குர்ஆன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குர்ஆன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிறிஸ்தவர்களின் பைபிள் முஸ்லிம்களின் குரான் இரண்டுமே தோரா புத்தகத்திலிருந்து வந்ததாக அறியப்படுகிறதே, இது உண்மையா?


இதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ள உலக சமயங்களின் மாபெரும் வடிவமைப்பின் அடிப்படையை தெரிந்து இருக்க வேண்டும்.

முதலில் நூல் / புத்தகம் என்றால் என்ன? நூல் என்றாலே இறைவனால் வழங்கப்பட்டதுதான்.



 

தொல்காப்பியத்தில் முதல்நூல் வழிநூல் தத்துவத்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?











அதாவது ஆரம்பகாலத்தில் நூல் என்றாலே அது இறைவனால் வழங்கப் பட்ட சமய நெறி நூல் தான், அது பின்னாளில் வேதம், ஆகமம், மறைநூல், கிதாப் என்று அறியப்பட்டது. அது ஒருமுறை வழங்கப்பட்டதும் முடிந்துவிடவில்லை. அது தொடர்ந்து வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முனைவர்கள் மூலம் வரக்கூடியது ஆகும். அதில் முதலில் வந்த நூல் முதல் நூல் என்றும், அந்த குறிப்பிட்ட முதல் நூலை தொடர்ந்து வரக்கூடிய நூல்கள் அதன் வழிநூல்கள் ஆகும். இவ்வாறு வரக்கூடிய நூல்கள் சில பொழுது ஒரே பெயரில் வழங்கப்பட்டது எனவே அது ஒரே நூலாக தொகுக்கப் பட்டது. சில பொழுது வெவ்வேறு பெயரில் வழங்கப்பட்டு அது வழி நூல் என அடையாளம் காணப்பட்டு அதன் முதல் நூலின் கீழ் இணைக்கப்பட்டது. உதாரணமாக,

  • ரிக் வேதம் எழுதியவர்கள் 346 ரிஷிகள் ,
  • பைபிள் எழுதியவர்கள் 10 இயேசுவின் சீடர்கள் மற்றும் துறவிகள்,
  • தோராவை எழுதியவர்கள் 22 தீர்க்கதரிசிகள்,
  • தேவாரம் எழுதியவர்கள் 3 நாயன்மார்கள்,
  • புறநானூறு எழுதியவர்கள் 150 புலவர்கள்,
  • அகநானூறு எழுதியவர்கள் 146 புலவர்கள்,
  • நற்றிணை எழுதியவர்கள் 275 புலவர்கள் ,
  • குறுந்தொகை எழுதியவர்கள் 206 புலவர்கள் ,
  • நாலடியார் எழுதியவர்கள் பல சமண முனிவர்கள்,
  • நபிமொழி எழுதியவர்கள் பல இமாம்கள்

மேலும் இந்த பட்டியல் மிக நீண்டது. அனைத்து சமயங்களிலும் இது எப்படி சாதித்தியமானது என்று நாம் சிந்தித்ததுண்டா?

இந்த வழிநூல்கள் அடையாளம் காணப்படாமல், அல்லது அடையாளம் காணப்பட்டும் ஒரே பெயரில் இணைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. உதாரணமாக,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

இந்த பாடல் மூலம்

  • திருக்குறள்
  • உலகில் உள்ள நான்கு மறைகள்
  • மூவர் தமிழனா தேவாரம்
  • திருவாசகம்
  • திருமந்திரம்

ஒன்று என்று அறிய முடிகிறது. இந்த பாடலின் அடிப்படையில் ஆராய்ந்தால் இவை அனைத்தும் ஒரே கருத்தை கூறுவதை உணர முடியும். மேலும் நாலடியாரின் சுருக்கம்தான் குறள் என்பதும், குறளின் சுருக்கம்தான் ஆத்திச்சூடி என்பதை ஆய்வாளர்கள் அறிவர்.

சரி, இதற்கும் ஆபிரகாமிய மதங்களுக்கும் என்ன தொடர்பு.?

ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் ஒரே மொழியை பேசியதையும் அவர்கள் ஒரே சமயத்தை பின்பற்றியதையும் நாம் அறிவோம்.

பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது” (ஆதியாகமும்11:1)

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)

பின்னாளில் அவர்கள் அனைவருக்கும் தூதர்கள் மூலம் வேதம் சென்றடைய வேண்டுமே? அதற்கு கடவுள் என்ன வழியை கையாண்டார்? இந்த திருமந்திர பாடல் ஒரு தெளிவான பதிலை தருவதாக நம்பலாம்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால்,

  • நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர்
  • அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்
  • அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நந்திகள் உள்ளனர்.
  • (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
  • மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர்
  • நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது
  • மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
  • வடக்கு (பதஞ்சலி (அ) வியாக்ரமர்) - ஆரிய வேத பொருள்
  • தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
  • கிழக்கு (பதஞ்சலி (அ) வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)

அதாவது முதல் நூல் மொத்தம் நான்கு உண்டு, அதனை தொடர்ந்து வரக்கூடிய நூல்கள் அந்த குறிப்பிட்ட முதல் நூலின் வழிநூல்கள் ஆகும்.

