தமிழர் சமயம்
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,தீர்ந்தாற்போல் தீரா வரும். ஏலாதி 25
பொருள்: பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள் தோன்றும் நாடகஞ் காணாதொழிக. அவ்வாறு காணுமாயிற்பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.
கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,இழுக்கம் இழவும் தரும். ஏலாதி 62
பொருள்: கூத்தாடு மிடத்தும், விழாச் செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்க முடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும்.
கருத்து: கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாகும்.
நாலடியார்
85. செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய்,
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை,வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை,அலி ஆகி, ஆடி உண்பார்.
(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர்.
(க-து.) பிறர்மனைவியரைக் கூடியவரே இம்மையிலேயே கூத்தாடி இரந்து உண்பவர்.
இஸ்லாம்
அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். இந்த இரண்டும் மனிதனது உள்ளத்தை தவறான பாதையின் பக்கம் அழைத்துச் செல்பவைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வுத்தஆலா அவன் தந்த உறுப்புகளை எப்படி பயன்படுத்தினோம் என்று மறுமையில் விசாரிக்க இருக்கிறான்.
“நிச்சயமாக செவிப்புலன்கள், பார்வைப்புலன்கள் உள்ளங்கள் இவை ஒவ்வொன்றும் அவைகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றன” (ஸுரதுல் இஸ்ரா:36) என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.
இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்
“உடல் உறுப்புகள் ஏழாகும். அவைகளாவன: கண்கள், காதுகள், வாய், மர்ம உறுப்பு, கைகள், கால்களாகும். இந்த உறுப்புகள் வெற்றிக்கும் கைசேதத்துக்கும் மத்தியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் கவனமில்லாமல் அவைகளை பாதுகாக்கவில்லையோ அவன் கைசேதத்திற்குரியவனாவான். யார் அவைகளை கண்காணித்து பேணி பாதுகாத்து வருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அந்த உறுப்புகளை பாதுகாப்பது நலவுகளின் அஸ்திவாரமாகும். அவைகளை பாதுகாக்காமல் புறக்கணிப்பது எல்லா தீங்குகளுக்குறிய அஸ்திவாரமாகும். அல்லாஹ் கூறுகிறான்
“விசுவாசிகள் தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்ம உறுப்புகளை பாதுகாக்குமாறும் (நபியே) நீர் கூறுவீராக…. (ஸூரதுன் நூர்30)”
(இஹாததுன் லிஹான்:1/80)
மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் சொல்லப்படுகின்ற பார்வையை தாழ்த்துதல், மர்ம உறுப்பைப் பாதுகாத்தல் என்ற விடயங்களை ஒன்று சேர்த்து பார்க்கின்ற போது பார்வையை தாழ்த்துவதானது மர்ம உறுப்பை பாதுகாப்பதற்குரிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது. பார்வையை தவறான பாதையில் செலுத்துவது மானக்கேடான காரியங்கள் இடம்பெறுவதற்குரிய காரணியாக அமையும் என்ற செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறது.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
“கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும். நாவினுடைய விபச்சாரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாகும். கையினுடைய விபச்சாரம் மோசமானவைகளை தொடுவதாகும். காலினுடைய விபச்சாரம் மோசமானவைகளின் பக்கம் நடந்து செல்வதாகும். உள்ளம் ஆசை கொள்கின்றது. மர்ம உறுப்பு அதனை உண்மையாகவும் பொய்யாகவும் ஆக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி:2643, முஸ்லிம்:2657)
இமாம் அல் அமீன் அஷ்ஷின்கீதீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்
“இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற “கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும்” என்ற செய்தியில் வருகின்ற கண்ணுடைய விபச்சாரம் என்பது ஹலாலாக்கப்படாதவைகளை பார்ப்பைக் குறித்து நிற்கின்றது. எனவேதான் இப்படிப்பட்டவைகளை பார்ப்பது ஹராம் என்பதற்கும் இவைகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குரிய தெளிவான ஆதாரமாக இது இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நபிமொழிகள் இது போன்ற அதிகமான தகவல்களை தருகின்றன.
(மோசமான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய காரணம்தான் என்பது அறியப்பட்ட விடயமாகும். உதாரணத்திற்கு பார்வைகளில் அதிகமானவைகள் அழகான பெண்ணின் பால் செல்கின்றன. அதன் காரணமாக சிலவேளைகளில் அந்தப் பெண்ணை நேசிப்பது அவனுடைய உள்ளத்தில் உருவாகி அது அவனை அழிவின் பக்கம் செல்வதற்கும் காரணமாக அமைகிறது. – அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக- எனவேதான் (தவறான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய ஊடகங்களாகும். (அழ்வாஉல் பயான் 5/510)
எனவேதான் இப்படியான ஒவ்வொரு செய்திகளையும் நுணுக்கமாக வசிக்கின்ற போது மனிதனை தவறான நடத்தைகளுக்கு அழைத்து செல்பவைகளாக கண்களும் காதுகளும் காணப்படுகின்றன. அவைகளைக் கொண்டு மனிதன் தவறான ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதானது, கேட்பதானது மனிதனை பாவத்தின் பால் அழைத்து செல்கின்றன.
அந்தடிப்படையில்தான் இன்றைய முஸ்லிம்கள் எந்தவொரு வயது வித்தியாசமுமின்றி திரைப்படங்கள் சினிமாக்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சினிமாக்கள் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடிப்பததனாலும் மனித உள்ளங்களில் ஒரு விதமான தவறான எண்ணங்களை அது தோற்றுவிக்கின்றன.
ஆகவேதான் முஃமினான ஆண்களையும் பெண்களையும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறி இருப்பதனால் சினிமாக்கள் பார்ப்பது முஃமின்கள் மீது ஹராமான ஒன்றாக காணப்படுகின்றது.
திரைப்படத்தின் அடிப்படையான இசை-யும் தடைசெய்யப் பட்ட ஒன்று. மேலும், திரைப்படம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளையும் நடைமுறைகளையும் கொண்டதாகவும், புறம் மற்றும் அவதூறு பேசுவனவாகவும், உள்ளது. சுருக்கமாக, மறை நூல்கள் கூறும் தீய செயல்களை பட்டியலிட்டால் அவற்றில் பெரும்பாலானவை அதில் இடம் பெற்று இருக்கும். தீய செயல்களை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகமே சினிமா.
எப்படி உணவு விடயத்தில், வியாபார நேரத்தில் ஹராத்தை தவிர்ந்து கொள்கிறோமோ அதே போன்று இந்த விடயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக.மேலும்
கிறிஸ்தவம்
“வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” — (சங்கீதம் 119:37)
சீரழிவை ஏற்படுத்தும் சினிமா
பதிலளிநீக்குhttps://usmanihalonline.blogspot.com/2013/11/blog-post_20.html
சினிமா நடிகர்களை அர்ஷியலுக்கு அழைக்கும் மூடர்களுக்கு ஓர் பதில்
பதிலளிநீக்குஅவா உடையார் ஆசிரியர் ஆகார் பாடல் - 53
மாடமும் மண் ஈடும் கண்டுஅடக்கம் இல்லாரைக்
கூடி வழிபடும் கோளமை - ஆடுஅரங்கின்
நோவக மாய் நின்றான்ஓர் கூத்தனை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்றது உடைத்து.
விளக்கவுரை சிறிய வீட்டையும் பெரிய மாளிகைகளையும் பார்த்து அடங்காத ஆசை உடையவரைத் தலைப்பட்டு ஆசிரியர் எனக் கருதி வழிபடும் தன்மை, அமைக்கப்பட்ட நடன சாலையில் வருத்தம் உடையவனாய் நிற்பவனான கூத்தன் நடிக்க, அவன் கொண்ட அரச கோலத்தைக் கண்டு மயங்கி, அவனை ஊரார் தம்மை ஆள்க என்று சொல்லிப் பணி செய்து நிற்பதைப் போன்றதாகும்
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
பதிலளிநீக்குகளியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து. . . . .[திரிகடுகம் 11]
விளக்கம்: அழையாத கூத்தை பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், இம்மூன்றும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்.
நாலடியார் 85. செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய்,
பதிலளிநீக்குகொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை,
வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை,
அலி ஆகி, ஆடி உண்பார்.
(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர்.
(க-து.) பிறர்மனைவியரைக் கூடியவரே இம்மையிலேயே கூத்தாடி இரந்து உண்பவர்.
குறள் 332:
பதிலளிநீக்குகூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.