தமிழர் சமயம்
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின். (குறள் 116)
உரை: தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
இஸ்லாம்
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர். (குர்ஆன் 6:45)
கிறிஸ்தவம்
ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. (யோபு 34:10)
அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். - (2 பேதுரு 2:2)
பதிலளிநீக்குகுறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும். போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். - (2 பேதுரு 2:10)
19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாகப் பிரித்து விடுவோம்.
பதிலளிநீக்கு9:75. யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையைக் காணும் வரை, அளவற்ற அருளாளன் அவர்களுக்குக் கால அவகாசத்தை நீட்டிவிடுகிறான்; அப்பொழுது, இடத்தால் கெட்டவர் யார்? படையால் பலவீனமானவர் யார்? என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று (நபியே) நீர் கூறுவீராக!
பதிலளிநீக்கு