தமிழர் சமயம்
இன்பம், இடர்என்று இரண்டுஉற வைத்தது;முன்புஅவர் செய்கையி னாலே முடிந்தது;இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்அன்புஇலார் சிந்தை அறம்அறி யாரே. (திருமந்திரம் 267)
இன்பம், நன்மை, அறம் என்று நேராக மட்டுமே வகுத்துவைக்காமல் இன்பத்தோடு துன்பம், நன்மையோடு தீமை, அறத்தோடு மறம் என்று எதிராகவும் வகுத்து இரண்டையும் இணைத்தே வைத்தான் இறைவன். நன்மையோ தீமையோ, ஒருவர் முன்பு செய்தது எதுவோ அதுவே அவர்க்குப் பின்னும் விளைந்தது என்றால் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்தால் அறமாகும் என்று அறியாமல் முட்டிக்கொள்கிற மூடர்களைப் பற்றி என்ன சொல்ல? அன்பைக் கொடுத்தால் இன்பம் விளையாதா?
இஸ்லாம்
நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - (குர்ஆன் 94:5-7)
கிறிஸ்தவம்
[கடவுளின்] கோபம் ஒரு கணம் மட்டுமே, அவருடைய தயவு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அழுகை இரவைத் தாமதப்படுத்தலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும். - (சங்கீதம் 30:5)