கணவனுக்கு கட்டுப்படுதல்

தமிழர் சமயம்  


கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய. - தொல்காப்பியம் சூ. 154

பொருள்தன்னைக் கொண்டவனைப் பேணித்தொழுதெழுதல் முதலாகத் தன் உயிரினும் சிறந்தவனாகக் குறிக்கொண்டொழுகும் மனத்திண்மையும் நிறைந்தியலும் காதற் பண்பும் நன்றின் பாலுய்க்கும் அறிவானே ஒழுகுதலும், மென்மைத் தன்மையாற் பிறர் குறையினைப் பாராட்டாத பொறையுடைமையும் மறைபிறரறியாமை நெஞ்சினை நிறுக்கும் திறனும், இன்னலும் இடும்பையும் நோக்காமல் ஒல்லும் வகையான் விருந்தினரைப் போற்றியளித்தலும் தலைவற்கும் தனக்கும் கேளிராயினாரையும் உறவாயின ரையும், ஆட்சிக்கு அங்கமாயினாரையும் பேணிக்காத்தலும் அவை போல்வனவாகிய தெய்வத்தையும் தென்புலத்தாரையும் தலைவனொடு அமர்ந்து ஓம்புதலும் குலமரபான் வந்த காமக்கிழத்தியரை வெறாது அவரான் மதிக்கப்பெறுதலும் பாணர் முதலாய வாயில்கட்கு அருளுதலும் ஊடலும் ஊடல்உணர்தலும் ஆகிய சால்புகளமைந்த தலைவியின் மாட்சிமைகளை முன்னின்று தலைவன் முகனமர்ந்து செவிமடுக்கும் முறையமையான் கூறும் கூற்றுக்கள், மனையகத்துப் புக்கு உரையாடும் மரபுரிமையுடைய பாணன் பாடினி, முதலாய வாயில்கட்கு உரியவாகும்.

இஸ்லாம்


சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

கிறிஸ்தவம்


அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். 2 உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். - (1 பேதுரு 3:1&2)

43 கருத்துகள்:

  1. கிழவனுக்கு இல்லாத பலவிதமான கட்டுப்பாடுகள்
    கிழத்திக்கு விதிக்கப்பட்டுள்ளன . 1. அச்சம் , மடம் , நாணம்
    முதலானவற்றை எச் சூழலிலும் விட்டுவிடக்கூடாது ( 106 , 202 )
    2. கிழவனை எதிர்த்துப் பேசுதல் கூடாது ( 108 ) 3. தன் பாலியல்
    விருப்பினைக் கிழவனிடம் தெரிவிக்கும் உரிமையும் இல்லை
    ( 116 ). 4. அவனைப் பிரிந்து எவ்வளவு துன்புற்றாலும் அவனைத்
    தேடிச் செல்லல் கூடாது ( 200 ) 5. அவளது நடமாடு எல்லையும்
    ஓர்வரையறைக்குள் நின்றதை உணரமுடிகிறது (118 ) ; இதன்
    காரணமாக அவளது உலகியலறிவும் சுருங்கியதாகிறது . 6 .
    கிழவன் முன் தற்புகழ்தல் கூடாது ( 178 ) என இவை விரிந்து
    கொண்டே செல்கின்றன .
    கிழவியின் , கிளவி

    அருள் முந்துறுத்த அன்பு பொதி
    கிளவியாக அமைதல்

    ( 159 , 268 ) வலியுறுத்தப்படுகிறது

    https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006417/TVA_BOK_0006417_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt

    பதிலளிநீக்கு
  2. எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும்,
    செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப,
    முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும்
    நொந்தார் செயக் கிடந்தது இல். திரிகடுகம் 67


    சினத்தால் எதிர்த்துப் பேசும் மனையாளும், ஒழுக்கமில்லாத வேலையாட்களும், பகையான சுற்றமும் முற்பிறப்பிற் செய்த வினைப்பயனாகும். இவை முதுமைப் பருவம் வரைக்கும் ஒருவரை வருத்தக் கூடியது ஆகும்.

