கரு உற்பத்தி ரகசியம் *

தமிழர் சமயம்

திருமந்திரத்தில் கருவியல் 

ஒரு மனிதன் கருநிலையில் கர்ப்பத்தில் ஒடுங்கி சிறிது சிறிதாக வளர்ந்து சிசுவாகத் தோற்றம் பெற்று, வெளிப்பட்டுப் பிறந்து, வளர்ந்து, வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும் நிலையில் ஒரு வரலாறு எழுதுகின்ற அளவிற்கு வாழ்ந்து பிறகு தளர்ந்து சுருங்கி இறந்து விடுகின்றான்.

இறப்பின்போது உடலிலிருந்து பிரிந்து சென்ற 25 தத்துவங்களும் மீண்டும் ஒன்றாக இணைந்து புதுப் பிறவி உண்டாகிறது. புதிய உயிரின் உருவாக்கம், வளர்ச்சி ஆகியவை குறித்து திருமூலர் கூறும் சூட்சும ரகசியங்களைக் காணலாம்.

"கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்தும்; மற்று ஓரார்;
திருவின் கருக்குழி தேடிப் புகுந்து அங்கு
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'. - திருமந்திரம் பாடல் எண்- 454.

பொருள்: பிறவி எனும் பெருஞ் சுமையை வென்ற ஞானிகள் தங்கள் ஞானத்தால் உணர்ந்து கொண்ட 25 தத்துவங்களும் மீண்டும் இணைந்து ஒரு ஆணின் (தந்தையின்) உடலில் (விந்துவில்) வந்து இணையும். இவ்வாறு இணைவதை எவரும் அறியமாட்டார். (மற்று ஓரார்).

இவ்வாறு 25 தத்துவங்களும் இணைந்த ஆணின் விந்து பெண்ணின் (திருவின்) கருப்பையைத் தேடிச் சென்று புகும். அங்கே அது ஆண் - பெண் என இரு உருவாக இருக்கும்.

மிக மிக நுட்பமான பல சூட்சும உண்மைகளும், மருத்துவ விஞ்ஞான உண்மைகளும் இந்தப் பாடலில் பொதிந்து/கிடக்கின்றன.

25 தத்துவங்களும் ஆணின் உடலில் புகுந்து விந்துவில் நிறைந்து, விந்திலுள்ள உயிரணுக்களுக்கு சூரியனால் உயிரூட்டுகின்றன. 
 
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றும் போது (27.32 நாட்கள்) பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த உயிரணுக்கள் இணையும்போதுதான் புதிய உயிர் (கரு உருவாகும். ஆனால் 25 தத்துவங்களும் பெண்ணின் உடலில் நுழைவதில்லை. பெண்ணின் உடலில் உருவாகும் சினை முட்டை உயிரற்றது! அதற்கு உயிரூட்டி, அதை ஒரு கருவாக மாற்ற விந்தணுக்கள் தேவை!

இந்த இரு கருத்துகளையும் சற்று அலசிப் பார்க்கலாம். ஒரு பெண் பருவமடைந் தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றும் போது ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி வெளியே வருகிறது. இந்தக் கருமுட் டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது.

சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப் பைக் குழாயினால் உறிஞ்சிக் கொள்ளப்
பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பை யினுள்ளே நுழைகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த முட்டை சினையடைந்து தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும்.

விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது; மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது. உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டிற்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன? அசைவு அல்லது இயக்கம். ஜடப் பொருட்கள் தானே இயங்கும் அல்லது நகரும் (அசையும்) ஆற்றல் இல்லாதவை. உயிருள்ள வற்றில் தானாக அசையும், நகரும் திறன் உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது கருமுட்டை அசைவற்றது; தானே நகரும் திறன் இல்லாதது. விந்தணுக்கள் தானே நகரும் திறன் கொண்டவை. எனவேதான் திருமூலர் இந்த விந்தணுக்கள் பற்றி,

"திருவின் கருக்குழி தேடிப் புகுந்து......ஓடி விழுந்ததே' என்கிறார். 
 
அது சரி; நவீன மருத்துவ விஞ்ஞானம் இது குறித்துக் கூறுவது என்ன? விரிவாகக் காணலாம்.

உடலுறவின்போது ஒருமுறை வெளியேறும் விந்துவில் சுமார் 80 மில்லியனிலிருந்து 300
மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட
வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும்! உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.

உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக்
கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. ("திருவின் கருக்குழி தேடிப் புகுந்து') 80 - 300 மில்லியன் விந்தணுக்கள் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு
விந்தணு மட்டுமே தேவை! முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது.

விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.

பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோ டொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும்!

கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்! உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோ சோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம் கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப் பெருகும். ஆக, திருமூலரின் கூற்று நூறு சதவிகிதம் உண்மை என்பது நவீன விஞ்ஞானத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இனி திருமூலர் இந்தப் பாடலில் கூறும் அடுத்த சூட்சும ரகசியத்தை அலசிப் பார்க்கலாம்.

பாடலின் கடைசி அடி: "(அங்கு) உருவம் இரண்டாக ஓடிவிழுந்ததே'.

"உருவம் இரண்டு' என்பதற்கு ஆண்- பெண் என இரண்டு உருவங்களாக என்பதே பொருள்.

அதாவது ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் கருப்பையினுள்ளே- ஆண் விந்தணுக்கள், பெண்
விந்தணுக்கள் என இரண்டு வகை விந்தணுக்களாக ஓடி விழுகின்றன. இது மிக மிக சூட்சும மான ஒரு விஞ்ஞான உண்மையாகும். இதைப் புரிந்துகொள்ள நமது செல்களிலுள்ள குரோ மோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றைக் குறித்த அடிப்படையான சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

குரோமோசோம்களும் ஜீன்களும் ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தனி தன்மை களுக்கும், பரம்பரை குணங்கள், நோய்கள் என அனைத்திற்கும் ஆதாரமாக அமைவது நமது செல்களிலுள்ள ஜீன்களே என்பது ஏற்கெனவே நீங்கள் அறிந்த உண்மைதானே?ஸ் ஒவ்வொரு மனித செல்களின் உள்ளும் 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோசோமிலும் நூற்றுக்கணக்கான ஜீன்கள் (ஏங்ய்ங்ள்) உள்ளன. இந்த 46 குரோமோ சோம்களும் இரண்டிரண்டு ஜோடிகளாக இணைந்து காணப்படும். மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள். இந்த 23 ஜோடி குரோமோசோம்களில் ஒரு ஜோடி குரோமோசோம்களுக்கு செக்ஸ் குரோமோசோம்கள் (நங்ஷ் ஈட்ழ்ர்ம்ர்ள்ர்ம்ங்ள்) என்று பெயர். ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிப்பது இந்த செக்ஸ் குரோமோசோம்கள்தான்!

பிற 22 ஜோடி குரோமோசோம்களிலிருந்து இந்த செக்ஸ் குரோமோசோம்கள் சற்று மாறுபட்டிருக்கும். பிற 22 ஜோடிகளிலும் இரண்டு குரோமோசோம்களும் ஏறக்குறைய ஒரே நீளம் கொண்டவையாக இருக்கும். ஆனால் செக்ஸ் குரோமோசோம்களில் காணப்படும் ஜோடி இரண்டு வகை. நீளம் அதிகமான குரோமோசோம்- இதை "ல' குரோமோசோம் என்பார்கள். இதில் பிற குரோமோசோம்களில் இருக்கும் எண்ணிக்கையில் ஜீன்கள் இருக்கும். நீளம் குறைந்த குரோமோசோம்- இதை "வ' குரோமோசோம் என்பார்கள்.

இதில் ஜீன்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இனி மிக முக்கியமான பகுதிக்கு வருவோம்.

ஆணின் உடலிலுள்ள செக்ஸ் குரோமோசோம்களில் ஒன்று ல; மற்றொன்று வ .

ஆனால் பெண்ணின் உடலிலுள்ள செக்ஸ் குரோமோசோம்களில் இரண்டுமே ல தான்!

ஆண் - ல + வ

பெண் - ல + ல

இதுவரையில் தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? இனி இதன் முக்கியத்துவம் என்ன என்பதைக் காணலாம்.

உடலிலுள்ள அனைத்து செல்களிலுமே 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் விந்தணுக்களிலும் கரு முட்டையிலும் மட்டும் 23 குரோமோசோம்களே இருக்கும்.

விந்தணுவும் கருமுட்டையும் இணைந்து கருவுறும்போது விந்தணுவிலிருந்து வரும் 23 குரோமோசோம் களும், முட்டையிலிருந்து வரும் 23 குரோமோ சோம்களும் இணைந்து, மீண்டும் 46 குரோமோ சோம்கள் கொண்ட சினை முட்டை உருவாகி, அது பல்கிப் பெருகி கருவாக மாறும். கருவின் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆணின் செக்ஸ் குரோமோசோமில் ல, வ என இரண்டு வகை குரோமோசோம்கள் இருக்கும். இவை இரண்டும் பிரிந்து விந்தணுக்கள் உருவாகும்போது என்ன நிகழும்?

பாதி விந்தணுக்களில் ல குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். (பெண்). மீதிப் பாதி விந்தணுக்களில் வ குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். (ஆண்).

ஆனால் பெண்ணின் செக்ஸ் குரோமோ சோம்களில் இரண்டுமே ல வகைதான். எனவே அது இரண்டாகப் பிரிந்து 23 குரோமோ சோம்கள் உள்ள கருமுட்டை உருவாகும்போது, அதில் ல குரோமோசோம் (பெண்) மட்டுமே இருக்கும். இதையே வேறுவிதமாகக் கூறினால், பெண்ணின் கருமுட்டை எப்பொழுதும் பெண் தன்மை (ல) கொண்டதாகவே இருக்கும்.

ஆணின் விந்தணுக்களில் பாதி பெண் தன்மை கொண்டவை (ல); மீதி பாதி ஆண் தன்மை கொண்டவை (வ).

"உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே' என்று திருமூலர் எவ்வளவு பெரிய சூட்சும ரகசியத்தை- விஞ்ஞான உண்மையை ஒரு அடியில் பாடி வைத்துள்ளார் என்பதை அறியும் போது மலைப்பும் திகைப்பும் ஒருசேர உருவாகி றதல்லவா?

நவீன மருத்துவ விஞ்ஞானத்தில், நவீன உருப்பெருக்கிக் கருவிகள் (ஙண்ஸ்ரீழ்ர்ள்ஸ்ரீர்ல்ங்ள்) கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே குரோமோசோம்கள், ஜீன்கள், விந்தணுக்கள், கருமுட்டை, ல, வ குரோமோசோம்கள் என்பனவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன! நவீன மரபியலின் வயது சுமார் 100 அல்லது 150 வருடங்கள்தான்!

ஆனால் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலருக்கு இந்த ஆழமான விஞ்ஞான உண்மைகள் எவ்வாறு தெரியவந்தன?

நிச்சயமாக விஞ்ஞானத்தால் அல்ல- விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானத்தால் மட்டுமே இது சாத்தியமாகி யிருக்கும். விஞ்ஞானத்தைவிட மெய்ஞ்ஞானமே பெரியது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

9000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)} திருமூலரின் திருமந்திரத்தில்....

கரு வளரும் நிலைகளில் என்னென்ன நிகழுகிறது , நாம் கருவறையில் எப்படி வளர்கிறோம் என்ற கருத்துக்களைக் காணலாம்.

{ தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சியை, நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டனர். திருமூலரின் திருமந்திரத்தில் சிசுவின் வளர்ச்சி: }

ஒரு கரு உருவான உடனேயே அதில் உயிர் வந்துவிடுவதில்லை. பிராண சக்தியும், மறுபிறவி எடுக்கும் ஒரு ஆன்மாவும் அந்த கருப் பிண்டத்தின் உள்ளே நுழையும்போதுதான், அது செல்களின் குவியல் என்ற நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள ஒரு கருவாக உருவம் பெறுகிறது.

அதுவரையில் நம் உடலிலுள்ள பல தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற முட்டையும் ஒரு தசை போன்றே கருதப்படும்.

பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

"பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே.' -திருமந்திரம் பாடல் எண்-265.

தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட காலம் வரும்போது ஒரு மெல்லிய ஒலியோடு அந்த கருவின் உள்ளே புகும் என்பது இப்பாடலின் பொருளாகும். அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்து செல்களிலும் என வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும்.

இதற்கு உவமையாக திருமூலர் பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்! எவ்வளவு அற்புதமான ஒரு உவமை!

இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும். மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகின்றார்.

"போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.' - திருமந்திரம் பாடல் எண்-266.

இந்த நான்கு வரிகளில் பல அற்புதமான சூட்சும உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வரியாக சற்றே விளக்கமாகக் காணலாம்.

முதல் இரண்டு வரிகளில், மூச்சுக்காற்று உள்ளே நுழையும் முன்னர் அந்தக் கருவினுள்ளே என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிடுகிறார்.

கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய உடலினுள்,

- போகின்ற எட்டு (8)
- புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
- ஒன்பது வாய்தல் (வாயில்கள்)
   ஆகியவை உள்ளன.

இவை எவையெவை என்பதைக் காணலாம்.

போகின்ற எட்டு
1. சுவை
2. ஒளி
3. ஊறு
4. ஓசை
5. வாசம்
6. மனம்
7. புத்தி
8. அகங்காரம்
ஆகிய அருவமாக உள்ள எட்டையே போகின்ற எட்டு என்கிறார் திருமூலர்.

புகுகின்ற பத்தெட்டு (18)

10 வாயுக்கள் 8 விகாரங்கள் ஆகியவற்றையே புகுகின்ற பத்தெட்டு என்கிறார்.

பத்து வாயுக்கள்
1. பிராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்

எட்டு விகாரங்கள்
1. ஆசை
2. வெகுளி
3. கருமித்தனம்
4. மயக்கம்
5. மோகம்
6. வெறி
7. பொறாமை
8. ஈறிசை

ஒன்பது வாயில்கள்
1. வலது கண்
2. இடது கண்
3. வலது நாசி
4. இடது நாசி
5. வலது காது
6. இடது காது
7. வாய்
8. குதம்
9. பிறப்புறுப்பு
என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம் ஒன்பது.

இதையே இப்பாடலில் "ஒன்பது வாய்தலும்' என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது வரியில் வருகின்ற "மூழ்கின்ற முத்தனும்' என்னும் சொற்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

கருப்பையினுள்ளே கரு பனிநீர் எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ எப்ன்ண்க் என்ற திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும் இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற' என்ற வார்த்தையை திருமூலர் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

"முத்தன்' என்ற சொல்லுக்கும் ஆழமான அர்த்தம் உள்ளது. கடவுளுக்கும்கூட "முத்தன்' என்றொரு பெயருண்டு.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் முறையே பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் செய்வதாகக் குறிப்பிட்டாலும் மூவரும் ஒருவர் என்பதே உயர்நிலைத் தத்துவம். மூன்று குணங்களை- செயல்களை உடைய கடவுள் "முத்தன்'. கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன், தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த ஆவி)' என கடவுள் மூன்று நிலைகளில் இருந்தாலும், ஒரே கடவுளே என்ற கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.

