தானம் விரும்பி செய்யத்தக்கது

தமிழர் சமயம் 

பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது. - முதுமொழிக் காஞ்சி 4

பொருள் விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகை. அன்றி, விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது. பிறருடைய கட்டாயத்திற்காக, மனம் வருந்திச் செய்யும் ஈகை சிறப்பில்லாதது ஆகும்.

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் -- திருமந்திரம் 85

இஸ்லாம் 

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். - (அல்குர்ஆன் : 3:92)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (13)

கிறிஸ்தவம் 

இதை நினைவில் வையுங்கள்: சிக்கனமாக விதைக்கிறவன் சிக்கனமாக அறுப்பான், தாராளமாக விதைக்கிறவன் தாராளமாக அறுப்பான். நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் இதயத்தில் தீர்மானித்ததைக் கொடுக்க வேண்டும், தயக்கத்துடன் அல்லது நிர்பந்தத்தின் பேரில் அல்ல, ஏனென்றால் கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுப்பவரை நேசிக்கிறார். -  (2 கொரிந்தியர் 9:6-7)

 மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும். - (மத்தேயு 7:12)

 அது சேவை என்றால், பின்னர் சேவை; கற்பிப்பது என்றால், கற்றுக்கொடுங்கள்; ஊக்குவிப்பதாக இருந்தால், ஊக்கம் கொடுங்கள்; கொடுப்பதாக இருந்தால், தாராளமாக கொடுங்கள் ; அது வழிநடத்துவதாக இருந்தால், அதை விடாமுயற்சியுடன் செய்யுங்கள்; கருணை காட்ட வேண்டுமானால் அதை மகிழ்ச்சியுடன் செய். - ரோமர் 12:7-8

5 கருத்துகள்:

  1. 12. உபாகமம் 15:7-8 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் பட்டணங்களிலாவது உங்கள் உடன் இஸ்ரவேலர்களில் எவரேனும் ஏழையாக இருந்தால், அவர்கள்மேல் கடின இருதயமோ இறுக்கமோ வேண்டாம். மாறாக, திறந்த மனதுடன், அவர்களுக்குத் தேவையானதை தாராளமாகக் கடன் கொடுங்கள் .

    பதிலளிநீக்கு
  2. உபாகமம் 15:10-11 ஏழைகளுக்கு தாராளமாகக் கொடுங்கள், மனக்கசப்புடன் அல்ல, ஏனென்றால் உங்கள் கடவுளாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நாட்டில் ஏழைகள் சிலர் எப்போதும் இருப்பார்கள். அதனால்தான் ஏழைகளுடனும், தேவையிலுள்ள மற்ற இஸ்ரவேலர்களுடனும் இலவசமாகப் பகிர்ந்துகொள்ளும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

    பதிலளிநீக்கு

  3. தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
    அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
    இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
    துன்பம் துடைத்தல் அரிது. ஏலாதி 3


    யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியி லொழுகுதல் எளிது. கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால்பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.

    கருத்து: மக்கட்குத் தவம் எளிது, ஈகை அரிது; தக்கார்க்குத் தீமை அரிது, நன்மை எளிது; திருவருள் நெறி தவறின் பிறவி எளிது; ஆனால் அதன் நீக்கம் அரிது.

    பதிலளிநீக்கு
  4. கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
    முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,
    உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்
    படையராய் வாழ்வார், பயின்று. ஏலாதி 53


    கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர் கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
  5. பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,
    கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால
    நிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு,
    பண்டாரம் பற்ற வாழ்வார். ஏலாதி 54


    பார்ப்பாரும், பசித்தவர்களும் தவஞ் செய்கின்றவர்களும், பாலர்களும், உடம்பை வெறுக்கின்றவர்களும், தங்களைக் காத்தற்குரிய ஆதரவு ஒன்று மில்லாதவர்களும், தூய்மையாகிய தன்மையை யுடையனவாகிய அறநெறிகளில் மிக்கவர்களும் ஆகிய இவர்களுடைய துன்பங்களை யாதொரு பயனையும் விரும்பாமல் போக்கினவர்கள், பூமியை ஆண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்புடன் வாழ்வார்கள்.

    பதிலளிநீக்கு