சாதி

தமிழர் சமயம்

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா

இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே

சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது

முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது

வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்

சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்

முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்

வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்

சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ

பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ

காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ

சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2) 

 

பதவுரை:

சாதி - சாதி என்பது
இரண்டொழிய (இரண்டு + ஒழிய): இரண்டைத் தவிர
வேறில்லை - வேறு ஏதும் இல்லை
சாற்றுங்கால் (சாற்றும் + கால்): சொல்லும் பொழுது (சாற்றுதல் - சொல்லுதல்)
நீதி வழுவா - நீதி தவறாத (வழுவுதல் - விலகுதல்)
நெறிமுறையின் - நல்வழியில்
மேதினியில் - பூமியில், உலகில் 
இட்டார் - இடுபவர்கள் (வறியவர்களுக்கு உதவி இடுபவர்கள்)
பெரியோர் - உயர்ந்தவர்கள், உயர் சாதியினர்
இடாதார் - இடாதவர்கள் (வறியவர்களுக்கு கொடுக்காதவர்கள்)
இழி குலத்தோர் - இழிந்த குலத்தவர்கள் (சாதியினர்)
பட்டாங்கில் - அற நூல்களில் (பட்டாங்கு - அற நூல்கள்)
உள்ளபடி - இருப்பதின் படி


பொருளுரை: அற நூல்களில் உள்ளதன்படியும் நீதி தவறாத நெறிமுறையின்படியும் சொல்வதென்றால், இந்த உலகில் இரண்டு சாதியைத் தவிர வேறு இல்லை; அவை, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த சாதியினர், பிறருக்குக் கொடுக்காத தாழ்ந்த  சாதியினர்.


கருத்து: உலகில் இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு வேறு சாதிகள் இல்லை - அவர்கள் ஒருவர்  கொடுப்பவர்கள் (உயர்குலத்தினர்); மற்றொருவர் கொடுக்காதவர்கள் (இழிகுலத்தினர்)


திருஞானசம்பந்தர் பாடல்கள்


சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்

பாத்திரம் சிவ மென்று பணிதிரேல்

மாத்தி ரைக்குள் அருளுமாற் பேரரே. (தேவாரம் 5.60.3)

  
திருமூலர் பாடல்கள்


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே (திருமந்திரம் 2104)

பதவுரை: ஒன்றே குலமும்: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது - எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும்: அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். கடவுள் இரண்டோ, மூன்றோ, முப்பாத்தது முக்கோடியோ கிடையாது

நன்றே நினைமின்: நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை: அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே: வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை: நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து: உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே: எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள் 

பொழிப்புரை: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள். 

நாலடியார் பாடல்கள்

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)

பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.

கபிலதேவ நயனார் பாடல்கள்

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறுஇலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே 
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து
ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப் படாது
சிறப்புஞ்சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே. (கபிலர் அகவல் 124 - 133)

வள்ளுவன் வாக்கு 

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள். 972)

பொருள்எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை  

குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது.

அதே போல, 

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை – (புறநானூறு 335)
 
ஒரு சிலர் இதனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை இன்னாரென்று குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒரு குறியீடு. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை.

எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு மட்டுமல்ல மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது.. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம் அதிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்.. 

கீதை 

“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)

கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.

வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.  

எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.

சோவின் எங்கே பிராமணன்?

ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)

ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.

சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

குறிப்பு: எனவே இது பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது. இதற்கு மாறாக கீதையை திரித்தவர்கள் நயவஞ்சகர்கள். கீதையின் பொருளை திரித்தும் அதை மகாபாரதம் போன்ற கதையில் திணித்தும் அதுதான் இந்த இந்திய பாரதம் என்கிற அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்ட இந்த கருத்தானது இடிந்து விழும் பொய்யிலே கட்டிய கோட்டை ஆகும். இப் போலி கோட்டையை நம்புவதை விட சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தும் சமயத்தை தழுவுவதுதான் அறிவுடைமை. சாதி கூடாது என்று அனைத்து மொழியிலும் இறைவன் சொல்லியிருக்க, அதை பின்பற்றுவோரை விரும்புவானா? அல்லது புறந்தள்ளியவரை விரும்புவானா? அது இருக்கட்டும், அவர்களில் மெத்த படித்தவராக அறியப்பட்ட திரு.சோ ராமசாமி சாதியை நடைமுறைப் படுத்துகிறவர்களைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?   