கடவுளுக்குச் சரி; மூன்று நிலைகளில் ஒன்றாக இருப்பதால் முத்தன் எனலாம். கருவிலிருக்கும் குழந்தைக்கு "முத்தன்' என்ற சொல்லை திருமூலர் ஏன் பயன்படுத்துகிறார்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று உடல்கள் உள்ளன. நாம் கண்ணால் காணக்கூடிய பருவுடலை ஸ்தூல சரீரம் என்பார்கள். இது தவிர சூட்சும சரீரம், காரண சரீரம் என மேலும் இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இவை சக்தி நிலை உடல்கள் (Energy Bodies). சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்றும் இணைந்தே மனிதன் உருவாகிறான்.

கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும். மூன்று உடல்களால் உருவாவதால் கருவையும் திருமூலர் "முத்தன்' என்கிறார்.

இனி பாடலின் அடுத்த இரண்டு வரி களுக்கு வருவோம். முதல் இரண்டு வரிகளில் கருவில் என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிட்ட திருமூலர், அடுத்த இரு வரிகளில், "இவை அனைத்துமே ஒரு கருவில் இருந்தாலும், குண்டலினி சக்தி, பிராண சக்தி ஆகிய இரு சக்திகளை இறைவன் சரியான நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால் மட்டுமே, அந்தக் கரு வளர்ந்து ஒரு குழந்தையாக மாறும். அது நடைபெறாவிடில் கரு பாழாகிப் போகும்' என்கிறார்.

"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்' என்ற மூன்றாவது வரியை சற்றே அலசிப் பார்க்கலாம்.

குண்டலினி சக்தியையே "நாகம்' என குறிப்பிடுகிறார் திருமூலர். நமது உடலில் மூலாதாரச் சக்கரத்திற்கு அருகில் உறங்கிக் கிடக்கும் அற்புதமான சக்தியே குண்டலினி சக்தியாகும். சமஸ்கிருத மொழியில் "குண்டலா' என்றால் குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு கிடப்பது என்று பொருள். பாம்புகள் ஓய்வாக இருக்கும்போது சுருண்டே இருக்கும். எனவேதான் வடமொழி யில் பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும் உண்டு. தூக்கத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பைப் போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய நிலையில் மூலாதாரத்தின் அருகே சுருண்டு கிடக்கிறது. இந்திய மரபுப்படி சக்தி என்பதைப் பெண்பாலாகவும் தேவியாகவும் உருவகப்படுத்துவர்.

எனவேதான் சுருண்டு கிடக்கும் சக்திக்கு குண்டலினி, குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர். எதையும் நேரடியாகக் கூறாமல் சங்கேத வார்த்தைகளால் கூறுவது சித்தர் மரபு. எனவேதான் திருமூலர் குண்டலினியைக் குறிக்க "நாகம்' என்ற சங்கேத மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.

அடுத்து வரும் "எட்டுடன் நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம் கொண்டால் "12 குதிரைகள்' என்றே அர்த்தம் வரும். ஆனால் திருமூலர் இங்கே மூச்சுக்காற்றையே புரவி என்ற சங்கேத மொழியில் கூறுகிறார்.

சாதாரண மனிதர்களுக்கு மூச்சுக்காற்று கண்டத்திற்குக் கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும். யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு விரற்கடை பரந்து நிற்கும். இதையே எட்டுடன் நாலு புரவியும் என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.

கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற சொல் கடவுளைக் குறிக்கும் (சிவனை) சங்கேதச் சொல்லாகும். "பாகன்' என்பதற்கு செலுத்துபவன், கட்டுப்படுத்துபவன் என பல அர்த்தங்கள் உண்டு.

குண்டலினி சக்தியையும் மூச்சுக்காற்றையும் கருவின் உள்ளே செலுத்து பவனாகையால் கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார். இவை இரண்டையும் பாகனாகிய கடவுள் அந்தக் கருவின் உள்ளே செலுத்தா மல் போனால் அந்தக் கரு வளர்ச்சியடையாது. வீணாகப் போய்விடும்.

உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவமது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே. 485.

485. உடலுக்கு வேறாய் அருவமாய் உள்ளது உயிர் :
அந்தக் கருவானது பத்துத் திங்கள் (நிலா) சுற்றில் கருப்பையில் வளரும். தக்க பருவம் உண்டாக அக்குழந்தை உலகத்தில் பிறந்து வளரும். மாயையான வளர்ப்புத் தாயுடன் பொருந்தி வளரும். ஆனால் அந்த உடலுள் பொருந்திய உயிர் வடிவம் அற்றது என்பதை அறிவார் யார்? எவரும் இல்லை.

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே. 486.

486. மாயையின் மயக்கும் தன்மை :
அக்கருவுக்குக் காரணமான விந்துவான விதையை விதைத்த தந்தையும், அந்தக் கருவை ஏற்றுக் கொண்ட தாயும், அக்குழந்தை என்ன குழந்தை என்று அறிய மாட்டார்கள். பிரமனான தட்டான் அறிந்தவனாயினும் அதை ஒருவருக்கும் சொல்லவில்லை. அதை அமைத்துக் கொடுக்கும் சதா சிவனும் அங்கே இருந்த போதும் இதை அறிய முடியாது உள்ளதே! எவ்வாறு, மாயையின் மயக்கும் தன்மை!

இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே. 487.

487. பழைய பொருளை ஏத்த வேண்டும் :
இன்பம் அனுபவிக்க விரும்பிய ஆண் பெண் ஆகிய இருவர் புணர்ச்சியில், துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றிய உயிர், துன்பத்தில் வளர்ந்த பின்பு, மேன்மை பெற விரும்பி, உலகத்தில் எல்லாவற்றுக்கும் முன்னம் தோன்றியிருக்கின்ற பழைமைக்கும் பழைமையான இறைவனைப் பொருந்த அவனை நாடித் துதிக்க வேண்டும்.

குயிற் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டு இட்டால்
அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்றவாறே. 488.

488. கருவில் கரு வளரும் வகை :
குயில் பறவையின் முட்டையைக் காக்கையின் கூட்டிலே வைத்தால் ஐயம் இல்லாமல் காக்கை வளர்க்கும். அது போன்று இயக்கம் இல்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்று வினவாமலும் தாயும் மயக்கத்தால் உடலை வளர்க்கும் முறை இதுவேயாகும்.

முதற்கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதற்புதலாய்ப் பலமாய்நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவதுபோல
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப் பிரானே. 489.

489. இறைவனுக்கு இன்பம் தருவது:
தாவரமானது முதலில் கிழங்காய் இருந்தது. முளையாய் ஆகியது. பின் அது புதராய் ஆகிறது. பின் பழமாய்ப் பயன் அளிக்கிறது. அதுவே அந்தத் தாவரத்தின் இன்பமாய் அமைவது. அது போல் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பயன் அளிப்பதே ஆதியாகிய இறைவனுக்கு இன்பம் தருவதாகும்.

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினின் உள்ளே. 490.

490. இறைவனைத் தவத்தால் உணர முடியும் :
மற்றத் தேவரைவிடப் பெருமை உடையவனாயினும் எம் தலைவனான இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து அவற்றுள் விளங்குகின்றான். அப்படிப்பட்ட இறைவனைத் தேவராலும் உணர முடியாது. ஆனால் மக்கள் தங்கள் தவ வன்மையினால் உணர முடியும்.

பரத்தில் கரைந்து பதிந்த நற் காயம்
உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திருவருளாலே. 491.

491. உயிர்களின் பக்குவத்துக்கேற்ப உடலினை அமைத்தல் :
மேன்மை பொருந்திய இறைவனிடம் நுண்மையாய் ஒடுங்கிய நல்ல உடல், மீண்டும் பருவத்துக்கு ஏற்பப் பயனை அடைய வேண்டி, அலைகடலில் கதிரவன் வெம்மையால் உப்புத் திரண்டு உருக்கொள்வதைப் போல், இறைவனது அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகிறது.

ஐயன் வகுத்த திருக்குறளை சிறு அடிகளில் பெரும் உண்மைகளை விளக்கும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கொண்டாடுகிறோம்.

"கடுகைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று புகழ்வார்கள்.

திருவள்ளுவரின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல திருமூலரின் திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல் சான்றாக உள்ளதல்லவா? நான்கு வரிகளில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்!

சிசுவின் வளர்ச்சியைப் பற்றி பஞ்சரத்தினத்தில் ஊர்வசி சொல்லியிருப்பது. அமிர்த மயமான சுக்கிலமும் சுரோணிதமும் கூடி ஒரு கனிபோல் பிரகாசமான ஒரு பையிலே கடலிலே முத்து உதித்ததைப் போலும் அருகம்புல்லின்மேல் பனித்துளி நிற்பதுபோலும் தோன்றிப்பயிராகும். கடுகின் அளவில் பத்தில் ஒருபங்கே அளவினதான சுக்கிலம் சுரோணிதத்தில் சேர்ந்தவுடன் திரண்டு ஒரு உருவமாகும். உடனே அதை வாயு மூடிக்கொண்டு மதில்போலும், சுற்றிலும் அடைக்கப்பட்ட வேலிபோலும் உயரமாக வளர்ந்து காப்பாற்றும். அந்த விந்துவுடன் பிராணவாயுவும் கூடிக்கொள்ளும். உதானவாயு என்ற உணவைத்தரும் வாயு நாதமும், விந்தும் கூடி கருவை வளர்க்கும். அதனோடு வினைப்பயன்களும் வந்து சேர்ந்துகொள்ளும்.
    • சிசுவின் வளர்ச்சி ஈசன் விதித்தபடி ஐந்து நாட்களில் அது அரும்பாகும். 
    • பத்து நாட்களில் திரண்டு ஓர் உருவாகும். 
    • பதினைந்து நாட்களில் முட்டையாக வளர்ந்து விடும். 
    • ஒரு மாதத்தில் வச்சிர கம்பம்போல் உருப்பெற்று விளங்கும்.
    • இரண்டாவது மாதத்தில் தலை, முதுகு என்ற உருப்புகள் தோன்றும்.
    • மூன்றாவது மாதத்தில் இடுப்பு, கைகால்கள், விரல்கள் தோன்றும்.
    • நான்காவது மாதத்தில் பாதங்கள், மூக்கு தோன்றும்.
    • ஐந்தாவது மாதத்தில் வாய், நாக்கு, காது, கண், விழி முதலியன தோன்றும்.
    • ஆறாவது மாதத்தில் நகங்கள் தோன்றும்.
    • ஏழாவது மாதத்தில் மயிர், எலும்பு, நரம்புகள் உண்டாகும். நரம்பு முதலானவற்றுடன் கூடிய இப்பிண்டத்தை சடலநீர் சூழ்ந்து கொண்டிருக்கும். எனினும் மூச்சும் நடைபெறத் தொடங்கும்.
    • எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவிலுள்ள சத்து ஒளிக் கதிர் போலவும், வீழும் அருவி போலவும் தொடர்ச்சியாக கபால வாசல் (உச்சி) வழியாக சிசுவின் உடலில் பாயும். சிசு தேனை உண்டு வளர்வதைப்போல் அதை உண்டுவளரும்.
    • ஒன்பதாவது மாதம் பூர்வ ஜன்ம வாசனையால் தன்னை உண்டாக்கிய ஈசன் திருவடிகளை நினைத்தபடி கரம் கூப்பி அருள்தா என்று வேண்டி தவம் செய்யும்.
    • பத்தாம் மாதம் இறைவனின் திருவருளால் தாயின் வயிற்றில் உள்ள அபானவாயு பிடித்துத் தள்ள சிசு காலால் உதைத்துக் கொண்டு சிசுவின் தலையானது தாயின் யோனியின் வாயிலை முட்டிக்கொண்டு வந்து பிறக்கும்.மாயா சத்தி, கிரியா சத்திகளின் வசப்பட்டு மாயையால் பூர்வ ஜன்ம நினைவுகளையும் மறந்து நல்வினை தீவினை என்ற இரு வினைகளையும் ஏந்தி அவ்வினைகளின் பயனாய் உண்டான பிணிகளுடன் கொடியோடு கூடிய சுரையைப்போல் புவியின்மீது வந்துவிழும். அத்துடன் குழந்தையானது தனக்கும் இறைவனுக்கும் உள்ள நினைவுகளை மறந்துவிடும். அதன் பின் பொய்யான வாழ்க்கையைத் தொடங்கிவிடும்.
திருமூலரின் திருமந்திரத்தில் - ( ஆண்/ பெண் குழந்தை பிறக்க ) குழந்தை குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக " ( நமது பாரம்பரிய ரகசியம் ) திருமூலர் சொல்லும் அபூர்வ ரகசியம். !!!

புரிய கூடியவங்க புரிஞ்சி கொள்ளுங்கோ....?

(உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும் காண்பது 
ஆண் பெண் அலி எனும் கற்பனை பூண்பது 
மாதா பிதா வழி போலவே ஆம்பதி செய்தான் 
அச் சோதி தன் ஆண்மையே. (திருமந்திரம் 477)

477. இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் : 
உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் 
பெண் ஆகும் பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் 
அலியாகும் தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் 
பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம் 478)

478. கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம்  
 
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.

பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும் 
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் 
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை 
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. (திருமந்திரம் 479)

479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் :
ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.

பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும் 
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் 
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும் 
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. (திருமந்திரம் 480)

480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்: சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம் 
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம் 
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை 
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (திருமந்திரம் 481)

481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் 
பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் 
இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி 
அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. (திருமந்திரம் 482)

482. மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:
இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும். ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும். ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் 
கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும் 
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில் 
கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. (திருமந்திரம் 483)

483. உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.

கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும் 
தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம் 
பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப் 
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. (திருமந்திரம் 484)

484. பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.

குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர் சொல்லும் தகவல்!!!

அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்) ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர்.

தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.

கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்......

மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது. உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண் குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும். ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக? இருக்கும். சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல் இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.

இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.

கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும். இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும் சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.

சரி... எந்த நிலையில் தான் நல்ல, ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்.

தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும். இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.

உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும். ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.

கணவனும் மனைவியும் மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்?

தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல்,இரவு,எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள்,பெண்கள் தேகம் வெளுத்து ,வாடி,வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம் ,நித்திரை,பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இரு பாலரும் இருத்தல் அவசியம். இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம்.பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும்,என்று இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார்.

ஆகாரம் ,மைதுனம் ,ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேஹமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி ,அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால் ,திரியானது அணைந்து போய் ,ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் .

960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்? செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுதிவிடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60 நாழிகை என்பது ஒரு நாள் .960 நாழிகை என்பது 16 நாளாகும் இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும்.இதற்க்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும் ,ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.

பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும்,ருதுவில் பிரச்னையும் எற்படுமென்கிறது சாஸ்திரம்.. சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும்.ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது. ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு ,அதனால் தேஹம் தளர்ந்து ,முகம் வெளுத்து ,கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை மங்கி , ஜீரண சக்தி குறைந்து ,ஞாபக சக்தி குறைந்து,மொத்தத்தில் பலவீனமாகி ,கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான் ..

எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று மனுஸ்மிர்தி கூறுகிறது. 

