கிறிஸ்தவம்
ஏழை ஜனங்களுக்கு உதவி செய்பவன், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுவான். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவனுக்கோ அதிகத் தொல்லைகள் வரும். - (நீதிமொழிகள் 28:27)
22 ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. 23 கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார். - (நீதிமொழிகள் 22:22-23)
10 பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. 11 கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார். - (நீதிமொழிகள் 23:10)
தமிழர் சமயம்
கிடைத்தவற்றில் சிறிதினை அவ்வப்பொழுது எளியார்க்குதவுக
பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்றுஇற்றைநாள் ஈத்துஉண்டு இனிது ஒழுகல் - சுற்றும்இதனில் இலேசுடை காணோம் அதனைமுதல்நின்று இடைதெரியுங் கால். பாடல் - 169
விளக்கவுரை செல்வத்தை அடையுந்தோறும் பெற்ற அச்செல்வத்தில் செய்வதற்குரிய அறத்தை இன்றே செய்வோம் என்று நினைத்து இரப்பவர்க்குத் தந்து, நீயும் உண்டு இனிமை தரும் நன்னெறியில் நின்று ஒழுகுவாயாக! அந்த அறம் செய்ததற்குரிய வழியை முதல் தொடங்கி முழுமையும் ஆராயுமிடத்து எவ்விடத்து; இதைக் காட்டிலும் எளியது வேறொன்றும் இல்லை.கொடாது இருப்பது அறியாமை
கொடுத்துக் கொணர்ந்து அறம் செல்வம் கொடாதுவிடுத்துத்தம் வீறுஅழிதல் கண்டார் - கொடுப்பதன் கண்ஆற்ற முடியாது எனினும்தாம் ஆற்றுவார்மாற்றார் மறுமைகாண் பார். பாடல் - 170
விளக்கவுரை செல்வம் உள்ள காலத்தில் வறியவர்க்கு கொடுத்ததால் (அறம்) கொண்டு வந்து தந்த, செல்வத்தை வவறியவர்க்குக் கொடுக்காமல் தம் பெருமை அழியும் பிறரைக் கண்ட சான்றோர், வறுமை அடைந்து இரந்தவர்க்குக் கொடைத் தன்மையுடன் மிகவும் வழங்க முடியாது என்றாலும் தம் பொருள் நிலைக்கு ஏற்பக் கொடுத்து உதவுவர்; இரந்தவர்க்கு இல்லை எனக் கூறார்.
இஸ்லாம்
(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள். அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான். (அல்குர்ஆன் : 2:273)
செல்வரின் கடமை அறநெறிச்சாரம் பாடல் - 178
பதிலளிநீக்குசெல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பார்த்துண்டு - நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அ·து என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு.
விளக்கவுரை பொருட் செல்வத்தைப் பெற்றவர்கள் சினத்தை அகற்றி காண்பதற்கு எளியராய்ச் சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாதபடி அவர்கட்கும் பகுத்துத் தந்து தாமும் உண்டு இம்மை மறுமைப் பயன்களை அடையச் செய்கின்ற கொடை அறத்தையும் மறவாமல் செய்யும் தன்மை உடையவராயின் அச்செயல் மேல் உலகத்தில் தமக்கு உதவும்படி வைக்கின்ற சேமநிதி என்று சான்றோர் உரைப்பர்.
பதிலளிநீக்குஇல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. ஏலாதி 52
வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணையிழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர்களுக்கும், விளைந்த நெல்லை யிழந்தவர்கட்கும், பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி முயன்று பொருளையீட்டி உணவுகளைச் சமைத்துக் கொடுத்தவர், பலவாகிய யானைப்படையுடைய அரசர்களாய் மதிக்கப்பட்டு, மனைவி மக்கள் முதலியவர்களுடன் கூடி நுகர்பொருளை நுகர்ந்திருப்பர்.
கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
பதிலளிநீக்குமுடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று. ஏலாதி 53
கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர் கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள்.
பதிலளிநீக்குதாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; -
வைத்து வழங்கி வாழ்வார். ஏலாதி 78
தாயை யிழந்த குழவியும், தலைவனையிழந்த பெண்டாட்டியும், வாயில்லாத மூங்கைகளும், வாணிகம் போய்ப் பொருளிழந்தாரும் ‘உண்ணுதற் காதாரமாய பொருளை யிழந்தாரும்' கண்ணில்லாதாரு மென்னு மிவர்கட்குப் பொருள் கொடுத்தார் மேலைக்கு வைத்து வழங்கி வாழ்வார்.
கருத்து: தாயில்லாத பிள்ளை முதலானவர்க்கு வேண்டுவன கொடுத்துதவல் வேண்டும்.
இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார். - (மத்தேயு 19:21)
பதிலளிநீக்குமத்தேயு 5:42: "உங்களிடம் பிச்சை எடுப்பவருக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன் வாங்குபவருக்கு மறுக்காதீர்கள்."
நீதிமொழிகள் 22:9
கண்ணை நிறைவாகக் கொண்டவர் ஆசீர்வதிக்கப்படுவார், ஏனென்றால் அவர் தனது உணவை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்.
7. நீதிமொழிகள் 19:17 ஒரு ஏழைக்கு இரக்கம் காட்டுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், அவன் அவனுடைய நற்செயல்களுக்குப் பிரதிபலன் கொடுப்பான்.
நீதிமொழிகள் 19:17
வசன கருத்துக்கள்
ஒரு ஏழைக்கு இரக்கம் காட்டுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் , அவன் அவனுடைய நற்செயலுக்குப் பதிலளிப்பான்.
ஏசாயா 58:10 பசித்தவர்களுக்கு உணவளிக்கவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவவும் . அப்போது உங்கள் ஒளி இருளிலிருந்து பிரகாசிக்கும் , உங்களைச் சுற்றியுள்ள இருள் மதியத்தைப் போல பிரகாசமாக இருக்கும்.
எதீம்கள், கைம்பெண்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்கு சமமானவர்கள். (5)
பதிலளிநீக்குஅறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4934.
நானும் எதீம்களை ஆதரிப்பவர்களும் நாளை மறுமையில் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருப்போம் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது ஆட்காட்டி விரலையும் தனது நடுவிரலையும் சேர்த்து சொன்னார்கள். அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5546.
வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
பதிலளிநீக்குகுறிஎதிர்ப்பை நீரது உடைத்து(குறள் 221)
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை. மற்ற கொடையெல்லாம் பதிலுக்கு ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொடுப்பதே ஆகும் என்கிறது குறள். குறளின் தடம் பிடித்து நடக்கிறார் திருமூலர்.
அற்று நின்றார் உண்ணும்
பதிலளிநீக்குஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றுவந்து உண்ணும் பயன் அறியாரே
(திருமந்திரம். 253)
பசி போக்கிக்கொள்ளும் வழியற்று நின்றார்க்கு உணவு ஊட்டுவதே அறம் என்று கற்றிருக்கிறோம். கற்ற அறிவைச் செயலுக்கும் கொண்டு வருபவரே மனிதர். கண்டு தெளிக.