இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விபச்சாரம் : மனைவி அல்லாத பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இந்த வகைதான்

கிறிஸ்தவம்


"விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மத்தேயு 5:27-28

இஸ்லாம்


ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

”அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்: ”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)

தமிழர் மதம்


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் (பிறனில் விழையாமை குறள் 141)

பொருள்[தன்னுடைய மனைவியல்லாமல்] பிறனுடைய [மகளாக & மனைவியாக] பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. - நாலடியார் 86

பொருள்: பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

பாவமன்னிப்பு

தமிழர் மதம்


அஞ்சினாய் ஏனும் அடைவது அடையுங்காண்
துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறையுடையை ஆகு. - (அறநெறிச்சாரம் பாடல் - 78)

விளக்கவுரை தீவினைப் பயனைப் பொறுக்காது இறந்தாய் என்று எண்ணிச் செய்த வினைகளால் அடையவேண்டியதை அடையாமல் போகாய். அந்த வினைப்பயனை அஞ்சி அழுதாய் என வந்த காலனும் போகான். (ஆதலால்) வினைப்பயனை ஆற்ற உன்னை வணங்கினேன்! நிறைந்த தன்மையைக் கொண்டவனாதலால்
 

இந்துமதம்


ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள்

“நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்குவாயாக. விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ அவற்றையும் நீக்குக இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு- (RV V, 85, 7&8)

 “எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி. நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – (7-86)

எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக (2-27-14)

எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் (1-157-4)

இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி (4-12-4)

..நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக - (7-58-5)

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள்! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக (10-63-8)

கிறிஸ்தவம்


1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். 2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். 3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். 4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள். (சங்கீதம் 130)

இஸ்லாம்


அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

தௌபா: “தௌபா” என்றால் “பாவமன்னிப்பு” என்றாலும். அதற்கு நான்கு நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வினவப் படுகின்றபோதே அது ‘தௌபா’வாக கருதப்படும். அவைகளில் மூன்று நிபந்தனைகள் பொதுவானவையாகவும் , ஒரு நிபந்தனை ”ஹுகூகுல் இபாத்” அதாவது மனிதர்களுக்கு மத்தியிலுள்ள உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். அவைகளாவன,

முதலாவது: தான் செய்த பாவத்தை நினைத்து பரிதாபப்படுவது.

இரண்டாவது: அப்பாவத்தை விட்டு முழுமையாக நீங்குவது.

மூன்றாவது: அப்பாவத்தை நோக்கி மீண்டும் ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற உறுதிப்பாடு.

நான்காவது: ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தீங்கிழைத்துவிட்டால். பாதிக்கப்பட்ட மனிதனிடம்போய் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லை என்றால் அதுவரை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டான்.

நிபந்தனை

இஸ்திஃபார்: “இஸ்திஃபார்” என்ற சொல்லுக்கும் தமிழில் “பாவமன்னிப்பு” என்றே கூறப்படும். சிலவேலை இஸ்திஃபார் என்பது மேலே கூறப்பட்ட தௌபாவாகவும் இருக்கலாம். சிலவேலை நமது நாவினால் கூறக்கூடிய வார்த்தைகளாகிய “அஸ்தஃபிருல்லாஹ்” (أسْتَغْفِرُ اللهَ) அல்லது ”அல்லாஹும்ம இஃபிர்லீ” (اللَّهُمَّ اغْفِرْ لِي) என்பதாகவும் இருக்கலாம். எனவே, தௌபாவுடைய நிபந்தனைகள் இஸ்திஃபாரிலே ஒன்று சேர்ந்தால் அந்த இஸ்திஃபாரை “தௌபா” என்றும் அழைக்கலாம். அப்படி தௌபாவின் நிபந்தனைகள் இன்றி கேட்கப்படும் பாவமன்னிப்பு “இஸ்திஃபார்” என்று கூறப்படும்.

எனவே, தௌபா என்பது பாவத்திலிருந்து முழுமையாக நீங்கி தனது இறைவனிடத்தில் முழுமையாக மீள்வதையும், இஸ்திஃபார் என்பது அல்லாஹ்விடத்தில் தனது பாவத்திற்கான மன்னிப்பு வேண்டுவதை நாடுவதையும் குறிக்கும்.


உருவ வணக்கம்

உருவ வணக்கம் என்பது

  • கையால் செய்யப் பட்ட கற்சிலைகள்
  • பொன்னால், வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்கள்,
  • வரையப்பட்ட உருவங்கள்
ஆகியவைகளை வணங்குவது ஆகும். இவைகள் மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ, இரண்டும் கலந்தோ இருக்கலாம்.
 

