தமிழர் சமயம்
நல்லொழுக்கமே முத்திக்கு விதை
இருளே உலகத்து இயற்கை; இருள் அகற்றும்கைவிளக்கே கற்ற அறிவுடைமை; - கைவிளக்கின்நெய்யேதன் நெஞ்சத்து அருள்உடைமை,பால்போல் ஒழுக்கத் தவரே பரிவு
இல்லா மேல் உலகம் எய்துபவர். (அறநெறிச்சாரம்-193)
விளக்கவுரை இவ்வுலகம் அறியாமை என்னும் இருள் நிறைந்ததாகும். ஞான நூல்களைக் கற்றதால் ஏற்பட்ட அறிவுடைமை அந்த இருளைப் போக்கும் கைவிளக்கே ஆகும். மனத்தில் உள்ள அருள் அந்த விளக்கை ஏற்றுவதற்குரிய நெய் ஆகும். நெய்க்குக் காரணமான பால் போன்ற ஒழுக்கத்தை உடையவரே துன்பம் அற்ற வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்.
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை குறள்134)
பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்கள் "நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது" என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)
கிறிஸ்தவம்
அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான். - நீதிமொழிகள் 5:23
அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய். - நீதிமொழிகள் 19:20
எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது. - நீதிமொழிகள் 8:10