தமிழர் அறநூல்களில் கருவியல்

கருவுறுதலும் உடல் இயக்கமும்:

மேற்கூறப்பட்ட செய்திகளிலிருந்து கருவுறுதல் என்பது, “சூல்”, என்று குறிக்கப்படுவதும், ஒரு பெண் முதன் முதலில் கருவுறுதல் தலைச் சூல் அல்லது கடுஞ்சூல் (ஐங்குறுநூறு: 271-309) எனவும்; குறைப்பிரசவம் இயல்பு மீறிய செயலாகவும் கருதப்பட்டது. முழுகாலக் கர்ப்பம் நிறைசூல் எனவும் அழைக்கப்பட்டது. இது போல குறுகிய காலக் கருச்சிதைவு உறுப்பில் (உறுப்பு + இல்) பிண்டம் என்றழைக்கப்படுவதை,

“சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்”  (புறம்: 28-1)

என்று புறத்தில் குறிப்பிடப்படுகிறது.

பூப்பு எய்திய மூன்று நாட்களும். தலைவி, தலைவனைப் பிரிந்து உறைவாள். மகப்பேறு நிகழும் இல்லத்தினை ஈனில் (குறுந்தொகை - 85) என்று குறித்தனர். இலங்கையில் இச்சொல் இன்றும் வழக்கிலுள்ளது. மகப்பேறு அடைந்தவுடன் சின்னாளளவு சிற்சில மகளிர்க்கு அல்கும் பக்க மெங்கும், வரி, வரியாகத் தோல் விரிவடையும். இதனை வரித்திவலை “அல்குல்” என்று குறித்தனர் (நற். 370). சூல் முதிர்ந்து அசையும் இயல்புடைய நிறைசூல் மகளிர் மார்பகம் பருத்துப் பால் கட்டி யிருக்கும். மகவு ஈன்றபின் வெண்கடுகை அரைத்து நெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொள்வர். (நற். : 370).

கரு உற்பத்தி:

திருமந்திரம் இரண்டாம் தந்திரத்திலுள்ள 14-ஆவது அதிகாரம் கரு உற்பத்தியைக் குறிக்கின்றது. இதிலுள்ள 39 பாடல்களும் தாய், தந்தையின் ஜீவ அணுக்கள் எவ்வாறு கலந்து குழந்தை உண்டாகிறது என்பதை விரிவாகக் காட்டுவதை

“ஆதினம் ஆருயிர் கரு உருவாகும்

     விதங்கள் ஆக்குகின்றான்

கர்ப்பக் கோளனாக உள்ளிருந்து.”         (436)

“பூவும் மொட்டும் பொருந்த, அலர்ந்த பின்

காவுடைத் தீபம் (கரு) கலந்து பிறந்திடும்.”  (464)

“விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

ஒழிந்த முதல் ஐந்தும்.”                                  (440)

“புருடன் உடலில் பொருந்து மற்று, ஓரார்

திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது

உருவம் இரண்டாக ஓடி விழுந்தது.”     (439)

என்ற பாடல் வரிகள் சுட்டியுள்ளது.

பூவும் மொட்டுமாக, பெண்ணும், ஆணும் கலந்து போது, பெண்ணின் கருக்குழியைத் தேடிப்புகுந்து, ஆண் ஜீவ அணுக்கள் உருவம் இரண்டாக ஓடி விழுந்தது என்னும் திருமூலரின் கருத்தை இன்றைய அறிவியலும் ஒப்புகிறது.

பெண்ணின் கருவணுவிலும், ஆணின் விந்தணு விலும் 46 இனக்கீற்றுகள் உள்ளன. அவை இரண்டாக இணைந்து 23 ஜோடி இனக்கீற்றுகளாக உள்ளன. இதுவே பண்பினக் கீற்றுகள் எனவும், ஆண், பெண் பாலின வேறுபாட்டை உணர்த்தும் ஒரு ஜோடி இனக்கீற்றுகளைப் பாலினக் கீற்றுகள் எனவும் அழைப்பர். ஆண், பெண் ஆகிய பாலினக் கீற்றுகளின் வேறுபாட்டை ஆணின் விந்தணுவில் காண இயலும். பெண்ணின் கருவணுவில் உள்ள இரண்டு பாலினக் கீற்றுகளும் அமைப்பில் ஒரே சீராக இருந்து XX என்று அழைக்கப்படுகின்றன. ஆணின் விந்தணுவில் உள்ள இரு பாலினக் கீற்றுகளும் அமைப்பில் ஒரே சீராக இராது. ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறிய தாகவும் உள்ளன. பெரிய பாலினக் கீற்று 44 X ஆகும். சிறிய பாலினக்கீற்று சீ என்றழைக்கப்படும். எனவே பெண்ணின் கருவணுவில் 44 பண்பினக்கீற்றுகளும் 44 + XX ஆகும். ஆணின் விந்தணுவில் உள்ள 44 பண்பினக்கீற்றுகளும் 44 + XY ஆகும்.

பெண்ணின் கருக்குழியில், ஆணின் ஜீவ அணுக்கள் ஓடிவிழுந்து இரண்டாகும் என்பது இன்றைய அறிவியலோடு ஒத்து நிற்கிறது.

ஆண், பெண் உறவு கலந்து கரு உருவாகும் நிலையைப் பற்றிக் கூறும் போது;

“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிர மத்தே தோன்றும் அவ் யோனியும்

புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல்

சுக்கிரம் எட்டும் சாணது ஆமே.”

(திருமந்திரம் பா. எண். 464)

என்ற பாடலில் ஆணின் வெண்ணிற உயிரணுவும், பெண்ணின் செந்நிற உயிரணுவும் எட்டு விரற் கடையளவு தத்தம் இடத்தினின்று வெளிப்பட்டு, பெண்ணின் உயிரணுவுடன் சேர்ந்து, நான்கு விரற் கடையளவு உள்ளே சென்று எண் சாண் உடம்புக்கு வழி வகுக்கும் என்றும் “மோகத்தில் ஆங்கொரு முட்டை செய்தானே” (திருமந்திரம்: 465) எனத் தொடங்கும் பாடல் வரிகளில் இருவரது மயக்க நிலையிலும் ஒரே ஒரு கரு முட்டையே வெல்லும் தன்மை கொண்டது என்னும் மருத்துவ அறிவியல் உண்மையையும் புலப்படுத்துகிறது.

கருவமையும், தாயின் உடற்கூறு:

ஆணா! பெண்ணா! என்று பால் வேறுபாடு அறிய புணர்ச்சியின் போது பிராணவாயு வலது நாசியில் இயங்கினால், பிறப்பது ஆணாகும். இடது நாசியில் இயங்கினால் பெண்ணாகும். அப்படி இன்றி அந்நிலையில் பிராண வாயுவை அபான வாயு எதிர்த்தவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும். பிராண வாயு இரு மூக்கிலும் இயங்கினால் பிறப்பது அலியாகும்.

(திருமந்திரம்: 482)

கருவமையும் போதும், கரு வளரும் போதும் தாயின் வயிறு மலம், சிறுநீர் மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை ஊமை, குருடு, செவிடாக இல்லாமல் அறிவுடன் விளங்கும்.

                (திருமந்திரம்: 1941)

கருவும், கரு வளர்ச்சியும்:

“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்ததும்”

கருவில் வளர் நிலைகளை மாணிக்கவாசகர் தம் போற்றித் திரு அகவல் பகுதியில் மிக நுட்பமுடன் விளக்குகிறார்.

உயிரானது வினைக்கேற்பப் பல பிறவிகளை அடைகின்றது. மானிட யோனிவழி மனிதப் பிறவியை எய்துகிறது. கருப்பையில் இருக்கும் போது ஒன்றையன்று ஒத்துள்ள உயிர் தத்துவங் களுக்கிடையில் போராட்டம் ஏற்பட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்று மேம்பாட்டுடன் வளர்கிறது. தான்றிக்காய் அளவு இருக்கும் கருவானது இரு மாதத்தில் வலுவடைந்தும், மூன்றாம் மாதத்தில் தாயின் கருப்பையில் இருக்கும் சுரோணித நீரில் புதையுண்டு போகாமலும், நான்காம் மாதத்தில் இருளிலிருந்து உயிர் பிழைத்தும், ஐந்தாம் மாதத்தில் கருக்கலையாமலும், ஆறாவது மாதத்தில் அவயங்கள் முறையாக அமைந்து உயிர் வாழ்ந்தும், ஏழு, எட்டு, ஒன்பது மாதங்களில் பல்வேறு துன்பங்களிலிருந்து நீங்கியும், பத்தாவது மாதத்தில் தக்க நேரம் வரும்போது பிழைத்தும், இப்பிறப்பு எய்தலாயிற்று என்னும் கருத்தினை மாணிக்கவாசகர் 10 மாதம் கருப்பையில் நிகழும் பல்வேறு நிலைகளைக் குறிப்பிடுவது வியப்பிற்குரியது.

கரு முதலில் குழம்பாக இருந்து பின்னர்க் கட்டியாகி மூளை, நரம்பு, எலும்பு, தோல் முதலியன உண்டாகப்பெற்று உருவாகும். இந்த உண்மையை ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சுட்டியுள்ளார். (தாயின் மணி வயிற்றில்: அ.மு.பரமசிவானந்தம்: பக். 58-60)

மேலும் உயிர் கருவினுள் அருவுடம்போடு இருக்கும் நிலையினைப் புலம்பு நிலை என்று குறிப்பிடுவர் என்றும், கரு தாயின் வயிற்றில் முந்நூறு நாட்கள் தங்கும் என்றும், திருமந்திரம் (பா. 437, 440) விளக்குகிறது.

இதுபோலவே; (பட்டினத்தார் உடற்கூற்று வண்ணம்):

“ஒருமட மாதும் ஒருவனுமாகி

                இன்ப சுகம்தரும் அன்பு பொருந்தி

உணர்வு கலங்கி ஒழுகிய விந்து

                ஊறு சுரோணிதம் மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது

                பண்டியில் வந்து புகுந்து திரண்டு

பதும அரும்பு கமடமி தென்று

                பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று

உருவமும் ஆகி.

                உயர வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும்

நிறைந்து மடந்தை

                உதரம் அகன்று புவியில் விழுந்து

ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து.”

என்று பட்டினத்தார் குறிப்பிடுவது மகப்பேறு மருத்துவ வேரைத் தொடுகின்றது.

தேவாரம் பாடிய மூவர்க்குப் பிற்பட்ட காலத்தவரான கல்லாடர் எனும் புலவர் எழுதிய கல்லாடம் கருவமையும் காட்சியையும் கருவுற்ற தாயின் உடல் நிலையையும்

“புல்நுனி பனியென மதல்”

என்று குறிக்கிறது.

உயிர்கள் கருவாகும் காலம் புல்நுனி மேல் வீழ்ந்த பனித்துளி அளவிற்றாக இருக்கும் என்பதை

“அறுகுநுனி பனியணைய சிறிய துளி

பெரியதொரு ஆகமாகி”

என்பது அருணகிரியார் திருப்புகழ் கூறுகிறது.

வயா நோய்:

இவ்வாறு கருவுற்ற பின் தாயின் உடலில் ஏற்படும் மாற்றம் வயா நோய் காரணமாக அவள் உடம்பில் தோன்றும் மாற்றங்களை

“பீர்க்கம் பூவின் சிறம் போலப் பசலை

பூத்தது புளிச்சுவையை விரும்பினாள்

இல்லத்தின் கண் உண்டான புகை படிந்த

கரிய மண்ணை வாயிட்டுச் சுவைத்தாள்.”

என்ற பாடல் வரிகள் விளக்குகிறது.

முலைக்கண் கருத்தன, கண்களில் குழி விழுந்தது என்ற அறிகுறிகள் தற்கால மகப்பேறு நூல்களில் குறிக்கப்பெறும் அறிகுறிகளைப் பெரிதும் ஒத்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங் களில் மசக்கை மிகுதியாக உண்டாகும். இக்காலக் கட்டத்தில் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டுத் துன்புறுவர். இதுவே சங்க காலத்தில், “வயா நோய்,” வெட்கை நோய் எனக் குறிப்பிடப் பட்டது.

“வயா வென் கிளவி வேட்கைப் பெருக்கம்”

என்பதில் வயா ஒருவிதமான நிலை மாற்றம் எனப் படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு உணவு, மணம் அல்லது சுவையினாலோ ஏற்படும். இதை ஆங்கிலத்தில் ‘Picca’ என்பர்.

இந்நோய் உள்ள மகளிர் புளிப்புச் சுவையைப் பெரிதும் நாடுவர். புளியங்காய் (கலித். : 28), மண் (புறம் : 20), போன்றவற்றை உண்டு, இந்நோயின் துன்பத்திலிருந்து விடுபடுவர்.

“பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர்”

என்று (குறுந்தொகை - 287 : 4-5) குறிப்பிடுகிறது.

இதுபோல மற்றவர் அறியாது மண் உண்ணுவதை;

“வயவுறு மகளிர் வேட்டு ணின் அல்லது

பகைவர் உண்ணா அரு மண்ணினையே”

(புறம்: 20: 14-15)

என்று புறமும் குறிப்பிடுகிறது.

பிள்ளைப் பேற்றின் பின் ‘நெய்யணி முயக்கம்’ என்று குறிப்பிடக் கூடிய எண்ணெய் நீராடும் செயலைப் பெண்கள் மேற்கொண்டனர் என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. (தொல். பொருள், பேரா. நூற். 46).

இது போலவே பிரசவித்த பெண்ணை நெய்யில் குளிப்பாட்டும் வழக்கு சங்க காலத்தில் இருந்து வந்துள்ளதை நற்றிணை,

“பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை

சீர்கெழு மடந்தை ஈர்க்கை பொருந்த,”

(நற்றிணை: 405-10)

என்று குறிப்பிடுகிறது.

இதில் பிரசவித்த தாய்க்கு அசதி, வலியைப் போக்க வெண்கடுகு, உடல் வெப்பத்தைத் தணிக்க பசுநெய் ஆகியவைகள் பயன்பட்டிருப்பது அறிய வருகிறது.

இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்டி வளர்த்ததையும், (நற்றிணை - 355: 1-2). தாய்ப்பால் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பின் அவர்களைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி யதும் (பத்துப்பாட்டு- 6: 601-602) அறியப்படுகிறது.

கருப்பை அறுவை முறை (Caesarean):

காந்தபுரத்தை ஆண்டவேந்தன் மகள் பிரசவ வேதனையால் துடிப்பதைப் பார்த்த நறையூர் மருத்துவச்சி வயிற்றைக் கிழித்து, குழந்தையை எடுத்தாள். அவள்தன் மருத்துவத் திறமையால் குணப்படுத்தினாள் என்று கொங்குமண்டலச் சதகம் (92) கூறுகிறது.

“குறைவறு தெண்ணீர் நதியணை காந்தபுரத் தொரு நல்

லிறை மகளார் மக வீனப் பொறாதுட லேங்க வகிர்

துறை வழி பேற்று மகிழ்வூட்டு மங்கல தோன்றி வளர்

மறைவழி நேர் நறையூர்நாடு சூழ் கொங்கு மண்டலமே”

என்ற பாடல் வழி இந்நிகழ்ச்சியினை எடுத்துரைக்கிறது.

கருச்சிதைவு:

சங்க காலத்தில் கருச்சிதைவு ஒரு பாவச் செயலாகவும், அதற்குப் புறம்பான ஒரு செய லாகவும், நீதி முறைக்கும் ஒழுக்கம் பண்பிற்கு மாறு பட்டதாகவும் சித்திரிக்கப்படுகிறது. மருத்துவர் களோ அல்லது மற்றவர்களோ கருச்சிதைவுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டது. மீறினால் அறமே அவர்களைத் தண்டித்துவிடும் என்று நம்பப்பட்டது. இதனை;

“மாணிழை மகளிர் கருச் சிதைத் தோர்க்கும்

உய்தி இல்லென அறம் பாடிற்றே”   (புறம்: 34)

என்று புறநானூறு விளக்குகின்றது.

