பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா,
உரவோர்கண் காம நோய்,-ஓஒ கொடிதே!-
விரவாருள் நாணுப்படல் அஞ்சி, யாதும்
உரையாது, உள் ஆறிவிடும். (நாலடியார் 88)
(பொ-ள்.) பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா ; உரவோர்கண் காமநோய் ஓ. கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, விரலாருள் நாணுப்படல் அஞ்சி - அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, யாதும் உரையாது உள் ஆறிவிடும் - சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும்.
விளக்கம்: அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா; ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா, அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா; அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும்.
கருத்து: காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவாரிடம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தாரிடம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்
இஸ்லாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை ஜாபிர் கேட்டுள்ளார்: ஒரு பெண் உங்களில் ஒருவரைக் கவர்ந்தால், அவன் தன் மனைவியிடம் சென்று அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும், ஏனெனில் அது அவன் உணர்வைத் தடுக்கும். (முஸ்லீம் 8, 3242)
ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5193)
கிறிஸ்தவம்
ஆனால் அவர்களால் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மோகத்தால் எரிவதைவிட விவாகம் செய்துகொள்வது மேலானது’ (1 கொரிந்தியர் 7:9).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக