லெஸ்பியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லெஸ்பியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓரினப் புணர்ச்சி

தமிழர் சமயம் 

சாதாரண சந்நியாச வேட ஞானிகள் அஞ்சி தப்பி ஓட முயலும் இந்த பொல்லாத காமத்தை நல்வழிப் படுத்தும் இறைவனது வீரட்டானத்தை ஆழமான உளவியல் நுட்பத்தோடு திருமூலர் விளக்குகின்றார்.

இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி யிலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே - (திருமந்திரம் 346)

கருத்து இங்கு இலிங்க வழியது என்பது ஆணுறுப்பின் காமவேட்கைக்கு அடிமையாகி அன்பின் வழி உள்ளத்துப் புணர்ச்சி முன்னே வரும் உண்மையான காதலின் மங்கையரைப் புணர்ந்து பரியங்க யோகம் செய்து சுக்கில நீக்கம் மகிழ்வது போக்கி பிழையான பல்வேறு வழிகளில் சுக்கில நீக்கம் மகிழ்வதாகும். தொல்காப்பியத்தில் பகரப்படும் ஒருதலைக் காமத்து கைக்கிளை ஒவ்வாக் காமத்து பெருந்திணை போன்ற தகாத காமவேட்கைகள் இங்கு அடங்கும், எந்தக் காமத்தூய்ப்பு ஓர் ஆண் பெண்ணிடையே அன்பின் வழி பிறவாது போகின்றதோ அது பிழையான காம வழி ஆகும். இது ஆண்கள் மேல் ஏற்றிக் கூறப்பட்டாலும் பெண்களுக்கும் உரியதே. இத்தகையக் காமங்கள் பல்வேறு உடற்பிணிகட்கும் உளப்பிணிகட்கும் காரணமாக அமைந்து அகால மரணத்திற்கே இட்டுச்செலும் பண்பினதும் ஆகும்

குறிப்பு: ஆபிரகாமிய நூல்களில் சொல்லப்படும் ஓரினப் புணர்ச்சி தமிழர் பண்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதற்க்கான காரணங்கள் இரண்டு.

    1. களவியல் பற்றி பல்வேறு நூல்களில் ஒரு பகுதியாவும், அகநானூறு முழுவதும் களவியல் பேசும் பண்பாட்டில் ஓரினப்புணர்ச்சி பற்றி குறிப்பிடப் படாததற்கு காரணம் திருக்குர்ஆன் நமக்கு தருகிறது. லூத் என்கிற தீர்க்கதரிசியின் காலத்தை சார்ந்த மக்கள் முதன் முதலில் ஆணும் ஆணும் புணரும் முறையை கையாண்டனர். இந்த லூத் என்பவர் ஆப்ரஹாம் என்று பைபிளில் அழைக்கப்படுபவரின் சமகாலத்தவர் ஆவார். இந்த ஆப்ரஹாம் நான்காயிரம் ஆண்டுக்கு முந்தியவர் என்று ஆய்வாளர்களால் சொல்லப் படுகிறது. 
    2. மேலும் நடைமுறையில் இல்லாத ஒன்றுக்காக சட்டங்கள் தேவை இல்லை என்பதால் ஹோமோ அல்லது லேஸ்பியன் பற்றி தமிழர் நூல்களில் எங்கும் காண கிடைக்கவில்லை.

இஸ்லாம்

மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்)

கிறிஸ்தவம் 

 ஒருவன் இன்னொரு ஆணோடு, (அல்து ஒரு பெண் இன்னொரு) பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள். (லேவியராகமம் 20:13

 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. - (1 கொரிந்தியர் 6:9-10)