    பதிலளிநீக்கு
  3. காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்
    வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து
    ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர்
    செல்வர் எனப்படுவார். திரிகடுகம் 70


    சோலை, குளம் அமைத்தானும், வேதம் படித்த பார்ப்பானும், பிறர்க்குக் கொடுத்து உண்ணும் இல்லறத்தானும், உண்மையான செல்வர் எனப்படுவார்.

    பதிலளிநீக்கு

  4. கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
    செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
    நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
    'பெய்' எனப் பெய்யும் மழை. திரிகடுகம் 96


    கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் தவசியும், நன்மைகளைச் செய்யும் அரசனும் பெய் என்று சொல்ல மழை பொழியும்.

    பதிலளிநீக்கு
  5. நீதிமொழிகள் 31
    பரிபூரணமுள்ள மனைவி
    10 “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம்.
    ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
    11 அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான்.
    அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
    12 தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள்.
    அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
    13 அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள்.
    தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள்.
    14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள்.
    எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
    15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள்.
    வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக்கொடுப்பாள்.
    16 அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள்.
    அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக்கொடிகளை நடுவாள்.
    17 அவள் கடினமாக உழைப்பாள்.
    அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
    18 தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள்.
    அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.
    19 அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.
    தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.
    20 ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள்.
    தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
    21 பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டாள்.
    ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
    22 அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள்.
    மிக அழகான புடவையை அணிகிறாள்.
    23 ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர்.
    அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
    24 அவள் ஒரு நல்ல வியாபாரி.
    அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள்.
    இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
    25 அவள் போற்றப்படுவாள். [b] ஜனங்கள் அவளை மதிக்கின்றனர்.
    அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.
    26 அவள் ஞானத்தோடு பேசுகிறாள்.
    ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
    27 அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
    தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
    28 அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
    அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
    29 “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள்.
    ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான்.
    30 ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம்.
    ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
    31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு.
    எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  6. முதுமொழிக் காஞ்சி 5. அல்ல பத்து

    ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

    1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.

    நீர் அறிந்து - கணவனியல்பை அறிந்து
    ஒழுகாதாள் - நடவாதவள்

    கணவன் குறிப்பறிந்து ஒழுகாதவள் உண்மை மனைவியாகாள்.

    பதிலளிநீக்கு
  7. அறநெறிச்சாரம்

    சிறந்த இல்வாழ்க்கை தவத்தை விடச் சிறந்தது! பாடல் - 157

    வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
    மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
    மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
    சொல்எதிர் சொல்லாள் எனில்.

    விளக்கவுரை தீவினைகளைச் செய்யாமல் விலக்கி, தம்மிடம் வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனின் இல்வாழ்க்கை, தவத்தை விடச் சிறந்ததாகும். அலங்கரிக்கப்பட்ட கூந்தலையும் மென்மையான இயல்பையும் உடைய பெண்ணும் வந்த விருந்தினரைப் பேணி, கணவன் சொல்கின்ற சொல்லுக்கு மாறுபாடாக எதிர்த்து ஒன்றையும் சொல்லாதிருப்பாளாயின் சிறப்பு.

    இல்லாளுக்குரிய இயல்புகள் பாடல் - 158

    கொண்டான் குறிப்புஒழுகல் கூறிய நாண்உடைமை
    கண்டது கண்டு விழையாமை - விண்டு
    வெறுப்பன செய்யாமை வெ·காமை நீக்கி
    உறுப்போடு உணர்வுடையாள் பெண்.

    விளக்கவுரை கணவனின் குறிப்பறிந்து நடத்தலும், மங்கையர்க்குரிய நாண் உடைமையும், எப்பொருளையும் கண்டவுடன் விரும்பாமையும், கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையுமான இவற்றை மேற்கொள்வதுடன் அழகும் அறிவும் உடையவள் பெண் ஆவாள்.

    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  8. பாடல் - 159

    மடப்பதூஉம் மக்கள் பெறுவதூஉம் பெண்பால்
    முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் - படைத்ததனால்
    இட்டுண்டுஇல் வாழ்க்கை புரிந்துதாம் நல்அறத்தே
    நிற்பாரே பெண்டிர்என் பார்.

    விளக்கவுரை மங்கைப் பருவம் அடைதலும், புதல்வர்களைப் பெறுவதும் பெண்களுக்குரிய அணிகளை அணிவதும் என்னும் இவற்றை எல்லாப் பெண்களும் செய்வர். ஆயினும் பெற்றது சிறிதே ஆயினும் அதனால் இரப்பார்க்கு இட்டுத் தாமும் உண்டு, இல்லறத்துக்குரிய மற்றவற்றையும் விரும்பிச் செய்து கற்பு நெறியின் தவறாது நிற்பவர்களே பெண்டிர் எனச் சிறப்பித்துக் கூறப்படுவார்.

    கணவனால் கொண்டாடப்படுபவள் பாடல் - 160

    வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
    முனியாது சொல்லிற்றுச் செய்தாங்கு - எதிர்உரையாது
    ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
    போற்றிப் புனையும் புரிந்து.

    விளக்கவுரை கணவனின் கொள்கைகளை மேற்கொண்டு, வாழ்க்கையை நடத்தி அவன் கூறியவற்றை வெறுப்பு இல்லாமல் செய்து, அவன் சினந்து கூறும்போதும் எதிர்த்துக் கூறாது புகழ்ந்து வணங்குவாளாயின் மனைவியைக் கணவன் விரும்பிக் காத்தல் செய்வான்.

    கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள் பாடல் - 161

    தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்
    நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்து
    வேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
    கோல்தொடியாள் கோள் அழியுமாறு.

    விளக்கவுரை கணவா¢டமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.

    கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162

    அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்
    கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்
    வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்
    தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.

    விளக்கவுரை கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் பின் செல்லும் இயமனாவாள்.

    பதிலளிநீக்கு

  9. இணைபிரியாக் காதலே இல்வாழ்க்கைக் குயிராம் பாடல் - 163

    மருவிய காதல் மனையாளும் தானும்
    இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் - ஒருவரால்
    இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம்
    செல்லாது தெற்றிற்று நின்று.

    விளக்கவுரை பொருந்திய காதல் கொண்ட மனைவியும் தானும் ஆகிய இருவரும் மேற்கொண்டு செலுத்தினால் அன்றி, அந்த இருவருள் ஒருவரால் இல்வாழ்க்கை எனப்படுகின்ற அழகிய உயர்ந்த வண்டி செலுத்தப்படின் செல்லாமல் தடைப்பட்டு நின்று விடும்.

    இல்லறத்தான் இயல்புகள் பாடல் - 164

    பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்தாரம்
    நிச்சலும் நோக்காது பொய்ஒரீஇ -நிச்சலும்
    கொல்லாமை காத்துக் கொடுத்துஉண்டு வாழ்வதே
    இல்வாழ்க்கை என்னும் இயல்பு.

    விளக்கவுரை யாசித்தவர்க்கும் துறந்தவர்க்கும் வேண்டுவனவற்றைத் தந்து, அயலானின் மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் பேசாது, எப்போதும் கொலைச் செயலைச் செய்யாமல் காத்து விருந்தினரை உபசரித்துத் தாமும் உண்டு வாழ்தலே இல்வாழ்க்கையின் இயல்பாகும் என்று அறநூல்கள் கூறும்.

    இல்லறத்தானாகான இயல்புகள் பாடல் - 165

    விருந்து புறம்தரான் வேளாண்மை செய்யான்
    பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்து போய்க்
    கல்லான் கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்
    இல்வாழ்க்கை என்பது இருள்.

    விளக்கவுரை விருந்தினரை உபசரியாமலும், இரப்பவர்க்குக் கொடாமலும் பெருமையில் சிறந்தவரை மதியாமலும், மனைவி மக்களைப் பிரிந்து போய்க் கல்லாமலும் தீவினையை மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின் இல் வாழ்க்கை என்பது அவனுக்கு நரகமே ஆகும்.