இந்து மதம்


‘ஜீவனுள்ள தேவனை மறுத்து, கைகளினால் செய்யப்பட்ட, கண்களினால் காணத்தக்கதான உருவங்களை வணங்குபவர்கள் பயங்கரமான நரகத்திற்கு செல்வார்கள்’ (யஜூர்வேதம் 40:8,9)

சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. - (கீதை 7:25)     

தமிழர் சமயம் 


சிவ வாக்கியர் 

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

(சிவவாக்கியர் யார், எவ்விடத்தை சார்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் விட்டு சென்ற பாடல்கள் பெயரால் சிவவாக்கியர் என்று பெயர் வந்ததாக கருதப்படுகிறது. தென்னாகத்தை சேர்ந்த சைவத் துறவிகளாகக் கருதப்படும் சித்தர்களுள் ஒருவராக கொள்ளப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம் தெரியவில்லை.)  
 

குதம்பைச் சித்தர் 


கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும் 

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார். 

அகஸ்தியர் ஞானம் 

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்

 என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.

(அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று ஆய்வுகள் சொல்லுகிறது, இதில் சில ஆரியர்களும் அடங்குவர்)

குறள் 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - (குறள் 7.)

பொழிப்பு: தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

ஔவையாரின் ஞானக்குறள்

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. - (154)

உருவற்ற முத்தியானது, உடலில் எங்கும் பரவி, மனமுதிக்கும் இடத்தில் நிலைபெற்று நிற்கும்.

உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். - (153) 
 
 
திருமந்திரம் 
 
"மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே  (திருமந்திரம் 2614)

மாடத்தில் இல்லை, மண்டபத்தில் இலை, கூடத்தில் இல்லை, கோவிலில் இல்லை, வேடத்தில் (உருவம்,  இன்று சொல்லப்படும் சிவன் என்னும் கதா பாத்திரம், லிங்கம், அல்லது ருத்ராட்சை போன்ற பொருள்களில்) இல்லை. அவன் ஆசை இல்லாதவர் நெஞ்சில் இருக்கின்றான், அவனே முக்தி தருகிறான்.

கிறிஸ்தவம் & யூத மதம் 


 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். (அப்போஸ்தலர் 15:20)

எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. (அப்போஸ்தலர் 15:28)

 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். (அப்போஸ்தலர் 21:25)

 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (I கொரிந்தியர் 8:4)

 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (I கொரிந்தியர் 8:7)

 ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். (I கொரிந்தியர் 10:7)

 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (I கொரிந்தியர் 10:14)

 இப்படியிருக்க, விக்கிரகம் ஒருபொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? (I கொரிந்தியர் 10:19)

 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. (I கொரிந்தியர் 10:28)

நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. (I கொரிந்தியர் 12:2)

 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (II கொரிந்தியர் 6:16)

19. பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, 20  சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21  மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி, குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும் - (கலாத்தியர் 5 அதிகாரம் 19-21)

சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காம விகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். (I பேதுரு 4:3)

பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். (I யோவான் 5:21)

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. (வெளி 2:14

 வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். (வெளி 2:20

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டா தவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; (வெளி 9:20)

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். (வெளி 22:15)

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும், பொன்னும், மனுஷருடைய கை வேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது. அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும் அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். - (சங்கீதம்115:4-8; 135:15-18)

விக்கிரங்களை உருவாக்குகிற யாவரும் வீணர். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது: அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குதாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள் - (ஏசாயா44:9-19)

விக்கிரகங்கள் நன்மையோ, தீமையோ செய்ய சக்தியற்றவைகள்.அவைகளுக்குப்பயப்பட வேண்டாம். - (எரேமியா 10:3-5)

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் - (1கொரிந்தியர். 6:9,10)

யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! [பைபிள் யாத்திராகமம் 20:14]

 தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுது கொள்கிறவர்கள் அறிவில்லாதவர்கள். - (ஏசாயா 45:20)

இஸ்லாம் 


அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”” என்று (அல்குர்ஆன் 7:195)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்(அல்குர்ஆன் 5-90)

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29:17)

முடிவுரை 

விக்கிரகங்களை வணங்குவதை வெறுக்காத ஒரே ஒரு மறை நூல் கிடையாது. பின்னூட்டத்தில் மேலும் பல நூறு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.