சோவும் சாதிப்பற்றுள்ளவர், "சாதி வெறியை மட்டும் அடிப்படயாக கொண்ட, தெய்வ நம்பிக்கை அற்ற" சாவர்க்கரால் வளர்த்தெடுக்கப்பட்ட RSS-ஐ ஆதரித்தார் என்றறிந்த பின் அவரை "கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" குறளுடன் உரசிப் பார்த்தால், திரு சோ.ராமசாமி நூல்களை கசடற கற்கவுமில்லை கற்றவைகளின்படி கூட நிற்கவுமில்லை என்று உலகுக்கு முடிவுரைக்கிறது. 

இஸ்லாம் 

 
முகமது நபி அவர்கள் தனது இறுதிப் பேருரையில்: மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர! (நூல்: அஹ்மத் 22391)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)

‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (குர்ஆன் 30:22) 

 “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)

இஸ்லாத்திலும் பிரிவுகள் இருக்கிறதே என்று கூறுவோர் உண்டு, அவர்கள் கொள்கையின் அடிப்படியில் பிரிந்து நிற்கிறார்கள், அவர்கள் மத்தியில் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. கம்யூனசித்தில் உள்ள வகைகளை சாதி என்று குறிப்பிட முடியுமா? முடியாது அல்லவா? ஏனென்றால் அவர்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்து நிற்கிறார்கள் மேலும் தீண்டாமையும் அந்த வகையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் கிடையாது. அது போலத்தான் இஸ்லாத்திலும் சன்னி, ஷியா, காதியானி போன்ற முக்கிய பிரிவுகளும் அதன் உட்பிரிவுகளும் உண்டு ஆனால் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. பிரிவு அல்லது வகை என்பது குணங்களை அடிப்படையாக கொண்டது, சாதி என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டது. 

 பேதுரு மக்களை நோக்கி. "....எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது....." (அப்போஸ்தலர் 10:28)

“மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவருக்கு வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.  (அப்போஸ்தலர் 10:34, 35) 


 WhatsApp status - வைக்க இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  

18 கருத்துகள்:


  1. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
    எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
    தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
    கொன்னாளர் சாலப் பலர். நாலடியார் - 25.அறிவுடைமை 243

    எந்த நிலத்தில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக வளராது; தென்னாட்டிலே பிறந்தவரும் நல்லறம் செய்து சொர்கம் செல்வதால், ஒருவருக்குத் தம் முயற்சியாலேயே மறுமைப்பேறு கிடைக்குமேயன்றிப் பிறந்த இடத்தாலன்று. வட நாட்டில் பிறந்தவராயினும் நல்லற முயற்சியின்றி வீணாகக் காலத்தைக் கழித்து நரகம் புகுவார் மிகப் பலர்.

    http://www.diamondtamil.com/education/sangam_literature/patinenkilkanakku/nalatiyar/nalatiyar25.html#.YxdRquxBwfE

    பதிலளிநீக்கு
  2. Deu 4:7நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

    பதிலளிநீக்கு
  3. குறள் எண் – 972
    பால் – பொருட்பால்
    இயல் – குடியியல்
    அதிகாரம் – பெருமை
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

    செய்தொழில் வேற்றுமை யான்.

    மு. வரதராசன் உரை : எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  4. வேத காலத்தில் வர்ணம் என்று சொன்னது தோலின் நிறத்தை வைத்து அல்ல. வர்ணம் என்ற உடனே பலரும் கலர் = நிறம் = வர்ணம் என்றே நினைப்பர். வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.

    https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  5. “சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச:”

    என்றே சொல்கிறது. மேலும் வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக சுபாவமும் குணங்களுமே ஒருவரது வர்ணத்தை முடிவு செய்வதாக ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார் (18:41-44). உதாரணமாக, அந்தணனின் அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, விவேகம், அறிவு ஆகியவை அவனது சுபாவத்தின் தன்மையாக அமைகின்றதே அல்லாமல் அவனது குலப்பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை. எனவே பிறப்பு அடிப்படையிலான குலப்பெருமைக்கு அல்லது வர்ணாஸ்ரமத்துக்கு கீதையில் இடமேயில்லை.

    சமுதாயத்தில் செயலாற்றும் போது அகங்காரம் இல்லாமல் அனைவரிடத்திலும் அழுக்காறற்ற நட்பும் கருணையும் கொண்டு செயல்படவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார் (12:14) மேலும், தன்னை உயர்குலத்தவன் என நினைத்து அதில் அகங்காரம் கொள்பவன் அசுர இயல்பு படைத்தவன் எனவும் அவர் வரையறுக்கிறார் (16:15).

    இதனையே ஸ்ரீமத்பாகவதமும் கூறுகிறது: உயர் குலத்தவன் என தன்னை கருதுபவன் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தைக் கூறவும் தகுதியற்றவன் என குந்தி தேவி கிருஷ்ணரை துதிக்கும் போது கூறுகிறாள் (ஸ்ரீ மத் பாகவதம்: 1.8.22)

    https://www.tamilhindu.com/2010/02/jati-castes-a-new-outlook-3/

    பதிலளிநீக்கு
  6. வர்ணம் என்றால் என்ன ?
    வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது. அது நான்கு வகைப்படுகிறது.
    ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.
    சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
    வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
    சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது
    https://www.facebook.com/srivatsan.ranga/posts/1758519724171336/

    பதிலளிநீக்கு
  7. "சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
    தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்" - பகவத் கீதை

    இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,

    நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

    http://govikannan.blogspot.com/2009/11/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  8. चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
    तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्॥१३॥

    சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
    தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||4-13||

    கு³ண கர்ம விபா⁴க³ஸ²: = குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
    சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் = நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது
    தஸ்ய கர்தாரம் அபி = நானே அவற்றை செய்தேன் என்றாலும்
    அவ்யயம் மாம் = அழிவற்றவனாகிய என்னை
    அகர்தாரம் வித்³தி⁴ = கர்த்தா அல்லேன் என்று உணர்

    குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
    https://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-4

    பதிலளிநீக்கு
  9. ப்ராஹ்மணோஸ்ய முகமாசீத் பாஹு ராஜன்ய: க்ருத:

    ஊரு ததஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாஹும் சூத்ரோ அஜாயத

    –ரிக் வேதம் 10-90-12

    பிராமணர்கள் வாயிலிருந்தும் (முகம்), அரசர்கள் தோள்களிலிருந்தும் வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் கால்களில் இருந்தும் வந்தனர் என்பது புருஷ சூக்த மந்திரம் ஆகும். இந்த மந்திரம் இவர்கள் அனைவரும் கடவுளின் விராட ஸ்வரூபத்திலுந்து தோன்றினர் என்று சொல்வதிலிருந்து அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. வாய் மூலம் வேதம் சொல்லிப் பிழைப்பு நடத்துவோர் பிராமணர், தோள்வலி மூலம் அரசாட்சி செய்வோர் க்ஷத்திரியர்கள், தொடைகள், வயிற்றுப் பகுதிக்கு வாழ்வளிப்போர் வணிகர்கள், கால் உழைப்பினால் பணி புரிவோர் சூத்திரர்கள் என்பதும் தெளிவாகும். இந்த உடல் உறுப்பில் ஒன்று இல்லாவிடிலும் ஒருவன் முழு மனிதன் இல்லை. சமுதாயத்தில் இந்த 4 வகையான தொழில் புரிவோர் இல்லாவிடில் அந்த சமுதாயம் இயங்கா து என்பதையும் அறியலாம்.



    மனுவும் தனது மானவ தர்ம சாஸ்திரத்தில்,

    “ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே” என்பார். அதாவது பிறப் பினால் எல்லோரும் சூத்திரர் களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர். இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது . பின்னர் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” பிராமணர்களை மட்டுமே குறித்து நின்றது!

    https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  10. “இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள் https://tamilandvedas.com/2014/07/05/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a/

    பதிலளிநீக்கு
  11. ஒழுக்கம் விழுப்பம் தரும் பாடல் - 70

    பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
    மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே - சிறந்த
    ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே
    புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து.

    விளக்கவுரை பெருமை அற்ற மனமே! பிறந்த இடத்தை (குடும்பம், குலம்) நீ எண்ணிப் பார்க்கின், அவற்றை மறந்தும் திரும்ப நினைத்தல் ஆகாது. (ஆதலால் நீ) புழுக்கள் கூடி வாழும் இடமாகிய இந்த உடலைப் பெற்றதால் ஏற்படும் மறதியைக் கெடுத்து, பெரியவர் ஒழுக்கத்தில் நின்று, துன்பத்தினின்றும் உயர்வாயாக

    பதிலளிநீக்கு
  12. எத்தனை இறைவன் உண்டு?

    தமிழர் நூல் : திருமூலர் திருமந்திரம்

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே – (திருமந்திரம் 2104)

    விளக்கம் :

    ஒன்றே குலமும் = மனிதர்கள் அனைவரும் ஒரே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, கறுப்பர் தாழ்ந்தவர், வெள்ளயர் உயர்ந்தவர், என்று பாகுபாடு ஒன்றும் கிடையாது.

    ஒருவனே தேவனும் = இறைவன் ஒருவனே, அவனுக்கென்று சில தகுதிகள் உள்ளது, கண்களால் கண்டதெல்லாம் இறைவன் இல்லை.
    நன்றே நினைமின் = எண்ணம் நன்மையாக இருக்கட்டும்
    நமன் இல்லை = எனவே இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்
    நாணாமே = பயபத்தி இல்லாமல்
    சென்றே புகும் கதி இல்லை = சுவர்கம் புக வழி இல்லை
    நும் சித்தத்து நின்றே = உங்களுடைய சித்தத்தில் நிறுத்துங்கள்
    நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் இதனையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

    திருக்குர்ஆன் :

    மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

    பதிலளிநீக்கு
  13. முன்னோர்கள் இருந்த சாதியில் பெருமையா?

    அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

    திருக்குர்ஆன் 2:134

    அல்லாஹ் அல்லாதோரையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்றும் கூறுவீராக!

    திருக்குர்ஆன் 6:164

    நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

    திருக்குர்ஆன் 17:15

    பதிலளிநீக்கு
  14. ஒன்றே குலம் / பிறப்பால் ஏற்ற தாழ்வு இல்லை / ஜாதி இல்லை : தமிழர் மறை &உலக பொது மறை

    பிறப்பால் சிறப்பில்லை யென்பதும், மாந்தர் எல்லாரும் ஓரினம் என்பதும் இறைவன் ஒருவனே என்பதும் தமிழர் கொள்கைகளாம்.

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
    - திருமூலர் திருமந். 2104.

    "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்." (குறள். 972)

    "தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
    வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே." (புறம்.189)

    "நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
    சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
    ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
    என்றிவற்றான் ஆகும் குலம்." (நாலடி.195)

    "குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
    பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே." (கபிலர் அகவல்)

    இஸ்லாம் :

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக இறைவனிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    பதிலளிநீக்கு
  15. “குறியின் நான்கு குலத்தினராயினும்
    நெறியின் அக்குலம் நீங்கினராயினும்
    அறிவு சங்கர்க் கன்பர் எனப் பெறில்
    செறிவறப் பணித்தேத்திய செய்கையார்” (12இகுலச்சிறை நாயனார் புராணம், 4)

    என்று குறிப்பிடுவது, சைவர்களின் சாதி சமயப் பாகுபாடற்ற சமத்துவத்தைப் பறைசாற்றும். நாயன்மார்களாக உயர் சாதியினர் தான் இருத்தல் வேண்டும் என்னும் நிலையில்லாது உயர் சாதி, தாழ்ந்த சாதி என்னும் பாகுபாடற்றவர்களாய் இருந்தனர்.

    http://www.muthukamalam.com/essay/literature/p89.html

    பதிலளிநீக்கு
  16. “அங்கமெலாம் குழைந்து அழுகு கொழுகுநோயாய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில” (நாவுக்கரசர் 6-95-10)

    என்று நாவுக்கரசர் தேவாரம் சாதிய ஒழிப்பைச் சாடுகின்றது. ஆண்டவன் முன்பு அனைவரும் சமமே என்னும் உயரிய கோட்பாட்டைத் திருமுறைகள் வலியுறுத்துகின்றன.
    “பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐந்துண்டு
    மேய்பாரு மின்றி வெறித்துத் திரிவன
    மேய்ப்பாரும் உண்டாய வெறியும் அடங்கினால்
    பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே” (திருமந்திரம்)

    சைவ அடியார்கள் பின்பற்றிய ஒழுக்கங்களாகிய உயர்வு தாழ்வாற்ற நிலை, பிற உயிரையும் தன்னுயிரைப் போல் கருதும் திறம், அன்பையே யாவருக்கும் சமமாய்ப் பகரும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு, பணிவு, பொறுமை முதலியன தனிமனித ஒழுக்கத்தின் தலையாய வித்துக்களாகும்.

    http://www.muthukamalam.com/essay/literature/p89.html

    பதிலளிநீக்கு
  17. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
    போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
    பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
    சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. -திருமந்திரம்

    பொழிப்புரை :
    பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்

    https://groups.google.com/g/vallamai/c/pBh-Klzw5LI

    பதிலளிநீக்கு
  18. :118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்

    பதிலளிநீக்கு