பிறவிக் குறைபாடு:

(மக்கள்) பிறக்கும்போது குழந்தை பல மாறுபாட்டுடன் பிறப்பது உண்டு. அதில் ஒருவகை கவைமகன் எனும் வியப்பான பிறவி. தாயின் கருவில் இரு பகுதிகளாகப் பிரிந்து உருவும், அதன் நிழலும் போல ஒன்றுபட்டு உருவாகிப் பிறக்கும் ஒட்டிய இரட்டைப் பிள்ளையைத்தான் கவைமகன் (சாயாமிய இரட்டையர் - Siamese Twins) என குறுந்தொகை கூறுகிறது.

“கவை மக நஞ்சு உண்டா அங்கு

அஞ் சுவல் பெரும

என் நெஞ்சத்தானே”                                (குறுந்தொகை: 324)

இது 10 லட்சத்தில் ஒருவர் இவ்வித மாறுபட்ட பிறவியாகப் பிறப்பர் என்ற உண்மையை ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. பிறவிக் குறைபாடு கூட குறுந் தொகையில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது அறிய வருகிறது. இந்தப் பாடலைப் பாடிய புலவரும் கலைமகனார் என அழைக்கப் பெறுகிறார்.

இவை மட்டுமின்றி அறிவு மங்கிக் குழந்தை பிறக்கும் தன்மையும், தசைத்திரளாகக் குழந்தை பிறப்பதும், விலங்கு வடிவுடன் பிறப்பதுமாகிய நிலைகளும் புறத்தில் (பா. 28) சுட்டப்படுகின்றன.

ஆண் குழந்தை பெற்றெடுப்பது என்பது தொன்று தொட்டுப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்க, வாரிசுகளைப் பெற்றுக் குடும்பத்திற்குப் புகழ் வாங்கிக் கொடுத்தது என்பதைக் குறித்த கருத்தை;

“கடும்பு உடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி

நெய்யடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி

புதல்வன் ஈன்றென.”                   (நற்றிணை - 370:2-5)

கருவியல் (Embryology):

“மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே,” என்ற சூத்திரத்தில் உயிர்மெய் எழுத்துக்களில் மெய் முன்னரும், உயிர் அதன் பின்னரும் ஒலிக்கும் என்பதை, இலக்கணம் கூறும் வகையில் ஓர் உண்மை புலப்படுத்தப்படுகிறது. உடல் வழியாகத்தான் உயிர் தோன்றும் என்ற கருத்தைத் தொல்காப்பியர் மறை முகமாக உணர்த்தியுள்ளார். இதற்கு விளக்கம் கூறிய உரை ஆசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் “உயிர் காட்சிப் பொருள் அல்லவேனும் அவ்வுயிர் எடுத்த உடம்பின் வாயிலாக அவ்வுயிர் உண்மை தெரிய வரும்” என்கிறார். (தொல் எழுத்து நூன்மரபு: 18 கு. சுந்தரமூர்த்தி) மெய்ப்பொருள் கூறும் வகையில் இருப்பதாக இருந்தாலும் கருவியல்படி (Embryology) கருப்பையில் விந்தும், அண்ட அணுவும் சேர்ந்து கரு உண்டாகிப் படிப்படியாக வளர்ந்து, இரண்டாவது வாரத்தில் இருந்து எட்டாவது வாரம் வரையில் கரு வளரும் நிலையாகின்றது (Embryonic Stage). இந்த நிலையை அடுத்த உடலின் பாகங்கள் படிப்படியாகத் தோன்றி உருவம் அடையும் நிலை பிண்ட நிலை யாகும். இந்நிலை ஒன்பது வாரங்களில் இருந்து நாற்பது வாரம் வரையாகும். இந்த நிலையில்தான் பிண்டம் வளர்ச்சியடைந்து, அதன் இயக்கம் உண்டாகும். இந்த இயக்கம் முதல் பதினான்கு முதல் இருபது வாரம் உள்ளாக, இவ்வியக்கத்தைத் தாயால் நன்கு அறிய முடியும் (Essential of HumanEmbryology 1982, P.. 110-104). இயக்கம் இல்லாத பிண்ட நிலையை ஆங்கிலத்தில் Product of Conception என்றே கூறுவர். குழந்தை என்று சொல் வதில்லை. இவ்வியக்கத்தினால் உடல் வழியாக உயிர் தோன்றும், கருவியல் உண்மையைத் தொல் காப்பியர் காலத்தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிய வருகிறது.

ஆண், பெண் தோற்றம்:

பெண்ணின் கருவணுவிலுள்ள 44 பண்பினக் கீற்றுகளும், பாலினக்கீற்றும், ஆணின் 44 பண்பினக் கீற்றும், + XX பாலினக்கீற்றும் சேரும் போது, பிறக்கும் குழந்தை தந்தையின் கீற்றும் சேர்ந்து (44 + XY) ஆணாகவும், தாயின் பாலினக்கீற்றும் சேர்ந்து (44 + XX) பெண்ணாகவும், இதில் பாலினக்கீற்று தவறுகளால் அலியாகவும் தோன்றும் என்பதை இன்றைய அறிவியல் கூறுகிறது. இதே கருத்தைத் தான் திருமூலர்;

“பூண்டது மாதா பிதா வழிபோலவே

ஆம்பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே.”

(திருமந்திரம்: 461)

“ஆண்மிகில் ஆணாகவும், பெண்மிகில் பெண்ணாகவும்,

பூண் இரண்டும் ஒத்துப் பொருந்தில் அலியாகும்.”

(திருமந்திரம்: 462)

என்று கூறுவது வியப்பதைத் தருகிறது.

 

இஸ்லாம்  


ஆணின் விந்து பெண்ணில் செலுத்தப்பட்டு 24 மணத்தியாலங்களுக்குள் பலோபியன் குழாயினூடாக கருவறையை நோக்கி வந்து கொண்டிருக்கும். பெண்ணின் சினைமுட்டையுடன் சேர்ந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது.

பின்னர் விந்தினதும் சினைமுட்டையினதும் சேர்க்கையான அக்கலப்புத்துளி பலோப்பியன் குழாயினூடாக 6ம் நாளில் கருவறையை வந்தடையும். இதையே அல்குர்ஆன் “நுத்பதுன் அம்ஷாஜ்” எனக் குறிப்பிடுகிறது.

நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம். (76: 2)

விஞ்ஞானம் இக்கலப்புத் துளியை (Zygote) என்கிறது. குருவறையை நோக்கிவரும் வழியில் 4ம் நாளில் Zygote Blastolyst என்ற சூலாக விருத்தியடைய ஆரம்பித்து 6ம் நாள் கருவறையை வந்தடைகிறது. பின்பு அங்கு ஸ்திரமாக 10 நாட்கள் “நுத்பதுன் அம்ஷாஜ்” என்ற நிலையில் தங்கி இருக்கும்.

இந்த தங்கு நிலையையே அல்குர்ஆன் குறிப்பிட்டதொரு கால அளவு வரை அதனைப் பாதுகாப்பான இடத்தில் அமைத்தோம் (27: 21-22) பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தில் கருவறையில் நாம் அவனை இந்தரியத்துளியாக்கினோம் (23: 13) என்கிறது.