மேற்கில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் வேதம் கொண்டு வந்தவர் ஒரே தேவர், அவர் சிவயோக மாமுனி என்று தமிழர் சமயத்திலும், ஆபிரகாமிய மதங்களில் தேவர்களின் தலைவரான அவர் ஜிப்ராயீல் / கேபிரியேல் என்று அழைக்கப் படுகிறார்.

முடிவுரை:

குர்ஆன் காப்பி அடித்தது அல்ல. மாறாக இந்த வேதங்கள் அனைத்தின் மூலமம் ஒரே கடவுள், அவை அனைத்தையும் தூதர்களுக்கு கொண்டுவந்த தேவர் ஒருவர், இந்த மக்கள் அனைவரும் ஒரே பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் (ஆப்ரஹாமின் குடும்பம்) என்பதால் ஒற்றுமைகள் பல உண்டு எனபதுதான் சரியான புரிதல்.

திருமந்திரம் & திருக்குர்ஆன் கூறும் இறைவன் யார்?

ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே.

(திருமந்திரம் கடவுள் வாழ்த்து)



















2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான அதாவது கி.மு.-வை சேர்ந்த திருமந்திரத்துக்கு கி.பி. 1900 களின் நடுவில் பொழிப்புரை எழுதிய பொழிப்புரையாளர்களின் விளக்கத்தை ஓரம் வைத்துவிட்டு  இந்த பாடலுக்கான விளக்கத்தை திருமந்திரத்தில் இருந்தே எடுப்பதுதான் சரியான வழிமுறை. பிறகு அதனோடு இஸ்லாமிய போதனைகளை ஒப்பிடுவோம்.

மேலும் திருமந்திரத்தில் இடைச்சொருகள் இருப்பதையும் நாம் கருத்திக்கொண்டு இந்த ஒப்பீட்டை ஆய்வு செய்ய வேண்டும். இந்த திருமந்திர கடவுள் வாழ்த்துப் பாடலானது இறைவனின் பண்புகளை பட்டியலிடக் கூடியதாக இருக்கிறது. இந்த பட்டியலின் விளக்கமாகவும் இந்த பண்புகளை உடைய இறைவன் தான் இதில் உள்ள அறங்களை மக்கள் பின்பற்ற வகுத்து கொடுத்துள்ளான் என உணரும் முகமாக இந்த நூல் அமைந்துள்ளது. எனவேதான் இப்பாடலுக்கான விளக்கத்தை இதற்க்கு தொடர்பில்லாத வேறு நூல்களில் இருந்து எடுப்பது தவறான வழிமுறை ஆகும் குறிப்பாக மாற்று மொழி நூலிலிருந்து முதல் பொழிப்புரை வழங்குவது பிழை. இப்பாடல்கள் உண்மையான விளக்கத்தை திருமந்திரத்தை கொண்டு விளக்கிய பிறகு மாற்று வேதநூல்களோடு ஒப்பிடுவதன் மூலம் அது நமது தத்துவத்தோடு ஒத்துபோகிறதா இல்லையா என்று வேண்டுமானால் கண்டறியலாம். இந்த அணுகுமுறையை கொண்டே இந்த ஒப்பீடு செய்யபப்டுகிறது.

திருமந்திரம் & திருக்குர்ஆன் ஒப்பீட்டாய்வு:


1) ஒன்றவன் தானே (
ஒன்று அவன் தானே): ஒரே ஒருவனாய் தானே உருவானவன்: ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதவன் எனபதுதான் ஒன்று என்பதன் விளக்கம். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் லிங்கமும் சிலையும் படமும் புராணமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல எனபதை இது உணர்த்துகிறது.

திருமந்திரம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - (திருமந்திரம்)

திருக்குர்ஆன்  

அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (குர்ஆன் 112:1&3)

2) இரண்டவன் இன்னருள் (
இரண்டு அவன் இன் அருள் நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

திருமந்திரம் 

செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. (திருமந்திரம் ஊழ் 2848)

பொழிப்புரை: கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் (நன்மை தீமை எல்லாம்) சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்

திருக்குர்ஆன்   

அவர்களுக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் தீமை நேர்ந்தால், “இது உம்மிடமிருந்து வந்தது” (நபியே!) என்கிறார்கள். நீர் கூறுவீராக: “எல்லாமே அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன.” ஆனால், இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது, ஒரு உண்மையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும் அளவிற்கு? உனக்கு நேர்வது எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது; உனக்கு நேரிடுவது எல்லாம் உன்னிடமிருந்தே வருகிறது… (குர்ஆன்  4:78-79)

3) நின்றனன் மூன்றினுள் (
நின்றனன் மூன்றினுள்நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு,  இறைவன் ஏற்பாடு அல்ல.

திருமந்திரம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. (திருமந்திரம் 404)

பொழிப்புரை: உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் சிவன் ஒருவன் தானே. அவன் அளிக்கும் கடவுள் எனும் கருத்து பிழை.

திருக்குர்ஆன்   

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40)  
 
இந்த முத்தொழிலில் இறைவன் தன்னுடன் யாரையாவது கூட்டாக அல்லது தனக்கு இணையாக வைத்துள்ளானா? அதாவது முத்தொழில் அழிக்கும் தொழிலை மட்டும் தான் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு மற்ற தொழிலை பொறுப்பு கொடுக்கும் வேலை நடைபெற்றதா? இல்லை என கீழ்வரும் பாடல் சொல்லுகிறது.

திருமந்திரம்  

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. (திருமந்திரம் 110)
 
பொழிப்புரை: இறைவனை மூன்று ஐந்து என கருதுபவர்கள் ஆதியானவனை அறியாத அறிவில்லாத குருடர்கள் ஆவர். நீதி செலுத்துவது சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் மூவர் என்று பிரித்து கூறுகிறவர்கள் உளறுகிறாரே தவிர வேறு இல்லை.

திருக்குர்ஆன்   

(நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை. (குர்ஆன் 18:26)
 
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (குர்ஆன் 5:73)

4) நான்கு உணர்ந்தான் (நான்கு உணர்ந்தான் நான் மறைகளையும் உணர்ந்தவன். 

திருமந்திரம் 

நான்மறை என்பது என்ன? அது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் குறிக்கிறது. அவை அனைத்தையும் உணர்ந்தவன் சிவன்.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருக்குர்ஆன்   

நிச்சயமாக இது (குர்ஆன்) நம்மிடத்திலுள்ள ‘உம்முல் கிதாபில் (தாய் நூலில் - லவ்ஹுல் மஹ்ஃபூளில்) இருக்கிறது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். (குர்ஆன் 43:4)

 ''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191)

குறிப்பு: உலக நான்மறைகள் அனைத்தும் இந்த  லவ்ஹுல் மஹ்ஃபூளின் ஒரு பகுதியாகும்.

5) ஐந்து வென்றனன் (ஐந்து வென்றனன்)  இதற்கு நான்கு வகையான விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது.

முதல் விளக்கம்: மனிதனுக்கு நிகழும் ஐந்து நிலைகளை வென்றவன் 
    1. பிறப்பு, 
    2. பசி, 
    3. காமம், 
    4. தூக்கம், 
    5. இறப்பு 
எனும் ஐந்தை வென்றவன் என்று கூறுவது மற்ற விளக்கங்களை விட பொருத்தமான விளக்கமாக இருக்கலாம்.  

இரண்டாவது விளக்கம்: ஐம்புலன்களை வென்றவன் 

இது ஐம்புலன்களாகிய 
    1. மெய், 
    2. வாய், 
    3. கண், 
    4. மூக்கு, 
    5. செவி
ஆகிய ஐந்து புலன்களை வென்றவன் என்று பொருள் கொள்ளலாம்.  இறைவனுக்கு உருவம் உண்டு, இந்த ஐந்து புலன்களும் ஆனால் மனிதர்களை போல அல்ல. எனவே இந்த புளகிலையும் அவனது கட்டுப்பாட்டில் வைத்து இருபப்வன் என்று பொருள் கொள்வதும் சிறந்த விளக்கமே.

மூன்றாவது விளக்கம்: ஐம்பெரும் பூதங்களை வென்றவன் 

ஐம்பெரும் பூதங்களான 
  1. புவி, 
  2. ஆகாயம், 
  3. காற்று, 
  4. நீர் 
  5. நெருப்பு 
ஆகியவற்றை வென்றவன் என்று பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளின் தேவை இல்லாதவன் என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆனால் அண்டங்களுக்கு அப்பால் உள்ளவனுக்கு இந்த புவியில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது.

நான்காவது விளக்கம்: பஞ்சகீர்த்தியம் 

    1. படைத்தல், 
    2. காத்தல், 
    3. அழித்தல், 
    4. மறைத்தல், 
    5. அருளல் 

என்ற ஐந்து தொழில்களை (பஞ்சகீர்த்தியம்) புரிபவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவும் சரியான விளக்கம் அல்ல. ஏனெனில் "நின்றனன் மூன்றினுள்" எனபதால் ஏற்கவே இதில் மூன்று அம்சங்கள் இடம் பெற்று உள்ளது.

