தமிழர் சமயம்
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லிஉன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழகண் அவன் என்று கருதும் அவர்கட்குபண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே. - (திருமந்திரம் 8211)
பதப்பொருள்: அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி)
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்)
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து)
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).
விளக்கம்: அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.
இஸ்லாம்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - (குர்ஆன் 1:1)
முதலில் ரப்புல் ஆலமீன் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். ரப்பு என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன் என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன் என்ற சொல்.
அகில உலகையும் பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன் என்பதன் பொருள்.
கிறிஸ்தவம்
ஏனெனில் பூமியும் அதில் உள்ள அனைத்தும் இறைவனுடையது . - (1 கொரிந்தியர் 10:26)
'நிலம், மேலும், நிரந்தரமாக விற்கப்படாது, நிலம் என்னுடையது; ஏனென்றால் நீங்கள் என்னுடன் அந்நியர்களாகவும் வெளிநாட்டவர்களாகவும் இருக்கிறீர்கள். (லேவியராகமம் 25:23)
“ஏனென்றால், காட்டில் உள்ள ஒவ்வொரு மிருகமும், மலைகளில் உள்ள கால்நடைகளும் என்னுடையவை. - (சங்கீதம் 50:10)
'வெள்ளி என்னுடையது, பொன்னும் என்னுடையது' என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (ஆகாய் 2:8)
இதோ, எல்லா ஆத்மாக்களும் என்னுடையவை; தந்தையின் ஆன்மா மற்றும் மகனின் ஆன்மா என்னுடையது. - (எசேக்கியேல் 18:4)
ஆண்டவரே, உமது செயல்கள் எத்தனை! ஞானத்தில் அவை அனைத்தையும் உண்டாக்கினாய்; பூமி உங்கள் உடைமைகளால் நிறைந்துள்ளது. - (சங்கீதம் 104:24)
"நான் அவருக்குத் திருப்பிச் செலுத்தும்படி எனக்கு யார் கொடுத்தது? வானத்தின் கீழுள்ள அனைத்தும் என்னுடையது. - (யோபு 41:11)