இசை

1) கவிதை எழுதி இசை இசைத்து பாடல் பாடுவது ஏறக்குறைய அனைத்து சமயங்களும் தடை செய்த ஒன்று.

தமிழர் சமயம் 

பண்அமை யாழ்குழல் கீதம்என்று இன்னவை
நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொல்நீக்கி விண்இன்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி. - (அறநெறிச்சாராம் - 196)

விளக்கவுரை இசையுடன் பொருந்திய யாழும் குழலும் இசைப் பாட்டும் என்னும் இவற்றை அவை நிகழும் இடங்களுக்குப் போய் அவற்றை விரும்பிக் கேட்பவை செவிகள் ஆகா. உறுதியுடன் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைக் கேளாது நீக்கித் துறக்க இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும் உறுதிமொழிகளைக் கேட்பதே செவிகளாகும்.

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தம்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)

வாழ்க்கை நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் கடமையை உடனுக்குடன் செய்வர். இடையறாத இசையை சோதிடத்தை பார்த்துப் பிதற்றிக்கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை.

பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். (ஏலாதி 25)

பொருள்: பாடல் பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள்தோன்றும் நாடகங் காணாமை. அவ்வாறு கண்டால், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

இஸ்லாம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) (நூல் : புகாரி 5590)

அல் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: புல்லாங்குழல், கம்பி வாத்தியங்கள் மற்றும் டிரம்ஸைப் பொறுத்தவரை, அவற்றைக் கேட்பது தடைசெய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. முந்தைய தலைமுறையினர் மற்றும் பிற்காலத் தலைமுறையின் முன்னணி அறிஞர்கள் மத்தியில் யாருடைய கருத்துக்கள் எடைபோடுகின்றனவோ அவர்களில் எவரிடமிருந்தும் அவர்கள் அனுமதித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. மது அருந்துவதற்கும், தீய செயல்களுக்குக் கொடுக்கப்பட்டவர்களின் அடையாளமாகவும், ஆசைகளையும், ஒழுக்கக்கேட்டையும், விபச்சாரத்தையும் தூண்டும் போது அது எப்படி ஹராம் ஆகாமல் இருக்கும்? அப்படி எதுவாக இருந்தாலும் அதன் தடை பற்றியோ, அதைச் செய்பவன் தீயவன், பாவி என்பதிலோ எந்த சந்தேகமும் இருக்க முடியாது. (az-Zawaajir 'an Iqtiraaf al-Kabaa'ir (2/337) 

யார்(இவ்வுலகில்) பாட்டுசப்தத்தை கேட்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ரூஹானிய்யீன் (சுவனத்துகாரிகளின்) சப்தத்தை கேட்க அனுமதிக்கப் படமாட்டாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி) நூல்: தப்ஸீர் குர்துபி)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்ள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (ஆடுவதையும்)| மற்றும் அல்-கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு நச்சுப் பொருளும் தடை செய்யப்பட்டதே. இந்த ஹதீஸை தனக்கு அறிவித்த அலி பின் பதீமா அவர்களிடம் சுஃப்யான் அவர்கள், அல் கூபா என்றால் என்ன என்று வினவிய போது, அல்-கூபா என்றால் மத்தளம் (னுசரஅ) என்று பதில் கூறினார்.  (முஸ்னத் அஹ்மது. பாகம்.1. பக்.289., பாகம்.2 பக்கம்.158 மற்றும் 171-172).

 இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும். முதலாவது, ஷைத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும்| இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன். (அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன்)

 அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: காற்றினால் ஒலி எழுப்பக் கூடியதும் (றiனெ)| புல்லாங்குழல் (ஆணைஅயயச) போன்றும் உள்ள இரு இசைக்கருவிகளை சந்தோசமான, உற்சாகமான நேரத்திலும், மற்றும் துக்ககரமான நேரத்திலும் இசைப்பதை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (அல் ஹாக்கிம்)

 

கிறிஸ்தவம் 

மூடர்களின் பாடலைக் கேட்பதைவிட , ஞானிகளின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது மனுஷனுக்கு நலம். - பிரசங்கி 7:5 

2) பெண்களை பாடகர்களாக ஆக்குதல் கூடாது  

தமிழர் சமயம் 

வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னும் சொல்
கூதற்குக் கூதிர் அனைத்து. (பெண் மயக்கு பாடல் - 111)

விளக்கவுரை பெண் ஒருத்தியைப் பாடுமிடத்து உலகத்தவர் விரைவாகச் சென்று விரும்பி விருப்புடன் கேட்காமல்  மாறுபாடு இல்லாத நூல்களைக் கற்பீராக. கற்று அவற்றுக்கு ஏற்றபடி ஒழுகுவீராக என்று சான்றோர் கூறும் சொல் முன்னமே குளிரால் நடுங்கும் உடலுக்கு குளிர் காற்று வீசியதைப் போன்றதாகும். 

இஸ்லாம்  

பாடகிகளை தன்னுடன் வைத்திருந்த ஒருவர் மரணித்துவிட்டால் அவர்மீது (ஜனாஸா) தொழ வைக்காதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்..(அறிவிப்பாளர்: ஆயிசா(ரலி). நூல்:தப்ஸீர் குர்துபி 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன்  உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)

முடிவுரை 

இஸ்லாத்தில் குர்ஆனை அழகாக ராகமாக ஓத ஆர்வமூட்டப் பட்டுள்ளது: 


குர்ஆனை அழகிய குரலில் ராகத்துடன் ஓதுவதும் ஓதும் ஒழுங்கு முறைகளைச் சேர்ந்ததே. "அழகிய குரலுடைய ஒரு நபி, குர்ஆனை சப்தமாக-ராகமிட்டு ஓதுவதை அல்லாஹ் கேட்டது போன்று வேறெதையும் கேட்டதில்லை!” (நூல்: புகாரி,முஸ்லிம்) 

ஜுபைர் பின் முத்இம் (ரலி)அவர்கள் அறிவிக்கிறர்கள்: “நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபி(ஸல்) அவர்களைவிட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை” (புகாரி. முஸ்லிம்) 

கிறிஸ்தவத்தில் கர்த்தரை பாட அனுமதிக்கப் பட்டுள்ளது

 நான் உயிரோடிருக்கும் வரை கர்த்தரைப் பாடுவேன்: நான் இருக்கும்வரை என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். அவரைப் பற்றிய என் தியானம் இனிமையாயிருக்கும்: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். - (சங்கீதம் 104:33-34)

பெரும்பாலான மதச்சார்பற்ற இசை பிலிப்பியர் 4:8 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். 

தமிழர் சமயங்களிலும் மறைநூல்களை பாடல் என்றும் பண் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. எனவே மறைநூல்களை அழகிய முறையில் ஓத அனுமதி அனைத்து சமயங்களிலும் உண்டு. ஆனால் அதுவல்லாமல் வேறு ஒன்றை கருப்பொருளாக எடுத்து, கவிதை எழுதி, பாடி, இசைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக பல இசை கருவிகளும் பெண்கள் பாடுவதும் தடை செய்யப் பட்டுள்ளது.

14 கருத்துகள்:

  1. உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,
    தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர
    பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,
    கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. ஏலாதி 51


    நாட்டினுள் நீர்வளத்தையும் குளத்தையும் கிணற்றையும் பலருஞ் செல்லும் வழியிற் றங்குதற்குரிய சிறு வீடுகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் மண்டபங்களையும் வகையினால் அமைப்பித்தவன், சிறந்த செல்வமுடைவனாய், இசையோடு பொருந்தின இயல்புடைய பாடலையும் ஆடலையும் பன்முறை கேட்டுங் கண்டும் அனுபவித்து உள்ளன்புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலை மிகுந்துள்ளவன் ஆவான்.

    பதிலளிநீக்கு

  2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் மதுவருந்துவர். அவர்கள் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டிக்கொள்வர். அவர்களின் தலைகளுக்கு மேல் வாத்தியக் கருவிகளின் இசையும் பாடகிகளின் பாடலோசையும் ஒலிக்கும். அத்தகையோரை அல்லாஹ் பூமியில் புதையுறச் செய்வான். அவர்களில் சிலரை அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாவும் உருமாற்றுவான்.

    நூல். (இப்னுமாஜா-4010)

    பதிலளிநீக்கு
  3. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்படுவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிமொழிவார்கள் அல்லவா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அவர்கள் நோன்பும் நோற்பர்; தொழுவர்; ஹஜ்ஜெல்லாம்கூட செய்வர்” என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பின் ஏன் அவர்களுக்கு இந்த நிலை?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் வாத்தியக் கருவிகளையும் மேளதாளங்களையும் பாடகிகளையும் பயன்படுத்துவார்கள். மதுவருந்தவார்கள். அந்தக் குடி கூத்து கும்மாளத்திலேயே தூங்கச் செல்வார்கள். மறுநாள் காலை வேளையில் உருமாற்றம் செய்யப்பட்டவர்களாக ஆகிவிடுவர்” என்றார்கள்

    நூல். இப்னு அபித்துன்யா. அஹ்மத். பைஹகீ

    பதிலளிநீக்கு
  4. ஹள்ரத் نافع (ரலி)அவர்கள் ஒரு நிகழ்வை சொல்கின்றார்கள்
    நான் இப்னு உமர்(ரலி)அவர்களுடன் ஒரு வழியில் செல்லும் போது ஒரு இடையனின் இசைக்கும் சப்தம் கேட்டது உடனே இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் இரு விரல்களையும் காதில் வைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டும் வேகமாக சென்றுவிட்டார்கள்.சற்று தூரம் சென்றபின்பு என்னிடம் ஓநாபிஃ ஏதேனும் சப்தம் கேட்கின்றதா என்று என்னிடம் கேட்க நான் இல்லை என்று கூறவும் உடனே காதுகளை விட்டும் கையை எடுத்துவிட்டு என்னிடம் இவ்வாறே நபி அவர்கள் செய்வதை நான் கண்டேன் என்றார்கள்

    பதிலளிநீக்கு
  5. சீரழிவை ஏற்படுத்தும் சினிமா https://usmanihalonline.blogspot.com/2013/11/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  6. கொலோசெயர் 2 :
    8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள்.
    9 தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது.
    10 கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார்

    பதிலளிநீக்கு
  7. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை..(அல் குர்ஆன் 36-69)

    பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (பனூ குறைழா நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.

    நூல்: புகாரி – 4123, 4124

    இணை வைப்பாளர்களை தாக்கி வசைக்கவி பாடும் படியும் அப்படி பாடும் போது ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் ஹஸ்ஸான் அவர்களுக்கு உதவியாக இருப்பார் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

    நல்ல கவிதைகள், இணை வைப்பை எதிர்க்கும் வகையில் உள்ள கவிதைகள் அனுமதிக்கப் பட்டதுதான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

    ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

    ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

    நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.

    நூல்: முஸ்லிம் – 4540

    உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகள் இஸ்லாமியக் கருத்துக்கு உட்பட்டவையாக இருந்த காரணத்தினால் தான் நபியவர்கள் அவற்றைப் பாடச் சொன்னார்கள். அவருடைய கவிதைகளில் 100 கவிதைகளை ஒரே நேரத்தில் ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் பாடிக்காட்டியிருக்கிறார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

    (கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன “அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே” என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.

    இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி – 3841)

    சிறந்த கருத்துக்களை உடைய கவிதைகளை இஸ்லாம் தடுக்கவில்லை. இணை வைப்பிற்கு எதிரான ஏகத்துவக் கருத்துக்களைத் தாங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கிறது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.

    https://eagathuvam.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87/

    பதிலளிநீக்கு
  8. பெண் மயக்கு பாடல் - 111

    வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
    கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
    ஓதுமின் ஓதி அடங்குமின் என்னும் சொல்
    கூதற்குக் கூதிர் அனைத்து.

    விளக்கவுரை மூதேவி போன்ற ஒருத்தியைப் பாடுமிடத்து உலகத்தவர் விரைவாகச் சென்று விரும்பி விருப்புடன் கேட்பர். மாறுபாடு இல்லாத நூல்களைக் கற்பீராக. கற்று அவற்றுக்கு ஏற்றபடி ஒழுகுவீராக என்று சான்றோர் கூறும் சொல் முன்னமே குளிரால் நடுங்கும் உடலுக்கு குளிர் காற்று வீசியதைப் போன்றதாகும். https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  9. வெண்பா : 31
    இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
    வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
    தாரத்தின் நன்று தனி

    விளக்கம்:
    பொருட் பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, இளிந்தவிசை நல்லது,
    உயர் குலத்தில் பிறப்பதை விட நல்லொழுக்கம் நல்லது, பலனில்லத வீரத்தை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது.

    இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

    https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_9162.html?m=1

    பதிலளிநீக்கு
  10. பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
    சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
    உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. . . . . . . - (திருமந்திரம் 86)
    சொற்பொருள்:

    பிறப்பு இலி - பிறப்பற்ற
    நாதனைப் - ஆசிரியனை
    பேர் நந்தி - பெருமையுடைய நந்தியும்
    தன்னைச் - தன்னைப் (நந்தியைப்) போல
    சிறப்பொடு - சிறப்புடைய
    வானவர் - வானவரும்
    சென்று கை கூப்பி - சென்று கை கூப்பி
    மறப்பிலர் - மறக்க மாட்டார்கள்
    நெஞ்சினுள் - நெஞ்சினுள்
    மந்திர மாலை - திருமந்திர மாலைமந்திர மாலை
    உறைப்போடும் - பொருளுணர்ந்து
    கூடிநின்று ஓதலும் ஆமே - கூடிநின்று ஓதுவார்கள்
    விளக்கம்: பிறப்பற்ற நாதனை பெருமையுடைய நந்தியும் அவனைப் போல சிறப்புடைய வானவரும் சென்று கை கூப்பி மறக்காமல் தனது நெஞ்சில் திருமந்திர மாலையை பொருளுணர்ந்து கூடிநின்று ஓதுவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. இசை : தடைக்கு ஆதாரமாக உள்ள மூன்று குர்ஆனிய வசனங்கள் :

    இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கவும் செய்கின்றீர்கள். நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்கள். (இதனைப் பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுங்கள். (அவனையே) வணங்குங்கள். சூரா அந்நஜ்ம் : 59-62.

    உங்களது (பொன்னான) நேரங்களை (வாழ்க்கையை) வீண்பொழுது போக்குகளிலும், வேடிக்கை விநோதங்களிலும் (இசையிலும்) கழித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களை நீங்களே (தற்பெருமைகளில்) வீணடித்துக் கொண்டிருக்கும் பொழுது? (Maktaba Dar-us-salam –Riyadh. Al-Qur’an. Eng.Trans)

    இன்னும் அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு: அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். (சூரா அல் இஸ்ரா அல்லது பனீ இஸ்ராயீல் : 64)

    மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகின்றார்கள். அவர்கள் எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழி(யில் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும் தான்! . (سورة لقمن :6)

    பதிலளிநீக்கு
  12. குர்ஆனின் ஒளியில் இசையும் பாடலும்

    https://islamiyapuram.blogspot.com/2020/03/MusicandSongsInIslam.html

    பதிலளிநீக்கு
  13. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர் (குறள் 66)

    குழல் இனிது யாழ் இனிது என்ப-குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்-தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்

    பதிலளிநீக்கு