தமிழர் சமயம்
மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகைஇல் காச்சியார்க்கு இல். (அருங்கலச்செப்பு 29)
பொருள்: குற்றமற்ற நற்காட்சியாளரிடம் மூவகை மூடங்கள் எண்வகை மயக்கங்களும் இருப்பதில்லை.
வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு. - (அருங்கலச்செப்பு 30)
பதவுரை
வரைப்பாய்தல் - மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை
தீப்புகுதல் - எரியில்வீழ்ந்து உயிர் விடுதல்
ஆறாடல் - ஆற்றில் விழுந்து உயிர் விடுதல்
இன்ன உரைப்பின் - இது போல வேறு ஒன்றை சொன்னாலும்
உலக மயக்கு - உலகத்தின் மயக்கம் ஆகும்
பொருள்: அனைத்துவகை தற்கொலைகளும் உலகம் உங்களை மயக்கியதால் ஏற்படுவதாகும்.
இஸ்லாம்
"உங்களை நீங்களே கொல்லாதீர்கள், நிச்சயமாக கடவுள் உங்கள் மீது மிக்க கருணையாளர்." - (குர்ஆன் 4:29)
'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி (தடைசெய்து) விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி-1364.)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி - 5778)
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை. (நூல்: முஸ்லிம் 1779)
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்: புகாரி 5671, 6351)
கிறிஸ்தவம்
தற்கொலை பற்றிய கிறிஸ்தவக் கருத்துக்கள் மீது அதிக விவாதங்கள் நடந்துள்ளன, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தற்கொலை பாவம் என்றும் தெய்வ நிந்தனைச் செயல் என்றும் நம்பினர் - விக்கி
என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். - (சங்கீதம் 31:15)
“நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை. நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!”. - (யோபு 1:21)
யூதமதம்
தற்கொலைக்கு எதிரான தடை டிராக்டேட் பாவா காமா 91b இல் உள்ள தாளமுத் குறிப்பிடப்பட்டுள்ளது. Semahot (Evel Rabbati) 2:1–5 தற்கொலை பற்றிய பிற்கால யூத சட்டத்தின் அடிப்படையாக செயல்படுகிறது, ஆதியாகமம் ரப்பா 34:13, இது ஆதியாகமம் 9:5 ஐ அடிப்படையாகக் கொண்ட பைபிள் தடையை அடிப்படையாகக் கொண்டது: "உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்."
"... தற்கொலை செய்துகொள்பவர்களும், அவ்வாறு செய்ய மற்றவர்களுக்கு உதவுபவர்களும் ஏராளமான உள்நோக்கங்களால் செயல்படுகிறார்கள். இவற்றில் சில காரணங்கள் உன்னதமானவை அல்ல, எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் ஆசைகள் அம்மா அல்லது அப்பா அனுப்பப்படுவதைப் பார்க்க வேண்டும். 'வீணில்லாத' சுகாதாரப் பராமரிப்பிற்காக அவர்களின் பரம்பரையை வீணடிக்க வேண்டாம், அல்லது இறுதி நோயுற்றவர்களுக்கு முடிந்தவரை குறைந்த பணத்தை செலவழிக்க காப்பீட்டு நிறுவனங்களின் விருப்பம்."
கடுமையான வலிக்கு சரியான பதில் தற்கொலை அல்ல, ஆனால் சிறந்த வலி கட்டுப்பாடு மற்றும் அதிக வலி மருந்து என்று கட்டுரை கூறுகிறது . பல மருத்துவர்கள், போதுமான வலி மருந்துகளை வழங்க மறுப்பதன் மூலம் இத்தகைய நோயாளிகளை வேண்டுமென்றே வலியில் வைத்திருக்கிறார்கள்: சிலர் அறியாமையால்; மற்றவர்கள் சாத்தியமான போதைப் பழக்கத்தைத் தவிர்க்க; மற்றவை ஸ்டோயிசத்தின் தவறான உணர்விலிருந்து . இத்தகைய பகுத்தறிவு வடிவங்கள் "வினோதமானவை" மற்றும் கொடூரமானவை என்று பழமைவாத யூத மதம் கருதுகிறது, இன்றைய மருந்துகளால் மக்கள் நிரந்தர சித்திரவதைக்கு எந்த காரணமும் இல்லை.
தற்கொலை – 2:195, 4:29,30
பதிலளிநீக்குசஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பதிலளிநீக்குநபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க் களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "அவரோ நரகவாசியாவார்'' என்று கூறினார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், "நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
நூல்: புகாரி 2898
யோபு 3:21
பதிலளிநீக்குஅம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான்.
In Context | Full Chapter
நீதிமொழிகள் 5:5
அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள்.
In Context | Full Chapter
நீதிமொழிகள் 8:36
ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான். என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.”