    துறவியர்க்கு அளிப்பதே சிறப்பான அறம் பாடல் - 166

    அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
    அட்டுஉண்ணா மாட்சி உடையவர் - அட்டுஉண்டு
    வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுஉரைத்தல்
    வீழ்வார்க்கு வீழ்வார் துணை.

    விளக்கவுரை சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் ஆவார் எக்காலத்திலும் சமைத்து உண்ணாத பெருமையுடைய துறவியரே ஆவர்; சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு அங்ஙனம் வாழும் இல்லறத்தார் விருந்தினர் ஆவார் எனக் கூறுதல் மலையின் உச்சியிலிருந்து விழுபவர்க்கு அவ்வாறு வீழ்பவர் துணை ஆவர் என்று கருதுவதைப் போலாம்.

    பாடல் - 167

    நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ்ஆர உண்டு
    பிறங்குஇரு கோட்டொடு பன்றியும் வாழும்
    அறம்செய்து வாழ்வதே வாழ்க்கைமற்று எல்லாம்
    வெறும்பேழை தாழ்க்கொளீஇ யற்று.

    விளக்கவுரை நொய்யை இட்டு சமைத்த உணவை வயிறார உண்டு விளங்கும் இரண்டு கோரப் பற்களுடன் பன்றியும் வாழும்; ஆதலால் அறத்தைச் செய்து வாழ்வதே சிறந்த இல்வாழ்க்கையாகும், மற்றவையெல்லாம் தன்னிடம் ஒன்றும் அற்ற பெட்டியைத் தாழிட்டுப் பூட்டி வைத்தாற் போன்றதாகும்.

    பதிலளிநீக்கு
  10. நரகில் பெண்கள் அதிகம்.


    1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).
    1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

    பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்' என்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது, பெண்களில் சிலர் "காரணம் என்ன?' என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் "நீங்கள் கணவன் மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை' என்று கூறினார்கள்

    எந்த ஒரு மனைவி தன் கணவன் முன், முகத்தில் (கோபக்குறியைக் காட்டி) கடு கடுக்கப் பேசுவாளோ, அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள்.

    பெண்களே! உங்களுடைய சொர்க்கம் நரகம் உங்கள் கணவர்களுடைய பிரியத்தைப் பொறுத்தே இருக்கிறது.

    ஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்துவிடுவானாயின் அதற்காக அவள் தன் கணவனைப் பார்த்து “என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டாயே!’ என்று (கடிந்து) சொல்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும்.


    “ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் (முகத்தையும் உள்ளங்கைகளையும் திருநபி (ஸல்) அவர்கள் (காட்டி) இவைகளைத் தவிர ஒரு பெண் தன் மேனியின் எதனையுமே அன்னியவனிடம் காட்டுவதற்கு உரிமை இல்லை’ என்றார்கள்.
    பெண் மறைமுகமாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர் நோக்கி ஷைத்தான் (அவள் வீட்டு வாசலில்) நின்று கொண்டிருக்கிறான். ஆனால் வீட்டில் இருப்பவள், இறைவன் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்.
    எந்தப் பெண்ணாவது தன் கணவனுக்கு அல்லாமல் அன்னியருக்காக வாசனை பூசிக் கொள்வாளேயானால், நிச்சயமாக அச்செயல் அறிவற்றதாகும். அது நரகத்தின் நெருப்பாகும்.
    தலையில் முக்காடு இல்லாமல் (உடலை மறைத்துக் கொள்ளாமல்) வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது ஷைத்தான் முகத்தைக் கொண்டு வருகிறாள்.
    மெல்லிய ஆடை அணிந்து வந்த ஒரு பெண்ணைப் பார்த்த திருநபி (ஸல்) “உன்னை முழுமையாக்கிக் கொள்! நிர்வாணமாக நடக்காதே!’ என்று கூறினார்கள்.

    வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால் அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது.
    https://www.vidhai2virutcham.com/2010/10/21/%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d/

    பதிலளிநீக்கு
  11. எப்போதும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டில் வாழ்வதைவிட கூரையின்மேல் வாழ்வது நல்லது. - நீதிமொழிகள் 21:9

    முன்கோபமும் வாக்குவாதம் செய்வதில் ஆர்வமும்கொண்ட மனைவியோடு வாழ்வதைவிட பாலைவனத்தில் வாழ்வது நல்லது. - நீதிமொழிகள் 21:19

    எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். அவளைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும். - நீதிமொழிகள் 27:15-16

    பதிலளிநீக்கு
  12. நாலடியார் - 37.பன்னெறி

    மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
    இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
    மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
    காண்டற்கு அரியதோர் காடு. 361

    மேகம் தவழும் மாடி உள்ளதாய், சிறப்பு மிக்க காவல் உடையதாய், அணிகளே விளக்காக நின்று ஒளி வீசுவதாய் இருப்பினும், மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றிலாதவனுடைய இல்லம் என்ன பயனையுடையது? அது பார்க்கக் கூடாத சுடுகாடே ஆகும்.

    வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
    இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
    செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
    கையுறாப் பாணி பெரிது. 362

    தளர்வில்லாத கொடிய வாள்வீரா¢ன் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம் சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பொ¢தாம்!


    எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
    அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
    உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை. 363

    கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கா¢ய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர். (அரச தண்டனைக்குக் கணவனை உட்படுத்த நினைத்ததால் 'எறி' என எதிர் நிற்பவளைக் கூற்றம் எனவும், காலத்தே உணவு கொள்ளாவிடில் நோய் உண்டாகும். ஆதலால் அட்டில் புகாளைப் பிணி எனவும், பிறர் பசி நோக்காது தான் மட்டுமே உண்பது பேயின் தன்மையாதலால், உண்டி உதவாளைப் பேய் எனவும், கொல்லுதற்கு உரியது படை ஆதலால் இத்தகைய மூவரையும் பகை எனவும் கூறினார்).


    கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
    ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
    இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
    கற்கொண்டு எறியும் தவறு. 364

    இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பொ¢யோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தொ¢ந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர்.


    தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
    இடையே இனியார்கண் தங்கல் - கடையே
    புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
    உணரார்பின் சென்று நிலை. 365

    (ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தொ¢ந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்

    பதிலளிநீக்கு

  13. கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
    துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
    இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
    முனிவினாற் கண்பா டிலர். 366

    தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.


    செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
    செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
    வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
    மகனறிவு தந்தை அறிவு. 367

    நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).


    உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
    புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
    கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
    கீழ்மேலாய் நிற்கும் உலகு. 368

    மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டிரின் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை விரித்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்).


    இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
    தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
    வீழும் அருவி விறன்மலை நன்னாட!
    வாழ்வின் வரைபாய்தல் நன்று. 369

    மணிகளை வாரிக்கொண்டு விழும் அருவிகளையுடைய மலைகள் நிறைந்த நல்ல நாட்டின் அரசனே! நண்பர்கள் தம் மனத்திலிருந்து துன்பத்தைக் கூற, அத்துன்பத்தைப் போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதைவிட மலை மேலேறிக் கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.


    புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
    விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
    மாரி அறவே அறுமே, அவரன்பும்
    வாரி அறவே அறும். 370

    புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும்.

    பதிலளிநீக்கு
  14. பணிவு வந்துவிட்டால் எல்லா நல்ல குணங்களும் வந்துவிடும். பணிவு என்பது உண்மையான அன்பிற்கு பிறகும் உண்மையான கடமை உணர்வை உன்ர்ந்ததற்குப் பிறகும் வருவதுதான் பணிவு.

    எனவே தான் இந்த இடத்தில் அல்லாஹுத்தஆலா பணிவை பற்றி இந்த வசனத்தில் (4:34) குறிப்பிடுகிறான்;

    ஒரு பெண்ணிடத்தில் பணிவு இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நாம் அவளை அழகிய முறையில் திருத்தி விடலாம். அந்தப் பணிவு இல்லை என்றால் எதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள மாட்டாள். ஏட்டிக்கு போட்டியாக பேசுவார்.