இறுதியாக இந்த நான்கு விளக்கங்களும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடிய தேவைகள் மற்றும் குணங்கள் எதுவும் இல்லாதவன் இறைவன் என்ற பொருளை தருகிறது. இருப்பினும் முதல் இரண்டு விளக்கமே இறைவனுக்கு மிக நெருக்கமாக உள்ளது. இதற்ககான திருமந்திர ஆதாரங்களை இப்பொழுது காண்போம்.

திருமந்திரம் 

சிவன் பிறப்பு இறப்பற்றவன்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25

 சிவ பெருமான் பசியற்றவன் 

ஒடுங்கி நிலைபெற்ற உத்தம ரானால்
கடும் பசி யில்லை கற்று விட்டோர்க்கே
படும் பசி யில்லை பரனை நினையிற்
கடும் பசி யில்லை கழலடி யோர்க்கே.

விளக்கம்: சிவபெருமான் என்றும் பசியற்றவன்; அவனை உணர்ந்தவர்களுக்கும், அவனுடன் கலந்தவர்களுக்கும் (திருமூலர் குறிப்பிடும் 'கற்றுவிட்டோர்') உலகியல் பசியும், பற்றுதலும் நீங்கிவிடும் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.

சிவபெருமான் காமம் அற்றவன் 

காமனைக் காய்ந்தவன் காமத்தை வென்றவன்
ஆமள வாலுமக் காமமும் இல்லவன்
தீமைகொள் காமம் தீர்த்தருள் செய்தவன்
சேமமென் ஆவிச் சிவனவன் ஆமே.

சிவன் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் 

 

திருக்குர்ஆன்   

அல்லாஹ் எப்படிப்பட்டவன்? 

பிறப்பற்றவன்: அவர் (அல்லாஹ்) யாரையும் பெறவில்லை; எவராலும் பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

பசியற்றவன்: அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை (குர்ஆன் 6:14)

காமமற்றவன்: மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (குர்ஆன் 35:15)

தூக்கமற்றவன்: அவனைத் சிறு தூக்கமோ, உறக்கமோ பீடிப்பதில்லை (குர்ஆன் 2:255)

இறப்பற்றவன்அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; (குர்ஆன் 2:255)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் (குர்ஆன் 112:2.) 

அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் 

நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (அல்குர்ஆன் 2:20, 41:39)

6) ஆறு விரிந்தனன் (ஆறு விரிந்தனன் மந்திரம்: மறை, பதம்: உணவு, வன்னம்: எழுத்து, புவனம்: உலகம், தத்துவம்: உண்மை, கலை: மொழி என்னும் ஆறாக விரிந்தனன் என்று 19 ஆம் நூற்றாண்டில் விளக்கம் கொடுக்கப்பட்ட்டது. ஆனால் ஆறு நாட்களில் உலகை படைத்தான் என்பதுதான் உண்மைக்கு நெருக்கமான விளக்கம் ஆகும்.   

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்   

“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் ; மேலும், அவன் அர்ஷில் உறுதியாக நிலைபெற்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆளுகிறான். அவனது அனுமதியைப் பெற்றாலன்றி, எந்தப் பரிந்துரைப்பவரும் அவனிடம் முறையிட முடியாது. இவனே உங்கள் இறைவன் அல்லாஹ்; எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்: நீங்கள் அறிவுரை பெற மாட்டீர்களா?” (ஸூரா யூனுஸ் 10.3)

7) எழு உம்பர் சென்றனன் (
ஏழ் உம்பர்ச் சென்றனன்பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

திருமந்திரம் 

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (திருமந்திரம் 1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

திருக்குர்ஆன்   

ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

8) இருந்தான் உணர்ந்து எட்டே (
தான் இருந்தான் உணர்ந்து எட்டே தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

திருக்குறள் & திருக்குர்ஆன்  

தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.
    1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
    2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
    3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
    4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
    5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
    6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
    7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
    8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
திருமூலரின் திருமந்திரம் குறிப்பிட்ட இறைவனது எட்டு குணங்களை திருக்குறளிலிருந்து விளக்கியதன் காரணம் ஓளவையார்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர் - (நல்வழி 40)

மனிதன் அழைத்தால் எட்டும் தூரத்தில் சிவன் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்    

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்; அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் பிடரிநரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம் (குர்ஆன் 50:16) 
 
முடிவுரை :

உலகம் முழுவதும் ஒரே குலம் உலகம் முழுமைக்குக்கும் ஒருவனே தேவன்.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html

http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm