தமிழர் மதம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறநானூறு:192
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் - குறள் 505
பொருள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் செயலே.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். - குறள் 319
பொருள் முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்துஅண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே (திருமந்திரம் - 1647)
விளக்கம்: புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!
கிறிஸ்தவம்
இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். - வெளி 20:12தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுவார்கள். நீதிமொழிகள் 14:14
“ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.
இஸ்லாம்
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். திருக்குரான் - 45:22.நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும் - 17.7.
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான். - 4:123.
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். - 4:124.
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. 2:281.
8 நான் பார்த்தவரையில், வினை* விதைப்பவன் வினை* அறுக்கிறான்.
பதிலளிநீக்குகெட்டது செய்பவனுக்குக் கெட்டதுதான் நடக்கிறது.
9 கடவுளுடைய மூச்சுக்காற்று அவனை அழிக்கிறது.
அவருடைய கோபம் அவனைப் பொசுக்குகிறது.
jw.org/ta/லைப்ரரி/பைபிள்/ஆராய்ச்சி-பைபிள்/புத்தகங்கள்/யோபு/4/
உபாகமம் 24:16 ESV / 49 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
பதிலளிநீக்கு“தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்காகவும், பிள்ளைகள் தங்கள் தந்தைகளுக்காகவும் கொல்லப்பட மாட்டார்கள். ஒவ்வொருவரும் அவரவர் பாவத்தினிமித்தம் கொல்லப்படுவார்கள்.
முன்பகல் செய்யின் பின்பகல் விளையும் பாடல் - 83
பதிலளிநீக்குபிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை
பிறர்க்கு இன்னாது என்றுபேர் இட்டுத் - தனக்கு இன்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற.
விளக்கவுரை நாம் மற்றவர்க்குத் துன்பம் செய்வதைக் காட்டிலும் அறியாமை இல்லை. மற்றவர்க்குச் செய்யும் துன்பம் எனக் கருதித் தனக்குப் பயிர் செய்து வினையைத் தேடிக்கொள்வதை விடப் பிற அறியாமை தான் உண்டோ! நீ சொல்வாய்!
(மரணத்திற்கு முன்னதாக) உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முற்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ, அதனை அல்லாஹ்விடம் மறுமையில் பெற்றுக் கொள்வீர்கள். (2:110)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குفَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். 99:7
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 99:8
பிறர்க்கு முற்பகல் செய்த தீமை பிற்பகல் விளைதல்
பதிலளிநீக்குஅறநெறிச்சாரம் பாடல் - 82
நம்மைப் பிறர்சொல்லும் சொல்இவை நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்குஇவை என்று எண்ணி
உரைகள் பா¢யாது உரைப்பார்இல் யாரே
களை கணதில்லா தவர்.
விளக்கவுரை நம்மைக் குறித்து மற்றவர் கூற வேண்டும் என்று நாம் கருதும் சொற்கள் இவை; நாம் ஆராயாமல் மற்றவரை இகழ்ந்து கூறும் சொற்கள் இவை என ஆராய்ந்து இரங்காமல் (பாராமல்) பிறர் மீது கடுஞ்சொற்கள் கூறுபவராயின் அவரைப்போல் பற்றுக்கோடு அற்றவர் யார்? ஒருவரும் இல்லை.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html
முன்பகல் செய்யின் பின்பகல் விளையும் பாடல் - 83
பதிலளிநீக்குபிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை
பிறர்க்கு இன்னாது என்றுபேர் இட்டுத் - தனக்கு இன்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற.
விளக்கவுரை நாம் மற்றவர்க்குத் துன்பம் செய்வதைக் காட்டிலும் அறியாமை இல்லை. மற்றவர்க்குச் செய்யும் துன்பம் எனக் கருதித் தனக்குப் பயிர் செய்து வினையைத் தேடிக்கொள்வதை விடப் பிற அறியாமை தான் உண்டோ! நீ சொல்வாய்!
ரோமர் 2:6-8
பதிலளிநீக்குஒவ்வொரு நபருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப வழங்குவார் : நன்மை செய்வதில் விடாமுயற்சியால் புகழ் மற்றும் மரியாதை மற்றும் அழியாமை, நித்திய ஜீவனைத் தேடுபவர்களுக்கு; ஆனால் சுயநல லட்சியம் கொண்டவர்கள் மற்றும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், ஆனால் அநீதிக்கும், கோபத்திற்கும், கோபத்திற்கும் கீழ்ப்படிவார்கள்.
ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே! பாடல் - 150
பதிலளிநீக்குதானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி.
விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.
YOUCAT 288 கூறுகிறது: "மனிதன் மனப்பூர்வமாகவும் தன்னார்வமாகவும் செய்யும் அனைத்திற்கும் பொறுப்பு. அவன் வற்புறுத்தலின் கீழ், பயம், அறியாமை, போதைப்பொருள்களின் செல்வாக்கின் கீழ் அல்லது கெட்ட பழக்கங்களின் சக்தியால் அவன் செய்த காரியத்திற்கு யாரும் (முழுமையாக) பொறுப்பேற்க முடியாது.
பதிலளிநீக்குஉடலை ஓம்புதலால் பயன் இல்லை பாடல் - 130
பதிலளிநீக்குபுகாஉண்பார் அல்உண்ணார் போகும் துணைக்கண்
தவாவினை வந்து அடையக் கண்டும் - அவாவினைப்
பற்றுச்செய்து என்னைப் பயம்இன்றால், நல்நெஞ்சே!
ஒற்றி உடம்பு ஓப்புதற்கு.
விளக்கவுரை என் நல்ல மனமே! பகலில் சோற்றை உண்ட வரும் இரவில் சோறுண்ண இராது இறந்து போவர்; தவறாது ஒருவன் செய்த வினையே அவனிடம் வந்து சேரும் என்பதை அறிஞர் வாயால் கேட்டு அறிந்தும், உடைமையற்ற இந்த உடம்பைப் பாதுகாப்பதற்குப் பொருள்களிடம் ஆசை கொள்வதால் வரும் பயன் யாது? ஒன்றும் இல்லை!
பிறர்க்கு முற்பகல் செய்த தீமை பிற்பகல் விளைதல் பாடல் - 82
பதிலளிநீக்குநம்மைப் பிறர்சொல்லும் சொல்இவை நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்குஇவை என்று எண்ணி
உரைகள் பா¢யாது உரைப்பார்இல் யாரே
களை கணதில்லா தவர்.
விளக்கவுரை நம்மைக் குறித்து மற்றவர் கூற வேண்டும் என்று நாம் கருதும் சொற்கள் இவை; நாம் ஆராயாமல் மற்றவரை இகழ்ந்து கூறும் சொற்கள் இவை என ஆராய்ந்து இரங்காமல் (பாராமல்) பிறர் மீது கடுஞ்சொற்கள் கூறுபவராயின் அவரைப்போல் பற்றுக்கோடு அற்றவர் யார்? ஒருவரும் இல்லை.
முன்பகல் செய்யின் பின்பகல் விளையும் பாடல் - 83
பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை
பிறர்க்கு இன்னாது என்றுபேர் இட்டுத் - தனக்கு இன்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற.
விளக்கவுரை நாம் மற்றவர்க்குத் துன்பம் செய்வதைக் காட்டிலும் அறியாமை இல்லை. மற்றவர்க்குச் செய்யும் துன்பம் எனக் கருதித் தனக்குப் பயிர் செய்து வினையைத் தேடிக்கொள்வதை விடப் பிற அறியாமை தான் உண்டோ! நீ சொல்வாய்! https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html
ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே!
பதிலளிநீக்குதானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி. (பாடல் - 150)
விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.
பதிலளிநீக்கு5:105. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்.
16:33. (அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
21:46. உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்.
39:61. எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக் கொண்டார்களோ அவர்களை ஒரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
சிறந்த துணையாவது செய்வினையே பாடல் - 151
பதிலளிநீக்குசெய்வினை அல்லால் சிறந்தார் பிறர்இல்லை
பொய்வினை மற்றைப் பொருள்எல்லாம் - மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு.
விளக்கவுரை நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாய் அமைவதின்றிச் சிறந்த துணைவர் வேறு எவரும் இல்லை! நிலை பெற்றவை என நீ எண்ணுபவை எல்லாம் அழியும் தன்மை உடையவையே! உண்மையை அறிய வினவினால் தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் யார்? நீ இவர்களுக்கு யார்? (இவர்கள் உன்னுடன் எத்தகைய தொடர்பை உடையவர்?) இவர்கள் நிலையான தொடபற்றவர்கள்.
வெண்பா : 30
பதிலளிநீக்குதாம்தாம் முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
விளக்கம்:
ஒருவன் செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.
உபாகமம் 24:16
பதிலளிநீக்கு“பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்
பொழிப்புரை : பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அது அல்லாத கசடும் அன்றி அவரோடு உடன் செல்லாது.
பதிலளிநீக்குhttps://keyemdharmalingam.blogspot.com/2012/02/5-01-122501.html
“உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றான். ( அல்குர்ஆன்: 42: 30 )
பதிலளிநீக்குhttps://vellimedaiplus.blogspot.com/2015/05/blog-post_37.html
“உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும் போது ”இது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கின்றீர்கள். இது போன்ற இருமடங்கு துன்பம் உங்கள் கரங்களால் எதிரிகளுக்கு (பத்ரு போரில்) ஏற்பட்டிருந்ததே!
பதிலளிநீக்குநபியே! நீர் அவர்களுக்கு கூறிவிடும்! “இத்துன்பம் உங்களால் தான் வந்தது. திண்ணமாக! அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்”. ( அல்குர்ஆன்: 3: 165 )
https://vellimedaiplus.blogspot.com/2017/04/blog-post_30.html
“உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். எனினும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றான்”. ( அல்குர்ஆன்: 42: 30 )
பதிலளிநீக்கு“ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம், சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது. இன்னும் சிலரை நாம் பூமியில் புதைத்து விட்டோம். மேலும் சிலரை நாம் மூழ்கடித்து விட்டோம்.
அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக்கொண்டிருந்தார்கள்”. (அல்குர்ஆன்: 29:40)
https://vellimedaiplus.blogspot.com/2017/04/blog-post_30.html
அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
பதிலளிநீக்குஅல்குர்ஆன் 2:134
“அல்லாஹ் அல்லாதோரையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்றும் கூறுவீராக
அல்குர்ஆன் 6:164
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை
அல்குர்ஆன் 17:15
https://onlinetntj.com/articles/egathuvam/islam-and-economy-16