    4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

    பதிலளிநீக்கு
  15. 4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
    மதனீ, வசனங்கள்: 176

    4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

    4:2. நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.

    4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

    4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

    4:5. (அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.

    4:6. அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.

    4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

    4:8. பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.

    4:9. தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.

    4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.

    http://www.tamililquran.com/qurandisp.php?start=4

    பதிலளிநீக்கு
  16. நல்ல மனைவியே மேலான செல்வம்
    ”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச்
    செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

    பதிலளிநீக்கு
  17. மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு பிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக
    கூறுகிறான். அவர் ”இறைவா! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் வீட்டைக்
    கட்டித்தருவாயாக இன்னும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும்
    என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும்
    என்னைக் காப்பாற்றுவாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார் (66-11)

    இன்றைய சில முஸ்லிம் பெண்கள் நிலை
    ஆனால் இன்றைய முஸ்லிம்கள் பெண்மணிகளில் பெரும் பாலானோர் நிலை
    கீழ்கண்டவாறு உள்ளது

    நெ.1 – சிர்க்
    அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்களின் தர்காஹ்வே கதி என்று ஷிர்க்-ல்
    மூழ்கியுள்ளனர்.


    நெ.2 – ஏழைக்கு உணவளிப்பதில்லை
    ஏழைக்கு ஒரு கவலம் உணவு அளிப்பதில்லை,


    நெ.3 – அநாதைகளுக்கு பரிவு காட்டவதில்லை
    அநாதை குழந்தைகளை வளர்ப்பது கடினம்தான் என்றாலும் அவர்களுக்கு
    மறைமுகமாவது பொருளுதவியோ உடையோ கொடுத்து உதவுவதில்லையே.


    நெ.4 – குடும்பத்தில் உள்ள நோயாளிகளை கவனிப்பதில்லை
    அநாதைகளை விடுங்கள் போனால் போகட்டும் தன் குடும்ப உறுப்பினர்களில் உள்ள
    வயதானவர்களையாவது சரியான முறையில் கவனிக்க முடிகிறதா? என்றால் அதுவும்
    முடிவதில்லை! ஏன் இந்த அவலநிலை.

    பதிலளிநீக்கு
  18. அன்னை மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான்
    அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு நாம் நம்மிடமிருந்து
    ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும்
    அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும் அவர் கீழ்ப்படிந்து
    வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (66 11-12)


    ஆனால் இன்றைய சில பெண்களின் நிலை

    வெட்கத்தலங்களை பேணிக்காக்க ஹிஜாப் (தக்வா என்ற இறையச்சம் கொண்ட புர்கா
    ஆடை) அணியச் சொன்னால் அணிகின்றனர் ஆனால் அவைகளில் சம்கி, நக்கி, ஜிக்னா
    போன்ற அலங்கார வேலைப்பாடுகளையும், மிகவும் மெல்லிய ஆடைகளையும், மிகவும்
    இருக்கமான ஆடைகளையும் அணிந்து ஆண்களை கவருகின்றனர்.


    இன்றைய நவநாகரீக உலகில் மாற்றுமத பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிகம்
    அன்னிய ஆண்களால் கவரப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவதே இந்த நவநாகரீக
    உலகில் தேர்ந்தெடுக்கும் வேலைப்பாடு கொண்ட லேட்டஷ்ட் மாடல் புர்கா தான்.
    இந்த நவீன பலபலக்கும் புர்கா விளம்பரங்களை சில ஜமாஅத் நிகழ்சிகள்
    தொலைக்காட்சிகளில் காட்டுவது வேதனையளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. “மனைத் தக்க மாண்புடையாளாகித் தற்கொண்டாள்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள்:7)

    என்கிறது. அதாவது குடித்தனத்துக்கு ஒத்த பெருமையுடையவளும், தன் கணவனுடைய வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்கிறவளுமான மனைவியே சரியான வாழ்க்கைத் துணைவி என்கின்றார் வள்ளுவர். மேலும்,

    பதிலளிநீக்கு
  20. “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மை உண்டாகப் பெறின்” (குறள்:54)

    அதாவது கற்பு என்ற மன உறுதியுள்ள பெண்ணைக் காட்டிலும் பெருமை தரக்கூடிய பொருள் இவ்வுலகத்தில் வேறு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார். மேலும் இவர் குடும்பம், கற்பு இரண்டும் பெண்ணிற்குத் தேவை என்றும் வலியுறுத்துகின்றார்.

    பதிலளிநீக்கு
  21. மூதுரை பாடல் 21 :

    இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
    இல்லாளும் இல்லாளே ஆமாயின்–இல்லாள்
    வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
    புலி கிடந்த தூறாய் விடும்.

    பொருள்:

    நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த
    இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

    பதிலளிநீக்கு
  22. மூதுரை பாடல் 27 :
    கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
    அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்–மெல்லிய
    வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
    இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

    பொருள்:

    கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத்
    தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு
    அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி
    நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

    பதிலளிநீக்கு
  23. ஒவையரின் கொடியது:

    கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
    கொடிது கொடிது வறுமை கொடிது
    அதனினும் கொடிது இளமையில் வறுமை
    அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
    அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
    அதனினும் கொடிது
    இன்புற அவர்கையில் உண்பது தானே

    பதிலளிநீக்கு
  24. கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்(உலக நீதி 29)

    பதிலளிநீக்கு
  25. கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்(உலக நீதி 90)

    ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : திர்மிதி

    தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நூல் : நஸாயீ

    உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : முஸ்லிம்

    பதிலளிநீக்கு
  26. மத்தேயு 19:8
    அதற்கு இயேசு,, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  27. “இம்மைமாறி மறுமையாயினும்;
    நீயாகியர் என் கணவனே
    யானாகியர் நின் நெஞ்சுநேர்பவளே”(குறுந்.49) என்ற குறுந்தொகைப் பாடல் எத்தனை பிறவி எடுத்து வந்தாலும் உன் மனத்துக்குப் பிறந்தவளாக நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று பெண்களின் தீராத்தாகத்துடன் திகழ்ந்த மனத்தைக் காட்டுகிறது.

    கணவன் மறுமணம் புரிந்தபொழுதும் அவனை வாழ்த்தி வரவேற்றிருக்கிறாள். பரத்தமையை அவன் நாடியபோதும் வசை பாடாமல் கடவுள் கற்புத்தன்மையால் ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்படி இல்லாமல் எதிர்த்துக் கேள்வி கேட்டால் குடும்பப் பெண்ணுக்குத் தகாது என்பதும் அச்செயல் அவர்களுக்கு வறுமையை உருவாக்கும் என மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிக்கிறாள். தனக்காகத் தன் காதலனைக் கடிந்துரைப்போரை அதற்காகவே தடுத்தும் இருக்கிறாள். தலைவனுக்குப் பழி நேராதவாறு அவனது பரத்தமை ஒழுக்கத்தைப் பிறருக்கு மறைக்க முயல்வதும் அவள் இல்லறக் கடமைகளுள் ஒன்றாகவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஐங்குறுநூறு – 292:2-5;
    குறுந்தொகை– 252ஆம் பாடல்; அகநானூறு 316-10-117.

    https://www.vallamai.com/?p=84345

    பதிலளிநீக்கு
  28. எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)

    பதிலளிநீக்கு
  29. எபேசியர் 5:22 ESV / 5 பயனுள்ள வாக்குகள்
    மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோல, உங்கள் சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  30. செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
    வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
    பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்
    திங்கள் மும் மாரிக்கு வித்து. திரிகடுகம் 98


    அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.

    பதிலளிநீக்கு

  31. நீதிமொழிகள் 11:16
    நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.

    நீதிமொழிகள் 12:4
    குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

    நீதிமொழிகள் 14:1
    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

    நீதிமொழிகள் 31:10
    குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

    நீதிமொழிகள் 31:25
    அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.

    நீதிமொழிகள் 31:28
    அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:

    நீதிமொழிகள் 31:30
    செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

    பதிலளிநீக்கு
  32. ஒரு மனைவி தனது கணவனுக்கு கட்டுப்படுவது எந்த அளவுக்கென்று அதன் உச்சக்கட்டத்தையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா, நூல்: திர்மிதி 1079

    கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.
    (அல்குர்ஆன் 4:34)

    தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
    (அல்குர்ஆன் 24:30)

    முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண் களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
    (அல்குர்ஆன் 33:35)

    “உங்கள் படுக்கையை அடுத்தவர் களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக் காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலீ), நூல்: திர்மிதி 1083

    தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப் படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி அடைவீர்கள்.
    (அல்குர்ஆன் 24:31)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.

    இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

    நூல்: முஸ்லிம் 3971
    https://www.bayanapp.indiabeeps.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  33. கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத்
    தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே,
    வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு;
    கோல் வழி வாழ்தல் குணம். சிறுபஞ்ச மூலம் 13

    ஒழுகல் - நடத்தல்

    மனைவி கணவன் சொல்படியும், மகன் தந்தை சொல்படியும், சுற்றத்தார் அவனைப் போல நடத்தலும் நன்மையாகும். பகைவரோடு சேர்ந்து கொள்ளாமல் அரசன் எதிர்த்துப் போர் புரிவதும், நாட்டு மக்கள் அரசன் சொற்படி நடத்தலும் நன்மை தரும்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  34. மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
    ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்க
    அலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும்
    தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. - சிறுபஞ்ச மூலம் 51

    தொக்க - கூடிய
    அலவலை - அற்ப காரியம்

    மக்களைப் பெறுதல், அடக்கமுடைமை, அழகுடைமை, கணவன் கருத்துக்கு இசைதல், உணவின் மிகுதியை விரும்புதல் இந்த ஐந்து குணங்களும் பெண்டிர்க்கு இருத்தல் வணங்குதற்குரியது.
    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  35. அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு,
    மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக்
    கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல்,
    உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. - சிறுபஞ்ச மூலம் 60

    கிளை - உறவினர்கள்

    அரம் போன்ற சுற்றமும், அடங்காத மனைவியும், அடங்காதன செய்யும் அடிமையும், மரம் போன்ற புதல்வனும், வஞ்சனை செய்கின்ற அயலிருப்பும் உடையவர்களுக்கு வேறு நோய் எதுவும் வேண்டாம். அவையே பெரும் துன்பத்தைத் தரும்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  36. ஆண் திருமணத்திற்கப் பிறகு பரத்தை வீட்டிற்கு சென்று வருகிற போது கூட, மனைவி கோபம் கொண்டாலும்,

    “சொல் லெதிர் சொல்லல் அருமைத் தாகலின் / அல்ல கூற்றுமொழி அவள்வயி னான” (தொல். களவு. 108)

    என்று தலைவன் சொல்லிற்கு எதிர்சொல் பேசும் உரிமையுடையவளாயினும் பேசுதல் முறையன்று என மேற்கூறிய நூற்பா சுட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  37. ஆடவனுக்குக் கடமையே உயிராக, வீட்டிலிருந்து இல்லறம் செய்யும் பெண்களுக்குத் தம் ஆடவரே உயிர் என்பதை ஒரு செய்யுள்,

    வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்
    மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (நற்றிணை 135)
    என்று கூறுகிறது.

    பதிலளிநீக்கு
  38. இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
    இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
    வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
    புலி கிடந்த தூறாய் விடும். மூதுரை

    பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த
    இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த
    இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து
    விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ
    அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

    பதிலளிநீக்கு
  39. கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
    அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
    வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
    இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். - மூதுரை

    பொருள்: கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத்
    தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு
    அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி
    நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

    பதிலளிநீக்கு
  40. இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
    இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
    வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
    புலி கிடந்த தூறாய் விடும். மூதுரை

    பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த
    இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த
    இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து
    விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ
    அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

    பதிலளிநீக்கு
  41. நீதிமொழிகள் 1913 ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.

    14 ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.

    பதிலளிநீக்கு