6ம் நாளில் இருந்து 15ம் நாள்வரை 10 நாட்கள் நுத்பதுன் அம்ஷாஜ் என்ற நிலையிலேயே இருக்கும். 15-23 அல் லது 24 நாட்கள் வரை 8 அல்லது 9 நாட்கள் கரு அலகா (Placenta) என்ற நிலையில் வளர்ச்சியடையும் 23-24 நாட்களுடன் அலகா என்ற நிலை முற்றுப் பெறுகின்றது.

அதிலிருந்த 2 நாட்களில் 24-26 வரை அலகா அவசரமானதொரு மாற்றத்துக்குள்ளாகி முழ்கா என்ற கட்டத்தை அடைகிறது. என்பு வளர்ச்சி (இழாம்) பின்னர் அம்மாமிசத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம் (23:14) ஒரு மனிதனின் என்பு வளர்ச்சி 20-25 வயது வரை நீடித்துச்

ஆரம்ப நிலைக்கான எலும்பு வளர்ச்சிகளே நடைபெறுகின்றன. அவற்றைச் சூழ 15 நாட்களில் தசைகள் உருவாகின்றன. ‘பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். முளையமானது ஸ¥றா அல்முஃமினூனில் 14ம் வசனத்தில் கூறப்படுவது போன்று புதிய வித்தியாசமான அமைப்புக்கு மாற்றப்படுகின்றது.

பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். (23:14)


எளிய அமைப்பிலான முக உறுப்புகள் அவ்விடங்களை விட்டும் பொருத்தமாக, சரியான இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. காதுகள் கழுத்துப் பகுதியில் இருந்து சரியான இடத்திற்கும், கண்கள் இருபக்க ஓரங்களில் இருந்து முன்னோக்கியும் மூக்கு, வாய் என்பன அவற்றிற்குரிய இடத்திற்கு நகர்த்தப்பட்டு அண்ணளவான மனித முகத் தோற்றத்தைப் பெறுகின்றன.

(அன்ஷஃனா), முளையம் ஏற்கனவே அநையும் நிலையில் இருந்தாலும் ரூஹ் ஊதப்பட்ட பிறகுதான் சுயமாக அசைவும், செவியுறவும், பார்க்கவும், பேசவும் சிரிக்கவும் அழவுமான ஆற்றல்களைப் பெறுகின்றது. 6+10+9+2+15=42 நாட்கள் நுணுக்கக் காட்டியோ வேறு சாதனங்களோ கண்டு பிடிக்கப்பட்டிராத அக்காலத்தில் 42 நாள் என்ற விடயம் நபியவர்களால் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது.

“முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் இதனை வடிவமைக்கிறார் மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள் எலும்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கிறார். பின்பு என் இரட்சகனே இது ஆணா, அல்லது பெண்ணா என்று வினவுகிறார். பின்பு என் இரட்சகன்தான் வரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கிறார். (முஸ்லிம்)

இவை அமெரிக்க முளையவில் ஆய்வாளர்க ளான Porf E.Marshall Johnson T.V.N. , Persard ஆகியோரால் நிரூபிக்கப்பட்டுள்ளன. 
 


யூத கிறிஸ்தவம் 


நீ என் உள்ளத்தை உருவாக்கினாய்; என் தாயின் வயிற்றில் என்னை இணைத்தாய். நான் உன்னைப் போற்றுகிறேன், ஏனென்றால் நான் பயமுறுத்தும் அற்புதமாக உருவாக்கப்பட்டேன். உங்கள் படைப்புகள் அற்புதம்; என் ஆன்மாவிற்கு அது நன்றாகவே தெரியும். நான் இரகசியமாக உருவாக்கப்பட்டபோதும், பூமியின் ஆழத்தில் நுணுக்கமாக நெய்யப்பட்டபோதும், என் சட்டகம் உனக்கு மறைக்கப்படவில்லை. உனது கண்கள் என் உருவமற்ற பொருளைக் கண்டன; உங்கள் புத்தகத்தில், அவை ஒவ்வொன்றும், எனக்காக உருவாக்கப்பட்ட நாட்கள், அவை எதுவும் இல்லாதபோது எழுதப்பட்டுள்ளன. - சங்கீதம் 139:13-16  

“உன்னை வயிற்றில் உருவாக்குமுன் நான் உன்னை அறிந்தேன், நீ பிறப்பதற்கு முன்னே உன்னைப் புனிதப்படுத்தினேன்; நான் உன்னை தேசங்களுக்கு தீர்க்கதரிசியாக நியமித்தேன். - எரேமியா 1:5  


குறிப்பு: ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய பிறரின் கட்டுரைகளின் தொகுப்பு இது  

2 கருத்துகள்:

  1. திருமூலர் திருமுறை : பத்தாம்-திருமுறை சிறப்பு: — படைத்தல்1 (1சிருஷ்டி; சர்வ சிருஷ்டி)

    ஆதியோ டந்தம் இலாத பராபரம்1
    போதம தாகப் புணரும் பராபரை
    சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
    தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

    பா-ம் : 1பராபரன்  1 நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
    தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
    பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
    வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.  2 இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
    கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
    வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
    சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.  3 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
    ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
    பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
    சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.  4 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
    கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
    தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
    பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.  5 புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
    புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
    புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
    புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.  6 புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
    தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
    கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
    மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.  7 நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
    காயத்திற்1 சோதி பிறக்கும்அக் காற்றிடை
    ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
    நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே.


    பா-ம் : 1காய்கதிர்ச்  8 உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
    அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
    கண்டச் சது(ர்)முகக் காரணன் தன்னொடும்
    பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.  9 ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
    பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
    வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
    ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.  10 காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
    நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
    பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
    ஆரண மாஉல காயமர்ந் தானே. 

    பதிலளிநீக்கு
  2. 11 பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
    நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
    அயன்ஓளி யாயிருந் தங்கே படைக்கும்
    வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.  12 போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
    தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
    மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
    தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.  13 நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
    ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
    முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
    நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.  14 ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
    வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
    போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
    ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.  15 ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
    இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
    பருவங்கள் தோறும் பயன்பல வான
    திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.  16 புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
    புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
    புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
    புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.  17 ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
    காரிய காரண ஈசர் கடைமுறை
    பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
    ஆணவம் நீங்கா தவரென லாகுமே.  18 உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா
    மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்து
    பெற்றவன்1 நாதம் பரையிற் பிறத்தலால்
    துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.

    பா-ம் : 1பெற்றவள்  19 ஆகாய மாதி சதாசிவ ராதியென்
    போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
    மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
    ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.

    பா-ம் : 1அளித்ததே  20 அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
    அளியார் திரிபுரை யாமவள் தானே
    அளியார் சதாசிவ மாகி அமைவாள்
    அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.  21 வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
    காரணி காரிய மாகக் கலந்தவள்
    வாரணி ஆரணி வானவர் மோகினி
    பூரணி போதாதி1 போதமு மாமே.

    பா-ம் : 1பூதாதி  22 நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
    சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
    மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
    என்றிவ ராக இசைந்திருந் தானே.  23 ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
    ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
    ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
    ஒருவனு மேஉல1 கோடுயிர் தானே.

    பா-ம் : 1மேஉடலோடுயிர்  24 செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
    மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
    கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
    அந்தார் பிறவி அறுத்துநின் றானே.1

    பா-ம் : 1ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே  25 தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
    கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
    ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
    நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.  26 ஓராய மேஉல கேழும் படைப்பதும்
    ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
    ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
    ஓராய மே உலகோடுயிர் தானே.1

    பா-ம் : 1உடலோடுயிர் தானே  27 நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
    கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
    ஏது பணியென் றிசையும் இருவருக்
    காதி இவனே அருளுகின் றானே.  28 அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
    மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
    பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
    கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.  29 ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
    போதித்த வானொலி பொங்கிய நீர்புவி
    வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
    ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.  30

    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-2-pataithal/#gsc.tab=0

    பதிலளிநீக்கு