தமிழர் சமயம்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர். - (குறள் 926)மணக்குடவர் உரை: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்இயங்கும் மடவார்தம் இன்பமே எய்திமுயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. - (திருமந்திரம் 317)(ப. இ.) மெய்ம்மையினையும் மெய்ப்பொருள் உண்மையினையும் அழித்தொழிக்கும் பழிபடு கள்ளினை யுண்பார் வழி குழி தெரியாது வீழ்ந்து மயங்குவர். தீராப் பெருந்துன்பம் எய்தித் தியங்குதலாகிய கலக்கமுற்றுக் கவலைகூர்வர். மேலும் அவர் பிறப்பு இறப்பு ஆகிய பெருந் துன்பத்துள் வீழ்த்தி இயக்கும் இழிகாமமும் கழிகாமமும் மாறாப் பெண்ணியலாரை நண்ணுவர். அம் மடவார் தரும் சிற்றின்பமே முற்றின்பமாகக் கொண்டு முயங்குவர். இறைவன் திருவடியுணர்வாகிய சிறந்த நயமிக்க சிவஞானஞ்சேர்ந்து முதன்மையடையார். இந் நிலையினால் பிறழா நிகழ்ச்சியாய் என்றும் நிகழும் இடையறா இன்புமாம். திருவடிப்பேற்றினைக் கள்ளுண்பான் எய்தான். எய்துமே : ஏகாரம் எதிர்மறை. முந்தார் முதன்மையடையார். இயங்கும் மடவார்: இயங்கும் பிறவினைப் பொருளில் வந்த தன்வினை; பிறப்பு இறப்புக்களில் உழலச் செய்து இயக்கும் பெண்ணியலார்.
இஸ்லாம்
புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் – அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் – ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (குர்ஆன் 2:219)
மதுபானத்தையும், அதை பருகுபவரையும், பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்ப வரையும், அதை சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) (நூல்: இப்னு மாஜா 3371)
அதிகம் போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள். (முஸ்லிம் 3995)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள். - (முஸ்லிம் 4071)
கிறிஸ்தவம் & யூதமதம்
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - (லேவியராகமம் : 10: 8 - 11)
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - (நீதிமொழிகள் 20:1)
ஆனாலும் இவர்களும் (Wine) திராட்சரசத்தால்மயங்கி, (Stong Drink) மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள். ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். - (ஏசாயா 28:7)
அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - (லூக்கா 1:15)
மருத்துவ ஆய்வு வெளியீடு
புற்றுநோய் ஆபத்து முதல் துளி ஆல்கஹால் தொடங்குகிறது: WHO
புற்றுநோய்க்கான ஆபத்து முதல் துளி மதுவில் இருந்து தொடங்குகிறது, எந்த அளவு ஆல்கஹால் மனித ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என்று கூற முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் “ஆல்கஹால் நுகர்வு என்று வரும்போது, ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளது.
யூத பயங்கரவாதிகளின் இரகசிய திட்டம் நூலிலிருந்து - page 7
921ஆம் குறள் பொழுதெல்லாம் கள்ளின்மீது பெருவிருப்பம் கொண்டு ஒழுகுபவர் அஞ்சப்படார்; தோற்றமும் இழப்பர் என்கிறது.
பதிலளிநீக்கு922ஆம் குறள் கள் உண்ண வேண்டாம்; உணில் நல்லோரால் மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்க எனச் சொல்கிறது.
923ஆம் குறள் பெற்ற தாய் முன்பாயினும் இன்னாதாம்; அவ்வாறு இருக்க, பெரியோர் எதிரில் கள்ளுண்டு மகிழ்தல் எப்படியிருக்கும்? எனக் கேட்கிறது.
924ஆம் குறள் கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு நாண் என்று சொல்லப்படும் நல்ல பெண் எதிரே நிற்காமல் திரும்பிப் போய்விடுவாள் என்கிறது.
925ஆம் குறள் விலை கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்தல் செய்வதறியாமை காரணமாக உடைத்து எனச் சொல்கிறது.
926ஆம் குறள் உறங்கினார் செத்தாரைவிட வேறாகத் தோன்றார்; எப்பொழுதும் கள் குடிப்பவர் நஞ்சுண்பவரே என்கிறது.
927ஆம் குறள் நாளும் கள்ளை நாடிக் குடித்து கண் சுழல்பவர் உள்ளநடத்தை அறிந்து உள்ளூராரால் சிரிக்கப்படுவர் எனச் சொல்கிறது.
928ஆம் குறள் கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதைக் கைவிடுக; மனத்துள் நிறுத்தியிருந்த மறைகளும் முற்பட்டு வெளிப்படும் என்கிறது.
929ஆம் குறள் கள்ளுண்டு மயங்கியவனை அறிவு சொல்லித் திருத்துதல் நீருள் மூழ்கினவனைத் தீவட்டியால் தேடுவது போன்றது என்கிறது.
930ஆவது தான் கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில் குடித்துக்கூத்தாடுபவனைக் காணும் பொழுது அவனது சோர்வு நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும் என்கிறது.
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/093Kallunnaamai.aspx
முதல் தந்திரம்
பதிலளிநீக்கு17. கள்ளுண்ணாமை
1 கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன் தன் சிவ ஆனந்தத் தேறலே
2 சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச்
சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே
3 காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே
4 வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே
5 உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார்
தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே
6 மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே
7 மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே
8 இராப் பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார்
இராப் பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப் பகல் மாயை இரண்டு இடத்தேனே
9 சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவ ஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே
10 சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே.
11 தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த்தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவ ஆனந்தத் தேறலே.
12 யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே.
https://www.tamilvu.org/library/l4100/html/l41A0ind.htm
கள்ளுண்ணாமை திருக்குறள்
பதிலளிநீக்குஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
குறள் எண்: 921
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
குறள் எண்: 922
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
குறள் எண்: 923
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
குறள் எண்: 924
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
குறள் எண்: 925
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
குறள் எண்: 926
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
குறள் எண்: 927
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
குறள் எண்: 928
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
குறள் எண்: 929
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
குறள் எண்: 930
https://www.thirukkural.net/ta/kural/adhigaram-093.html
https://mdmkfriends.blogspot.com/2013/04/blog-post_3414.html
பதிலளிநீக்குகுடியால் ஏற்படும் தீங்கு : aranrisaram பாடல் - 86
பதிலளிநீக்குஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளியுடையர் என்று உரைக்கும் தேசும் - களிஎன்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவைஎல்லாம்
விட்டுஒழியும் வேறாய் விரைந்து.
விளக்கவுரை கள் குடியன் என்னும் பொருளுடைய பழிச்சொல்லால் ஒருவன் குற்றப்படுவானாயின், எல்லாராலும் நன்கு மதிக்கப்படுதலும், அந்தப் புகழுக்கு ஏற்ற செயலும், பெரியோர் இவர் தெளிவான அறிவை உடையவர் என்று கூறும் புகழும் என்னும் இவை அனைத்தும் வேறுபட்டு விரைவில் அவனை விட்டு நீங்கும்.
பதிலளிநீக்குகிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும்
உள்ளன போலக் கெடும். திரிகடுகம் 59
சுற்றத்தார்க்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் காவல் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் நிலைக்காது அழியும். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_12.html
நீதிமொழிகள் 20:1
பதிலளிநீக்குதிராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.
நீதிமொழிகள் 23
பதிலளிநீக்கு29-30 நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும்.
31 மதுவைப்பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது. 32 முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது.
33 மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும். 34 நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும். 35 “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.
நீதிமொழிகள் 31
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
லேமுவேல் என்னும் அரசனது ஞானமொழிகள்
31 இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞானமொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.
