
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - குர்ஆன் 22:77

விளக்கம் : இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல், இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள்.

குறிப்பு : * கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள. 
எண்குணத்தோன் என்பதற்கு பரிமேலழகர் போன்ற சமணர் ஒருவகையிலும் பாரதி ஒருவகையிலும் பொருள் தந்து உள்ளனர் மேலும் பலரும் பலவகை பொருள் தருகின்றனர்.. "எண்குணத்தோன்" என்ற சொல்லுக்கு விளக்கம் தருபவர்களை விட வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டிர்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.  

1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).

 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).

3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).

4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).

5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).

6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).

7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).

8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்) 

குறளும் குர்ஆனும் 010


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - குறள் - 01:10

 விளக்கம் : பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேருவார்; நீந்தாததவர் இறைவனடியை சேரமாட்டார்.

(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (இறைவனிடமுள்ள) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.).. குர்ஆன் - 13:24.

விளக்கம் : இப்பிறவியில் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் பொறுமையுடன் இறைவனுக்காக பொறுத்துக்கொண்டு கடந்து சென்றவர் ஈடேற்றம் அதாவது இறைவனிடம் உள்ள அழகிய தங்குமிடம் செல்கிறார். மற்றவர் சேர்வதில்லை. -