2 ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன். 3 உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. 4 லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல. 5 அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும். 6 ஏழை ஜனங்களுக்கு மதுவைக்கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக்கொடு. 7 பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
முதுமொழிக் காஞ்சி
பதிலளிநீக்கு7:3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.
கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன்
சோர்வு இன்மை - ஒழுக்கங்களில் வழுவாதிருத்தல்
கள் உண்போன் சோர்வு இல்லாமல் இருப்பது அரிது. (கள் உண்பவன் ஒழுக்கத்துடன் இருக்க மாட்டான்.)
பதிலளிநீக்குகளியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,
ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை
எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. ஏலாதி 46
கள்ளையுண்டு களியாமலும், கள்ளையுண்ணாமலும், களிப்பாரைக் காணாமலும், வந்த விருந்தினரை ஓம்புதற்குப் பயந்து ஒளியாமலும், விருந்தினரை ஓம்பி மன நோகாமலும், ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின்; தானே மண் அனைத்தும் ஆண்டுகொள்வதுமன்றித் தன் இல்லற வாழ்க்கையினும் ஓங்கி வாழ்வான்.
மது – 2:219, 5:90, 5:91
பதிலளிநீக்கு(மதுவை பிழிய சொல்பவன், பிழிந்து கொடுப்பவன், குடிப்பவன், சுமந்து செல்பவன், யாருக்கு சுமந்து செல்லப்படுகிறதோ அவன், அதை ஊற்றிக் கொடுப்பவன், அதை விற்பவன், அதன் கிரயத்தை சாப்பிடுபவன், அதை வாங்குபவன், யாருக்காக வாங்குகிறானோ அவன் ஆகிய 10 நபர்களை நபி (ஸல்) அவர்கள் மது விஷயத்தில் சபித்தார்கள்- திர்மிதி, இப்னு மாஜா)
பதிலளிநீக்குஏசாயா 56:
பதிலளிநீக்கு11 அவர்கள் பேராசைக்காரர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் திருப்திக்காகச் செய்ய விரும்புகின்றனர்.
12 அவர்கள் வந்து சொல்கிறார்கள், “நான் கொஞ்சம் திராட்சைரசம் குடிப்பேன், நான் கொஞ்சம் மது குடிப்பேன்.
நான் நாளையும் இதனையே செய்வேன். இன்னும் அதிகமாகக் குடிப்பேன்.”
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%2056&version=ERV-TA
புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
பதிலளிநீக்குகலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
நன்மை இலாளர் தொழில். திரிகடுகம் 39
உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_13.html
புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
பதிலளிநீக்குகலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
நன்மை இலாளர் தொழில். . . . .[திரிகடுகம் 39]
விளக்கம்:
உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பதிலளிநீக்குபால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே” பாடல் எண் 246
மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.
https://www.myliddy.info/nagenthiram-karunanithy/thirumanthiram-37
பாடல் எண் :1276
பதிலளிநீக்குமட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணர்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே.
2
பொ-ரை: கள்ளுண்பவர்களும், பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை? தட்டி முட்டித் தள்ளாடிவிழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ?
கு-ரை:மட்டு - கள். வாட்கணால் கட்டுண்பார்கள் - வாள்போன்ற கண்களால் பிணிக்கப்படுவார்கள். மட்டுண்பார்களும் கட்டுண்பார்களும் தள்ளாடித் தடுமாறும்போது இன்னம்பர் ஈசனையன்றிக் கருதுவது என் என முடிக்க. உயிர்கொண்டு போம் பொழுது ஈசனையன்றி உற்றார் இல்லை என்றபடி. தட்டிமுட்டித் தள்ளாடி என்றது - கண் பார்வையும் உடல் வலியும் இழந்து நிற்கும் முதுமை நிலையைக் குறித்தது. எட்டு மூர்த்தியர் என்பது இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலைகருதி வழிபடற்பாலர் என்றபடி.
https://www.tamilvu.org/slet/l4150/l4150uri.jsp?song_no=1276&book_id=113&head_id=63&sub_id=2038